Thursday, June 30, 2005

எனக்குப் பிடித்த பத்து படங்கள்

* சந்திரலேகா.. இவ்வளவு பெரிய ஒரு படத்தை அன்றைக்கு இருந்த தொழில் நுட்பத்துடன் எடுத்தது ஒரு பெரிய சாதனை.

* காதலிக்க நேரமில்லை.. நகைசுவைக்கு எடுத்துக்காட்டு

* வேதம் புதிது - துணிந்து உண்மையை சொன்ன படம்

* நாயகன் - ஒரு உலக தரமான படம்

* அழியாத கோலங்கள் - நெஞ்சில் இட்ட கோலம்.. அழிவதில்லை (ஷோபாவும் தான்)

* மூன்றாம் பிறை - sriதேவி கமல் போட்டி போட்டு நடித்த படம்.

* பாட்ஷா - தலைவர் தலைவர் ஆன படம்

* உலகம் சுற்றும் வாலிபன் - முழு பொழுதுபொக்கு படம்.

* தண்ணீர் தண்ணீர் - ஒரு பிரசினையைத் தத்ரூபமாகக் காட்டிய படம்

* மகாநதி - மனதை உலுக்கிய படம் (உன்னொரு முறை பார்க்க மாட்டேன்)

* வீர பாண்டிய கட்டபொம்மன் - ஏதும் சொல்ல வேண்டுமா என்ன.

* பாரதி

* காமராஜ்

பிற மொழிகள்
1. காந்தி எல்ல தேசிய தினஙளிலும் காட்டப் பட்டாலும் திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் படம்

2. ஈடி இது ஒரு வகை சந்தோஷம். ஸ்பீல்பெர்க் படஙள் எல்லமே வரும் இந்த வரிசையில் கலர் பர்பிள் (color Purple) உட்பட

3 DDLJ - என் காதல் கதை

4. மா பூமி - இன்னும் இந்த நிலையில் ஏழைகள் இருக்கிறார்கள் என்று உணர வைத்த படம். ஏதாவது மாறியதா என்றால் இல்லை

5. சிதம்பரம். சித்திரை மாதம் திருவாதிரை நாள். மனதில் நின்ற படம்

6. சங்கராபரணம் - எஸ் பி பி ஸோமயாஜுலு விஷ்வநாத் மஞ்ஜு பார்கவி கலக்கல்

7. மரோ சரித்ரா - கும்பகோணத்திலேயெ ஒருவருடம் ஓடிய படம் (இதனால் எக் துஜெ கெலியெ இல்லை)

8. லகான் - ஒரு வித்தியாசமான படம்

9. சுவாதி முத்யம் - மனதைத் தொட்ட உன்னொரு விஷ்வநாத் படம்

10. புஷ்பக். இது என்ன மொழிப்படம்?

எத்தனையொ படஙள் இடப்படவில்லை.. பத்து என்ற எண் (11 ஆனது மேலே) பெரிய கட்டுப்பாடு..

அன்புடன் விச்சு

5 comments:

லதா said...

கன்னடம் ?

neyvelivichu.blogspot.com said...

தபரனெ கதா மட்டும் தான் நான் பார்த்த ஒரே கன்னடப் படம். கன்னட படங்கள் பெரிய அளவில் மற்ற மாநிலங்களில் (MP, தில்லி) திரையிடப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அன்புடன்

விச்சு

லதா said...

தமிழில் பேசும்படம் என்ற பெயரில் வரும்முன் முதலில் புஷ்பக் என்ற பெயரில் கன்னடத்தில்வந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைத்தான் நான் தங்களின் பத்தாவது படம் குறித்த கேள்விக்கான பதிலாக எழுதினேன் :-((

குழலி / Kuzhali said...

//தமிழில் பேசும்படம் என்ற பெயரில் வரும்முன் முதலில் புஷ்பக் என்ற பெயரில் கன்னடத்தில்வந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.//

அந்த படத்திற்குதான் மொழியே கிடையாதென்று நினைக்கின்றேன்?@#$*

neyvelivichu.blogspot.com said...

சரிதான் லதா.. நான் தான் தவறாகப் புரிந்து கொண்டேன்.. முதலில் அது கன்னடத்தில் தான் வந்தது.. விருதும் கன்னடத்திற்குத் தான் கிடைத்தது. ஆனால் வார்த்தையே இல்லாத படத்திற்கு மொழி என்ன என்று தான் என்ன மொழி என்று கேட்டிருந்தேன்..

நன்றி குழலி..

ரங்கராஜா.. ஞாயிறுக்கிழமை காட்டி கொண்டிருந்த தேசிய விருது வென்ற படங்கள் தான் மற்ற மொழிப்படங்கள்.

என் வலைப்பதிவுக்கு வந்ததற்கு நன்றி..திரும்ப அமெரிக்கா வரும் எண்ணம் உண்டா?

ஒரு '-' ஓட்டு போட்டவருக்கும் நன்றி

அன்புடன் விச்சு