Saturday, August 27, 2005

105 ஒன்பது மாத கருவின் கொலை

ஒன்பது மாதக் கருவின் கொலை.

காரணம் ஜாதி, குடும்ப மானம், ஊர் கட்டுப்பாடு, திருமணத்திற்கு முன் கர்ப்பமானது..

இந்த செய்தி படித்ததிலிருந்து மனது மிகவும் நிலையில்லதிருக்கிறது.

இதில் எழும் கேள்விகள் சில விடைஇல்லாதவை.

கற்பென்பது என்ன.. ஒரு கணவனுடன் மட்டும் இருந்தால் கற்புடையவளா.. அப்படியானால் நம் நாட்டின் பெரும்பாலான பெண்கள் கற்புக்கரசிகள் தானே. யாரும் அப்படி ஏன் சொல்வதில்லை.

பல கணவர்களுடன் இருந்தாலும் கற்புடையவர் அல்லவா..திரௌபதி எந்தக் கணக்கில் கற்புகரசி ஆனாள்.. அதே வகையில் கைம்பெண்மணம் கற்பைக் கெடுக்குமே.. அப்போது பல கணவர்கள் இருந்தாலும் கற்புடையவளே.

அப்படியானால் , ஒரு பெண்ணுடைய விருப்பமுடன் பலருடன் இருந்தால் அவள் கற்பிழந்தவளா.. திரும்ப திரௌபதி கேள்வி..

வண்புணர்ந்தால் கற்பிழந்தவளா.. இதில் அவளது தவறு என்ன.. ஆணல்லவா கற்பிழந்தவன் என்று கூறப்பட வேண்டும்..

ஏன் இத்தனை ஆராய்ச்சி என்று கேட்கிறீர்களா?

கீழே தரப்பட்டிருக்கும் ஆ. வி கட்டுரையைப் படியுங்கள்..

என்ன அலட்சியமாக சொல்கிறார்கள்.. ஒரு பெண்ணை எரித்ததைப் பற்றி. வி எம் எழுதிய கதையில் (http://arataiarangam.blogspot.com/2005/08/blog-post_16.html )ஒரு பெண் தோற்று ஜாதி ஜெயிக்கக் கூடாது என்று ஒரு கதை முடிவை மாற்றினேன்..
(http://neyvelivichu.blogspot.com/2005/08/blog-post_17.html)

அய்யோ.. இது கதை அல்ல நிஜம்.. எதில் என்னதை மாற்ற...

திருந்துவார்கள்ள்.. திருந்துவோமா?

அன்புடன் விச்சு

தப்பு வழிக்கு போன தாயம்மா... எரித்துக் கொன்ற தாய்மாமன்கள்!

"தப்பான வழிக்கு பொண்ணுங்க போனா... தாய்மாமனுங்க சும்மா இருக்க மாட்டானுங்க. அதுக்கு உதாரணம்தான் இந்த தாயம்மா..." கீழத்தூவல் கிராமத்தில் எச்சரிக்கும் குரலில் ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்தப் பேச்சு.


தாய்மாமன்களால் ஓட ஓட விரட்டி ஊர்க்காரர்களின் ஒத்துழைப்போடு கொல்லப்பட்டதோடு... தீ வைத்தும் எரிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்தான் தாயம்மாள். இவள் செய்த பாவம்... திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானதுதான்!

விஷயத்தை விசாரிக்கப்புகுந்தால்... இந்த ஏரியாவுல இதெல்லாம் சகஜம் என்கிற ரீதியில் பதில் வந்து நம்மை பகீரிட வைத்ததது!
எரித்த இடம்...

ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் கிராமத்தை சேர்ந்த சுசீலா என்பவரின் இரண்டாவது மகள் தாயம்மா. சற்றே வெகுளிப் பெண்ணான தாயம்மா, எல்லோரிடமும் வெள்ளந்தி யாகப் பழக, அதுவே அவளை ஆபத்தை நோக்கி இழுத்துச் சென்றிருக்கிறது. திருமண வயதிலிருந்த தாயம்மாவுக்கு சபலத்தை உண்டாக்கி, இளைஞர்கள் பலரும் தங்கள் இஷ்டம்போல அவளை அனுபவித்திருக்கின்றனர். இதனால் அடிக்கடி கர்ப்பமாகியிருக்கிறார் தாயம்மா. நான்கு முறை கரு கலைத்துவிட்ட நிலையில், ஐந்தாவது முறையாகவும் கர்ப்பமாகியிருக்கிறார் தாயம்மா.

இத்தனை முறையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கிராமத்துக்கு, ஐந்தாவது முறை அவள் கர்ப்பமானதும் கோபம் பொத்துக் கொண்டிருக்கிறது. நான்கு தடவைகளாக தாயம்மாவின் கர்ப்பத்துக்கு, அவளுடைய சாதியைச் சேர்ந்த ஆண்களே காரணமாக இருக்க... ஐந்தாவது முறை கர்ப்பத்துக்கு முடிவெட்டும் தொழில் செய்யும் ஒரு நபர் காரணம் என்று தெரிய வந்ததுதான் கோபத்தைக் கிளப்பியிருக் கிறது. இந்த விஷயம் ஊருக்குள் தொடர்ந்து பற்றி எரிந்தபடி இருக்க, இது தொடர்பாக அடிக்கடி கட்டப்பஞ்சாயத்துக்களும் நடந்திருக்கின்றன. இந்தச் சூழலில் தாயம்மா ஒன்பது மாத கர்ப்பிணியாக நிற்க, மதுரையிலிருந்து ஊருக்கு வந்து சேர்ந்திருக்கிறார், தாயம்மாளின் தாய்மாமன் அண்ணாதுரை!

ஊரே கூடி, "அசிங்கமாயிருச்சுடா" என அண்ணாதுரையை சூடேற்ற... அவர், மறுநாள் காலை 8.00 மணிக்கு தாயம்மாவை அரிவாளோடு விரட்டியிருக்கிறார். ஒன்பது மாத சிசுவை சுமந்திருந்த தாயம்மா, அலறி அடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள காலனிக்குள் நுழைந்திருக்கிறாள்...

மேற்கொண்டு நடந்ததைப் பற்றி பேசும் காலனிவாசிகள் சிலர், ÔÔஅந்தத் தாயம்மா பாவம்.... வெகுளி... ஆனது ஆயிப்போச்சுனு விடாம, பட்ட பகல்ல அரிவாளோட துரத்தித் துரத்தி அவளை வெட்டுனாங்க. ரத்தம் சொட்டச் சொட்ட ஓடி, கம்மா பக்கம் விழுந்து செத்துட்டா. அப்படியே சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போய் எரிச்சு, கதையை மூடி மறைச்சுட்டாக.

அவ ஓடினது... அவங்க துரத்துனது... எல்லாமே காலையில பசங்க பள்ளிக்கூடம் கிளம்பற நேரத்துலதான். இதையெல்லாம் பார்த்துப் பயந்துபோன எங்க புள்ளைக பேயடிச்ச மாதிரியாகிப் போச்சுதுங்க. அதுங்களோட பயம் தெளிய ÔகொழுமோருÕ காய்ச்சிக் கொடுத்திருக்கோம்ÕÕ என்றார்கள், தாங்களும் பயத்திலிருந்து மீளாதவர்களாக!

ஊருக்குள் போய் தாயம்மாவை பற்றிக் கேட்டதுமே நம்மிடம் பேசுவதைத் தவிர்த்து விலகிச் சென்றனர் கிராமத்தினர். ஒரு வழியாக சிலரை நம்மிடம் பேச வைத்தோம். ÔÔபெயர்களை வெளியிடக்கூடாதுÕÕ என்ற நிபந்தனையோடு பேசியவர்கள்,

ÔÔதம்பீ... அந்த சிறுக்கி இருக்கிறதவிட சாகறதுதான் மேல். அம்புட்டு அசிங்கமாப் போச்சு. எங்க பயகன்னாகூட புடிச்சு கட்டிவச்சுடலாம். ஆனா, வேற சாதிக்காரன்னு கேள்விப்பட்டதும் எங்களுக்கு திக்னு ஆகிடுச்சு. அந்த ஆத்திரத்துலதான் தாய்மாமன்காரன் வெட்டிப் போட்டுட்டான்.

ஊருக்காரவுக சிலர் கூடமாட ஒத்தாசை பண்ணிக் கொளுத்திட்டாங்க. தீ எரியவும் அவ வயிறு வெடிச்சு, புள்ள வெளியில வந்து விழுந்துச்சு... அது ஆம்பளை புள்ள. கொளுத்தப் போறாங்கனு போலீஸ§க்கே தெரியும். அவங்களும் கண்டுக்காமதான் இருந்தாங்க.

எல்லாம் முடிஞ்ச பிறகு, தாயம்மாவோட சித்தப்பன் ஒருத்தன், போலீஸ்கிட்ட போய், எஸ்.பி. வரைக்கும் கம்ப்ளெயின்ட் பண்ணுவேன்னு சத்தம் போடவும்... வேற வழியில்லாம போலீஸ் எங்ககிட்ட வந்து பேசுனாங்க. அதுக்குப் பிறகு வி.ஏ.ஓவை விட்டு கம்ப்ளெயின்ட் கொடுக்க வெச்சாங்க. தாயம்மாவை வெட்டின அண்ணாதுரையையும் சடலத்தை எரிக்க உதவியா இருந்த அவனோட தம்பி கருப்பனையும் நாங்களே போலீஸ்கிட்ட ஒப்படைச்சோம் என்றவர்கள்,

தம்பீ... இதெல்லாம் இந்த ஏரியாவுல சர்வ சாதாரணம்.... சாதி மானத்தை கெடுக்கறவளுக இருந்துதான் என்ன ஆகப்போகுது... எங்களுக்கு மானம்தான் பெரிசு என்று தங்களுடைய செயல்கள் அத்தனையையும் நியாயப்படுத்தி னார்கள், கொஞ்சம்கூட மனிதாபிமானம் அற்றவர்களாக!

கொலை நடந்த இடம், பிணத்தை எரித்த இடம் எல்லாமே கீழத்தூவல் போலீஸ் ஸ்டேஷனைச் சுற்றி சுற்றியேதான் இருக்கின்றன. இருந்தும் எதையும் கண்டுகொள்ளாமல் கடைசிவரை வேடிக்கை பார்க்கவே செய்திருக்கிறது போலீஸ்!

காவல் நிலையத்துக்குச் சென்ற நாம், உள்ளே எட்டிப்பார்த்தோம். அண்ணாதுரை, கருப்பன் இரண்டு தாய்மாமன்களும் உட்கார்ந் திருந்தனர். மெள்ள அவர்களை நெருங்கிப் பேச்சுக் கொடுத்தோம். அவர்களைப் புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது, தாவி வந்த எஸ்.ஐ., நீங்க வேற... இவங்களுக்கு கைவிலங்கு போட்டதுக்கே ஊர்க் காரங்க சண்டைக்கு வந்துட்டாங்க. இதுல போட்டோவெல்லாம் எடுத்தா வில்லங்கமாகி போயிரும் என்றவர், பொண்ணு கேரக்டர் சரியில்லை. அதான் கொலைக்கு காரணம் என்று கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் soன்னார்.

கைதாகியிருக்கும் இருவரும், எங்க அக்கா பொண்ணு தாயம்மா கல்யாணத்துக்கு முந்தியே கர்ப்பமாயிட்டா. முறைதவறி நடந்த கழுதை உயிரோட இருக்கக் கூடாதுனு கொலை பண்ணிட்டோம் என்று வாக்குமூலம் கொடுக்க... அதைப் பதிவு செய்துகொண்டு அவர்களை உள்ளே தள்ளியிருக்கிறது போலீஸ்!

ஏரியாவில் வெகு காலமாக பணியாற்றும் நமக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இந்த விவகாரம் பற்றி கேட்டோம். அவர் நம்மிடம்,

தம்பீ இது உங்களுக்குப் புதுசு... ஆனா, இந்த ஏரியாவுல இதெல்லாம் சகஜம். முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி பகுதி கிராமங்களில் காலம்காலமாக தாய்மாமன்களால் பல பெண்கள் கொல்லப் பட்டிருக்காங்க. அதுல ஒண்ணுதான் இந்தக் கீழத்தூவல் தாயம்மா!

போனமாசம்கூட கமுதி பக்கம் ஒரு கிராமத்துல (பெயர் தவிர்க்கப்படுகிறது), வேற சாதிப் பையனை காதலிச்ச காரணத்துக்காக, பொண்ணை கொலை பண்ணி, மஞ்சனாத்தி மரத்துல கட்டி தொங்கவிட்டுட்டானுங்க தாய்மாமனுங்க. தற்கொலைனுதான் கேஸ் பதிவாகியிருக்கு.

சாயல்குடி பகுதியில இப்படி தப்பு வழியில சிக்கிக்கற மருமகள்களை ஓடிமுள்ளுல வச்சு கொளுத்துவாங்களாம் தாய்மாமன்கள். பரமக்குடி ஏரியாவுலயும் இதெல்லாம் சகஜமாத்தான் இருக்கு.

தப்பான வழியில போற பொண்ணுங்களத்தான் தாய்மாமன்கள் கொல்றானுங்க. அதனால, ஒட்டுமொத்த கிராமமும் இந்தக் காரியத்துக்கு சப்போர்ட்டாதான் இருக்காங்க. காவல்துறையோட காதுகளுக்கு விஷயம் வந்தாலும் சாட்சிகள் இருக்காது. கேஸ§ம் நிக்காது. அதனாலேயே போலீஸ் இந்த விஷயத்துல பெரிசா அக்கறை காட்டுறது இல்லை என்று சொன்னவர்,

பெண் குழந்தை பிறந்ததிலிருந்து கல்யாணம் கட்டிக் கொடுக்கற வரை ஒவ்வொரு நிகழ்ச்சியிலயும் அவளைப் பெற்ற தகப்பனைவிட, தாய்மாமனுக்கே அதிக மரியாதை தர்ற சமூகம் இது. அந்த அளவுக்கு கொடுக்கற முக்கியத்துவம்தான் மருமகள்கள் மேல அசைக்கமுடியாத உரிமையை ஏற்படுத்திடுது. அப்படிப்பட்ட மருமகள்கள் தடம்மாறும் போதுதான் பிரச்னையே வெடிக்குது.

உனக்குத்தான் அசிங்கம்னு தாய்மாமனைப் பார்த்து விஷம் ஏத்துற வேலைகளை கிராமத்து ஜனங்க சிலர் செய்யும்போது, தாய்மாமன்களுக்கு உசுப்பேறிடுது. அதுதான் கடைசியில கொலையில வந்து நிக்குது என வேதனையோடு பேசினார் அந்த போலீஸ் அதிகாரி!

ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜியான அலெக்சாண்டர் மோகனிடம் தாய்மாமன்களின் கொலை பற்றிக் கேட்டோம்.

குடும்ப மானம்ங்கிற ஒரு விஷயத்துக்காக எமோஷனலாகி, சொந்தக் குடும்பத்தைப் பத்தியெல்லாம் யோசிக்காம இப்படி கொலைகளைப் பண்ணிடறாங்க. தடயங்களை சுத்தமா அழிச்சுடறதோட சாட்சி சொல்லவும் யாரும் முன்வர்றது இல்லை. அதுவே இது மாதிரியான ஆட்களுக்கு தெம்பு கொடுக்கற மாதிரியாகிடுது.

மக்களோட மனநிலை மாறினாத்தான் இது மாதிரியான கொடுமைகளைத் தடுக்க முடியும். கிராமங்கள்ல பெண் காவலர்கள், சமூக ஆர்வலர்கள் மூலமா முகாம் போட்டு, அவர்களின் மனநிலையை மாற்றுவதற்கான முயற்சிகள் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும் என்றார் அக்கறை கலந்த குரலில்.

மருமகளுக்காக பவுனும், பட்டுச் சேலையும், காராம் பசுவும், கிடாக்கறி சோறும் மொய்யும், விருந்தும் செய்கிற தாய்மாமன்களுக்கு இடையே கொலைவெறி கொண்டோரும் நிற்பது கொடுமையிலும் கொடுமை. இவர்களுக்கு காலத்தே வைத்தியம் நடத்தப்படுமானால், கொலைக்கு தாயம்மாளோடாவது வணக்கம் போடமுடியும்!

104 மீண்டும் சுனாமி

சுனாமி திரும்ப வருதாமே..

பால ஜோதிடம் என்பது நக்கீரன் நடத்தும் ஜோதிடப் பத்திரிகை. இந்துமத எதிர்ப்பு சங்கராசாரியார் எதிர்ப்பு என்று மினி திராவிட கழக இதழாக வரும் நக்கீரனில் மூட நம்பிக்கையான ஜோதிடத்திற்கு ஒரு பத்திரிகை வருவதே கொள்கைப் பிடிப்பான விஷயம்.

பெரிய குங்குமப் பொட்டு மஞ்சள் துண்டு போல.

அதில் ஒரு கட்டுரை திசம்பரில் மீண்டும் சுனாமி வரும் என்று கூறுகிறது.. படித்துப் பாருங்கள்



அன்புடன் விச்சு

Friday, August 26, 2005

இதை ரஜினி தட்டிக் கேட்பாரா?

‘‘எம் மக்களை நேசித்து அமரர் ஆன ஐயா, உங்கள் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல், உள்ள உறுதியுடன் ஏழை எளிய மக்களுக்கு உதவி வந்தீர்கள். நீங்கள் மறைந்தாலும், உங்கள் நற்செயல், நல் சிந்தனை அடிப்படையில் நாட்டில் உள்ள பாமர மக்களை விழித்தெழச் செய்து புதிய சமுதாயம் தோன்றிட நாங்கள் எங்கள் உயிரையும் பொருளையும் உண்மையுடன் அர்ப்பணிப்போம் என்று உங்கள் நினைவிடத்தில் சூளுரைக்கின்றோம்!’’

செண்டராயன் மலையடிவாரத்தில் புதர் மண்டிய கருவேலங்காட்டுக்குள் காவிரிக் கரையோரம் புதைக்கப்பட்டிருக்கும் வீரப்பனின் கல்லறையில், நெஞ்சுக்கூட்டுக்கு மேல் கையை நீட்டிச் சபதம் செய்கிறார் முத்துலட்சுமி வீரப்பன்.

வீரப்பன் புதைக்கப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. என்றாலும், இன்னமும் அந்த ÔசாகசÕக்காரனின் கல்லறையை வியப் போடு பார்த்தபடி செல்கிறார்கள் ஜனங்கள். சிலர் மலர்களைத் தூவுகிறார்கள். சிலர் அழுகிறார்கள். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியோ தன் கணவனின் கல்லறையில் உறுதிமொழி எடுத்த கையோடு, விஜயகாந்த்துக்கு அடுத்தபடியாக, அதிரடியாகக் கிளம்பி பொதுவாழ்க்கையில் கால் பதிக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

‘‘பத்தாண்டு காலம் இந்த மக்கள் அனுபவிச்ச கொடுமைகளுக்கு அளவேயில்லை. அதனால் தான் ஒரு சிலர் என்கிட்டே வரத் தயங்குறாங்க. ‘உங்க பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கத்தான் நான் வந்திருக்கேன்’னு எடுத்துச் சொன்னதும், புரிஞ்சுகிட்டு வந்து ஒட்டிக்கிறாங்க. எனக்கு இருக்கிற ஆதரவைப் பார்த்துட்டு சில அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சியில சேரச் சொல்லி என்னைக் கூப்பிட்டாங்க. எனக்கும் சேரலாம்னு தோணிச்சு. ஆனா, என் கணவரால பயனடைஞ்சவங்க, அவரைக் காட்டுக் குள்ளிருந்து கடைசி வரைக்கும் வெளியே வரமுடியாதபடி சிக்கல் பண்ணிட்டு, அவங்க மட்டும் சவுகரியமா ஊருக்குள்ள இருந்துக்கிட்ட மாதிரி, என்னையும் ஒரு கூண்டுக்குள்ள அடைச்சிடு வாங்களோனு பயமா இருக்கு.

அவ்வளவு ஏங்க... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்கூட என் கணவருக்கு ஒரு கேசட் அனுப்பியிருந்தார். அதில், ‘அண்ணா! உங்ககிட்ட ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருக்கு. அதனாலதான் இப்படியெல்லாம் செய்ய உங்களால முடியுது. நீங்க வெச்சிருக்கிற கோரிக்கைகளிலும் நியாயம் இருக்கு. உங்களைப் பார்க்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. ஆனா, இந்தச் சூழ்நிலைல நான் வர முடியாது’ அப்படினு அன்பா பேசியிருந்தார். அப்புறம், அவரே பெங்களூர்ல போய் "வீரப்பன் ஒரு அசுரன். அவனை சம்ஹாரம் பண்ணணும்"னு மாத்திப் பேசலையா?

