1996இல் கலைஞரை ஆதரித்து ரஜினி "அந்த ஆண்டவனே வந்தாலும் " டயலாக் விட்டப்போ, ஆச்சி தான் அம்மாவுக்கு ஆதரவா ரஜினிய எதிர்த்து அறிக்கை விட்டாங்க
ஏன் என்ற கேள்வி எல்லார் மனதிலும் வந்தது..
அந்த பாழாப் போன ஜோசியக்காரன் எவனோ தெரியலை. அவனும் ஒரு ஆம்பளைதானே, அப்பிடித்தான் சொல்லுவான்! அவன் முகம்கூட எனக்குத் தெரியாது. ஆனா, அவன் வார்த்தை என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருச்சுங்கிறது அவனுக்குத் தெரியுமானு தெரியலை.
அய்யா, தர்மதொரைங்களே... ஆண்களே! உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டு இந்த ஆச்சி கேட்டுக்கறேன்... பொம்பளையாப் பொறந்தவ சமைக்க, துணி துவைக்க, பிள்ளைகளைப் பெத்துத் தர்ற மெஷின் மட்டும் இல்லய்யா. அவளும் உங்களை மாதிரி ஒரு மனுஷிதான்!
அவளை மதிக்கக் கத்துக்கங்கய்யா! அய்யா நீங்க, உங்க வீடு, குடும்பம் எல்லாம் நல்லா இருக்கட்டும்னு நான் எல்லா சாமியையும் கும்பிட்டுக்கிறேன்யா!
இப்பொ தான் புரியுது.. ரஜினி காந்தை திட்டி மனோரமா ஏன் பேசினாங்கன்னு.. ஒரு பெண்ணுக்காக ஒரு ஆணை திட்டி பேசி இருக்காங்க..
பாவம் ஆச்சி..
அன்புடன் விச்சு
Wednesday, June 22, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment