சிறுகதை - தனக்கு வந்தால்தான்..
காலையில் எழுந்தது முதலே ஒரு எதிர்பார்ப்பு.. இன்றைக்கு சுஜனா அவள் ஆண் நண்பனை அழைத்து வரப்போகிறாள். அவனை முன்னரே சந்தித்திருந்தாலும் இது தான் அதிகார பூர்வமான அறிமுகம். அனுமதி கேட்பதற்காக இல்லை என்றாலும் ஒரு வகையில் எங்கள் சம்மதத்தை உறுதி செய்யும் வகையில் அமையும் ஒரு சந்திப்பு.
சுஜனா எங்களுடைய ஒரே பெண். இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் நான் அமெரிக்கா வந்ததும் அவள் பிறந்ததும் எதோ நேற்று நடந்தது போல இருக்கிறது.
இருபத்து ஐந்து வருடங்கள்.. காதலித்த பெண்ணைத் திருமணம் செய்ய எதிர்ப்பு வந்த போது, நீங்கள் எல்லாம் வேண்டாம் என்று எதிர்த்தவர்களை தூக்கி எறிந்து விட்டு வந்த காலம்.. நண்பர்களும் என் மனைவியின் உறவினர்களும் தான் சொந்தம். இன்னும் என் பெற்றோர் உயிருடன் தான் இருக்கிறார்கள்.. என்னுடைய நெய்வேலி நண்பர்களைப் பார்க்கும் போது உங்க அப்பாவை அங்கே பார்த்தேன் தம்பியை இங்கே பார்த்தேன் என்று எதாவது சொல்வதல்லாமல் அவர்களுடன் நேரடித் தொடர்பே இல்லாமல் போனது.. அவனுக்கு வேண்டுமென்றால் வந்து பார்க்கட்டும் என்று அவர்களும், அவர்களுக்கு வேண்டுமென்றால் வந்து பேசட்டும் என்ற நானும், பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று விரும்பவே இல்லை.
இங்கே என் மனைவியின் உறவினர்கள் உதவியுடன் படித்து பெரிய நிறுவனத்தில் பணிசெய்ய்தேன்.. பிறகு சொந்தமாக நிறுவனம் தொடங்கி, வெற்றிகரமாக தொழில் நடத்தும் இந்தியர்களில் ஒருவனாக அறியப்படுகிறேன்.
வயசான பிறகு அடிக்கடி அவர்கள் ஞாபகம் வருகிறது. போனால் 'வராதே' என்று சொல்ல மாட்டார்கள்.. ம் ம் ..ஆனால் எப்படி போவது..
எனது மகள் காதலித்து திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று சொன்னதும் பழைய நினைவுகள் தான் திரும்ப வந்தன.. என் மகள் நான் பட்டது போல் மன வருத்தம் படக்கூடாது என்று நினைத்தே இதற்கு சம்மதம் சொன்னோம்.. விவாகரத்துகள் மலிந்த இந்த நாட்டில், திருமணம் என்பது எத்தனை மதிப்புள்ளது என்பது ஒரு கேள்வி.
டேவிட் ஒரு அமெரிக்கன்.. சுஜனா இந்திய கலாசாரப்படி வளர்ந்தவள்.. அமெரிக்காவில் வளர்ந்தாலும் நம் உணவு, இசை, நடனம் என்று என் சகோதரி எங்கள் வீட்டில் வளர்ந்தது போலவே வளர்ந்தவள். அவர்களது கலாசாரத்துக்கும் நம் கலாசாரத்துக்கும் ஒத்து வருமா. மாமிசம் முட்டை சாப்பிடாத இவளால் புலாலின்றி உண்ணவே தெரியாத அவர்களுடன் இருக்க முடியுமா.. என்றெல்லாம் கவலைகள். என்ன இருந்தாலும் என் மகளாயிற்றே.. பதினெட்டு வயதில் வெளியில் சென்று தனியே தங்கி இந்த ஆறு வருடங்களும் எப்பொதோ ஒருமுறை பார்த்தாலும் கல்யாணம் என்றது ஒரு முறை தானெ வரவேண்டும்.
"என்னப்பா உட்கார்ந்து கொண்டே தூங்கறீங்க?" சுஜனா தான்.. அவள் கேட்டதும் விழித்துக்கொண்டு அவளைப்பார்த்தேன்.. நேற்று தான் இங்கே வந்திருந்தாள்.. வழக்கம் போல ஒரு நாள் வருகை.. நாளை கிளம்பி விடுவாள்.
"சுஜி உன்கிட்ட ஒன்னு கேட்கணும்"..
"என்னப்பா?"
என் சந்தேகத்தைக் கேட்டேன். சிரித்தாள். "அப்பா.. இது கூட யோசிக்காமலா கல்யாணம் என்று வந்து உங்களிடம் சொல்லுவேன்.. அவன் வீட்டில் என்னைப்போலவே சைவம்தான் சாப்பிடுவான்.. இத்தனை நாள் என்னுடன் வெளியில் வரும்போதெல்லாமும் அப்படி தான். தனியாகப் போகும் போதோ, நண்பர்களுடன் போகும் போதோ என்ன சாப்பிட்டாலும் எனக்கு பரவாயில்லை."
"அட எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கே உன்னிடம்" என்று கூறிச் சிரித்தேன்.. நான் என் பெற்றோர் போல இருந்தால் என்ன செய்வாள் என்று கேட்க வேண்டும் போல இருந்தது.. என் நிலையில் என் பெண் எப்படி நடந்து கொள்வாள்?
"நான் உன் திருமணத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டால் என்ன செய்வாய்?"
என்னை நிமிர்ந்து பார்த்தாள்.. அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். என் கையை எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டு சொன்னாள்
"நீங்கள் வேண்டாம் என்று சொல்வதால் ஒரு மாறுதலும் வராது.. என்னை இங்கே நீங்கள் கட்டுப்படுத்தவே முடியாது. ஆனால், உங்களிடம் பேசி உங்கள் அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்திருப்பேன்.ஏனென்றால் உங்கள்மேல் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்"
"நான் முடியவே முடியாதென்று ஒற்றைக்காலில் நின்றால்?"
"ஒன்றும் பிரச்சினை இல்லை.. எந்த அப்பவும் மகளுடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்.. உங்கள் மனதில் என்ன கேள்விகள் இருக்கிறதோ அதற்கு உரிய பதில் கிடைத்து விட்டால், பெரும்பாலும் எதிக்க மாட்டீர்கள். அந்த நம்பிக்கை இருந்தால், பேசி எல்லா பிரசினையையும் தீர்க்க முடியும். அப்படி பேசி உங்களை சம்மதிக்க வைப்பேன். உங்களைப் புரிந்து கொள்ள வைக்க முடியும் என்ற நம்பிக்கை என்மேல் எனக்கு இருக்கிறது"
இதைக்கேட்டாதும் மனதில் எதோ ஒன்று குத்தியது.. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஏன் இந்த அளவு அறிவு முதிர்ச்சி இருக்க வில்லை? என் பெற்றோரும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று தானே நினைத்திருப்பார்கள்..
பொறுமையாக அவர்களுடைய கேள்விக்கு பதில் கொடுத்திருந்தால் இத்தனை பிரசினை வந்திருக்காதோ.. என்னுடைய நான் என்ற அகம்பாவம் தான் "உங்களால் என்னை என்ன செய்யமுடியும் என்று நினைக்க வைத்ததோ.. என் அப்பாவும் இன்று நான் நினைத்தது போலவே எனக்கு நல்லது கிடைக்க வேண்டும் என்று தான் சொல்லி இருப்பாரோ.. நான் தான் புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு விட்டேனோ..
மனம் வெதும்பியது.. அவர்களை சந்தித்து மன்னிப்பு கேட்கவேண்டும் போல இருந்தது.. ஒரு முறை இந்தியா போய் அவர்களைப் பார்த்து விட்டு வந்தால் என்னா.. என் மனைவியிடம் பேசினேன்.. அடுத்த வாரமே போகலாம் என்று கூறினாள்..