என் கணவரை சம்ஹாரம் பண்ணவங்கனு சொல்லி, அதிரடிப்படைக்காரங்களுக்கு அரசாங்கம் நிறையப் பணம், சொந்த வீடு எல்லாம் தந்திருக்கு. ஆனா, அதே அதிரடிப்படையால பாதிக்கப்பட்ட நூத்துக்கணக்கான குடும்பங்களுக்கு எந்த உதவியும் இல்லை. இதை ரஜினி தட்டிக் கேட்பாரா? அல்லது இந்த ஜனங்களை ஒரு தடவை நேர்லயாவது வந்து பார்த்து ஆறுதல் சொல்வாரா?’’ என்று ஆவேசமாகக் கேட்கும் முத்துலட்சுமி,
‘‘இவங்களையெல் லாம் நம்ப முடியாதுங்க. அதனாலதான் அரசியல் கட்சிகளே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். மனித உரிமைகளுக்காகப் போராடுற சில அமைப்பு களின் துணை இருக்கு. அது போதும் எனக்கு!’’ என்கிறார் உறுதியாக.

nanRi vikatan

Thursday, August 25, 2005

குழலி தான் என்னோட சாய்ஸ் - அஸின்

சுண்டி இழுக்கிறார் அபின்... ஸாரி, அஸின். ஒரே நேரத்தில் தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் உற்சாகம் அவரது பேச்சில் ததும்பி வழிகிறது. டப்பிங், ஷ¨ட்டிங் என்று ஓய்வு இல்லாமல் பறந்து கொண்டிருந்த அந்தச் சின்ன மைனாவுடன் பேசியதிலிருந்து...

காட்ஃபாதரில் எனக்கு கலகல காலேஜ் பொண்ணு கதாபாத்திரம். கதாநாயகனை ஜாலியாக சீண்டிப் பார்க்கிற ரோல். சிவகாசியில் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சீரியஸ்னு கலக்குற கேரக்டர். மகாவுல காமெடிதான். படம் முழுக்க தாவணி, புடவையில வர்றேன். நான் காமெடி பண்றது இதுதான் முதல் தடவை. இது எனக்கு ரொம்ப வித்தியாசமான அனுபவம். ‘கஜினி’யிலதான் ரொம்ப என்ஜாய் பண்ணி நடிச்சிருக்கேன். நடிக்கிறதுக்கு நிறைய வாய்ப்பு கஜினியில கிடைச்சிருக்கு.’’
‘‘நடிக்க வந்த உடனேயே பெரிய பெரிய ஹீரோக்களுடன் நடிக்க ஒரே நேரத்துல வாய்ப்பு கிடைச்சது பெரிய விஷயம்தான். உடனே நம்பர் ஒன், நம்பர் டூன்னு பட்டியல் போடுறதுல எனக்கு நம்பிக்கை இல்ல.’’
‘‘அஜீத் ரொம்ப ஃப்ரெண்ட்லியான டைப் நல்லா பேசுவாரு. எதையும் தைரியமாக, வெளிப்படையாக பேசுற ஆளு. அதனால அஜீத்தைப் பிடிக்கும். விஜய் ரொம்ப அமைதி. யார்கிட்டேயும் அதிகம் பேச மாட்டாருன்னு சொல்வாங்க. ஆனால் உண்மையில அடிப்படையில்ல செம கலகல பார்ட்டி. sense of humour ஜாஸ்தி. டைமிங்காக ஜோக் அடிச்சு தூள் கிளப்பிடுவாரு. சூர்யா ஜாலியான பேர்வழி. எந்தக் காரியத்தையும் அர்ப்பணிப்போடு, கவனமாக செய்வார். எப்ப பார்த்தாலும் அந்த சீனை எப்படிப் பண்ணலாம் இந்த சீனை எப்படிப் பண்ணலாம்னு யோசிச்சுகிட்டே இருப்பார். அப்புறமாக விக்ரம். தேசிய விருது வாங்கிய நடிகர் என்ற பந்தா துளியும் இல்லாதவர், எளிமையானவர். ரொம்ப சாதாரணமான மக்களோடும் நெருங்கிப் பழகுறார். மொத்தத்தில் என் ஹீரோக்கள் எல்லோருமே ரொம்ப ஸ்வீட்...

ஆனால் அதைவிட இணையத்தில் எனக்கு ரசிகர் மன்றம் வைத்து என் புகழ் பாடும் குழலி தான் என்னுடைய சாய்ஸ்’’

குழலி அசினுக்கு சிங்கையில் கோவில் கட்ட நிதி வசூலிப்பதாக இறுதியாகக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் இந்த நற்பணிக்காக பணம் தர விரும்புபவர்கள் எனக்கோ என் தல முகமூடிக்கொ 123456789 என்ற வஙிக் கணக்கில் செலுத்தி அசினின் பிரியதிற்கு ஆளாகும்படி கேட்டுக் கொள்கிறொம்.

செய்திக்கு நன்றி : குமுதம்.

பின் குறிப்பு:

என்னுடைய படம் மாற்றும் திறமைக்கு அந்தப் படத்தில் "குழலிதான் ரொம்ப சுவீட்.. குதுகலிக்கிறார் அசின்" என்று மாற்றத் தெரியவில்லை.. அதனால் குழலி அதில் காணப்படவில்லை..

என் பங்குக்கு ஒரு அசின் பதிவு போட்டு புண்ணியம் தேடிக்கொண்டேன்.

அன்புடன் விச்சு..

Wednesday, August 24, 2005

101.ஊடாடிப் படித்தல்.. அம்மாவின் பேட்டி

ஊடாடிப் படித்தல்.. அம்மா சொன்னதும் சொல்லாததும்

கூட்டணி விஷயத்தில் திறந்த மனதுடன் இருக்கிறோம்: ஜெயலலிதா ஆகஸ்ட் 24, 2005 சென்னை:

கூட்டணி விஷயத்தில் அதிமுக திறந்த மனதுடன் இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று கோட்டையில் நிருபர்களை சந்தித்தார் ஜெயலிலதா. அவர் கூறுகையில்

தமிழக சட்டமன்றத்தை முன் கூட்டியே கலைக்கப் போவதில்லை. முன் கூட்டியே தேர்தலை சந்திக்கும் திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை.

"இருந்தாலும் எனக்குத் தெரியாது.. என் ஜோசியருக்குத்தான் தெரியும்.":

நாங்கள் தேர்தலை மனதில் வைத்து எந்தத் திட்டத்தையும் நான் அறிவிக்கவில்லை. மக்களுக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பது ஒரு அரசின் கடமை. அதைத் தான் செய்கிறோம். அதை எப்படி தேர்தலோடு முடிச்சு போட முடியும்.

"இத்தனை நாள் இது போன்ற திட்டங்கள் இருப்பதாக எனக்கு தெரியாது. தேர்தல் கண்ணில் தெரியும் போது தான் இதெல்லாம் தெரியவருகிறது. இரண்டாவதாக அறிவிப்பது தான் அரசின் கடமை.. செயல் படுத்துவது அல்ல.. "

கூட்டணி விஷயத்தில் நாங்கள் திறந்த மனதோடு இருக்கிறோம். கூட்டணி குறித்து பேச நிறைய கால அவகாசம் உள்ளது என்றார் ஜெயலலிதா.

"தி.மு.க கூட்டணி முடிவு செய்யும் வரை அவகாசம் இருக்கிறது..அப்போது தான் அவர்கள் தருவதை விட 5 இடம் அதிகமாகத் தந்து கட்சிகளை வளைக்கலாம். எங்களுக்கு 150 இடம் அது தான் இப்போது தெரியும் "

கூட்டணி குறித்து எந்தக் கட்சியாவது உங்களை அணுகியதா என்று கேட்டபோது, சிறிய கட்சி எங்களை அணுகி இருந்தாலும் கூட அதை எப்படி நான் இப்போதே வெளியில் சொல்ல முடியும் என்றார் ஜெயலலிதா.

"பெரிய கட்சி என்றால் சொல்லலாம்.. சிறிய கட்சி அணுகினால் சொல்வதால் ஏதும் பயன் இல்லை"

போலீஸைக் கொண்டு திமுக கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க நீங்கள் முயல்வதாக கருணாநிதி குற்றம் சாட்டியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, போலீஸை வைத்து அதை எப்படிச் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை போலீசை பயன்படுத்துவதில் அவர் கில்லாடியாக இருக்கலாம் என்றார்.

"ஊளவுத்துறை போலிஸ் ஆனாலுல் அதை போலிஸ் என்று கூறுவதைக் கண்டிக்கிறேன். மேலும் தி மு க இதற்கு யாரை எல்லம் தயார் படுத்தியதோ அவர்களையே பொறுப்பில் வைத்திருக்கிறேன். பாம்பின் கால் பாம்பறியும் அதனால் தான் தாத்தாவுக்குக் கவலை."

வேலை உத்தரவாத சட்டத்தை அமலாக்கியதற்காக மத்திய அரசைப் பாராட்டிய அவர், தேசிய வளர்ச்சிக் கவுன்சிலில் நான் சொன்ன சில கருத்துக்களையம் உள்ளடக்கி இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது மிகுந்த மிகழ்ச்சியளிக்கிறது என்றார்.

"இது பாராட்டு எண் 17. மைத்ரேயன் இதை காங்கிரஸ் தலைவியின் எடுபிடிகளிடம் தவறாமல் தெரிவிக்கவும்."

மேலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கொண்டு வருவதில் மத்திய அரசைத் தாக்கி பாஜக கருத்து தெரிவித்துள்ளது குறித்து கேட்டபோது, பாஜகவுக்கு ஆதரவான கருத்தைத் தெரிவிக்க ஜெயலலிதா மறுத்துவிட்டார்.

"பா ஜா கா ஆதரவு நிலையை விட்டு விட்டோம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.. மைத்ரேயன் இதையும் சொல்லவும்"

சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றார்.

"தாத்தாவிடம் போகாமல் என் காலில் விழுந்திருந்தாலே இன்னேரம் வேலை தந்திருப்பேன்.. கோர்ட்க்கா போரீங்க கோர்ட்க்கு.. தீர்ப்பு அடுத்த தேர்தலுக்குத் தான் வரும்.. அது வரை காத்திருங்க."

சுய நிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்படும் என்றார் ஜெயலலிதா.

"இதைச் செய்வதால் பெரிதான எந்த பலனும் இல்லை தேர்தலில்.. வீரமணி ஒரு அறிக்கை விடுவார்.. இருந்தாலும் கருணாநிதி இதில் முன்னிலை பெற்று விடக் கூடாதே என்பதால் ஒரு மனு தாக்கல் செய்து வைப்போம்"

இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியாவிட்டால் சுய நிதிக் கல்லூரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று கூறியிருக்கிறீர்களே. அது சாத்தியமா என்று நிருபர்கள் கேட்டபோது,
வேறு வழியே இல்லாவிட்டால் அதைத் தான் செய்ய வேண்டும். இந்தக் கல்லூரிகளை அரசு ஏற்று நடத்த முடியும் என்றார்.

"என்ன, அவர்கள் மூலமாக வரும் வருமானம் குறையும்.. இதற்கு வேறு வழி யோசித்துக் கொண்டிருக்கிறோம்.. இப்பொது வெளியிட முடியாது"

Tuesday, August 23, 2005

100. வாழ்க தமிழ் மணம்

வாழ்க தமிழ் மணம்.. வாழ்க காசி மற்றும் நண்பர்கள்

முதலாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்மணத்துக்கு.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது போல் நீங்கள் இணையத்தில் தமிழ்மணம் வைத்துத் தமிழ் வளர்க்கிறீர்கள். இரண்டும் ஒரே அளவுள்ள முயற்சி தான்..

பதினைந்து ஆண்டுகளாக இதோ எழுதுகிறேன் அதோ எழுதுகிறேன் என்று சொல்லி தள்ளிப் போட்டு வந்த என் ஆர்வம்.. இந்த ஊடகத்தில் பழமானது.. அதற்கு நன்றி.. இது போல் எத்தனையோ சிந்தனை விதைகள் பூக்களாகவும் கனவுகள் பழங்களாகவும் உதவும் முயற்சி இது. நாளைய உலகத்தில் தமிழ்மணத்திலிருந்து வந்த எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்படியாக பலரும் வருவார்கள். அவர்களை வளர்த்த பெருமை உங்களையே சாரும்.

தற்போது, வெங்கிட்டு மற்றும் முகமூடி ஒரு புதிய மாற்றத்தைக் கொணர்ந்திருக்கிறார்கள். எத்தனையொ நல்ல தமிழில் கதைகளும் கவிதைகளும் மனதில் இருந்து வலைப்பூவாய் விரியும் ஒரு அற்புதம். இது போன்ற முயற்சிகள் தமிழை பொதுவாகவும், குறிப்பாக இணையத்திலும் வளர்க்கும் என்பதில் ஐயமே இல்லை. இவர்கள் சிறந்த கிரியா ஊக்கிகள்.

வலைப்பதிவாளர்கள் பல இடங்களில் இருந்தாலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவுகளில் (மாதம் ஒரு முறை) சந்திதுக் கொண்டால், நம்மில் ஒரு இணைப்பு பெருகும்.. பல புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைக்கும் ஒரு கருவியாகவும் அது அமையும்.. (தமிழ்சுரங்கம் என்ற பெயரில் நண்பர் ஒருவர் NJ, USAயில் இதே தமிழ் வளர்க்கும் பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறார்).

மதம் பற்றிய குறிப்பு சிந்திக்க வைக்கிறது.. தமிழை விட்டு மதத்துக்குப் போகும் போது.. தமிழைக் காண முடிவதில்லை.. பலர் தம் மதத்தை நிலை நிறுத்தவும் சிலர் அதைக் குலைக்கவும் வலைப்பதிவுகளைப் பயன் படுத்துவது தவிர்க்கப் பட வேண்டியது.

இப்படி திட்டுவதாலோ அல்லது அதை எதிர்த்து காத்துக் கொள்வதாலோ எதாவது பலன் இருக்கிறதா என்று பாருங்கள். பல நூறு ஆண்டுகளாக இது தொடரும் செயல். சூரியனைப் பார்த்து நாய் தினமும் குறைக்கிறது.. சூரியனுக்கு அதனால் எந்த இழப்பும் இல்லை.., நாய்க்கு ஒரு திருப்தி தன் தூக்கத்தைக் கெடுத்தவனை திட்டி விட்டேன் என்று.. நாம் சூரியனாய் இருக்கலாமே..

நம் கடவுள்கள் இவர்கள் திட்டியதால் குறைந்து அழிந்து போவதானால் அது நெடு நாள் முன்னரே நடந்திருக்கும். "கடவுள் இல்லை" என்றதால் கடவுளோ மதமோ அழியவில்லை.. யாருக்கு அதைப் புரியும் பக்குவம் இல்லையோ அல்லது மதத்தின் மேல் கடவுளின் மேல் அழியமாட்டார்கள் என்ற நம்பிக்கை இல்லையோ அவர்கள்தான் வாக்குவாதங்கள் செய்கிறார்கள்.

ஒருவரது நம்பிக்கையில் தான் கடவுள், மதம் எல்லாம் வாழ்கிறது.. வாத பிரதிவாதங்களால் இன்னும் இருக்கும் நம்பிக்கையைக் கெடுக்கிறோமே அன்றி வளர்ப்பதில்லை.

சாதிகளைப் பற்றி எழுதுபவர்களுக்கும் இது பொருந்தும்.

வலைப்பதிவை தமிழ்மணத்தில் சேர்க்கும் போது அது எந்த வகையில் (category) சேரவேண்டும் என்று பிரித்து, வலைப்பதிவை அந்த அடிப்படியிலேயெ பார்க்கும் வசதியும் தரலாம்.

உதாரணத்துக்கு, மதம் ஒரு வகை என்று கொண்டால், தமிழ்மணத்தின் முகப்பில் மதம் என்ற சுட்டி வைத்து அதைத் தேர்ந்து எடுப்பவர்கள் மட்டும் அதனுள் போகும் படிச் செய்யலாம்.

மற்றபடி இந்த தமிழ்மண முயற்சியில் என்னுடைய பங்களிப்பு ஏதும் இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், எனக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள்.. நான் தயார். (எடுத்துப் போட்டு செய்வது தான் பழக்கம் என்றாலும் எனக்கு எதை யார் செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை... அதனால் தான் கேட்கிறேன்)

இப்படி ஒரு அமைப்பை இணையத்தில் நடத்தி வரும் அனைவருக்கும் பாராட்டுகள் நன்றிகள்..

இதுதான் எனது நூறாவது பதிவு.. எனக்கு தமிழ்மணத்தை அறிமுகம் செய்து எழுதத் தூண்டிய ரங்காவிற்கு நன்றி.

என்னுடைய எழுத்து களுக்கு பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. குறிப்பாக மாலன், முகமூடி, குழலி, துளசி அக்கா, வெங்கட் கண்ணதாசன், தேன் துளி nisha போன்றோருக்கு ஒரு சிறப்பு நன்றி..

என் பதிவை அவர்கள் பதிவுகளில் இணைப்பாகக் கொடுத்திருக்கும் நண்பர்களுக்கும் ஒரு சிறப்பு நன்றி.

அன்புடன் விச்சு

ஒரு நூறு பதிவுகள் இதுவரை.. பல ஆயிரங்கள் இன்னும்

99. சிறுகதை.. பயம்

வெளியில் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்கத் தொடங்கியது... வழக்கம் போல இன்றும் நாகினி அம்மாவைப் படுத்தத் தொடங்கினாள்.. "அம்மா நானும் அவங்க கூட விளையாடப் போறேன்"
.
எத்தனையொ எடுத்துச் சொல்லியாகிவிட்டது.. அவங்க கூட எல்லாம் நாம விளையாட முடியாது..நம்மைப் பார்த்தால் அவங்களுக்கு பயம்.. அதனால் சேத்துக்க மாட்டாங்க.எத்தனை சொன்னாலும்.. "பரவாயில்லை நான் ஒரு தரம் போய் முயற்சி பண்ணிட்டு வந்துடறேன்" என்ன செய்யலாம் என்றே புரியவில்லையே..

இன்றைக்கு எதையோ சாப்பிடக் கொடுத்து பொழுதைக் கழித்தாகிவிட்டது..

இந்தக் குழந்தைக்கு யாராவது புரியம்படி சொல்லுஙகளேன்.. அவர்கள் அருகில் பார்த்து விட்டால் அடித்தே கொன்று விடுவார்கள்.
********************
அது ஒரு பெரிய வீடு.. ரொம்ப மரியாதையான குடும்பம்.. பல வருடங்களாக அந்த ஊரில் முதல் மரியாதை அவர்களுக்குத்தான்.. இரண்டு குழந்தைகள்..எல்லாம் நான்கு ஐந்து வயதிற்குட்பட்டவை.. வீட்டின் பின் கோடியில் வேலைக்காரனுக்கு ஒரு வீடு கொடுத்திருந்தார்கள். அவனுடைய குடும்பமும் அங்கே தான் இருந்தது. பெரிய வீட்டுக் குழந்தைகளோடு தான் நாகினியும் விளையாட வேண்டும் என்று ஆசைப் படுகிறாள்.. ஆனால்..

************

திடீரென்று வெளியில் ஒரே கூச்சல்..

"டேய் அதெல்லம் போய்த் தொடாதடா.. அப்பா திட்டுவா.."

முகுந்தன் கையிலெ எடுத்து தட்டாமலை சுற்றி தூக்கிப் போட்டான்..

"இதுவும் நம்ம ராமு மாதிரி தாண்டா.. ஒன்னும் ஆகாது.." முகுந்தன் பதில் சொன்னான்.

"வேண்டாம் நான் அம்மாவை கூப்பிடறேன். அம்மா இங்க ஓடி வந்து பாரேன்.. இந்த முகுந்தன் என்ன பண்றான்னு.." இது கிருஷ்ணன்.

அம்மா ஓடி வந்தாள்.. பார்த்து விட்டு அலறினாள்.. "டேய் முனியா.. "அத" அடிச்சு கொல்லுடா"

நாகினிக்கு இன்னும் புரியவில்லை.. நான் இவர்களோடு விளையாடினால் தப்பா.. அடி விழும் போது அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.. "அவர்களுக்கு நம்மைக் கண்டால் பயம்.. அம்மா சொன்னது சரி தானோ.." அடி பட்டு வலியில் உடம்பு துடிக்கிறது.. கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் அடிக்கிறானே.. அம்மா காப்பாத்த வர மாட்டியா?

வாழும் பாம்பைக் கொன்றதால் விளக்கு வைத்து பதினோறு நாள் புற்றிற்கு பால் வைக்க வேண்டும் என்று பாட்டி சொன்னாள்.தாய் பாம்பு உயிருக்கு பயந்து வீட்டின் கடைசியில் இருந்த புற்றிலேயெ இருந்து கண்ணீர் விட்டது..

Saturday, August 20, 2005

98. சிறுகதை - ஒரு தலைவனின் உதயம்

காலையில் காபியுடன் வந்து அமர்ந்தால் செய்தித்தாளில் தேர்தல் செய்திகள் தான்.. வேட்பாளர்கள் பட்டியலை ஒரு கட்சி வெளியிட்டிருந்தது.. குறிஞ்சிப்பாடி யில் யாரு.. தேடினேன்.. எனக்கு யாரையும் தெரியாது.. இருந்தாலும் எங்க ஊர் ஆச்சே..
ஆனந்த ஜோதி.. அட நம்ம ஜோதி.. பழைய ஞாபகங்கள் வந்தது..

*************************************************

ஜோதி என்னுடன் ஐந்தாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்தான்.. பிறகு நான் ஆங்கில மீடியம் வகுப்புக்குப் போய் விட்டேன்.. அவன் தமிழ் மீடியம் வகுப்பில் படித்தான். எனக்கும் ஜோதிக்கும் நல்ல ஒரு புரிதல்.. பெரிய பையனாக இருந்த ஜோதி வகுப்பில் என்னை யாராவது அடித்தால் தொலைத்து விடுவான்..

