Thursday, June 30, 2005

பாவம் பெண்கள்

காஞ்சி பிலிம்ஸ் போலச் செய்ய வேண்டும் என்று ஆசை தான்.. இது விடுதலை நாளிதழில் படித்தது.

இங்குள்ள எல்லா பெண்களையுமே சூத்திரர்களாக பாவித்தது மநு.

இன்றுகூட... என்னை சந்தித்து வேத விளக்கங்கள் பெற வரும் பிராமணப் பெண்களிடம் `நீ சூத்ரச்சி... உன் அம்மா சூத்ரச்சி... உன் பெண்ணும் சூத்ரச்சி...’ என்று கூறுவேன்.உடனே அவர்கள் மெல்லியதாக கோபப்பட்டு `எப்படி?’ என்பார்கள். நமது °மிருதியிலேயே இதுதான் விதி என சொன்னதும் `அப்படியா?’ என்ற ஒரு வார்த்தையோடு அடங்கிப் போய் விடுகிறார்கள்.ஆக...

மநு-ப்படி பெண்கள் எல்லாருமே சூத்ர ஜாதிதான். பிராமணப் பெண்கள், வைஸியப் பெண்கள், க்ஷத்ரியப் பெண்கள், சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது.

அதனால்... சூத்ரன் வெளியே உழைப்பதைப்போல சூத்ரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்கவேண்டும்.அதாவது...

``°ஸ்த்ரீனாந்த சூத்ர ஜாதினாம்...’’

பெண்கள் அனைவரும் சூத்ர ஜாதி.

`நஸ்த்ரீ சூத்ர வேத மத்யதாம்...’

அதனால்... பெண்களும், சூத்ரர்களும், வேதங்களை ஓதக்கூடாது. வேத ஓசையை கேட்கக்கூடாது. யாகங்கள் நடந்தால்... அதில் ஓதப்படும் வேத மந்த்ரங்களை கேட்காமல் இருப்பதற்காக புடைவையால் காதை மூடிக் கொள்ளவேண்டும்.

பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பே கிடையாது. அவர்கள் வெளியில் போகவும் முடியாது.

33 சதவீத ஒதுக்கீடு என்ன ஆச்சு..

பொறியியல், முதுகலை போன்ற கல்வி கற்ற பின்னரும் பொரியல் மட்டும் செய்யும் பெண்கள் இருக்கிறார்கள். வேலைக்குப் போனாலும் திரும்பி வந்து சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது என்று எல்ல வேலைகளயும் அவர்களே செய்யவேண்டிய நிலைதான். இன்றைக்கும் பலருக்கும் இதே நிலை தான் ஒரு சில பெண்கள் தவிர..

"அவர்கள்" சாத்திரம் என்று சொல்லிக்கொண்டு செய்கிறார்கள் மற்றவர்கள் "அவர்களை" திட்டிக்கொண்டு செய்கிறார்கள்.. அது தான் வித்தியாசம்..

இன்று செய்திதாள்களில் ஒரு பெண் விருப்பமின்றி திருமணம் செய்து வைத்ததால் தற்கொலை செய்துகொண்ட செய்தி வந்திருக்கிறது.

"கனாக் கண்டேன் " படம் போல எத்தனை பேரால் தப்பிக்க முடிகிறது.

அன்புடன் விச்சு

குறிப்பு

முதலில் இட்டிருந்த பதிப்பு காணாமல் போன காரணத்தால் அதே பதிப்பை மீண்டும் இட்டிருக்கிறேன்

No comments: