பார்த்ததும் கவிதை எழுதத் தோன்றியது.
இதோ என் கவிதை.
வெங்கட்டுவின் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்குப் பாராட்டும், வெங்கிட்டுவிற்கு வாழ்த்துகளும். (உங்கள் ஒரு முயற்சி என் மேல் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது பாருங்கள்.. இது போல் எத்தனை பேர் மேல் தாக்கமோ.. அத்தனையும் உங்கள் விதைக்குக் கிடைத்த பழங்கள்.. உஙள் நம்பிக்கை வீண் போகவில்லை).
அன்புடன் விச்சு
பல்லில்லை இந்தப் பழத்தால் பலனில்லை
(குடி)நீரில்லை இந்த நீரினால் பலனில்லை
சோறில்லை இந்த (திரு)ஓட்டினால் பலனில்லை
அட்டையால் தருவீர பணம்
உங்களுக்குள்ளும் கவிஞர்கள் இருக்கிறார்கள்.. தட்டி எழுப்புங்கள் உங்கள் கவிதைகளையும் தாருங்கள்





6 comments:
இதற்கும் ஒரு கவிதைப் போட்டி போடலாமே?
நன்றி ரங்கா,
முதலில் உங்க கவிதையோட ஆரம்பிப்போம்
அன்புடன் விச்சு
என் கவிதைகள் இதோ
http://neyvelivichu.blogspot.com/2005/08/blog-post_112378141592304415.html
அன்புடன் விச்சு
ஏதோ என்னால் முடிந்தது! ;-)
1
பற்பசைக்குக் காவல்
பல்லில்லா தாத்தா
எமக்குப் பயனில்லையாலும்
உமக்குண்டு பற்பசை
2
விற்பது பழமோ கணினியோ
திருஷ்டிக்கு பொம்மை வேண்டும்!
3
சோடாவிற்கும் தாகமாம்
காத்திருக்கிறது குடங்களுடன்
4
சட்டையில்லா மக்களிடம்
செருப்புக்கு விளம்பரம்
ஆத்திரத்தை அடக்கினாலும்
அடக்க முடியாததால்
சுவர் சொன்னதைச்
செய்தான் சிறுவன்
5
அட்டைப்பண உபயோகம்
பிட்சைக்கும் இப்போது
நன்றி ரங்கா..
ஆத்திரத்தை அடக்கலாம்
அதை முடியுமா?
JUST DO IT.
நன்றாக இருந்தது.
இன்னும் சில கீழே..
1. என்ன எனக்கு 100 பற்பசை பரிசா?
2. பழய IBM computerக்கு ஆப்பிள் வாங்கரது? (எதிர் காலதில் இப்படியும் வரும்!)
3. குழாயில கோக் குடத்துல பிடிங்க.. (இது நடக்குமா தெரியது.. யாராவது சர்வாதிகாரி, தண்ணி இல்லைன்ன என்ன கோக் சாப்பிடுங்கன்னு சொல்லி இருக்கானா?)
4. ஏதொ என்னல ஆனது.. (செய்ன்னு சொல்லரீங்க என்ன செய்யணும்னு சொல்லலியே)
5. இதுதான் வர்த்தக முன்னேற்றம்ன்னு சொல்லறதா? (Biz developement)
அன்புடன் விச்சு
//பழய IBM computerக்கு ஆப்பிள் வாங்கரது? (எதிர் காலதில் இப்படியும் வரும்!)//
should be
ஆப்பிள்க்கு பழய IBM computer வாங்கரது? (எதிர் காலதில் இப்படியும் வரும்!)
அன்புடன் விச்சு
Post a Comment