அவனுடைய வீட்டில் அவ்வளவு வசதி இல்லை அதனால் என்னுடைய நோட்டு பென்சில் எல்லாம் அவனுக்குக் தருவேன்.. அம்மா கேட்டால் ஜோதிக்கு கொடுத்துவிட்டேன் என்று கூறுவேன்.. சில சமயங்களில் அம்மாவே அவனுக்கும் சேர்த்து வாங்கிக் கொடுத்து விடுவாள்.

அவன் வேறு பள்ளிக் கூடம் போன பிறகு நாங்கள் வீடு மற்றிக் கொண்டு போய் விட்டோம்.. பிறகு ஒன்பதாம் வகுப்பில் ஒரே பள்ளிக் கூடம்.. நேருக்கு நேராக வந்து விட்டால் "என்னடா ராஜா நல்ல இருக்கியா?" என்று கேட்பான்.. ஒரு சிரிப்பு.. அவ்வளவுதான்..
ஒரு முறை பள்ளியில் ஸ்ரைக் வந்த போது ஜோதி முன்னிலையில் வந்து நெய்வெலியில் இருக்கும் 32 பள்ளிக் கூடத்தையும் 8 நாள்கள் மூடி வைத்திருந்தான்.. அவனுடன் அதன் பிறகு பேசக் கூடாது என்று அம்மா சொல்லிவிட்டாள்.. அப்புறமும் சிரிப்புகள் தொடர்ந்தன..

பத்தாம் வகுப்பு தேர்வில் தோற்றுவிட்டு ஐ டி ஐ படிக்க அவன் போய்விட்டான்.. நான் கல்லூரி முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தேன்.. ஒரு நாள் பேருந்து நிலையதில் புகை பிடிப்பதற்காகப் போன போது அவனைப் பார்த்தேன்.. மணி பதினொன்று..

"என்னடா ராஜா நல்லா இருக்கியா.."

அவனை நான் எதிர்பார்க்க வில்லை.. சமீபத்தில் நடந்த தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவன், அவர்கள் வெற்றி பெற்றதும் அந்தப் பகுதியில் இருந்த மாற்று கட்சிக் காரர்களின் கடைகளை எல்லாம் அடித்து உடைத்து விட்டான் என்றும் அவன் இப்போ பழைய ஜோதி இல்லை என்றும் அம்மா சொல்லி இருந்தாள்.

"நல்ல இருக்கேன்டா.. (டா வா.. சொல்லலாமா..கூடாதா...)

"வாடா மாப்ளை, டீ சாப்பிடலாம்.. "

ஒன்றும் சொல்லாமல் அவனுடன் சென்றேன்.. அருகிலிருந்த கடையில் நுழைந்து "டேய் ரெண்டு டீ போடுரா" என்றான்.. கடையை கழுவி பாத்திரம் எல்லாம் கழுவிக்கொண்டிருந்தார்கள்..
நான் "வே..." என்று தொடங்கும் முன் கையை அசைத்து சும்மா இரு என்று சைகை காட்டினான்.. பத்து நிமிடத்தில் டீ வந்தது.. எனக்கு கொஞ்சம் வருத்தம்.. ஒரு அப்பாவி கடைக் காரனை இப்படி படுத்துகிறானே என்று.

"சிகரெட், தண்ணி எல்லாம் வேண்டாண்டா மாப்ளை" என்று அவன் என்னிடம் சொன்னான்.. எனக்கும் அவனிடம் அடிதடி அராஜகம் எல்லாம் வேண்டாம் என்று சொல்ல வேண்டுமா யிருந்தது.. சொல்லவில்லை.

பிறகு.. குடும்பத்தினர் பற்றி விசாரித்து விட்டு.. பிரிந்து போனோம்.. அப்புறம் வேலை கிடைத்து நான் ஊர் ஊராகப் போகத் தொடங்கினேன்.. என் பெற்றோரும் நெய்வேலியை விட்டு சென்னை சென்று விட்டனர்.. பங்குனி உத்திரத்திற்கு வில்லுடையான் பட்டு* வரும் போது யாரையாவது பார்த்தால் தான்.

***********************************************

சென்ற முறை நெய்வேலி போனது ஐந்து வருடங்களுக்கு முன்..
அப்போது பெரியார் சிலைக்கருகில் அவன் தம்பி செல்வத்தைப் பார்த்தேன்.

"ஜோதி எங்கடா" என்றதும்

"அது தெரியாதா உனக்கு அவன வெட்டிட்டாங்க என்றான்"

உடனே அவன் வீட்டுக்குப் போய் ஜோதியையும் பார்த்தேன்.. போகும் வழியில் அவன் ஒப்பந்தக் காரனாய் இருப்பதும், தியேட்டர் குத்தகை எடுத்திருப்பதையும் கல்யாணம் ஆகி குழந்தைகள் இருப்பதும் செல்வம் சொன்னான். ஒப்பந்தக் காரன் என்பதால் நெய்வேலியிலேயெ வீடு கொடுத்திருந்தாகள்.

வாசலில் கையில் கட்டுடன் ஜோதி கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தான்.. என்னை பார்த்ததும் அவன் முகத்தில் ஆச்சர்யம்..

"வாடா ராஜா.. எப்படி இருக்க?.. தம்பி தங்கச்சி எல்லாம் சௌக்கியமா? அப்பா அம்மா எப்படி இருக்காங்க?"

சிரித்துக் கொண்டெ.. "எல்லாரும் சௌக்கியம்.. நீ என்ன பண்ணர.. கையில என்ன காயம்? என்றேன். முதலில் ஒன்றும் இல்லை என்று சொல்ல ஆரம்பித்தவன்.. பிறகு எனக்கு விஷயம் தெரியும் என்று தெரிந்ததும் சொல்லத் தொடங்கினான்.

"வடகுத்து தங்கராசு தெரியும் இல்ல.. அவன் ஆளுங்க டவுன் ஷிப்க்குள்ள ஒரு பள்ளிக்கூடப் பொண்ணை கற்பழிச்சிட்டாங்க.. அந்த பொண்ண அப்படியெ அம்மணமா தண்ணி டாங்க் பக்கத்துல போட்டுட்டு ஓடிட்டாங்கன்னு பசங்க சொன்னங்க.. டீ கடையில் நாங்க நாலு பேரு அங்க போய் பாத்த அது நிஜம் தான்..அந்தப் பொண்ணு துடிச்சிகிட்டு இருந்தது. அன்னிக்கி வாலி பால் விளையாட டவுசர் போடிருந்தேன்.. உடனே என் லுங்கி சட்டையை கழட்டி அந்த பொண்ணுக்கு போட்டு விட்டு அவங்க வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போனேன்.. அவங்க அய்யா எதோ நான் தான் செஞ்சுட்ட மாதிரி என்ன பாத்தார்.. போலிஸ்ல சொல்லுங்கன்னு சொன்னா..இங்க ஒன்னும் நடக்கலன்னு சொல்லிட்டார்.. எனக்கு மனசு வருத்தமா போச்சி.. இன்னிக்கி இவங்கள விட்டா.. நாளைக்கி நம்ம வீட்டுப் பொண்ணுஙளுக்கும் இதே கதிதான்னு தோணிச்சு.. அவன் ஆளுங்க நாலு பேரை வெட்டினோம்.. இருட்டில சாராயம் குடிச்சுக் கிட்டிருந்தாங்க.. அவங்களுக்கு யாரு வெட்டினாங்கன்னு கூடத் தெரியாது.. ஆனா அரசல் புரசலா எல்லாரும் நாந்தான் வெட்டினேன்ன்னு பெசிக்கிட்டாங்க.. போலிஸும் என்னைப் பிடிச்சு விசாரிச்சாங்க.. ஒன்னும் தேறலை..

வெளில வந்து ஒரு வாரத்துல குடும்பத்தோட படம் பார்க்கப் போய்க்கிட்டிருந்தேன்.. பாமிலிய உள்ள அனுப்பிட்டு வண்டிய நிப்பாட்ட வந்தப்பொ மூணு பேர வந்து அரு வாளால வெட்டினாங்க.. அருவாள கைல பிடிச்சுட்டேன்.. கை கொஞ்சம் ஒட்டிக் கிட்டிருந்தது.. அவ்வளோதான்.. கத்தினதும்.. தியேட்டர்ல இருந்த நம்ம ஆளுங்க ஓடி வந்து அவங்களைப் பிடிச்சிட்டாங்க.. கையை வச்சி தச்சிட்டங்க.. நல்ல ஆறிட்டுது.. நேத்து தங்கராசையும் கைது பண்ணீட்டாங்க.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா.. "என்றான்..

எனக்கு வியப்பாக இருந்தது. வெட்டினேன் வெட்டினான்ன்னு எவ்வளோ சாதாரணமாச் சொல்லரான்.. ஆனா.. அந்த பொண்ணுக்காக மனசு கஷ்டப்பட்டுதுன்னு சொன்னானே.. இது தான் பழைய ஜோதி..காமராஜர் மாதிரி இல்லைன்னாலும் கொள்ளை மட்டுமே அடிக்கற அரசியல் வாதியாக இருக்க மாட்டான் என்று நினைத்துக் கொண்டேன்..

கொஞ்ச நாள் கழித்து ஒரு எம் எல் ஏ வோ ஒரு அமைச்சரோ நமக்கு வேண்டப்பட்டவங்களா இருப்பங்கன்னும் நினைச்சுக் கிட்டேன்..

* வில்லுடையான் பட்டு என்பது நெய்வேலியில் இருக்கும் ஒரு முருகன் கோவில்.. இங்கே முருகன் கையில் வில்லுடன் இருப்பார்.. வேல் இல்லை.. வருடா வருடம் பங்குனி உத்திரம் திருவிழா.. ஒரே விழா இது தான் நெய்வேலியில்.. நெய்வேலி குறிஞ்சிப்பாடி ரிசர்வ் தொகுதியின் கீழ் வருகிறது.

Friday, August 19, 2005

97. சிறுகதை - இளமையில் கல்

"என்ன சார் ஒரு அஞ்சு ரூபா போட்டுக் குடுன்னு கேட்ட ரொம்பதான் கிராக்கி பண்ணிகிறியே.. ஒரு டீ சாப்பிடர காசு புள்ளைக்கு பால் வாங்கித் தர உதவும்.." இந்த வசனத்தில் மடங்கினார் பயணி..

அவனும் எத்தனை நாளாக ஆட்டோ ஓட்டுகிறான்.. யாரிடம் என்ன சொன்னால் பணம் பெயரும் என்று தெரியாத என்ன..

நன்றாக சுதி ஏற்றிக் கொண்டு.. வீட்டு வாசலில் விழுந்து கிடந்தான்..

******************************

முகத்தில் தண்ணீர் கொட்டி எழுப்பினாள் அவள்.. "ஐய, ரோட்டுல விழுந்து கெடக்குரியே.. ஒரு நாளப் போல இதெ பொழப்ப போச்சி.. ஒரு அஞ்சு பைசா தரியா வீட்டுக்கு.. நீ இருக்கறதுக்கு இல்லமாயெ போயிடலாம்"

பூக்கூடையுடன் நடந்து மார்க்கெட்டில் அவளுடய வழக்கமான இடத்தில் அமர்ந்து கொண்டாள்..

"ஏம்மா.. 3 முழம் பத்து ருபான்னு தாம்மா.. "

"இன்னிக்கி பண்டிக நாளும்மா.. எனக்கு கட்டாது.. கிலோ 23 ரூபா விக்குது பூ.. பேரம் பேசத தாயீ..உன் கையால போணி பண்ணு. நீ தர அம்பது பைசால கொழந்தைக்கு ஒரு வேளா கஞ்சி காச்சி ஊத்துவேம்மா.. உனக்கு புண்ணியமா போகும்.."

அருகில் வந்த "அது" "அம்மா முட்டாயி வங்க துட்டு தாம்மா"

"த போ.. அவ அவ உயிர விட்டு கூவி சம்பதிக்கரா.. முட்டாயி வேணுமாமில்ல முட்டாயி.. "

"அம்பது அம்பதா இன்னிக்கி ஒரு 10 ரூபா தேரிடுச்சு..தலைவர் படம் உன்னொருக்கா பக்கலாம்"..என்று தியெட்டர் பக்கம் போனாள்.

*****************************************

ஓட்டல் காவலாளி கத்திக் கொண்டிருந்தான்..

"எலே யாருடா அது.. ஓடிப்போ.. உன்னொரு தரம் பத்தென் மவனே போலிஸண்ட பிடிச்சி குடுத்துடுவேன்.."

அவனுக்கு போக்கு காண்பித்து விட்டு. வெளியில் வரும் கஸ்டமரிடம் ஓடினான் "அது".. "சார் ஒரு ஒரு ரூபா தா சார்.. சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு.."

words 181. (நிஜமாவே ரொம்ப சிறு கதை)

96.சிறுகதை - சபலம்

கொஞ்ச நாட்களாகவே இந்த ஆசை இருந்தது... வீட்டில் பூர்த்தி செய்துக்கொள்ள முடியவில்லை , அம்மாவிற்கு தெரிந்தா திட்டுவாங்க! என்ன பன்றது?.. நானும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன், இதோ இப்போதுதான் வீட்டை விட்டு இவ்ளோ தூரம் வந்துட்டேனே.. அதுவும் பூனாவுல தனியா கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கேன்.. இந்த வாய்ப்பை விட கூடாது.. முடிவு செய்தேன்..

மதியமே அலுவலக வேலையெல்லாம் முடித்துக்கொண்டு 6.30 மணிக்கெல்லாம் கெஸ்ட் ஹவுஸ் வந்தேன்... மெதுவாக கெஸ்ட் ஹவுஸ் இன்சார்ஜிடம் பேச்சு கொடுத்தேன் ... அப்படி இப்படி சில விஷயங்களை பேசி விட்டு .. மெதுவாக "................" வேனுமே கிடைக்குமா?? ஆவலாக பதில் எதிர்பார்த்து காத்திருந்தேன்.. "நஹி சாப்" ஹிந்தியில் சொன்னான்..எனக்கு சற்று ஏமாற்றமாகத்தான் போனது... ஏன் என்றேன்..நான் கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருக்கனும்.. வெளில போக கூடாது சார், சாரி என்றான் இந்தியில்.

என்ன செய்ய இப்போ... நமக்கு மொழி தெரியாது, எப்படி போய் என்னனு கேட்கிறது?சரி எங்கே இருக்கும் சொல்லு நான் போயிட்டு .. ஹ்ம்ம்..... இங்கே ரூமுக்கு வந்து..... ஏதும் பிரச்சனை இல்லையே? சற்று இழுத்தேன்.. இல்ல சார் .ஒன்னும் பிரச்சினை இல்லை .. ஏற்கனவே இங்க தங்கின நிறைய பேர் பண்ணியிருக்காங்க..

அப்பாடா சந்தோஷம்.. ரெண்டு நாளா மழை, ஆனா இன்னைக்கு வெய்யில். கொஞ்சம் அதிகம் தான்.. .. இப்போ வேணுமா??.. இருக்கட்டுமே நல்ல அனுபவமாக தான் இருக்கும்...இன்னைக்கு ஓகே! அப்புறம் பின்னாடி ஏதாச்சும் பிரச்சினை வந்துட்டா.. அட அதெல்லாம் வராது... சீப் பா போனதானே .. நம்ம காஸ்ட்லியா தானே பார்க்க போறோம்.... மனதை தேற்றிக்கொண்டேன்.சரி இடத்தை கேட்டுக்கொண்டு, டிரஸ் செய்துக்கொண்டு கிளம்பி சென்றேன், சைகை பாஷை , அப்படி இப்படி அறைகுறை இந்தியில் பேசி, விலை எல்லாம் கேட்டு .. சரியாக எண்ணி கொடுத்து ..ஆஹா ! இதோ நான் கொஞ்ச நாளாகவே அனுபவிக்க வேண்டும் என ஆசைப்பட்ட விஷயம் .. என் கையில் இப்போது .மனசு சந்தோஷபட்டது..

இங்கேயே ஆரம்பிக்கலாமா??ஐயோ! வேண்டாம் மனசு சொன்னது, கொஞ்சமாவது? ஹேய் என்ன அவசரம் .கைக்கு தான் வந்தாச்சே .. பொறுமையா ரூமுக்கு போய் அனுபவிக்கலாம்ல மீண்டும் மனசு சத்தம் போட்டது..

சரியென்று, மெதுவாக இடையை பிடித்து அருகில் கொண்டு வந்து.. "உனக்காக தான் இவ்ளோ நாள் ஐயா வெயிட்டிங்" என்று சொன்னேன்...

புரிந்திருக்குமா??? புரிந்தால் என்ன , புரியாட்டி என்ன...
கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தேன்.. என்ன சார் கிடைத்ததா?? கேட்ட இன்சார்ஜிடம் ஹ்ம்ம்ம் என சொல்லிவிட்டு ரூமுக்கு வந்து .. கட்டிலில் போட்டுவிட்டு ..கதவை தாழிட்டேன்...

கட்டிலில் அமர்ந்து , மீண்டும் இடையை கையில் பிடித்து, மேலிருந்த மூடியை (மூடியா?) எடுத்துவிட்டு, உதட்டோடு உதடு வைத்து அனுபவித்து உறிஞ்சினேன்...அடா அடா ! எவ்வளவு அருமை..

இந்த வெயிலுக்கு இதமா, ... மொத்தமாக உறிஞ்சி குடித்துவிட்டு , காலி பெப்சி பாட்டிலை கட்டிலில் வீசிவிட்டு டி வி யைப் போட்டேன்

இன்றைக்கு ரத்தத்தில் சர்க்கரை எவ்வளவு என்று சோதிக்க வில்லை.. அந்த இயந்திரத்தை வீட்டில் வைத்து மறந்து விட்டேன் போல இருக்கிறது.. டி வி யில் மாதுரி தீக்க்ஷித் சோளிக்குப் பின்னால் இருப்பதைப் பற்றி பாடிக் கொண்டிருந்தாள். என்ன இருந்தாலும் மாதுரி அழகு தான்.

தினமும் ஒரு தரம் சாப்பிடும் மாத்திரையை இப்பொது சாப்பிட்டுவிடுவோம் என்று நினைத்தேன்.. செய்தேன். என்ன இருந்தாலும் சர்க்கரைத் தண்ணிர் தானே. திடீரென்று போன் அலறியது.. அம்மா..

"என்னடா சாப்புட்டியா.."

" சாப்டாச்சுமா.. தூங்கப் போய்க் கொண்டிருக்கிறேன்."

இன்றைக்கு பெப்சி குடித்த சந்தோஷத்தில் சாப்பிட மறந்துவிட்டது..அம்மா கிட்ட சொன்னா சர்க்கரை குறைந்து விடும் சாப்பிடு என்பார்.. எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் உணவகத்திற்கு.. சலிப்பாயிருந்தது.. பொய் சொல்லியாச்சு.

அது சரி மாத்திரை சாப்பிட்டேனோ? கரீஷ்மா செக்ஸி செக்ஸி என்று தன் பிரதாபத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள். புதுப் பட பாட்டு எல்லாம் போட மாட்டாங்களா? என்ன போச்சு.. இவ்வளவு பெப்சி குடித்திருக்கிறேனே.. சர்க்கரை எகிறி இருக்கும்..
மாத்திரையை சாப்பிட்டுவிடுவோம். படுத்துத் தூங்கினேன்.
காலையில் எழுந்து சென்னை போகவேண்டும் 6.30 க்கு விமானம். ******************************

விழித்துப் பார்த்தால்.. அட இது என்ன ஆஸ்பத்திரி போல இருக்கிறது.. என் அலுவலக நண்பர்கள் எல்லாம் இருக்கிறார்களே.. அட அம்மா.. மெதுவாகச் சொன்னார்கள்.. எனக்கு சர்க்கரை குறைந்து கோமா விற்குப் போய் விட்டேனாம்.. நல்ல வேளை கெஸ்ட் அவுஸ் இன் சார்ஜிடம் எது எப்படி போனாலும் காலைல விமானம் பிடிச்சே ஆகணும்.. தூங்கிட்டேன்னாலும் எப்படியாவது எழுப்பி விட்டுடுன்னு கைலையும் கொஞ்சம் கொடுத்திருந்தேன்..

அவன் தான் போலிஸைக் கூப்பிட்டு கதவை உடைத்து தற்கொலை முயற்சின்னு நினைத்து இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறான்.. 4 நாளில் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லி விட்டார்கள்.. சென்னை வந்து விட்டேன்.. அம்மா எதுவுமே சொல்ல வில்லை.. எனக்குத்தான் குற்ற உணர்வு. "ஒரு சின்ன சபலம்.. கொஞ்சம் அலட்சியம்.. அம்மா மன்னிச்சுக்கோ.." என்றேன்..

"உன் நல்லதுக்குத்தான் சொன்னேன்.. இனி நீயெ பார்த்து நடந்துக்கோ அது போதும்" என்றாள்..

இனி பெப்ஸி நிறுவனம் இருக்கும் பக்கம் கூடப் போகக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

வீ எம் / விச்சு

95. சிறுகதை - யார் குற்றம்

ராத்திரி முழுக்க தூக்கம் வரவில்லை.. இன்றோடு ஒரு வருடம் முடிகிறது.. காலையில் எழுந்து தொலைக்காட்சியைப் போட்டால் சி.என்.எனில் இதோ அவன் முகம்.. அருகில் என் முகம்.. எதேதோ கதை.. மனசு கல்லாகிப் போச்சு.. எத்தனை அசிங்கங்கள்..

