இன்று காலை NY வந்த ஒரு தென்னாபிரிக்க விமானத்தில் ஒருவர் சக்கரதிற்கான இடை வெளியில் மறைந்து கொண்டு வரும் முயற்சியில் உடம்பு சிதறி இறந்தார்..
அவருடய உடல் பாகங்கள் லாங் ஐலண்ட் பகுதியில் விழுந்தன..
மேலும் விவரமறிய http://www.nytimes.com/2005/06/08/nyregion/08parts.html படியுங்கள்..
இது போல ஒரு இந்தியர் லண்டன் சென்றார்.. அவரும் அவர் சகோதரருமாக இதே போல் சென்றதில் அவர் சகோதரர் குளிர் தாங்காமல் மரணமடைந்தார்.. இவர் தப்பித்து விட்டார்.. மருத்துவர்கள் இவர் எப்படி அவ்வளவு குளிரில் உயிர் தப்பினார் என்று அவரை வைத்து ஆராய்ச்சி செய்தனர்.. இது 1996 ல் நடந்தது.. இப்பொது அவருக்கு இங்கிலாந்து நாட்டில் குடியேறும் உரிமை இல்லை என்று அந்த நாடு அறிவித்து விட்டது..
எத்தனையோ பேர் இப்படி கள்ளத்தோணியில் வந்து நன்றாக வாழவும் செய்கிறார்கள். பாதி ஸ்பானிஷ் மக்கள் அப்படி வந்தவர்கள் தான். "கறுப்பர்களும் செய்யாத வேலைகளை (எடுபிடி வேலைதான்) எங்கள் மக்கள் செய்கிறார்கள், அதனால் தான் அமெரிக்கா கண்டு கொள்வதில்லை" என்று மெக்ஸிகோ நாட்டு அதிபர் கூறி "இனவெறியாளர்" என்று திட்டு வாங்கியது வேறு கதை.
இங்கே ஒரு குஜ்ஜு (குஜராத்தி) நண்பர் இருக்கிரார்.. 22 லட்சம் தந்து, கனடா வழியாக சிகாகோ வந்து ஒரு (டங்கின் டொனட்) கடையில் வேலை செய்கிறார்..
சில நாட்களுக்கு முன் ஒரு சீக்கிய பெண்ணை கைது செய்த போது இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடினார்கள்.. அவர் 15 வருடஙளுக்கு மேல் இங்கேயே இருந்து மது பானக்கடை நடத்தி வந்தார்.. சிற்றுந்து பழுதடைந்ததற்காக, போலிஸ் உதவியை நாடிய போது, அவர்கள் எதோ தேடப்போய் மாட்டினார்... (நாடு கடத்தி விட்டார்களா என்று தெரியவில்லை)
விஷயத்துக்கு வருவோம்.. இது போல் வேறு நாடுகளில் குடியேற முயற்சிப்பது சரிதான்.. உயிருடன் இருந்தால் தன் குடியுரிமை கிடைக்கும்.. வேறு நல்ல வழி எதும் பார்க்கலாமே..
என்ன வெளிநாட்டு மோகமோ என்று நான் சொல்லக்கூடாது.. ஆனால் வயிற்றுக்காக பிழைக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கிறது..
அவ்வையார் சொன்னது சரிதான்.. "இடும்பைக்கூர் என் வயிறெ, உன்னொடு வாழ்தலறிது"..
Thursday, June 09, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment