Thursday, June 02, 2005

தமிழ்ச் சான்றோர்?

சான்றோர் என்பார் யாவர்.. இதற்கு முன் எழுதிய வலைப்பதிவை மீண்டும் படிக்கையில் வந்த சந்தேகம் இது.

கள்ளுண்போர் சான்றோர் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர்கள் என்று வருகிறது. அப்படியானால் சான்றோர் கள்ளுண்ணாதவராயிருக்க வேண்டும். அல்லது நல்லொழுக்கம் மிகுந்தவராயிருக்க வேண்டும் எனக்கொள்ளலாம்.

தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் ஈன்ற பொழுதின் பெரிதுவப்பாள் என்று படித்த போது மற்றவர்களால் போற்றப் படுதல் மற்றொரு தகுதியாக தெரிகிறது.

சரி இன்றைய தினம் அப்படி போற்றுதலுக்குடையவராகவும், நல்லொழுக்கம் மிகுந்தவராகவும் உள்ள தமிழர்களை தேடினேன்.

இரு தார மணம் அல்லது பிறன் மனை நோக்கார், கள்ளுண்ணாதார், உத்தமர் என்று யாரும் தென் படவில்லை.. அரசியல் வாதிகள் பலர் பேசுவது மட்டுமே கொள்கை, கடைபிடிப்பது இல்லை என்பது போல் தென் பட்டது.. திரைப்படக் கலைஞர்கள் சிலர் தேறினார்கள்.. ஆனால் சான்றோன் என்று கூற நல்லொழுக்கம் மட்டுமன்றி மக்கள் சேவையும் தேவைப்படுவதாகத் தோன்றியது..

இலக்கிய கர்த்தாக்கள் பலரது தனிப்பட்ட வாழ்க்கை தெரியாதது. அப்படி தெரிந்தவர்கள் எதோ ஒரு காரணதில் அடி பட்டுப்போனார்கள்.. மதத் தலைவர்கள் .. அவர்களும் அதே நிலையில் தான் தென்பட்டார்கள்..

தவறுகளும் குற்றங்களும் செய்தால் பரவாயில்லை.. குறைந்த அளவு தவறு செய்தவர்கள் நல்லவர்கள்.. ஊரில் வசிக்கலாம்.. பெரிய குற்றங்கள் செய்து பிடிபட்டால் (இது தான் முக்கியமானது) சிறைக்குச் செல்ல வேண்டும் போல..

என்னடா இது.. தமிழகத்தில் சான்றோர் எனக்கூற யாருக்குமே தகுதி இல்லையா? இப்போது தான் விளங்கியது ஏன் மக்கள் குறள் வழி நடக்க வில்லை என்று.. தலைமையேற்றுச்செல்ல யாருமே இல்லாததால் ஆடுகள் வழி தவறிப்போய் விட்டனவா?

யாருக்குத் தெரியும்? உங்களுக்குத் தெரிந்தால் எழுதுஙகள்..

அன்புடன்

விச்சு

அப்துல் கலாம் என்று ஒரு மனிதர் இருக்கிறார் என்று தோன்றியது. சாமிக்கண்ணு (kanchifilms) என்று ஒரு பேர் நேற்று படித்தேன் (பிரபலர் இல்லவிடினும்..) ஓரு சில பெயர்கள் மனதில் வருகிறது.. ஆனால் எந்த புற்றில் எந்தப்பாம்பொ என்ற பயமும் வருகிறது.. என்ன ஒரு நம்பிக்கையான சமூகம் பார்த்தீர்களா..

2 comments:

குழலி / Kuzhali said...

//திரைப்படக் கலைஞர்கள் சிலர் தேறினார்கள்.. //

சி(ப)லர் தவறு செய்யாமல் இருப்பது வாய்ப்பு கிடைக்காததனால்தான்

பணம்,புகழ்,கள்,பெண்(யாரும் திட்டாதீர்கள் உண்மையத்தான் சொல்கின்றேன்) என்பதெல்லாம் சர்வசாதரணமான, தவறென்றே எண்ணாத திரைப்பட உலகில் இப்படி சான்றோர்களாக இருப்பவர்கள் நிச்சயம் போற்றுதலுக்குறியவர்கள், அப்படி நீங்கள் நினைத்த சிலரின் பெயரைப்பட்டு கவுரவிக்கலாமே!

neyvelivichu.blogspot.com said...

நன்றி குழலி,

எனக்கு உடனே நினைவுக்கு வந்த இருவர் சிவகுமார், நம்பியார்.
ஒருவர் நல்லவராகவே நடித்து நல்லவராகவே இருந்தவர்.. மற்றவர் கெட்டவராக நடித்தாலும் நல்லவராக இருந்தவர்..

யோசிக்கிறேன்.. யாராவது இருப்பார்கள்..
(என்ன நம்பிக்கை)


//பணம்,புகழ்,கள்,பெண்// சரியான வரிசை..

அன்புடன்

விச்சு