இன்றைக்கு அலுவலகம் போனால் குறைந்த பட்சம் ரெண்டு பேராவது நமுட்டுச்சிரிப்பு சிரிப்பார்கள்.. எவனாவது ஒருத்தனாவது கேட்பான் "என்னப்ப டி வி ல படம் எல்லாம் காமிச்சானே.. பெரிய ஆளுப்பா நீ.." நக்கல் வழிந்தோடும்.. ராமர் (கடவுள் தான்) ஏன் சீதையை தீக் குளிக்கச் சொன்னார் என்று தெளிவாக விளங்குகிறது. என்னால் தீயும் குளிக்க முடியவில்லை.. சொல்வதை நம்பவும் ஆளில்லை. இப்போது நான் உலகப் பிரசித்தி. தப்பான காரணத்திற்காக.. யாருடைய தப்பு அது.. என்னுடையதா..

**********************************

ஆகஸ்ட் பதினேழு.. என் பிறந்ததினம். அலுவலகத்துக்குப் போக வேண்டாம். வேற எங்கயாவது போய் சந்தோஷமாக இருக்கலாம் என்று சொன்ன மனைவிக்கு அலுவலக அவசரத்தைக் காரணம் காட்டிக் கிளம்பி வந்துவிட்டேன். காலையிலிருந்து நல்ல மழை. வேலை முடிந்து கிளம்ப எட்டுமணிக்கு மேலாகி விட்டது.

வெளியில் வந்தால் பிரமோத் எதிரில் வந்தான்.

"என்னடா, ரொம்ப வேலை பார்க்கிறாய் போல இருக்கு.." (அது இந்தியும் ஆங்கிலமும் கலந்த ஒரு மொழியில்..நானே மொழிபெயர்த்து விடுகிறேன்).

"ஆமாம். அவசரமான ஒரு பிராஜக்டை முடித்துக் கொடுக்க வேண்டி இருந்தது.." (நானும் ஆங்கிலத்தில் தான்.. எனக்கு இந்தி தெரியாது.. அவனுக்கு தமிழ் தெரியாது).

அச்சூ.. என்று தும்மினான்.. கைக்குட்டையை எடுத்து முகத்தில் அழுத்திய படியே. அமெரிக்கா வந்து எல்லாரும் காகிதத்துக்கு மாறி விட்டாலும் இவன் மட்டும் இன்னும் கைக்குட்டையுடன்.. திருந்தவே மாட்டான். இதில் அவன் தனித்தன்மையை விட்டுத் தரமாட்டேன் என்று சப்பைக்கட்டு வேறு.

"உனக்கு என்னா ஆச்சு.. இவ்வளவு நேரம்? "

"இன்றைக்கு என்னுடைய நேரம் சரியில்லை.. எவனுக்கோ கணினியில் வேலை பார்க்கத்தெரியவில்லை என்று என்னை அவனுக்கு சொல்லித்தர வைத்துவிட்டார்கள்.. என் குழந்தைக்கு சொல்லிக் கொடுத்திருந்தால் அது இன்னேரம் இரண்டு மென்பொருள் தொகுப்பு எழுதி யிருக்கும் " என்று சலித்துக் கொண்டான்.

இவனைப் பற்றி.. குஜராத்தியான இவனை அமெரிக்கா வந்த அன்று விமான நிலையத்தில் சந்தித்தேன்..

அன்றிலிருந்து பேசத்தொடங்கியவன் தான்.. இன்று வரை மிக நல்ல நண்பனாக.. இல்லை சகோதரனாகவே மாறி விட்டான். எத்தனையோ உதவிகள்.. உயிரைக் கொடுப்பான் என்று சொல்வார்களே அந்த வகை.. அவனுக்கு ஏற்ற மனைவி சுனிதா..படித்தவலானாலும் எச் 4 * லில் இருப்பதால் வீட்டில். ஒரே குழந்தை ராஜிவ். (அவரைப்போல் ஒரு நல்ல பிரதமர் இன்று வரை இல்லை - பிரமோத்)

என் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறான்.. என் மனைவி, ஆர்த்திக்கு சுனிதா நல்ல துணை. என் மனைவிக்கு இந்தி தெரியும். இரண்டு பேரும் இந்தியில் என்னைக் கலாய்ப்பது தனிக் கதை..

நடந்து பவோனியா ரயில் நிலையத்திற்கு வந்து விட்டோம். திரும்ப ஒரு அச்சூ...அவன் கைக்குட்டையை எடுத்துத் தும்ம சிரமப்பட்டான்.

"அதைக் கையிலேயே வைத்துக் கொள்ளக் கூடாதா.."

"எல்லாரும் வினோதமாகப் பார்ப்பார்கள்" எல்லாவற்றிற்கும் இது ஒரு கருத்து.. அசிங்கம் பார்ப்பது மிகவும் அதிகம்.. டிப் டாப் ஆகத்தான் அலுவலகம் வருவான். மடிப்புக் கலையாது. பாதையில் சேறோ சகதியோ இருந்தால் ஒரு தெரு சுற்றிக் கொண்டு வருவானே அல்லாமல், அதைத் தாண்டக் கூட மாட்டான். தெளித்துவிட்டால் அசிங்கம்..பன்றி உன் எதிரில் வந்தால் நகர்ந்து போவதில்லையா அது போலத்தான் என்பான். நானும் என் மனைவியும் அவனை திருவாளர் அசிங்கம் என்றே கூப்பிடுவோம்.

மழை பெய்ததால் நடை மேடை கூட கொஞ்சம் சேறாகத்தான் இருந்தது.. இரண்டு ரயில் மாறி வீட்டுக்குப் போக வேண்டும்.. முதல் ரயில் உடனெ வந்து விட்டது.. போகும் போது.. அருகில் இருந்தவர்களைச் சட்டை செய்யாமல் பேசிக்கொண்டே வந்தான்.. நான் கேட்கும் ரகம்..

"ரயில் நிலையப் பிச்சைக் காரனுக்கும் மென்பொருள் கலைஞருக்கும் என்ன ஓற்றுமை?"

"தெரியலையே"

" இரண்டு பேரும் அவர்களைப் போன்றவரைப் பார்த்தால் கேட்கும் முதல் கேள்வி "நீ எந்த பிளாட்பாரம்?""

****************************

நுவார்க் ரயில் நிலையத்தில் இறங்கி அடுத்த ரயிலுக்கு ஓடினோம்.. அதை விட்டால் அடுத்த 30, 40 நிமிடங்களுகுக்கு காத்திருக்க வேண்டியது தான்.. ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது.. ஏழு மணியிலிருந்து எல்ல ரயில் களுக்கும் தாமதம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.. இன்றைக்குப் பத்து மணிக்கு மேல்தான் வீடு என்று நினைத்துக் கொண்டேன்.

இப்போது எங்கள் பேச்சு அவன் பார்த்த ஒரு இந்தித் திரைப்படத்தைப் பற்றியதாயிருந்தது.. எதோ ஒரு பாகிஸ்தான் இந்தியப் போர் பற்றியது.. மிகவும் சுவாரசியமாக தும்மல் களுக்கிடையில் விளக்கிக் கொண்டிருந்தான்..

எதோ ஒரு கான் நடிகர், வில்லன் வீசும் குண்டுகளுக்கிடையில் கைத்துப்பாக்கியால் சுட்டு நாட்டைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். வில்லன் மிகவும் புதிய உத்திகளைக் கையாண்டு இந்தியாவை வீழ்த்த முயற்சித்துக் கொண்டிருந்தான்.. மும்பை ரயில் நிலையத்தில் வில்லன் குண்டு வைத்துவிட்டான்.. கதா நாயகன் குண்டைத்தேடிக் கொண்டு..

திடீரென்று "எல்லாரும் தரையில் படுங்கள்" என்று கூவிக்கொண்டு நிறைய போலிஸ் காரர்கள் எங்கலை நால புறமும் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் எல்லாருடைய இயந்திரத் துப்பாக்கிகளும் எங்களைக் குறி வைத்திருந்தன.

அவர்களின் தலைவன் "இரண்டு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு தரையில் படு" என்று உத்தரவிட்டான். நான் தயாராகி விட்டேன் படுக்க..

அப்பொது பிரமோத் உரக்க.. "இந்த இடம் சகதியாக இருக்கிறது.. நான் அங்கே கம்பத்தில் சாய்ந்து நிற்கிறேன்" என்று கூறி கம்பத்தை நோக்கி செல்ல எத்தனித்தான்.. அய்யோ இவனுக்கென்ன இந்திப் பட கதானாயகன் என்று நினைப்போ.. என்று நான் எண்ணும் போதே.. போலிஸ் காரன் "நோ" என்று அலறினான். நான் உடனே படுத்து விட்டேன்..

திடீரென்று "அச்சூ.." என்று பெரிதாக ஒரு தும்மலும் தொடர்ந்து டப் டப் டப் டப் என்று சுடும் சத்தமும் கேட்டது.. எனக்கருகில் தடால் என்று வந்து விழுந்தான் பிரமோத்.. கண்கள் இரண்டும் என்னைப் பார்த்த படி.. அதில் அதிர்ச்சி இன்னும் நீங்காமல்...
எனக்குப் புரிந்தது.. இவன் கைக் குட்டையை எடுக்க கையை கீழே இறக்கி பாக்கெட்டில் விட்டதை அவர்கள் இவன் ஆயுதம் எடுக்க முயற்சிப்பதாக எண்ணி சுட்டுவிட்டார்கள்.. பயம்..

அய்யோ.. என்ன பைத்தியக் காரத்தனம்.. கீழே படுத்திருக்கக் கூடாதா.. அந்த சட்டையை தூக்கிப் போட்டு வேர வாங்கி இருக்கலாமே.. இப்போ உயிர் போச்சே.. மனம் அரற்றியது.. கண்ணில் நீர் பெருக்கெடுத்தது.. என் உயிர் போனால் போல ஒரு வலி..

அடுத்த அரை மணி நேரத்தில் என்னை ஒரு போலிஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.. அங்கே என்னிடம் எல்ல சட்ட வழி முறைகளையும் சொன்னார்கள்..நீ பேச வேண்டாம். நீ பேசினால் அது வாக்கு மூலமாக எடுத்துக் கொள்ளப்படும் இத்யாதி இத்யாதி.. என் மீதும் பிரமோதின் மீதும் ரயில் நிலையத்தை குண்டு வைத்துத் தகர்க்க திட்டம் போட்டதாக வழக்குப் பதிவு செய்திருந்தார்கள்.. இப்போது எல்லாம் புரிந்தது..நாங்கள் பேசிய சினிமாக் கதை தான் வில்லன்.. பக்கத்தில் இருந்த ஒரு அமெரிக்க கிழவி போலிசுக்குத் தகவல் தந்திருந்தார். நாங்கள் பேசிய எல்லவற்றையும் வரிவரியாகச் சொன்னார்கள்.. "VT" என்பது எந்த ரயில் நிலையத்தின் சங்கேதக் குறிப்பு என்று கேட்டர்கள். அந்த நிலையிலும் சிரிப்பு தான் வந்தது.. என் வழக்கறிஞருக்காகக் காத்திருந்தேன்.

மனைவியை அழைத்து விஷயத்தைச் சொன்னேன்.. அவள் தெரிந்த வர்களிடம் ஒரு நல்ல வழக்கறிஞராக கேட்பதாகச் சொன்னாள். கண்ணை மூடி அமர்ந்து கொண்டு தியானம் செய்தேன்.. அவர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னேன்.. கைகளும் கால்களும் விலங்கிடப் பட்டிருந்தது.. தூங்கி விட்டேன்..

ஒரு போலிஸ்காரர் வந்து என் வக்கீல் வந்திருப்பதாகச் சொன்னார்.. அவரைப் பார்க்கப் போன போது சற்று தள்ளி வெளியில் என் மனைவியின் அழுது வீங்கிப் போன முகம் தெரிந்தது.

அவர் ஒரு நல்ல மூத்த அமெரிக்க வழக்கறிஞர். எஙகள் தொகுதி செனட் உறுப்பினரான ஒரு இந்தியரின் வேண்டுகோளுக்கிணங்கி வந்திருப்பதாகச் சொன்னார். என் கதை முழுவதையும் சொன்னேன்.. படத்தின் பெயரைக் கேட்டார்.. எனக்குத் தெரியவில்லை.. சுனிதாவுக்குத் தெரிந்திருக்கும் என்றேன். அப்போது தான் நினைவுக்கு வந்தது.. சுனிதாவுக்குச் சொல்லவே இல்லை..

அவரிடம் அதையும் சொன்னென்.. என் மனைவியை சுனிதாவுடன் இருக்கச் சொல்லுமாறும் கேட்டுக் கொண்டேன். அடுத்த நாள் காலையில் மீண்டும் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு திரும்பிப் போனார்.. வாசலைப் பார்த்தேன்.. யாரும் தென் பட வில்லை..

அடுத்த நாள் நீதிபதியிடம் எனக்கு காவலில் வைக்க அனுமதி கேட்டு வழக்கு வந்தது.. என்னை சிறையில் இருந்த படியே தொலைக் காட்சிப் பெட்டி வழியே நீதிமன்றத்தில் காட்டினார்கள்.

என்னிடம் ஆயுதம் இல்லை.. நான் சினிமாக் கதை தான் பேசினேன் என்றெல்லாம் என் வழக்கறிஞர் வாதிட்டார்.. ஆனால் விசாரணைக்கு இன்னும் பதினைந்து நாள் நேரம் கேட்ட அவர்களின் வாதம் ஏற்றுக் கொள்ளப் பட்டு எனக்கு ஜாமின் மறுக்கப் பட்டது.

அடுத்த பதினைந்து நாளும் நரகம். தினமும் வழக்கறிஞர் வருவார்.. என்னிடம் விசாரிப்பார்கள்..
புதியதாக எதாவது தகவல் கேட்பார்கள்.. ஒரு நாள் 'அப்துல் நஸீர்' யாரென்று கேட்டார்கள். எனக்கு அப்படி யாரையும் தெரியவில்லை. பிரமோத் அமெரிக்கா வந்த புதிதில் அவனுடன் தங்கி இருந்திருக்கிறான்.. பிறகு அவன் திரும்ப இந்தியா சென்று விட்டான்.. அவனைத் தேடினால் கிடைக்க வில்லை..

இவர்களுக்கு சந்தேகம்.. அவன் தான் எங்களுடைய தீவிரவாதிக் கூட்டாளியோ என்று.. சுனிதா என் வீட்டில் தான் இருப்பதாக வக்கில் சொன்னார்..

பிரமோதின் உடல் போலிஸ் கட்டுப்பாட்டில் தானிருக்கிறது.. வழக்கறிஞரை சுனிதாவிடம் அப்துல் நஸீரைப் பற்றிக் கேட்கச் சொன்னேன்.. ப்ரமோதின் ஈ-மெயில்களில் அவன் ஈ-மெயில் கிடைக்கலாம் என்றேன். கிடைத்தது.. அவனுக்கு மெயில் அனுப்பியதும் அவன் உடனே தொலை பேசினான்.. வக்கில் மூலம் அவன் இருக்குமிடம் போலிஸுக்குத் தெரிவிக்கப் பட்டது.

அடுத்த முறை விசரணையின் போது, சரியான ஆதாரங்கள் இல்லாததால் என்னை விடுவிக்கச் சொல்லி என் வழக்கறிஞர் வாதிட்டார்.. போலிஸ் தரப்பில் எதையும் பெரிதாக நிரூபிக்க முடியவில்லை.. ஆனாலும் எதேதோ காராணங்கள் (என் இந்திய வாழ்க்கை பற்றி எந்த விவரமும் கிடைக்கவில்லை அதனால் நான் தீவிரவாதி இல்லை என்று நிரூபிக்கவில்லை) என்னை நாடு கடத்தும் படி அரசு வக்கில் கேட்டார்.. நான் பொது நலத்தைக் கெடுக்கும் (public nuisense) வகையில் நடந்ததாகக் கூறினார்கள். அப்படியே தீர்ப்பும் ஆனது.. என் வழக்கறிஞர் இதை எதிர்த்து வழக்குப் போடலாம் என்றார்.. எனக்கு இங்கிருக்க விருப்பமில்லை.

தவறாக சுட்டதற்காக ஒரு வழக்கு பதிவு செய்து ஒரு பம்மாத்து வித்தை காட்டினார்கள். போலிஸின் பயம் நியாயமானது தான்.. பிரமோதின் செய்கை தான் தவறு என்று தீர்ப்பு வந்தது. மொத்தமாக 3 மாதங்கள் என்னை ஒரு சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள்.. சிறை முழுக்க சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்கள்.

இந்திய அரசின் அனுமதியுடன் என்னை நாடு கடத்தினார்கள். என் மனைவியும் சுனிதாவும் அவள் குழந்தையும் அதற்கு முன்னரே திரும்பி விட்டார்கள். நண்பர்கள் பலர் என் பொருள்களை விற்கவும், வழக்கறிஞருக்கு சம்பளம் கொடுக்க பணம் திரட்டவும் பெரிதும் உதவினார்கள்..

திரும்பி இந்தியாவுக்கு வந்தால்.. என் பாஸ்போர்ட் ரத்து செய்யப் பட்டிருந்தது. இறங்கிய உடனே ரகசியமாக ஒரு வழியே அழைத்துச் செல்ல உதவினார்கள்.. வாசலில் ஒரு ஆயிரம் காமிராக்கள் காத்திருந்ததாக என் மனைவி பிறகு கூறினாள்.

இயல்பான வாழ்க்கைக்கு வர ஒரு இரெண்டு மாதம் ஆனது.. என் நிறுவனம் என்னை திரும்ப வேலைக்கு எடுத்துக் கொண்டது. சுனிதாவுக்கும் மும்பையில் ஒரு வேலை கொடுத்தார்கள்.

உலகப் புகழ் பெற்று விட்டேன் என்று என் அலுவலகத்தில் ஒருத்தர் ஒரு நாள் சொன்னார்.. என் முகத்தைப் பார்த்ததும், மன்னிப்புக் கேட்டு காணாமல் போனார்.. வாழ்க்கை பழைய மாதிரி ஆகவில்லை.. நிறையக் காக்கைகளுக்கு என் புண்ணைக் கொத்துவதில் இன்பம் கிடைத்தது.

நிறையக் கோவம் வந்தது.. இயலாமை. எல்லா இடங்களிலும் ஒரு தயக்கம். பயம்.. என் அமெரிக்க கனவுகள் உடைந்த வருத்தம்.. இதற்கு மேலாக நான் செய்யாத ஒன்றுக்காக எனக்கு தண்டனை கொடுத்தத்தான் என்னை மிகவும் துன்புறுத்தியது.

சின்ன வயசில் பேப்பரில் பேர் வரவேண்டும் என்று ஒரு விருப்பம் உண்டு.. அதற்காகத் தான் கிரிக்கெட் ஆடவே செய்தேன்.. 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் எடுத்த செய்தித்தாள் துண்டு எல்லாம் வைத்திருக்கிறேன். ஆனால் இப்போது பேர் தெரியாத ஊரில் இருக்கும் கையெழுத்துப் பத்திரிகையில் கூட என் பேர் அடி பட்டது. ஏன் வந்ததோ என்று வருத்தம்.

என் வாழ்க்கை இனி பழைய படி மாறுமா.?

***************************************

நினைவலைகளை என் மனைவியின் குரல் கலைத்தது..

"என்ன ஆபீஸ் போகலியா.."

டி வி யைக் காட்டினேன் .. புரிந்து கொண்டாள்.. "இன்னிக்கி உங்க பிறந்த நாள்.. எங்கேயாவது வெளில போலாம்.. ஒரு மாறுதலா இருக்கும். ஆபீசுக்கு விடுமுறை சொல்லிடுங்க.."

"சரி"

போன வருஷம் இப்படி நல்ல பிள்ளையாக இருந்திருக்கக் கூடாதா.. மனம் ஏங்கியது..

Thursday, August 18, 2005

94. சிறுகதை - தப்புக் கணக்கு

முதலில் சிரித்தான்.. அவள், அவன் மனைவி, சொல்வதை நம்பத் தயாராக இல்லை.. அவன் தங்கையைப் பற்றி நன்றாகத் தெரியும்.. இருபத்து இரண்டு வருடங்களில் பதினெட்டை அவனைச் சார்ந்து தான் வாழ்ந்திருக்கிறாள். உடை வாங்குவதிலிருந்து படிக்க வைத்தது வரை அவனது முடிவு பெரும் பங்காற்றியிருக்கிறது.

அவன் அப்பா தொழில், கட்சி என்று வெளிவேலையிலேயே இருந்துவிட்டார்..சாதிக் கட்சியின் வளர்ச்சியில் இவர் தான் அச்சாணி. அம்மா அவளுக்கு நான்கு வயதிருக்கும் போது போய்ச் சேர்ந்து விட்டாள். சினிமாவில் காட்டும் அண்ணன் தங்கை எல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்.

சரளாவின் வார்த்தைகள் மனதை என்னமொ செய்தது.. "யாரோ ஒரு பையனோட தி நகரில பாத்தேங்க..யாருடின்னு கேட்டா காதலன்னு சொல்லரா.. பையன் பாத்தாலும் அவ்வளவு வசதியான பையனா தெரியலை"

இவளுக்கு மாப்பிள்ளை தேவை என்றால் பெரிய பெரிய பணக்காரர்கள் தயாராக இருந்தார்கள்.. அப்பா ஒரு அரசியல் தலைவர் மகனை குறிவைத்திருந்தார்.. இவனது அரசியல் வாழ்க்கை வளர அது ஒரு நல்ல அஸ்திவாரமாக இருக்கும் என்பது அவர் கணிப்பு

விஷயம் புரியாத வயசு.. புரிய வைக்கலாம்..

