Friday, June 10, 2005

அப்படி போடு அருவாள - தஞ்சையில் தமிழைக் காணும்

மாநாடு, போராட்டங்கள் விளம்பரத்திற்காக மட்டுமே என்று காட்டும் செய்தி.

இது ஒரு சோறு பதம் பார்க்க..பானைகள் நிறைய இருக்கின்றன.

யாராவது ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மொழிபெயர்த்து அறிவிப்பு வைக்கலாம்.. போராட்டத்தை விட செலவும் குறைவு.. பலனும் அதிகம்.

நான் சமீபத்தில் தஞ்சாவூர் சென்றிருந்தேன். அங்கே ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட அரண்மனையைச் சுற்றிப் பார்த்தேன். பண்டைக்கால தமிழர்களின் கட்டடக் கலைக்குச் சான்றாக, கம்பீரமாக காட்சியளிக்கிறது அந்த அரண்மனை.

அதில் பழங்கால வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் அரசர்கள் காலத்து நாணயங்கள் வரிசையாக கண்ணாடிக் கூண்டுகளில் கண்காட்சிக்கு வைத்திருந்தார்கள். நாணயங்களுக்குக் கீழே அந்த நாணயம் யாருடைய காலத்தில் புழக்கத்தில் விடப்பட்டது, எந்த ஆண்டில் புழக்கத்தில் இருந்தது என்ற விவரக் குறிப்பு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில், தமிழ் மட்டும் படிக்கத் தெரிந்த தமிழர்கள் இதை எப்படி படித்துத் தெரிந்து கொள்வது? நாணயங்களின் கீழே தமிழிலும் எழுதி வைத்தால் அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளலாமே?

தமிழ்மொழி _ செம்மொழி ஆகியிருக்கும் இந்த நேரத்தில் இந்தக் குறைபாட்டை அரசு கண்டிப்பாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் ஆசை.

_ வி.கே.எஸ்.புகழேந்தி, சின்னமனூர்.

குமுதத்தில் வந்த வாசகர் கடிதம்.

அன்புடன்

விச்சு

No comments: