Thursday, June 30, 2005

சங்கராச்சாரியாரும் குற்றவியல் சட்ட மாற்றமும்

காவல்துறையினரிடம் கிரிமினல் சட்டம் 161-இன்கீழ் ஒருவர் வாக்குமூலம் கொடுத்தால் அது நீதிமன்றத்தில் ஏற்கப்படவேண்டும் என்று புது திருத்தம் கூறுகிறது. காவல் துறையினர் மிரட்டி வாக்குமூலம் வாங்கினர் என்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்ட வர்கள் இனி சொல்ல முடியாது என்பதுதான் புதிய திருத்தத்தின் நிலைப்பாடாகும்.

சங்கரராமன் வழக்கில் சாட்சிகள் முதலில் ஒன்று சொல்லி பின் போலிஸ் மிரட்டினார்கள் என்று சொன்னர்களே அது போல இனி முடியாது. (இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால்)

குற்றவியல் சட்டம் என்றால் மத்திய நீதிதுறை தானே மாற்றம் செய்யும்? மாநில அரசு ஏதும் சிபாரிசு செய்ததா..

ஆனால் இது சரியான சட்டமாகத் தென் பட வில்லை. அடித்து உதைத்து வாக்கு மூலம் வாங்கும் உலகத்தில் நீதி காணாமல் போய் விடும். அறிவிருக்கிறதா என்று நீதிபதிகள் அனைவரயும் கேட்க நேரிடும்.

அன்புடன் விச்சு

3 comments:

Anonymous said...

மற்றவர்களுக்கு ஒரு நீதி, காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களுக்கு ஒரு நீதியா? இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அயோத்தியாகுப்பம் வீரமணி அவர்கள் சிரித்துக் கொண்டே ஜெயிலுக்கு போனார், சிரித்துக் கொண்டே வெளியே வந்தார். சிரித்துக் கோண்டே போட்டுத் தள்ளினார்கள்.

பங்க் ரவியின் கதையும் அதேதான். வெள்ளைரவி, முட்டை சிவா எல்லோரும் அதேபோலத்தான் சிவலோக பதவி அடைந்தார்கள்.

நமது நொச்சிக்குப்பம் பிளேடு பக்கிரி கதையும் அதான். தவறு நிறைய செய்தாலும் போலீஸ் பிடிக்கவில்லை. கடைசியாக பிடித்தார்கள். அதன்பின் ஜெயிலுக்குப் போனார் ஒரு கொலைவழக்கு சம்பந்தமாக, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். கடைசியில் அவரையும் போட்டுத் தள்ளிவிட்டார்கள்.

இந்த பின்னூட்டம் வழக்கம்போல எனது பதிவிலும் இடம்பெறும்.


அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

போலி டோண்டுவால் ஒரு நல்ல காரியம் நடக்கிறது. அதாவது ஒவ்வொரு வலைப்பதிவராக தத்தம் வலைப்பூவில் அனானிப் பின்னூட்ட வசதியை செயலிழக்கச் செய்து வருகிறார்கள். இப்பதிவரும் அவ்வாறே செய்வார் என நினைக்கிறேன். நல்லதுதானே, நடக்கட்டும். இப்பதிவில் போட்டொ எனேபிள் செய்யப்பட்டிருந்தால் என் போட்டோவுடனே பின்னூட்டம் வரும். ஒரு போதும் டோண்டு ராகவன் "வேறு" வழியாக உள்ளே வர மாட்டான் என்பது தெரிந்ததே (தினத் தந்தி?).

வழக்கம் போல இப்பின்னூட்டமும் என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அன்புடன்,
டோண்fடு ராகவன்

neyvelivichu.blogspot.com said...

டொண்டு சார்,

அனானிமஸ் பதில்கள் தர முடியாது.. அது நீக்கப்பட்டு விட்டது. இந்த வலைப்பதிவை நடத்துபவர் அந்த வசதியை எல்ல பதிவுகளிலிருந்தும் குளொபலாக எடுத்துவிட்டால் இன்னும் நல்லது.

முதல் பின்னூட்டம் உங்களுடயது போல இல்லை..உங்கள் பதிவிலும் இது இல்லை.. ஆனால் எலிக்குட்டி சரியாக காட்டுகிறது..

இரெண்டாவது உங்களுடையது தான். உங்கள் வலைப்பதிவில் இருக்கிறது.

மூன்றாவது போலி டொண்டு. வெலை வெட்டி இல்லாதவர் போலத்தெரிகிறது..உருப்படியாக ஒரு பதிவிட்டு உஙள் கருத்தை தெளிவாகச் சொல்லலாமே அன்பரே.. ஏன் இப்படி பேடித்தனம். அசிங்கமாக இல்லையா?

அன்புடன் விச்சு