"தங்கச்சி எங்க இருக்கா சரளா.."

"அவ அறைல தாங்க"

கதவைத் தட்டினான்.

"என்ன தேவி.. படிக்கிறியா.. "

என்னை ஒரு சந்தேகத்துடன் பார்த்தாள்.. அவளுக்குத் தெரியாதா நான் எதைப் பற்றிப் பேச வந்திருக்கிறேன் என்று..
சிரித்தேன்.. அவளுக்கு உடல் சற்றே நடுங்குவது போலத் தோன்றியது.

"காலேஜ் எல்லாம் எப்படி போகுது கண்ணு.. ஏதும் பிரசினை இருந்தா என் கிட்ட சொல்லு..இன்னிக்கி தி.நகர்ல யாரோ ஒருத்தன் உன் கிட்ட வம்பு பண்ணானாமே.."

(இப்பொவாவது ஆமாம் ஒரு பொறுக்கிப் பையன்.. வம்பு பண்ணான்னு சொல்லி பாலை வாரு கண்ணு)

"இல்லையெ அண்ணா, அவன் என் நண்பன் தான்"

"நண்பன்னா?" இன்னும் முகத்தில் புன்னகை மாறவில்லை..

"நான் அவனை காதலிக்கிறேன்"

"யாரும்மா அவன்?"

"அவன் பேரு சுந்தர். எங்க காலெஜ்ல இறுதியாண்டு படிக்கறான். பல்கலைக்கழகத்தில முதல் மாணவன். ஏற்கனவே நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்து விட்டது.. படிப்பை முடித்த கையோடு வேலையில் சேர வேண்டியது தான்.. "

"அவங்க அப்பா என்ன பண்றாரு தேவி?"

சொன்னாள்.. அவங்க சாதி வேற சரியில்லை.. புரியும் படி எடுத்துச் சொன்னான்.. மசிவதாகத் தெரியவில்லை.. சாதிகளெல்லாம் சமம் தானாம். புரிந்து கொள்ள மாட்டெனெங்கிறாள். மிரட்டிப் பார்த்தான்.. பலனில்லை.. எரிச்சலின் உச்சத்தில் பளாரென்று ஒரு அறை..

அய்யோ.. இது வரை ஒரு நாள் கூட அவளை குரலெடுத்துத் திட்டியது கூட இல்லை.. ஆனால் விஷயம் தீவிரமானது.. அப்பாவிடம் பேசினால் அவர் வேறு டென்ஷனாகிக் குழப்புவார்.. நாமளே முடித்து விட வேண்டியது தான்.. பிறகு இருவரையும் சமாதானப் படுத்திக் கொள்ளலாம்.

தெளிவாகச் சொன்னான்..
"நீ இனிமேல் உன் திருமணம் முடியும் வரை வெளியில் எங்கெயும் போகக்கூடாது.. வீட்டிலேயே இரு.. அந்தப் பையனையும் ஒரு தட்டு தட்டி வைக்கிறேன்.."

நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. "என்ன மிரட்டறியா.. உன்னால் முடிந்தால் என்னை நிறுத்திப் பாரு" என்று சவால் விட்டாள்.. அட இந்த காதல பாருங்கப்பா.. என்ன பாடு படுத்துது..

மாரிக்கு ஒரு போன்.. பையன் பேர் காலெஜ் பேர் சொல்லுங்கண்ணெ முடிச்சுடறேன்.... கொடுத்தேன்.. முடித்து விட்டான்.. அடுத்த நாள் போன் வந்தது.

"பையன் முரண்டு பிடிச்சான்.. நான் தேவியைக் காதலிக்கவெல்லாம் இல்லை. அது வேற ஆள் என்றான். ரெண்டு தட்டு தட்டினேன். போய்ட்டான் பாடிய எரிச்சிட்டேன்.. மேட்டர் ஓவர்."

கீழே வந்து தேவியைப் பார்த்தான். தூங்கிக்கொண்டிருந்தாள். சரளாவிடம் முழுக் கதையும் சொன்னான் "மேட்டர் ஓவர்".

திரும்பிப் பார்த்தால் தேவி..சலனமே இல்லாமல் இருந்தாள்.. புயலுக்கு முன்னே அமைதியோ?.

" உன் சாதி வெறி ஜெயிச்சிடிச்சில்ல.. இப்போ என்ன காலேஜ் போக விடு.. நீ மாப்பிள்ளை பாரு .. வருசம் முடிஞ்சதும் கல்யாணம் வைச்சுக்கலாம்.."

அவனால் நம்ப முடியவில்லை.. இருந்தாலும் அவள் நடவடிக்கைகள் நம்பிக்கை தருவதாகத் தான் இருந்தது. ஒரு வாரம் ஆள் போட்டுக் கண்காணித்தான்.. எதுவும் பிரச்சினை இல்லை..

ஆறு மாதத்தில் தேர்வுகள் முடிந்தது. அடுத்தநாள்
"உன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள்.. தயாராக இரு.. "

"சரிண்ணா.. போய் புதுசா ஒரு சேலை வாங்கிக்கவா?"

மாற்றத்தை நம்பியவனாய்ச் சொன்னான். "சரி .. சீக்கிரம் வந்துடு"

மூன்று மணிக்கு சரளாவிடமிருந்து போன்.

"தேவி இன்னும் திரும்ப வரலைங்க"

மூன்றே காலுக்கு திரும்ப போன்..

"ஒரு கடிதம் வச்சிட்டுப் போயிருக்கங்க.. "

கார் ஓட்டியபடியே செல் தொலைபேசியில் சொன்னான்

"படி"

"அண்ணா, நான் ரவியைத்தான் காதலித்தேன்.. அண்ணி அன்று பார்த்ததும் அவனைத்தான். சுந்தர் என் காதலுக்கு தொந்தரவாக இருந்தான். சரி நீ கோவப்பட்டதும் எதாவது செய்வாய் என்று எதிர் பார்த்தேன். அதனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஆனால் கொன்றுவிடுவாய் என்று எதிர் பார்க்கவில்லை. இப்போதும் என் வக்கீலிடம் என் வாக்கு மூலம் நீ எப்படி எதற்காக சுந்தரைக் கொன்றாய் என்று எழுதி கொடுத்திருக்கிறேன்.. எனக்கு எதாவது என்றால் அது போலீசுக்குப் போகும்..

அதனால் என்னைத் தேட வேண்டாம்..

கடைசியாக..

பொண்ணுன்னு நினைச்சுத்தானெ மிரட்டின.. நானும் புரட்சிப் பெண்.. பாரதி கண்ட புதுமைப் பெண். நினைச்சதை என் கையாலயே நடத்திக்குவேன்.

அன்புடன் (ரவியின்) தேவி

கடிதத்தைக் கேட்டதும் தலை சுற்றியது. என் தங்கைன்னு நிரூபிச்சுட்டான்னு நினைத்துக் கொண்டான்.

93.சிறுகதை - சின்ன வட்டம்

தேர்வு முடிவுகள் வந்தாயிற்று. ரமணிக்கு ரொம்ப சந்தோஷம். அவனுடைய விருப்பம் நிறைவேறியது. ரொம்ப ஒன்றும் ஆசைப் படவில்லை.. ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆயிரத்து ஆறு கிடைத்தது. அதற்கு மேல் மகிழ்ச்சி தரும் செய்தி பக்கத்து வீட்டு கமலா அவனை விட இரண்டு மதிப்பெண் குறைவாகப் பெற்றிருந்தது தான்.

மதிப்பெண் அட்டை பெற்று வரும் வழியில் பிள்ளையார் கோவிலுக்குப் போய் ஒரு பதினோறு சுற்று சுற்றி விட்டுத் தான் வீட்டுக்குப் போனான். அழுத்தம் திருத்தமான நம்பிக்கை அந்தப் பிள்ளையார் மேல். தினமும் காலையில் எழுந்து குளித்து கோவிலுக்குப் போய் கும்பிட்டு ஆயிரம் மதிப்பெண்ணுக்கு மேல் வாங்க வை என்று வேண்டிக் கொள்வான்.. அதற்கு பலன் கிடைத்து விட்டதாகவே நம்பினான்.

ரமணி சிறு வகுப்புகளில் முதல் மதிப்பெண் வாங்கியவன் தான். பிறகு கிரிக்கெட், சினிமா என்று அன்னிய ஆதிக்கத்தால் கல்வி வளர்ச்சி தடைப் பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி எட்டாம் வகுப்பில் கணிதத்தில் அரை ஆண்டுத் தேர்வில் பெயில் ஆனான். பின்னர் சுதாரித்துக் கொண்டாலும், முதல் மதிப்பெண் பெறுவது என்பது எட்டாக் கனியாகவே இருந்தது..

பத்தாம் வகுப்பில் கண்ணை மூடிக்கொண்டு எண்பது சதவீதத்திற்கு மேல் வாங்குவேன் என்று அனைவரிடமும் கூறிக்கொண்டிருந்ததோடல்லாமல் தேர்வுகளுக்கிடையில் திரைப்படம் வேறு பார்த்தான்..முடிவுகள் வந்ததும் எண்பது சதவீததிற்கு ஆறு மதிப்பெண் இன்னும் தேவையாக இருந்தது.. அவன் தந்தையார் பணி புரியும் நிறுவனத்தில் எண்பது சதவீதம் மதிப் பெண் பெற்றால் ஐனூறு ரூபாய் பரிசு கிடைக்கும்.. கமலா பத்தாவதில் அதை வாங்கி விட்டாள்.. இவன் வாங்க வில்லை என்ற ஏக்கம் இருந்தது.. கிரிக்கெட், சினிமா எல்லாம் கட்டுக்குள் வந்தது. இரவு தினமும் ஒரு மணிவரைப் படிப்பான்.

அதற்கு மேல் பிள்ளையாரிடமும் தினமும் ஆயிரம் மதிப்பெண் கேட்டுக் கொண்டிருந்தான்.

வீட்டுக்குப் பொனதும் அம்மாவிடம் தான் முதலில் இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னான். பின் எல்லோரும் இவனைச் சூழ்ந்து கொண்டு மதிப்பெண் பற்றிப் பேசினர். லயோலாவா விவேகானந்தாவா என்று பேசிக்கொண்டிருந்தனர்.

எதோ ஒரு இடத்தில் இத்தனை மதிப்பெண்களுக்கும் காரணம் பிள்ளையார் தான் என்று குறிப்பிட்டான். உடனே ராஜு

"சுத்தப் பேத்தல்..கஷ்ட்டப்பட்டு படிச்ச.. மதிப்பெண் கிடைத்தது.. இதுல பிள்ளையார் எங்க இருந்து வந்தார். அப்படி பிள்ளையார் தருவதானால் மானிலத்தில் முதல் மதிப்பெண் கேட்டு வாங்கியிருப்பது தானே" என்றான்..

அவன் ஒரு புது கம்யூனிஸ்ட். கல்லூரி போன பின் சிகரெட் பிடித்துக் கொண்டு கடவுள் பொய் என்று சொல்பவன். ஏன் பொய் என்று கேட்டால் "நீ பார்த்திருக்கியா" என்று கேட்டு விதண்டா வாதம் பண்ணுவான்.. அவன் கூடப் பேசுவது கால விரயம்.. எதுவும் கற்றுக் கொள்ள முடியாது. தெளிவும் பிறக்காது.

ஆனால் இன்றைக்கு அவன் சொன்னது சரியோ என்று தோன்றியது.. ஏன் எனக்கு மானிலத்தில் முதல் மதிப் பெண் வேண்டும் என்று கேட்கத்தோன்றவில்லை? அதுவரை இருந்த மகிழ்ச்சி எல்லாம் காணாமல் போனது.

அம்மா எதோ கேட்க அழைத்தாள்.. முகவாட்டம் கண்டு என்னடா என்றாள்.. சொன்னான். "அவர் அவர்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது தான் கிடைக்கும். நீ படிச்சது பிள்ளையார் கிட்ட வேண்டிக் கிட்டது இரண்டுமே காரணம்.." என்றாள்.

இப்போது மானிலத்தில் முதல் இடம் கேட்கவில்லையெ என்ற வருத்தம் மனதை வாட்டியது. இல்லையென்றால் பிள்ளையார் தந்தார் என்பது பொய்.. இரண்டில் ஒன்று தான் நிஜம்.. எது நிஜம்?..

கமலா இவனைப் பார்க்க வந்தாள். என்னாடா ரமணி ரொம்ப சோகமா இருக்க.. மார்க் போதவில்லையா என்று கேட்டாள்.. சிரித்துக் கொண்டெ "இல்ல கமலா டயர்டா இருக்கு" என்றான்..

"ஒன்னு ரெண்டா.. ஆயிரம் மார்க் இல்ல வாங்கியிருக்க.. அப்படித்தான் சோர்வா இருக்கும்" என்று சிரித்தாள்

"கமலா உனக்கு ஒரு கேள்வி.. நீ இவ்வளவு மார்க் வாங்கியதுக்கு யார் காரணம்?" அவளும் தினமும் அவனுடன் கோவிலுக்கு வருபவள் தானே.

அவனை நிமிர்ந்து பார்த்த கமலா சிரித்துக் கொண்டே "நீ தான்" என்றாள்.. "உன்னைவிட நிறைய மார்க் வாங்கணும் என்று தான் கஷ்டப் பட்டுப் படித்தேன். நீ தான் எனக்கு முன்னால் தொங்கிய காரட் "என்றாள். அப்போ இவள் மதிப் பெண் வாங்கியதற்கும் பிள்ளையார் காரணம் இல்லையா?...

சரி விடு என்று நண்பர்களைப் பார்க்கப் போய் விட்டான்.. இரவில் திரும்பி வந்ததும் அப்பா வாழ்த்தினார். "கடைசியா ஒரு பரிசு வாங்கிட்ட என் நிறுவனத்திலிருந்து" என்றார்." எல்லா விண்ணப்பங்களையும் உடனே நிரப்பி அனுப்பிடு"

அவரிடமும் எல்லவற்றையும் சொல்லி அதே கேள்வியைக் கேட்டான்.. "யார் காரணம் என் மதிப்பெண்களுக்கு?"

"உன் முயற்சியை தவிர, உங்கம்மா தான் .. அவள் உனக்கு காப்பி போட்டுக் கொடுத்து, உனக்குள் ஆர்வத்தை வளர்த்து, படி படி என்று படுத்தி எடுத்தது தான் காரணம்" என்றார். இன்னும் மனசு திருப்தி அடையவில்லை.

சிவசுத் தாத்தா அப்பாவின் அப்பா. அந்த அறையின் ஒரு கோடியில் பாயில் படுக்கத் தயார் செய்து கொண்டிருந்தார். அப்பா அங்கிருந்து போனதும் இவனை அழைத்தார்.

"இங்க பாரு ரமணி, நீ மதிப் பெண் வாங்கியதற்கு எல்லாரும் காரணம் பிள்ளையார் உட்பட" என்றார்.

"அப்போ ஏன் மானில முதல் மதிப்பெண் கிடைக்கவில்லை?"

"நீ கேட்கவில்லை அதனால் கிடைக்கவில்லை. நீ உன்னால் எண்பது சதவீதம் தான் வாங்க முடியும் என்று நம்பினாய் அதை பெற எல்லார் உதவியையும் நாடினாய்.. மதிப்பெண் பெற்று விட்டாய். அதாவது உன் குறிக்கோளில் வெற்றி பெற்று விட்டாய். கிடைத்ததை வைத்து சந்தோஷப் படு.. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. அடுத்த முறைக்கு பெரிய குறிக் கோளாக வைத்துக்கொள். நிச்சயம் வெற்றி பெறுவாய்"

"எல்லாத்துக்கும் நமது தன்னம்பிக்கை தான் காரனம். பிள்ளையாரோ அம்மாவோ கருவிகள்.. உன்னை ஊக்கப்படுத்த மட்டுமே முடியும். உன் பிரச்சினைகளை பிள்ளையார் கவனித்துக் கொள்வார் என்று நினைத்ததால் உன் மன அழுத்தம் குறைந்தது. ரிலாக்ஸ்டாக படிக்க முடிந்தது.. அது தான் வெற்றிக்குக் காரணம்."

அப்படியானால், நான் பிள்ளையார் கோவிலுக்கு போகாமலேயெ இந்த மதிப் பெண் பெற்றிருக்கலாமே?"

"நிச்சயமாக. ஆனால் கடவுள் என்பவர் எல்லா மதங்களிலுமே மனிதர் மனதில் நம்பிக்கையை வளர்த்து, உன்னால் முடியும் என்ற ஒரு எண்ணத்தை தரவே இருக்கிறார்கள். கடவுளை மட்டும் நம்பி படிக்கவில்லையென்றால் இது கிடைத்திருக்கதென்பதை ஒத்துக் கொள்கிறாயா? மிகவும் டென்ஷனான ஒரு சமயத்தில் இந்த நம்பிக்கை பெரிய அளவில் கை கொடுக்கிறது. இதை வெற்றி பெற்ற பிறகு தான் நாம் உணர்கிறோம்.. அதனால் பிள்ளையாரும் உன் தன்நம்பிக்கையை வளர்த்த விதத்தில் உன் மதிப் பெண்ணுக்குக் காரணம். மானில முதன்மை பெற சின்ன வட்டத்தில் யோசிக்காமல் பெரிதாக யோசி.. மேலும் இந்த மதிப் பெண்கள் எல்லாம் ரொம்ப தூரம் வராது.. இன்னும் நிறைய இருக்கிறது வாழ்க்கையில் " என்று கூறி அவர் கையில் வைத்திருந்த "திங்கிங் பிக்" புத்தகத்தையும் அவனிடம் கொடுத்தார்.

புரிந்தால் போலவும் புரியாதது போலவும் இருந்தது.. இது தான் கடவுள் போல..

அடுத்த தேர்வுக்கு கல்லூரியில் முதல் மதிப் பெண் பெறப் பிள்ளையாரே...

அட இங்க பாரு.. திரும்ப சின்ன வட்டத்திலயே யோசிக்கறேன்..

Wednesday, August 17, 2005

சிறுகதை - எது முகமூடி

புதியதாக வாங்கிய ஹோன்டா சிட்டியை நிறுத்திவிட்டு, வீட்டினுள் நுழைந்தான்.

படபடப்புடன் அவன் மனைவி ஓடி வந்தாள்..என்னங்க ! என்னங்க !!.. பதட்டத்துடன் அழைத்தாள்

என்ன ஆச்சு சரளா , என்ன இவ்ளோ பதட்டமா இருக்கே?

உங்க தங்கச்சிய என்னனு கேளுங்க.. படபடப்பு மாறாமல் சொன்னாள்..ஏன் என்ன அச்சு

இப்போ , சொல்லுடி என்ன ஆச்சு ?? ...

அவளை இன்னைக்கு சாயந்திரம் தி.நகர் ல ஒரு ரெஸ்டாரண்டல பார்த்தேங்க, யாரோ ஒரு பையனோட,அவங்க பேசிட்டு இருந்ததை பார்த்தா எனக்கு சந்தேகமா இருந்தது..வீட்டுக்கு வந்து விசாரித்து பார்த்தா காதல்னு சொல்றா.. மூச்சை நிறுத்தாமல் சொல்லி முடித்தாள்..

தேவி, சற்று அதிகப்படியாகவே சத்தம் போட்டு தன் தங்கையை அழைத்தான்..

மாடியறையில் இருந்த தேவி, தயக்கமாக வந்து நின்றாள்... ஏதும் பேசவில்லை..

உங்க அண்ணி என்னமோ சொல்றாளே என்னது அது?

இல்லைண்ணா அது வந்து.. வந்து...தேவி மென்று விழுங்கினாள்
வந்து ,போயி எல்லாம் வேண்டாம்..என்ன விஷயம்னு சொல்லு, எரித்துவிடும் பார்வை பார்த்துக்கொண்டே கேட்டான்.

வந்து...அவர் பெயர் சுந்தர், என் கூட காலேஜ்ல படிக்கறார், ரொம்ப நல்லவர், பி இ., இறுதியாண்டு, என் வகுப்பில் தான் படிக்கிறார். ஏற்கனவே கேம்பஸ் இண்டர்வியுல ஒரு மிக பெரிய நிறுவனத்துல தேர்வாகிட்டாரு.. இன்னும் 6 மாசத்துல கை நிறைய சம்பாதிப்பார்னா...வேக வேகமாக சொல்லிமுடித்தாள்

நம்ம அளவுக்கு வசதியான குடும்பமா???

அப்படி இல்லைண்ணா, ஆனா நல்லா சம்பத்திச்சு வசதியா வந்துடுவாருனா..எனக்கு நம்பிக்கை இரூக்கு..

எந்த ஊரு பையன்??

இங்க தான்னா..மெட்ராஸ்ல, கே கே நகர் ல இருக்காரு....

என்ன சாதி ?

"............." சாதி வகுப்பை சார்ந்தவர்னா அவர்..

"........." சாதியா?? நாம என்ன சாதினு தெரியுமா உனக்கு???? நம்ம சாதிய விட மதிப்புல குறைஞ்சது அந்த சாதினு தெரியுமா உனக்கு?