மனதில் ஒரு குற்ற உணர்ச்சி நீங்கினால் போல ஒரு உணர்வு.. மகள் தந்தைக்காற்றும் உதவி இதுதானோ.. எத்தனை பேர் இதே உண்மையை எனக்கு விளக்கியிருப்பார்கள். அப்பொழுதெல்லாம் புரியாத ஒரு பேருண்மை இப்பொது விளங்குகிறதே.. ஒரு உண்மையை எவ்வளவு சுலபமாக சொல்லி விட்டாள். அப்பா அம்மாவைப் பார்க்கும் சந்தோஷத்தில்.. இருபத்து ஐந்து வருடம் திரும்பி விட்டற்போல ஒரு எண்ணம்..அடடா இத்தனை சந்தோஷத்தை தொலைத்து விட்டேனே என்று எண்ணும் போது கண்ணில் நீர் துளிர்த்தது.
Monday, August 15, 2005
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
சுஜனா அவள் ***ஆண் நண்பனை*** அழைத்து வரப்போகிறாள்.
??? :-)))
அன்புள்ள லதா,
மீண்டும் உங்கள் கருத்தைப் படித்த போது என் விளக்கம் சரி இல்லையோ என்று தோன்றியது. Boy Friendஎன்பது ஒரு expression. நண்பர்கள், பெண் நண்பர்கள், ஆண் நண்பர்கள் என்று மூன்று விதம் இங்கே (அமெரிக்காவில்). கதைக் களம் அமெரிக்காவாக இருப்பதால், அதே வார்த்தைகளை பயன் படுத்தி இருக்கிறேன். அதற்கு இணையான பொருள் காதலன் என்று கொள்ளலாம் .
கருத்துக்கு நன்றி
அன்புடன் விச்சு.
ஆமாம், எல்லார் கதைக்கும் கருத்து கூறும் முகமூடி, அவர் கட்சியின் அரசவைப் புலவரான என் பதிவில் கருத்து கூறாதது ஏன்.. (வி டி ஆர் நினைவு வருகிறதே..:-))
கதை நன்றாக உள்ளது, பெரும்பாலும் பேசினாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும்
நன்றி
vishytheking,
யதார்த்தத்தை பறை சாற்றுவதாய் அமைந்தது உங்கள் கதை.
நமது சமூகத்தில் இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்தவண்ணம் தான் உள்ளது.
இளமையில் செய்த தவறுகளை பலபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மூலம் தான் உணர்ந்து கொள்கிறார்கள்.
உங்களது கதையின் சுஜனா என்ற பாத்திரத்தின் படைப்பு அருமை. எல்லாரும் இப்படி செயல்ப்பட்டா எந்த கவலையும் இல்லையே.
// எல்லார் கதைக்கும் கருத்து கூறும் முகமூடி // ஒண்ணுமில்ல விஷிதகிங்... திடீர்னு ஒரு ஞானோதயம்... போட்டில பங்கு வகிக்கிறதால முடிஞ்சவுடன் கருத்து சொல்லலாம்னு, அதான் மௌன சாட்சியாயிட்டேன் ;-)
ஆனா வாழ்த்துக்கள்னு சொல்லலாமே... வாழ்த்துக்கள்
கருத்துக்கு நன்றி கயல் விழி..
தல.. சும்ம ஒரு கிண்டலுக்காகத்தான் சொன்னேன்.. பமகவின் ஈடு இணையற்ற (வேற யாராவது இருக்காங்களா என்னா?) தலைவரை கை நீட்டி கேள்வி கேட்கும் எண்ணம் வருமா..
அன்புடன் விச்சு
neyvelivichu.blogspot.com
நூறாவது பதிவை நோக்கி
நூறாவது பதிவை நோக்கி?
வாழ்த்துக்கள்!!!!
கதை நன்றாக இருந்தது. எல்லாத்தையும் பேசித் தீர்க்கலாம்தான். ஆனா பேசவே அதாவது பேச்சு வார்த்தைக்கே வரமாட்டேன்னு சொல்றவங்களை எப்படி?
துளசி.
nanRi thuLasi akka..
pesa varaathavargaL oru pakkam.. naamaaga valiyap pooi aNaiththuk koNdaal eththanai tharam thaan ooduvaargaL..
oru naaL illai enRaal oru naaL manam maaRum..
maaRi irukkiRathu.. parththiukkiReen..
anbudan vichu
Post a Comment