இல்லைண்ணா வந்து , ரொம்ப ரொம்ப நல்லவர்னா... அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னா.. ஒரு வருஷமா நாங்க ரொம்ப சின்ஸியரா.. அவள் முடிக்கும் முன்பே.....

அடி செருப்பால, என்ன தைரியம் உனக்கு..என்கிட்டயே இப்படி பேசுறியா?? எங்கே இருந்து வந்துச்சு இவ்ளோ தைரியம்..?? சாதி விட்டு சாதி மாத்தி கல்யாணம் பண்ணி கொடுத்தா என் கவுரவம் என்ன ஆகறது.. மரியாதையா சொல்றேன் கேட்டுக்கோ..காதல் , கத்திரிக்கா எல்லத்தையும் மூட்டைகட்டி வெச்சிட்டு, ஒழுங்கு மரியாதையா இருந்துக்கோ..இல்லை காலேஜும் வேண்டாம் ஒரு எழவும் வேண்டாம்..வீட்ல இரு.. சீக்கிரமே நம்ம சாதில ஒருத்தனை பாக்கறேன்..கழுத்த நீட்டு.... மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்..

இல்லைண்ணா, அவர் தான்.. முடிவு பண்ணிட்டேன்னா ..அவள் முடிக்கும் முன்னரே ஆக்ரோஷமாக கத்தினான்வெட்டி போட்டுறுவேன் ரெண்டு பேரையும்..தெரியும்ல உன் அண்ணனை பத்தி உனக்கு..

அண்ணா, நா சொல்றதை கொஞ்சம்.............................

ஒரு மயி.... கேக்க முடியாது...சரளாஆஆஆஆ ...

அடித்தொண்டையில் இருந்து கத்தினான்.... அருகில் ஓடி வந்த சரளாவை பொளெரென அறைந்தான்.. "என்னடி பண்ற வீட்ல.. 1 வருஷமா இந்த பொட்ட நாயி ஊர் மேயுது... இது தெரியாம........ உன்னை வெட்டுனா சரியாபோயிடும்..இதோ பாரு...நீ இனிமே காலேஜுக்கு போக வேண்டாம்.. அடுத்த மாசமே உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு பன்றேன்."
..
"முடியதண்ணா.. நான் அவரை தான் கல்யா...."

அவள் முடிக்கும் முன்பே பளாரென உதை,
கன்னத்தில் அறை விழுந்தது.. "................ அம்மா , அப்பா இல்லாத பொண்ணுன்னு கொஞ்சம் செல்லமா வளர்த்தா இவ்ளோ தூரத்துக்கு ஆகிட்டியா நீ, என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு.. போடி உள்ளே.". முடியை பிடித்து இழுத்து சென்று ஒரு அறையில் தள்ளி கதவை சாத்தினான்..

ஜன்னல் வழியாக அவளை பார்த்து உறுமினான்..

" பேரு என்ன சொன்னே... சுந்தரு தானே.. இறுதியாண்டு...நாளைக்கு காலைல அவனை கால் வேற , கை வேறயா பிரிச்சு ஆஸ்பத்திரில படுக்க வெக்கறேன் பாரு.."

உடனடியா தொலைபேசி எடுத்து நம்பர் சுழற்றினான்..
"..டேய் சந்தானம், நான் தான் பேசறேன்... அஞ்சு லட்சம் ஹாட் கேஷ் வாங்கிகோ... சுந்தர்னு பேரு... டி எஸ் ஆர் என்ஜினியரிங் காலேஜ், கடைசி வருஷம் .. கே கே நகர்ல இருந்து வர பையன்.. காலைல பதினோரு மணிக்கு அவன் கை, கால் ஒடஞ்சி ஆஸ்ப்பத்திரில இருக்கான்னு தான் எனக்கு நியுஸ் வரனும்... புரிஞ்சுதா?"படாரென லைனை கட் செய்தான்...

"சரளா , இங்கே வா, நல்லா கேட்டுக்கோ, அவ அந்த அறைய விட்டு வெளிய வரக்கூடாது...சாப்பாடு , தண்ணி எல்லாம் அங்கே தான்.. புரிஞ்சதா..."

"சரிங்க ", தலையாட்டினாள்....

கோபத்தில் கண்கள் சிவந்திருந்தது... பாக்கெட்டை துழாவி.. கிங்க்ஸ் சிகரெட் பாக்கெட் எடுத்து , ஒரு சிகரெட்டை வாயில் வைத்து பற்ற வைத்தான்... புகையை ஆவேசத்துடன் இழுத்து விட்டான்...

தூங்கிப் போனான். காலையில் போன் வந்தது.

"பையன் முரண்டு பிடிச்சான்.. நான் தேவியைக் காதலிக்கவெல்லாம் இல்லை. அது வேற ஆள் என்றான். ரெண்டு தட்டு தட்டினேன். போய்ட்டான் பாடிய எரிச்சிட்டேன்.. மேட்டர் ஓவர்."

கீழே வந்து தேவியைப் பார்த்தான். தூங்கிக்கொண்டிருந்தாள். சரளா விடம் சொன்னான் "மேட்டர் ஓவர்". திரும்பிப் பார்த்தால் தேவி..சலனமே இல்லாமல் இருந்தாள்.. புயலுக்கு முன்னே அமைதியோ?.

" உன் சாதி வெறி ஜெயிச்சிடிச்சில்ல.. இப்போ என்ன காலேஜ் போக விடு.. நீ மாப்பிள்ளை பாரு .. வருசம் முடிஞ்சதும் கல்யாணம் வைச்சுக்கலாம்.."

அவனால் நம்ப முடியவில்லை.. இருந்தாலும் அவள் நடவடிக்கைகள் நம்பிக்கை தருவதாகத் தான் இருந்தது. ஒரு வாரம் ஆள் போட்டுக் கண்காணித்தான்.. எதுவும் பிரச்சினை இல்லை..

ஆறு மாதத்தில் தேர்வுகள் முடிந்தது. அடுத்தநாள்

"உன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள்.. தயாராக இரு.. "

"சரிண்ணா.. போய் புதுசா ஒரு சேலை வாங்கிக்கவா?"

"காதல் சாதி" யின் வெற்றியில் மிதந்தவனாய் சொன்னான். "சரி .. சீக்கிரம் வந்துடு"

மூன்று மணிக்கு சரளாவிடமிருந்து போன்.

"தேவி இன்னும் திரும்ப வரலைங்க"

மூன்றே காலுக்கு திரும்ப போன்..

"ஒரு கடிதம் வசிட்டுப் போயிருக்கங்க.. "

கார் ஓட்டியபடியே செல் தொலைபேசியில் சொன்னான்

"படி"

"அண்ணா, நான் ரவியைத்தான் காதலித்தேன்.. அண்ணி அன்று பார்த்ததும் அவனைத்தான். சுந்தர் என் காதலுக்கு தொந்தரவாக இருந்தான். சரி நீ கோவப்பட்டதும் எதாவது செய்வாய் என்று எதிர் பார்த்தேன். அதனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஆனால் கொன்றுவிடுவாய் என்று எதிர் பார்க்கவில்லை. இப்போதும் என் வக்கீலிடம் என் வாக்கு மூலம் நீ எப்படி எதற்காக சுந்தரைக் கொன்றாய் என்று எழுதி கொடுத்திருக்கிறேன்.. எனக்கு எதாவது என்றால் அது போலீசுக்குப் போகும்..

அதனால் என்னைத் தேட வேண்டாம்..

கடைசியாக..

"சாதிகள் இல்லையடா அண்ணா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"

அடுத்த படத்துக்கு கதை வசனம் எழுத உதவும்.."

பொண்ணுதானேன்னு நினச்செ இல்ல.. நான் பாரதியின் புதுமைப் பெண்.

அன்புடன் (ரவியின்) தேவி

கடிதத்தைக் கேட்டதும் தலை சுற்றியது.

பின் குறிப்பு: இது வி எம் எழுதிய முகமூடி http://arataiarangam.blogspot.com/2005/08/blog-post_16.html சிறுகதையின் தழுவல்.. (தழுவலா.. பாதி கதையெ சுட்டது தான்னு சொல்றது கேட்குது..) சாதி ஜெயிப்பதும் பெண்கள் தோற்பதும் ரியலிசம் ஆனாலும் எனக்கு ஏற்பில்லை.. அதனால் மாற்றி விட்டேன்.. இதற்கு பரிசு உண்டானால் வி எம்க்கு கொடுங்கள்.
அன்புடன் விச்சு

Tuesday, August 16, 2005

சிறுகதை - பார்வைகள் பலவிதம்

"இன்னைக்கு நாள் நன்னாதான் இருக்கு.. ஏன் கேட்கறேள்" குப்புசாமி குருக்கள் எதிரில் இருந்த ஆட்களைப்பார்த்து கேட்டார்.

"ஒன்னுமில்ல அய்யரே.. நம்ம பையன் ஒருத்தனுக்கு கண்ணாலம் கட்டணும் அதுக்காகத்தான்.. இதோ போய் கூட்டிகிட்டு வந்துடறோம் எல்லாம் தயாரா வச்சிக்கிங்க."

கல்யாணமா.. ஒரு அம்பது ரூபா கிடைக்கும் .. என்று சந்தோஷமாக தாலிக் கயிற்றைத் தேடிக்கொண்டு போனார் குருக்கள்.

************************************************
ராஜா டீக்கடையில் உட்கார்ந்து அவன் கட்சி கொடி கட்ட ஐடியா கொடுத்துக்கொண்டிருந்தான். அது தான் அவன் கட்சி அலுவலகம். அவர்கள் கட்சித் தலைவருக்கு அடுத்த நாள் பிறந்த நாள். ஐம்பத்து ஐந்து பேருக்கு வேட்டி சேலை கொடுக்கப் போகிறார்கள். அதற்கான பணத்தை அக்கம் பக்கத்துக் கடைகளில் வசூலித்தாகி விட்டது. மைக் செட், விளக்கு எல்லாம் தயார்.. அடுத்த கட்சிக் காரன் செய்ததை விட நன்றாகச் செய்யவேண்டும்.. அது தான் குறிக்கோள்.

அடிதடி தகராறுகளில் அவன் தான் ராஜா.. இப்பொது ஜாதிக் கட்சியின் உள்ளூர் தலைவரான பிறகு புதிய வழி தெரிகிறது.. ஊரில் மரியாதை, மதிப்பு கொஞ்சம் ஏறித்தான் இருக்கிறது.

ஒழுங்கா விழா எடுத்தா வட்டம் மாவட்டம் எதாவது ஆகலாம்.. கொஞ்சம் பணம் புரளும்.. பெரிய ஒப்பந்தக்காரனாவது ராஜாவின் ஒரு கனவு. அப்புறம் எம் எல் ஏ, மந்திரி.. அதெல்லாம் மெதுவா வரட்டும்.

*****************************************************

கல்யாணத்துக்கு ஆட்கள் வந்ததுமே குருக்களுக்கு புரிந்து விட்டது.. எதோ பிரச்சினை வரப்போகிறது.. பெண் என்று அலங்காரம் செய்து அழைத்து வரப்பட்டவள் அந்த ஊர் ரவுடியான வடிவேலுவின் தங்கை. இரண்டு பேரும் வேறு வேறு ஜாதிக்காரர்கள். பரபரவென்று கல்யாணம் செய்தால் பதினைந்து நிமிடத்தில் எல்லாவற்றையும் முடித்து விடலாம். இவாளுக்கு நடுவில் மாட்டிண்டு முழிக்க வேண்டாம்.

"என்னப்பா எதுவும் பிரச்சினை வந்துடாதொன்னோ?.." என்று முதலில் வந்து கேட்டவர்களிடம் மெதுவான குரலில் கேட்டார்..

"நீ நடத்து அய்யரே நாங்க இருக்கோமில்ல.." என்று கூறி ஒரு ஐம்பது ரூபாயை கையில் கொடுத்தான் அவர்களில் ஒருவன்..

பணத்தைப் பார்த்த சந்தோஷத்தில் மந்திரம் சொல்ல ஆரம்பித்தார் குப்புசாமி குருக்கள்.

தாலியை எடுத்து கையில் கொடுத்தார்.. அவனும் வாங்கி கட்டினான்.. ஒரு தீபாராதனை காட்டி குங்குமம் விபூதி குடுத்த எல்லாம் முடிஞ்சது. திடீரென்று நிறைய பேர் ஓடி வரும் சத்தம்.. அவர் என்னவென்று திரும்பிப் பார்க்குமுன் ஒரே அமளி.. அவருக்கும் உருட்டுக்கட்டையால் நாலு அடி.. விழுந்தவர் எழுந்து சன்னதியோரமா ஓடிப் போய் கதவை சார்த்திக் கொண்டார்.

"பகவானே, நான் என்ன பண்ணினேன்.. எந்துக்கு இப்படி ஒரு சோதனை.. நீதான் இவாளை எல்லாம் கேட்கணும்" என்று சொல்லி உள்ளே இருந்த விக்ரகத்தைப் பார்த்து கும்பிட்டவருக்கு கண்ணில் நீர் வழிந்தது.. அடியின் வலி...

வெளியில் எல்லாவற்றிற்கும் தயாராக வந்திருந்தவர்களுக்கு இடையில் அடிதடி நடந்து கொண்டிருந்தது.

******************************************

"அண்ணே அண்ணே " மூச்சு வாங்க ஓடி வந்தான் மதி.

"என்னடா?"

"நம்ம ஆளுங்கள வடிவேலு ஆளுங்க அடிக்கறாங்க அண்ணே"
வடிவேலு எதிர் கட்சி.. வேற ஜாதி.. எதோ பிரச்சினை..

"என்னடா பண்ணீங்க?"

"நம்ம சின்னான் அந்த சாந்தி பொண்ண கட்டிக்கணும்னு ஆசை பட்டான் இல்ல.. அவன் கல்யாணத்தில தான் பிரச்சினை ஆகிட்டுது.. வடிவேலு அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டான்"

சின்னான் அவன் ஜாதிக்காரன்.. சாந்தி வேற ஜாதி.. இவனை கல்யாணத்தை நடத்தி வைக்கச் சொன்னான்.. இத்தனை வேலைக்கு நடுவில் முடியாது.. ஒரு வாரம் பொறுத்துக்கோ என்று சொல்லி இருந்தான்..பிரச்சினைன்ன எங்கைல வந்து சொல்லலாமில்ல.சின்னானுக்கு என்ன அவசரம். தன்னிடம் சொல்லவில்லையே என்று கொஞ்சம் கோவம் வந்தது.. ஆனால் அடி படுவது அடுத்த ஜாதிக்காரனிடமாச்சே.. காப்பற்று என்று எதோ ஒரு உணர்வு சொன்னது...இல்லை என்றால் ஜாதிக்காரன் மதிக்க மாட்டான்.

"டேய்.. எல்லாத்தயும் போட்டுட்டு ஓடியாங்கடா.. நம்ம ஆளை அடிக்கிறாங்களாம்"

தோரணம் கட்டிக்கொண்டிருந்தவர்கள் அப்படியே கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு அவனுடன் ஓடினார்கள்.

******************************************
ஒரு பத்து பேர் தான் இருந்தார்கள்.. பத்தே நிமிடத்தில் எல்லாரும் துண்டைக்காணும் துணியைக்காணும் என்று ஓட்டம் பிடித்தார்கள்.. என்னேரமும் திரும்ப வரலாம்.. ஒரு பாதுகாப்புக்காக அத்தனை பேரையும் அழைத்துக் கொண்டு கட்சி அலுவலகத்துக்கு வந்து விட்டான்.

இரண்டு நாளில் எல்லாம் சரியாகப் போய் விடும்..இது போல எத்தனை மேட்டர் பாத்தாச்சு. ஒரு பஞ்சாயத்து பேசினால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும் என்று நினைத்துக் கொண்டான். நிறைய தோரணம் கட்டும் வேலை பாக்கி இருக்கிறது..

*****************************

டீக்கடையில் எல்லாருக்கும் டீ வாங்கிக் கொடுத்த மாப்பிள்ளை சொல்லிக் கொண்டிருந்தான் ."நம்ம ஜாதிக்காரப் பசங்களோட ராஜா அண்ணன் சரியான நேரத்துல வந்துச்சு.. எல்லாரையும் அடி பிச்சிட்டாங்க இல்ல.."

கோவில் நடையை மூடி விட்டு வீட்டுக்குப் போன குருக்கள் பர்வதம் மாமியிடம் சொல்லிக்கொன்டிருந்தார்.. "என்னையும் அடிச்சுட்டா தெரியுமோல்லியோ. ஸ்வாமியண்ட வேண்டிண்டேன்.. அவர் தான் ராஜா ரூபத்துல வந்து அவாளுக்கு நன்னா குடுத்தார்.".

ரசித்த பாடல் பாசமலர்

ரசித்த பாடல் பாசமலர்

ரம்யாவின் http://ramyanags.blogspot.com/2005/08/blog-post_14.htmlபடித்தேன்.. மனசு ரொம்ப கனமாகிப் போனது..

என்னுடைய வழக்கமான வழியில் அந்த கனத்தைக் குறைப்போம்.. கண்ணதாசனின் அருமையான தாலாட்டு.. ஆயிரம் முறை கேட்டாலும் புதியது.

அன்புடன் விச்சு

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே(மலர்ந்து)

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
வாழப் பிறந்தாயடா புவியாளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு...
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா

தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக...
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா...பிரித்த கதை சொல்லவா

கண்ணில் மணி போல மணியில் நிழல் போல
கலந்து பிறந்தோமடா இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவைப் பிரிக்கமுடியாதடா

Monday, August 15, 2005

சிறுகதை - தனக்கு வந்தால்தான்..

சிறுகதை - தனக்கு வந்தால்தான்..

காலையில் எழுந்தது முதலே ஒரு எதிர்பார்ப்பு.. இன்றைக்கு சுஜனா அவள் ஆண் நண்பனை அழைத்து வரப்போகிறாள். அவனை முன்னரே சந்தித்திருந்தாலும் இது தான் அதிகார பூர்வமான அறிமுகம். அனுமதி கேட்பதற்காக இல்லை என்றாலும் ஒரு வகையில் எங்கள் சம்மதத்தை உறுதி செய்யும் வகையில் அமையும் ஒரு சந்திப்பு.

சுஜனா எங்களுடைய ஒரே பெண். இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் நான் அமெரிக்கா வந்ததும் அவள் பிறந்ததும் எதோ நேற்று நடந்தது போல இருக்கிறது.

இருபத்து ஐந்து வருடங்கள்.. காதலித்த பெண்ணைத் திருமணம் செய்ய எதிர்ப்பு வந்த போது, நீங்கள் எல்லாம் வேண்டாம் என்று எதிர்த்தவர்களை தூக்கி எறிந்து விட்டு வந்த காலம்.. நண்பர்களும் என் மனைவியின் உறவினர்களும் தான் சொந்தம். இன்னும் என் பெற்றோர் உயிருடன் தான் இருக்கிறார்கள்.. என்னுடைய நெய்வேலி நண்பர்களைப் பார்க்கும் போது உங்க அப்பாவை அங்கே பார்த்தேன் தம்பியை இங்கே பார்த்தேன் என்று எதாவது சொல்வதல்லாமல் அவர்களுடன் நேரடித் தொடர்பே இல்லாமல் போனது.. அவனுக்கு வேண்டுமென்றால் வந்து பார்க்கட்டும் என்று அவர்களும், அவர்களுக்கு வேண்டுமென்றால் வந்து பேசட்டும் என்ற நானும், பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று விரும்பவே இல்லை.

இங்கே என் மனைவியின் உறவினர்கள் உதவியுடன் படித்து பெரிய நிறுவனத்தில் பணிசெய்ய்தேன்.. பிறகு சொந்தமாக நிறுவனம் தொடங்கி, வெற்றிகரமாக தொழில் நடத்தும் இந்தியர்களில் ஒருவனாக அறியப்படுகிறேன்.

வயசான பிறகு அடிக்கடி அவர்கள் ஞாபகம் வருகிறது. போனால் 'வராதே' என்று சொல்ல மாட்டார்கள்.. ம் ம் ..ஆனால் எப்படி போவது..

எனது மகள் காதலித்து திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று சொன்னதும் பழைய நினைவுகள் தான் திரும்ப வந்தன.. என் மகள் நான் பட்டது போல் மன வருத்தம் படக்கூடாது என்று நினைத்தே இதற்கு சம்மதம் சொன்னோம்.. விவாகரத்துகள் மலிந்த இந்த நாட்டில், திருமணம் என்பது எத்தனை மதிப்புள்ளது என்பது ஒரு கேள்வி.

டேவிட் ஒரு அமெரிக்கன்.. சுஜனா இந்திய கலாசாரப்படி வளர்ந்தவள்.. அமெரிக்காவில் வளர்ந்தாலும் நம் உணவு, இசை, நடனம் என்று என் சகோதரி எங்கள் வீட்டில் வளர்ந்தது போலவே வளர்ந்தவள். அவர்களது கலாசாரத்துக்கும் நம் கலாசாரத்துக்கும் ஒத்து வருமா. மாமிசம் முட்டை சாப்பிடாத இவளால் புலாலின்றி உண்ணவே தெரியாத அவர்களுடன் இருக்க முடியுமா.. என்றெல்லாம் கவலைகள். என்ன இருந்தாலும் என் மகளாயிற்றே.. பதினெட்டு வயதில் வெளியில் சென்று தனியே தங்கி இந்த ஆறு வருடங்களும் எப்பொதோ ஒருமுறை பார்த்தாலும் கல்யாணம் என்றது ஒரு முறை தானெ வரவேண்டும்.

"என்னப்பா உட்கார்ந்து கொண்டே தூங்கறீங்க?" சுஜனா தான்.. அவள் கேட்டதும் விழித்துக்கொண்டு அவளைப்பார்த்தேன்.. நேற்று தான் இங்கே வந்திருந்தாள்.. வழக்கம் போல ஒரு நாள் வருகை.. நாளை கிளம்பி விடுவாள்.

"சுஜி உன்கிட்ட ஒன்னு கேட்கணும்"..

"என்னப்பா?"

என் சந்தேகத்தைக் கேட்டேன். சிரித்தாள். "அப்பா.. இது கூட யோசிக்காமலா கல்யாணம் என்று வந்து உங்களிடம் சொல்லுவேன்.. அவன் வீட்டில் என்னைப்போலவே சைவம்தான் சாப்பிடுவான்.. இத்தனை நாள் என்னுடன் வெளியில் வரும்போதெல்லாமும் அப்படி தான். தனியாகப் போகும் போதோ, நண்பர்களுடன் போகும் போதோ என்ன சாப்பிட்டாலும் எனக்கு பரவாயில்லை."

"அட எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கே உன்னிடம்" என்று கூறிச் சிரித்தேன்.. நான் என் பெற்றோர் போல இருந்தால் என்ன செய்வாள் என்று கேட்க வேண்டும் போல இருந்தது.. என் நிலையில் என் பெண் எப்படி நடந்து கொள்வாள்?

"நான் உன் திருமணத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டால் என்ன செய்வாய்?"

என்னை நிமிர்ந்து பார்த்தாள்.. அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். என் கையை எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டு சொன்னாள்

"நீங்கள் வேண்டாம் என்று சொல்வதால் ஒரு மாறுதலும் வராது.. என்னை இங்கே நீங்கள் கட்டுப்படுத்தவே முடியாது. ஆனால், உங்களிடம் பேசி உங்கள் அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்திருப்பேன்.ஏனென்றால் உங்கள்மேல் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்"

"நான் முடியவே முடியாதென்று ஒற்றைக்காலில் நின்றால்?"

"ஒன்றும் பிரச்சினை இல்லை.. எந்த அப்பவும் மகளுடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்.. உங்கள் மனதில் என்ன கேள்விகள் இருக்கிறதோ அதற்கு உரிய பதில் கிடைத்து விட்டால், பெரும்பாலும் எதிக்க மாட்டீர்கள். அந்த நம்பிக்கை இருந்தால், பேசி எல்லா பிரசினையையும் தீர்க்க முடியும். அப்படி பேசி உங்களை சம்மதிக்க வைப்பேன். உங்களைப் புரிந்து கொள்ள வைக்க முடியும் என்ற நம்பிக்கை என்மேல் எனக்கு இருக்கிறது"

இதைக்கேட்டாதும் மனதில் எதோ ஒன்று குத்தியது.. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஏன் இந்த அளவு அறிவு முதிர்ச்சி இருக்க வில்லை? என் பெற்றோரும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று தானே நினைத்திருப்பார்கள்..

பொறுமையாக அவர்களுடைய கேள்விக்கு பதில் கொடுத்திருந்தால் இத்தனை பிரசினை வந்திருக்காதோ.. என்னுடைய நான் என்ற அகம்பாவம் தான் "உங்களால் என்னை என்ன செய்யமுடியும் என்று நினைக்க வைத்ததோ.. என் அப்பாவும் இன்று நான் நினைத்தது போலவே எனக்கு நல்லது கிடைக்க வேண்டும் என்று தான் சொல்லி இருப்பாரோ.. நான் தான் புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு விட்டேனோ..

மனம் வெதும்பியது.. அவர்களை சந்தித்து மன்னிப்பு கேட்கவேண்டும் போல இருந்தது.. ஒரு முறை இந்தியா போய் அவர்களைப் பார்த்து விட்டு வந்தால் என்னா.. என் மனைவியிடம் பேசினேன்.. அடுத்த வாரமே போகலாம் என்று கூறினாள்..

மனதில் ஒரு குற்ற உணர்ச்சி நீங்கினால் போல ஒரு உணர்வு.. மகள் தந்தைக்காற்றும் உதவி இதுதானோ.. எத்தனை பேர் இதே உண்மையை எனக்கு விளக்கியிருப்பார்கள். அப்பொழுதெல்லாம் புரியாத ஒரு பேருண்மை இப்பொது விளங்குகிறதே.. ஒரு உண்மையை எவ்வளவு சுலபமாக சொல்லி விட்டாள். அப்பா அம்மாவைப் பார்க்கும் சந்தோஷத்தில்.. இருபத்து ஐந்து வருடம் திரும்பி விட்டற்போல ஒரு எண்ணம்..அடடா இத்தனை சந்தோஷத்தை தொலைத்து விட்டேனே என்று எண்ணும் போது கண்ணில் நீர் துளிர்த்தது.

Saturday, August 13, 2005

காதல் விலங்கு (பாகம் 3)

கொஞ்சம் மெது மெதுவாக (நேரம் கிடைக்கும் பொது) தொடரும்இது என் முதல் கதை. தொடரவேண்டுமா என்றும் பின்னூட்டமிட்டும் நட்சத்திரங்களை சொடுக்கியும் சொல்லுங்கள்
பாகம் 1 http://neyvelivichu.blogspot.com/2005/07/1.html
பாகம் 2 http://neyvelivichu.blogspot.com/2005/08/2.html

அன்புடன் விச்சு


உஷா நல்ல புத்திசாலி. எந்த ஒரு பிரச்சினையையும் புது விதமாக அணுகுவாள். வித்தியாசமாக வழிகளைக் கண்டு பிடிப்பாள். நல்ல கதாசிரியராக எல்ல தகுதிகளும் அவளிடத்தில் உண்டு. எங்கள் நிறுவனத்தின் முதல் விதை. என்னை விட மூன்று வயது பெரியவள். தமிழ் பேச மட்டுமல்லாமல் எழுதப் படிக்கக் கூடத் தெரியும். (எனக்குத் தெரியாது. பாட்டி தாத்தா முயற்சி செய்தார்கள்.. அம்மா அப்பா நான் எல்லாருமாக அமெரிக்காவில் தமிழ் எதற்கு என்று ... இப்போது வருத்தமாக இருக்கிறது) நன்றாகப் பாடுவாள். பூனைக் கண்களுடன் அவளைப் பார்க்கும் போது எப்படி இவ்வலவு அழகாய் இருக்கிறாள் என்று எண்ணத்தோன்றும்..

சரி விஷயத்துக்கு வருவோம்.. சந்துரு பிரச்சினை பற்றி இருவரும் பேசினோம்.. அவன் கேட்டு மூன்று நாள் கழித்து தான் பேசவே முடிந்தது. இதெல்லாம் ஒரு பிரச்சினையா? என்ன மாதிரி நிறுவனத்தில் வேலை வேண்டும் சொல்லு வாங்கிடலாம் என்றாள்.. தொடர்ந்து பேசினோம்.. அப்போ அவனை கல்யாணம் பண்ணிக்கப் போகிறாயா.. முடிவு பண்ணியாச்சா.. என்று கேட்டாள்.. இல்லை. அது அப்படியே முடிவெடுக்காமல் இருக்கிறது.. அது பற்றி உன்னொரு நாள் பேசுவோம்.. இப்போ சந்துரு பிரசினைக்கு முடிவு சொல்லு என்றேன்.

"அடுத்த வாரம் கல்யாணம். முடிவென்ன இனிமேல். தெளிவாக நீ அவனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னால், உடனடியாக ஒரு வழி இருக்கு கடைசி நேரத்தில் எந்த விவகாரமும் செய்யக்கூடாது" என்றாள்.

இதென்னடா பிள்ளையார் பிடிக்க குரங்கானதே என்று நினைத்துக்கொண்டு "அமாவாசைக்கும் ஆப்ரகாம் லிங்கனுக்கும் என்ன சம்பந்தம்" என்றேன்.

"இருக்கு.. நிச்சயமாக கல்யாணம்னு சொல்லு. பணம் பண்ணலாம்" என்றாள்.

இவள் என்னுடைய "கல்யாணம் வேண்டாம்" கருத்தை எதிர்ப்பவள்.. இந்தத் திருமண பேச்சு வார்த்தை விஷயங்களில் பெரிதும் மகிழ்ச்சியடைந்தவள் இவள் தான். திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு குஜராத்தி பெண் வந்து குழந்தைகளை பார்த்துக்கொள்ளவும் சமைக்கவும் செய்துவிட்டு போவாள். இங்கே பிரச்சினை இடம் மாறி அடுத்த மூன்று மணி நேரத்துக்கு என் திருமணம் பற்றி வாதங்களுடன் தொடர்ந்தது. வேறு யாராவதென்றால் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ என்று சொல்லிவிடுவேன்.. இவளிடம் அதுவும் முடியவில்லை. சொன்னாலும் போக மாட்டாள்.

ஒரு வழியாக அவள் கருத்தை ஆமோதித்து, கல்யாணம் செய்து கொள்கிறேன் கடைசி நேரத்தில் பின்வாங்க மாட்டேன் என்றதும், அவள் திட்டத்தைச் சொன்னாள்.

திட்டம் அருமையாகத்தான் இருந்தது. ஆனால் எங்கேயாவது சொதப்பினால் இரண்டு பேர் வாழ்க்கை, குடும்ப மானம் மரியாதை எல்லாம் போச்சு.. இருந்தாலும் இறங்கி விட்டேன்.. சந்துருவுக்குக் கூடத் தெரியாது. சொன்னால் இவ்வளவு ஆபத்தான விஷயத்தில் இறங்காதே என்று சொல்லுவான்.. சொல்லாதே என்று உஷா தான் சொல்லி இருந்தாள்

பதினைந்து நாளில் திருமணம் மண்டபம் பிடித்தாயிற்று என்று சந்துரு தொலைபேசினான்.. வீட்டிற்கு போனதும் அம்மா அதே செய்தியுடன் இனித்தாள்.. எனக்கு எதுவுமே தெரியாது.. எல்லாம் என் அம்மா அப்பா தான்.இன்னும் மனதுக்குள் அமைதி இல்லை.. இப்போது இரண்டு கவலை.. திருமணம் ஒன்று.. திட்டம் ஒன்று..
*********************************************

அடுத்த வாரம் திருமணம்.. உணவகத்திருந்த கூடத்தில் ஏற்பாடு.. அறுனூறு பேர் அமரலாம். அவ்வளவு பெரிய இடம்.. பத்திரிகை அனுப்பி, கொடுத்து எல்லாரிடமிருந்தும் வருகிறோம் என்று ஒப்புதல் வந்தாகி விட்டது.. மாமாவும் மாமியும் காலையில் பறந்து வருகிறார்கள்.. நண்பர்கள் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்கிறார்கள்.. ஏழு மணி தானெ ஆகிறது..

ஜானகிக்கு என்ன ஆச்சு.. ஒரு தரமாவது அவளாக அழைக்கக் கூடாதா.. இன்னும் மனதில் தயக்கம் போக வில்லையா.. மூன்று மணிக்குப் பேசிய போது நன்றாகத்தானே இருந்தாள்..
கல்யாண பரபரப்பாயிருக்கும்.. அடுத்த தெருதானே.. போய்ப் பார்க்கலாமா? சந்துருவுக்கு ஒரே குழப்பம்.. வேண்டாம்.. அவளுக்கு கோவம் வரும்.. வேலை இருக்கும் போது என்ன பார்வை என்று சொல்லுவாள்.. முசுடு.. போன் மட்டும் பண்ணலாம். பண்ணலாமா இல்லை அதுவும் வேண்டாமா.. ..

தயங்கித் தயங்கி தொலை பேசும்போது எதிர்முனையில்... இது ஜானகி இல்லை.. என்ன ஆச்சு ஜானகிக்கு.. போனை கழுத்தில் கயிறு கட்டித்தொங்க விட்டிருப்பாளே.. யாரையும் தொட விடமாட்டாளே.. தற்கொலையா.. கல்யாணம் வேண்டாம் என்று சொன்னது விளையாட்டில்லையா? அய்யோ..

"சந்துரூ" ஜானகியின் தாயாரின் குரல் அவன் எண்ணங்களைக் கலைத்தது.

"கொஞ்சம் வீட்டுக்கு வரியாப்பா.."

"என்னம்மா ஆச்சு.. ஜானகி எங்கே?"

"இங்கதான் இருக்கா.. நீ உடனே வா"

"இதோ வரேன்.."

அடுத்த மூன்றாம் நிமிடம் அவர்கள் வீட்டில்.. அதற்குள் எத்தனையோ எண்ணங்கள்.. நல்லது கெட்டது.. நடந்தது, நடக்கப்போவது.. நடக்க முடியாதது..எல்லாம் மனதில் ஓடின..

அவரிகள் வீட்டில் நுழைந்தும் அவள் அப்பா சொன்னார்

"ஜானகியைக் காணும்"

Thursday, August 11, 2005

படங்களுக்கு புதுசா கவிதைகள்

சரி கொஞ்சம் புதுசா கவிதைகள்

போன பதிவிலிருக்கும் படங்களுக்கு.
http://neyvelivichu.blogspot.com/2005/08/blog-post_11.html

1. பல்லில்லை?
அன்னாளில் பற்பசையில்லை
சொல்ல ஆளில்லை
சொன்னதை
நம்ப மனமில்லை.
அதனால்!

2. உருளும்
வர்த்தக
இயந்திரம்
வாழ்வை
உருளவைக்கும்
தினம் தினம்.
(IBM உலக வர்த்தக இயந்திரம்)

3. தண்ணீர்
வரவில்லை
கோலாவால்?
குழாயை
அழிக்கும்
நீரூற்று?
(கேரளத்தில், திருநெல்வேலியில் நடக்கும் போராட்டம் சார்ந்த கருத்து. நீரூற்று - fountain)

4. அட!
என்னைப்
போலவெ..
காலைமட்டும்
தூக்கவில்லையே
ஏன்?
(நாயின் வியப்பு)

5. செயலில்
மாற்றமில்லை
முறையில் மட்டும்தான்.
(கடனட்டையில் பிச்சை)

பிச்சை பாத்திரத்தில்
பங்கு கேட்கும்
அட்டைகள்.

(2% கமிஷன் இதிலும் உண்டு தானே? அட்டைகள் - கடனட்டைகள், இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் (கிருமி போஜனம் புகழ்?))

அன்புடன்

விசு

படம் பார்த்துக் கவிதை சொல்

படங்கள் நல்ல நகைச்சுவை உணர்வுடன் எடுக்கப் பட்டுள்ளன.

பார்த்ததும் கவிதை எழுதத் தோன்றியது.

இதோ என் கவிதை.

வெங்கட்டுவின் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்குப் பாராட்டும், வெங்கிட்டுவிற்கு வாழ்த்துகளும். (உங்கள் ஒரு முயற்சி என் மேல் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது பாருங்கள்.. இது போல் எத்தனை பேர் மேல் தாக்கமோ.. அத்தனையும் உங்கள் விதைக்குக் கிடைத்த பழங்கள்.. உஙள் நம்பிக்கை வீண் போகவில்லை).

அன்புடன் விச்சு
பல்லில்லை இந்தப் பழத்தால் பலனில்லை
(குடி)நீரில்லை இந்த நீரினால் பலனில்லை
சோறில்லை இந்த (திரு)ஓட்டினால் பலனில்லை
அட்டையால் தருவீர பணம்

உங்களுக்குள்ளும் கவிஞர்கள் இருக்கிறார்கள்.. தட்டி எழுப்புங்கள் உங்கள் கவிதைகளையும் தாருங்கள்























Friday, August 05, 2005

மூன்று செய்திகள் 1<->1 இல்லாதவை

மூன்று செய்திகள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை

(என் கருத்துக்களுடன்)

1. சந்திப்புக்குப் பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசின் பல்வேறு தொழில் திட்டங்களை கமல்நாத் தெரிவித்தார். அவற்றை தமிழகத்தில் அமல்படுத்தவும் தயாராக இருப்பதாக கூறினார்.

ஆனால், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள அதிமுக அரசுக்குத் தான் இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் சற்றும் அக்கறை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே என்றார் கருணாநிதி.

பின்னர் நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய அமைச்சர் கமல்நாத், சர்வதேச முதலீடுகளை கவர்ந்திழுப்பதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. சமீப காலத்தில் தயாரிப்புத் துறையில் செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் அனைத்துமே தமிழகத்தைத் தான் வந்தடைந்துள்ளன என்று பாராட்டினார்.

அட அவர் கிட்ட யாரும் தெளிவ சொல்லலியா.. தி மு க அமைச்சர்களால் தான் தமிழகம் முன்னேறியதுன்னு சொல்ல சொல்லி

2. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கையும், லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கத் தடை கோரும் திமுகவின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அட இதத்தானெ அவங்களும் ஆசைப்பட்டங்க.. தி மு கா வெ அம்மாவுக்கு உதவுதே..

3. இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தயாரித்து, இயக்கி, நடித்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நியூ படம் ஆபாசம் நிறைந்திருப்பதாக கூறி அப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தைத் திரையிடவும் தடை விதித்துள்ளது. நியூ படம் வெளியாகி, பெரும் வெற்றியையும், வசூலையும் வாரிக் குவித்து, "அ ஆ' என்ற தனது அடுத்த படத்தை எஸ்.ஜே. சூர்யா தயாரித்து, இயக்கி, நடித்து வெளிவரப் போகும் நிலையில், நியூ படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அட போன வாரம் தானெ படத்தை எடுத்து "மண்ணின் மைந்தன் " படம் போட்டோம்.. எங்க கிராமத்துலயெ படம் ஓடி முடிஞ்சுடுத்தே என்ன செய்யலாம்? (சூரிய தொலைக்காட்சிக்குத் தான் பிரச்சினை!!)

நம்பிக்கை கவிதை போட்டி(update)

முதல் பரிசு இவருக்கு (நம்பிக்கை கவிதை போட்டி)

எல்லக் கவிதைகளையும் தொகுத்து விட்டதாகத்தான் நினைத்தேன்.. நண்பர் சுட்டினார்..

சோமுவின் கவிதை முதல் ஐந்தில், தொகுப்பில் இல்லையெ என..

அய்யோ "அடேய் விச்சு" என்று அவர் வசனம் பேசி வரும் முன் அவர் கவிதை. ஏற்கெனவே மதிப்பெண் அளித்தவர்கள்.. இவரையும் கண்டுகொள்ளுஙள். (JPEG ஆக இருப்பதால் எங்கிருந்தோ சுட்டதாக நினைக்க வேண்டாம். அவர், அவர், அவரேதான் எழுதியிருப்பார்..நன்றி திருவிளையாடல்)

அன்புடன் விச்சு

1. கடைசியில் எழுதினான்
முதல் பரிசு பெறும் கவிதை
கிறுக்கி வைத்த வார்த்தைகள்
கிழிந்து போன காகிதங்கள்
நிறைந்துபோன குப்பைத்தொட்டி
தீர்ந்து போன பேனா மை
இவை சொன்ன கவிதையின் தலைப்பு
"கவிஞனின் நம்பிக்கை"

2. அன்று
கவலைப் படதே அம்மா
கஷ்டமே இல்லை அப்பா
படித்துவிட்டேன் ஐயா
டேய், இதுல ஒன்னுமே இல்லை
என்று சொன்ன நம்பிக்கை மாணவன்
இன்று பரிட்சை அறையில்
பிட் பேப்பருடன்

Thursday, August 04, 2005

மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா

நம்பிக்கை பற்றி இன்னொரு கண்ணதாசன் பாடல்

அன்புடன் விச்சு

மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
(மயக்கமா)

ஏழை மனதை மாளிகையக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

(மயக்கமா)

அதே நெருப்பு

புகை பிடிப்பவரரா நீங்கள் -

தனக்குத்தானே கொள்ளி வைத்துக் கொள்ளும் புதுமைப் பித்தர்.

உங்கள் கொள்ளியில் இறப்பது பக்கத்திலுள்ள புகைக்காதவர்களும் தான்.

நாளைக்கு விடுகிறேன் என்று தம்மைத் தாமெ ஏமாற்றிக் கொள்ளும் சுயநலவாதி..

நீங்கள் இறப்பதால் இறங்கிப்போவது உங்கள் குடும்பத்தின் வாழும் தரம்.

ஆயிரம் பேர் இறந்தாலும் அடுத்தது நானில்லை என்பது என்ன நம்பிக்கை..

இன்றைக்கு இருபதாயிரம் பேர் புதிதாக புகை பிடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

நீங்கள் சமாதான உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டு நாட்டைக் காக்க வேண்டாம்.

இதோ உங்கள் வாய்ப்பு . உங்கள் கையில் இருக்கும் பெட்டியைத் தூர எறிந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் மட்டுமில்லை.. இந்த உலகத்தையும் காப்பற்றுங்களேன்.

உங்கள் கையில் இருப்பது மூன்றங்குல அணுகுண்டு. நீங்கள் செய்வது மூன்று நிமிடத் தற்கொலை முயற்சி.

முதுகில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு இறக்கும் தீவிரவாதி நீங்கள்.

சிந்தியுங்கள்.. உங்கள் உயில் தயாரா.. அடுத்த 15 வருடங்களுக்கு உங்கள் குடும்பம் கவலையின்றி வாழ முடியுமா..

பணம் சம்பதித்துக் கொள்வார்கள்.. உங்கள் குழந்தைக்கு அப்பாவும் மனைவிக்கு கணவனும் பணத்தால் கிடைப்பார்களா..

இவர்கள் பழக்கத்தைப்பற்றி ஒரு கவிதை

அன்புடன் விச்சு

அதே நெருப்பு

மதுரையில் இட்டாள் கற்புக்கு இலக்கணம்
இலங்கையில் இட்டான் பக்திக்கு உதாரணம்
காட்டிலே இட்டதால் கடைவழித் தேற்றம் - வெண்
சுருட்டிலே இட்டதால் நிச்சயம் மரணம்

மனதிலே புகைந்தது வயிற்றிலெ எரிச்சல்
வதந்தியாய் புகைந்தது வாழ்க்கையில் குழப்பம்
குடந்தையில் புகைந்தது கருகின மலர்கள் - நம்
வாயிலே புகைந்தால் விரைவிலே மரணம்

அடுப்பாய் எரிந்தால் வயிற்றுக்கு உணவு
தெருவிலெ எரிந்தால் மனமகிழ் பொங்கல்
தீபம் எரிந்தால் தெருவுக்கு வெளிச்சம் - புகை
குழல் எரிந்தால் தொடர்ந்திடும் மரணம்.

நம்பிக்கை 7

நம்பினேன் நம்புவேன்

அப்பாடி .. எட்டுவரியிலிருந்து மீண்டேன்.. எனினும்
தலைப்பு இன்னும் மாறவில்லை
மனதில் இருத்திவிட்டார் வெங்கிட்டு
உணர்வைத்தூண்டி விட்டார்
கவிதை எழுதுகிறேன் என்மனம் மகிழ்ந்திருக்க
படித்துப் பிடித்திருந்தால் கருத்தைக் எழுதிடுங்கள்

அன்புடன் விச்சு

வானிலே மேகமாய் விளைநிலப் பயிர்களாய்
தவழ்ந்திடும் மழலையாய் தாவிடும் மாக்களாய்
உயிர்களாய் பிரிந்தவன் உலகெலாம் நிறைந்தவன்
அணுவிலும் உளனாகி அனுதினம் காப்பவன்

தோல்வியும் வெற்றியும் தொடரும் வாழ்க்கையும்
கல்வியும் கலைகளும் கனவொடு நனவிலும்
தொலைந்ததும் கிடைத்ததும் தொழுததும் அழுததும்
உறைவது இறைவனில் கண்டனன் மெய்ப்பொருள்.

நம்பினார் கெட்டதாய் சரித்திரம் இல்லையே
நம்பினால் நல்லதே நாளெலாம் வெல்லுமே
நம்பினேன் இதுவரை நாளையும் நம்புவேன்
நல்லதே நடக்குமே நனினிலம் வாழுமே.

Tuesday, August 02, 2005

நம்பிக்கை - 6

இன்னொரு நம்பிக்கை

கோவிலுக்குப் போவது தெய்வ நம்பிக்கை - அதை
நாத்திகர் சொல்வார் மூட நம்பிக்கை

ரசிகர்கள் கொள்வது குருட்டு நம்பிக்கை - அதே
தலைவர் மீதானல் நல்ல நம்பிக்கை

ஊழலும் கமிஷனும் கூட்டணி மாற்றமும்
என்றும் தருவது அவ நம்பிக்கை

ஓட்டு போடுவொம் மறுபடி மறுபடி - தேசம்
திருந்து மென்பதே நிஜ நம்பிக்கை

அன்புடன் விச்சு

நம்பிக்கை கவிதைப் போட்டி.. முதல் பரிசு..

நம்பிக்கை கவிதைப் போட்டி.. முதல் பரிசு..
அருண் வைத்யநாதன்
மதுமிதா
போயட் ராஜ்
சோமு
வெங்கட் கண்ணதாசன்.

ஐந்தில் வராவிட்டலும் அருமையான கவிதை தந்தவர்கள்
பெனாத்தல் சுரேஷ்
நித்யா ஸ்வாமிநாதன்
பசிடிவ் ராமா
ரங்கநாதன்

disclaimer:

வெங்கிட்டு நாராயணனின் நம்பிக்கைப் போட்டி முடிவுகள் வரும் பொது வரட்டும்.. என் கணிப்பு முதல் ஐந்து நல்ல கவிதைகள்..(இது முதல் இரண்டு என்ற வரிசையில் அல்ல) என் கவிதைகளைச் சேர்க்காமல்.

எல்ல கவிதைகளையும் தொகுத்துத் தந்திருக்கிறேன்.. படித்து உங்கள் தேர்வையும் எழுதுங்கள். lets help venkittu.

அன்புடன் விச்சு

நம்பிக்கை நம் கை - நமக்கு நம்பிக்கை
இளைஞன் - இந்தியாவின் நம்பிக்கை
வெற்றி - தோல்வியின் நம்பிக்கை
தலைவன் - தானையின் நம்பிக்கை
தண்ணீர் - தமிழ் நாட்டின் நம்பிக்கை
பயிர் - உயிர்களின் நம்பிக்கை
அடிதடி - "அந்நியனின்" நம்பிக்கை
அகிம்சை - அண்ணலின் நம்பிக்கை

ganesh venkat

வார்த்தைகளைக் கோர்த்து
எண்ணங்களைக் கிறுக்கி
கவிதையெனப் பேரிட்டு
வலைப்பதிவில் இட்டு
கருத்துகளுக்கு காத்திருக்கையில்
"அருமை!" என கருத்துவர
நம்பிக்கைப் பிறக்கும்
"இனி நானும் கவிஞன்!"
http://theydal.blogspot.com/2005/07/blog-post_22.html

நம்பிக்கை
நேத்தடிச்ச சரக்கால இன்னும் தூங்கறாரு அப்பா.
கருக்கையிலே ராட்டி தட்டப்போயிட்டா ஆத்தா.
முனியண்ணன் கடையிலேடீ கிளாஸ் கழுவினா நாஸ்தாக்காச்சு.
பன்னெண்டுக்குள்ள ஸ்கூலு போயிட்டா
சோறு பருப்போட சத்துணவாச்சு.
ராப்போதுக்கு ஆத்தா எதுனாச்சும் தரும்..
பசி பொறுக்க முடியாது, சின்னப்புள்ளை நான்!

நம்பிக்கை - 2
கஷ்டப்பட்டுப் படித்திருக்கிறேன்
கண்டிப்பாய் பாஸாகிவிடுவேன்..
அப்புறம் எதற்கு முச்சந்தி விநாயகனுக்குத்
தோப்புக்கரணமும், குட்டும்?!
ஜமாலும், ஜேம்சும் ஜம்மென்று
பாஸாவதில்லையா என்ன?
மனசுக்குள் முணுமுணுத்தபடி
விநாயகர் சன்னதி திருநீறெடுத்தேன்.
- அருண் வைத்யநாதன்

நம்பிக்கை - 3

நிலா நில்லாமல் ஓடி வரநேரமெடுப்பதால்
பூச்சாண்டியே துணை.
உம்மாச்சியின் அறிமுகம் கூட
கண்ணைக் குத்திவிடும் கொடூரனாய்த்தான்.
‘அங்கே போகாதே பூதமிருக்கு’
மிரட்டலாக ஆரம்பித்து, வாக்கியமாக மருவிவிட்டது.
நாளைய சந்ததிக்கான நம்பிக்கை விதைகள்
கார்ட்டூன் நெட்வொர்க்கில் நிழலாடுகிறது.

- அருண் வைத்யநாதன்

நம்பிக்கை!
ஒன்பது வாயில் கொண்ட
எண்சாண் உடம்பினோனே
ஏழ்வகைப் பிறப்பினோனே
அறுசுவை வாழ்வில் வெற்றி
அனுதினம் உன்னைச் சேர
ஐந்தெழுத்து மந்திரம் தந்தேன்
அதன் கொண்டே முயன்றுவிடு- உன்
இலட்சியத்தை வென்று விடு!

positive raama

நம்பிக்கை
லண்டனில் தொடர் வெடிகுண்டு
எகிப்திலும் தொடரும் வெடிகுண்டு நிலநடுக்கம்,சூறாவளி,சுனாமி,புயல்
எத்தியோப்பியா,நைஜீரியா எலும்புக் குழந்தைகள் வறுமை,தீவிரவாதம்,இன சாதி மத கோரம்பட்டினிச்சாவு,பாலியல் கொடூரம்
இத்தனையும் கடந்து இருள் இரவினில் தூங்கிஅத்தனையும் கடந்து புதுவிடியலில் விழிக்கச்செய்வது

மதுமித

நம்பிக்கை
ஒளிரத்தான் செய்கிறது சூரியன் -ஊழி வந்து
பிரட்டிப்போட்ட கடற்கரையிலும்.
பொழியத்தான் செய்கிறது மேகம் -நடுங்கி
அடங்கிய நிலத்தினிலும்.
புணரத்தான் செய்கிறார்கள் பெற்றோர் -தீ வந்து
மகவு தின்ற வீட்டிலும்..
நம்பத்தான் வேண்டும் நாமும் -
நாளையேனும் நற்பொழுதாய் விடியுமென.

penaththal suresh

நம்பிக்கை ஏரிக்கரையில் நிமிர்ந்த
பனைமரம்நீரிலும் நிமிரும் பிம்பமாக
தாவிக் குதிக்கும் தவளைகள்
நீச்சலும்கூடிப் பறக்கும் நாரைகள் எச்சமும்
சிறார்கள் வீசிடும் எச்சிற் பனங்கொட்டைகளும்
நீரில் அலையெழுப்பும் அவ்வப்போது
பிம்பம் கலைந்து குலைந்துஅலைந்து வளைந்து நெளிந்து தெளிந்து
மீண்டும் நிமிரும்வாழ்வின் நம்பிக்கைப் போல!

suntharamoorthy

நம்பிக்கை ௧
வெட்டப்பட்ட மரத்தில்சிதைந்த
கூட்டைப்பற்றிகவிதை எழுதிமுடிப்பதற்குள்..
வீழ்ந்த மரத்தின்குச்சிகளை கொண்டே
கட்டியது மற்றொரு கூட்டை..காக்கை.

நம்பிக்கை- 2

வாசு பத்தாம் வகுப்பு பாசாகிறதும்
சுப்பண்ணாவுக்கு பிரமோசன் கிடைக்கறதும்
மைதிலிக்கு அமெரிக்கா மாப்பிள்ளை அமையறதும்
சாந்தி அததைக்கு உடம்பு சரியாகிறதும்..
நன்றாக உடைபடும் தேங்காயிலிருந்துதான்
சிதறுகிறது நம்பிக்கைகளாக.
பார்த்து உடைங்க தேங்காய ஐயரே..

poetraj

நம்பிக்கை

வாழ்க்கைச்சுழலின் ஆதாரச் சக்கரம்.
வாழ்க்கை வளமாகஎளியவொரு சூத்திரம்.
நம்மேல் நாம் வைத்தால்வளரும் நம் சுயம்.
பிறர்மேல் நாம் வைப்போம்வளரட்டும் சமுதாயம்.

suresh in UK

அன்பை நம்புவோம்; ஆசை அழியும்
இரக்கத்தை நம்புவோம்; ஈகை பெறுகும்
உண்மையை நம்புவோம்; ஊனுக்கு மதிப்பு
எளிமையை நம்புவோம்; ஏக்கம் தணியும்
ஒழுக்கத்தை நம்புவோம்; ஓங்கட்டும் நம் புகழ்

pradeep kumar

Kஅடவுல் மெல் நான் வைக்கும் நம்பிக்கை-ஏன் புன்னகை

monu

நம்பிக்கை
போக்கிலாதொரு பெருவெளியிலும்
முகம் நோக்கி நீளுகின்ற மூன்றாம் கை!
யுகங்கள் தோறும்வெற்றியின் வாகனம்!
'கண்டம்' விட்டுப் போக கணிப்பொறி படிப்பு!
கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணமும் உண்டு!
தென்கோடி ஏவுகணைகளை டெல்லிக்கு(ம்) அழைப்பது!
கும்ப கோண விபத்துக்களில் குழந்தையில் கருகுவது!

ஈப்னு humdhin

ஆர்ஜுன link is not working

Snow on Mountain----------------

Malayee, unakku kulir eduthathanaal inthe ven paniyai eduthu pothi kondayo?
Vaanavil---------Ithu mazhaiyinaal azhiye koodum saayam alle,Vaanam endri thiryali mazhai thuligal variyum vannakkkolam...

Morpheus

Visithra, ranga and one more person (I think positve rama) the number of lines are more than 8 lines.

நம்பிக்கை
நாளை வரும் மரணம்எனும்
நம்பிக்கைதூண்டும்
எனைநன்றே வாழ்ந்து விட இன்று!!

anaamika

நம்பிக்கை***
ஆனந்த விகடன் ஆசிரியருக்கு
சாதனைச்சிறுவன் ஜனா!
பரட்டையன் டூ வேட்டையன்
இரண்டு மனைவி வேண்டுமா...?
மனைவியின் சொத்தை திருடிய கணவன் கைது...
பின்புலம் அறுந்த உருவகங்கள்
வலைப்பூக்களில் நம்பிக்கைத் தேடி
டிஸ்கவரி விண்ணோடம் -
ஒரு முடிவின் ஆரம்பம்

குசும்பன்

நம்பிக்கை கல்லாய் இருக்கும் சாமியின் மீதும்
சொல்லாய் இருக்கும் நாத்திகத்தின் மீதும்
இல்லாத விதியின் மீதும்
இல்லை என் நம்பிக்கை
மண்ணில் தெரியுது வானம்அது
நம் வசப்படல் ஆகாதோ
என்ற பாரதியின் வார்த்தை
என் நம்பிக்கை

Chenthil naathan

நம்பிக்கை!
மிட்டாய் காசில் கோலி வாங்கிகட்டிலின் அடியில் வானில்விட்டபட்டங்கள் அடுக்கி,
பம்பரம் சொடுக்கிகாய்ந்த பன்னை நீரில் நனைத்து
யூனிபாரத்தில் என்னை அமுக்கிகால்தடுக்கி
பள்ளிக்கு ஓடும்போதுஅம்மாவின் கண்களில் தெரிந்ததுதான்நம்பிக்கையின் கீற்றோ!!!

JVC

attempt 1
ஒரு கபில் போனால் ஒரு சச்சின்...ஒரு சச்சின் போனால் அங்கொரு திராவிட்...
99-இல் இங்கிலாந்து 2003-இல் தென் ஆப்ரிக்கா...உலகம் சுற்றும் வாலிபர்கள் 11 பேர்...
எங்கும் போகாமல் சற்றும் தளராமல்...ஆணி அறைந்தால் போல் இருப்பது...
நூறு கோடி மக்களின் நம்பிக்கை மட்டும் தான்...இன்னொரு "World Cup", இன்னொரு விடியல் என்று...

attempt 2

தாண்டிச் சென்றன எண்ணற்ற கால்கள்...அவனறியாத வண்ணங்களிலெல்லாம் பல காலணிகள்...
ஒரு அன்பர் வந்தார், சில நிமிடம் நின்றார்...தேடியும் கிட்டவில்லையென தன் திசையில் தொடர்ந்தார்...
முகம் வாடிய சிறுவனுக்கு ஆறுதல் சொல்வது போல்இன்னும் பல கால்கள் அவனை நோக்கி...
வாடிய முகத்தில் மெல்லிய புன்னகை...கையில் பிச்சைத் தட்டு, மனம் நிறைய நம்பிக்கை...

attempt 3
பசு ஒன்று வரைந்தாள், அதற்கு சிகப்பு நிறம் பூசினாள்அவள் கிறுக்கிய காக்கையின் நிறமோ பச்சை
அச்சிறுமி மாம்பழம் வரைந்தாள் என்றால் அவள் சொல்லித்தான் தெரியும் அது என்னவென்று
ஆனால் அவள் அம்மா பெருமையுடன் சிரித்தாள்ஓவியங்களைப் பார்த்து தனியே ரசித்தாள்
தன் பெண்ணும் பிற்காலத்தில்... ஒரு ரவி வர்மா என்ற நம்பிக்கையுடன்...

4. காய்ந்து போன அவள் அழகிய முகத்தில் பருக்கள் அல்ல, பல பிளவுகள்...
திடீரென உணர்ந்தாள் ஒரு குளிர்ச்சி...அலைபாயும் மேகங்களின் நிழல் அவள் மேல் விழுந்ததால்...
உடனே கொஞ்சம் சிலிர்ப்பு...அவள் கண்களில் மிகுந்த எதிர்பார்ப்பு...
அண்ணாந்து பார்த்தாள் முதல் மழைக்காக... நிலம், தனக்கே உரிய நம்பிக்கையுடன்...
nithya swamynathan
இயன்ற வரையில் இனிய தமிழில்
தமிழன் மட்டும் முன்னேறிவிட்டான்
தமிழை பின்னுக்குத் தள்ளிவிட்டான்
ஆங்கில மோகம் பிடித்ததினால்
பிள்ளையை கான்வென்டில் சேர்த்துவிட்டான்

தமிழில் இருவர் பேசிக்கொண்டால்
தரக்குறை வென்றொரு கருத்திருக்கு
வலைப்பூவில் தமிழ் மலர்ந்ததினால்
பிறந்தது புதுத் தெம்பெமக்கு

kaps

கை வைத்ததால் சுரந்ததாம் வைகை!
பட்டணக் கூலி வாழ்க்கை, நிரந்தரம் ஒரு வேளை உலை,இவை எல்லாம் துச்சம் என
விடியலில் படுக்கை தொலைத்து நிலத்தில் கால் பொதித்து, கலப்பயில் கை பதித்து,
தலையில் கை வைக்காமல் “இங்கும் சுரக்கும் வைகை”என்று, உழைக்கிறானே என் காவிரிப்படுகை விவசாயி, அவனது மறுபெயர் தான் நம்பிக்கை

TJ

அவ(ள்) நம்பிக்கை
ஊரடங்கும் உறங்கிப்போகும்பலகணி வழியே பால் நிலா காய்ந்திருக்கபஞ்சணை மீதோ பாவை நிலா மாய்ந்திருக்கும்
சுவர்க்கோழி சத்தமிடஇரவும் மெல்ல கரைந்துவிடும்
சேவக்கோழி கூவலிடகிழக்கும் மெல்ல வெளுத்துவிடும்
ஊருக்கு மட்டும் விடிந்திருக்கும்!

A.Thiyagarajan

தினந்தோறும் அல்லது நம்பிக்கையே வாழ்க்கை
காலையில் விழித்தேன் நல்ல நாள் இதுவென்று
அவசரம் அவசரம் ஆயிரம் அவசரம்
குளித்து துடைத்து கண்டதை உடுத்தி
முட்டி மோதி பேருந்து பிடித்து
அலுவல் முடித்தால் மீண்டும் ஓட்டம்
வாழ்க்கை வழிமுறை மாறுமென்ற கனவுகள்
நம்பிக்கை மனதிலே நல்லநாள் விரைவிலே
படுக்கையில் விழுந்தேன் நாளை நல்ல நாள்

நம்பிக்கை கவிதை 2.

நம்பிக் கைதந்த நாயகி ஒருபுறம் - என்மேல்
நம்பிக்கை தந்த குழந்தைகள் ஒருபுறம்.
நம்பிக்கை வளர்த்த பெற்றோர் ஒருபுறம் -தினம்
நம்பித் தோள்தரும் தோழர் ஒருபுறம்..

இவரென்னை நாடி வந்தாரோ இல்லை
அவரை நம்பிநான் நின்றேனோ வாழ்வில்
நம்பிக்கை போனால் நானென்ன நீயென்ன
நம்பினோர் வாழ்க்கையில் நாளும் வசந்தமே

நம்பிக்கை 3

கண்ணில்லதவர் பாடிப் பிழைத்தார்
காலில்லதவர் கடையொன்றமைத்தார்
சொல்லில்லா ஊமை செவிகேளா மனிதர்
கையாலே பேசி வாழ்வைப் பிழைத்தார்

ஏழ்மையும் துன்பமும் வாழ்க்கையை நிறுத்துமோ
சோம்பி திரிந்திடல் வாழ்விற்கடுக்குமோ
உடலிலே ஊனம் உள்ளத்தில் இல்லை
உன்னைநீ நம்பினால் வானமே எல்லை.

neyveli vichchu

நம்பிக்கை குழிவிழுந்த கன்னமும்
தோல்சுற்றிய தேகமும்
ஒட்டிய வயிறுமாய்
வறண்டபூமியில் ஒர்தளிர்
செஞ்சிலுவையின் நேசக்கரத்திற்காக காத்திருக்கையில்கண்கள்மட்டும்
ஒளிரும்உயிர்வாழும் நம்பிக்கையில்!

venkat kannadasan

உனைப் பார்க்க முடிவதில்லை...
பார்த்தாலும் பேச முடிவதில்லை...
பேசினாலும் எண்ணங்களைப்
பரிமாறிக்கொள்ள முடிவதில்லை...
எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டாலும்
இதயத்தை இருத்த முடிவதில்லை...இருந்தும்.........
உன்னை நேசிக்கவே செய்கிறேன்...ஏனெனில்..
நான் சுவாசிக்க வேண்டும்!

paLLi kondaan