Friday, June 10, 2005

ஜெயகாந்தன் உண்மையில் தமிழ் / வடமொழி பற்றி பேசியது என்ன?

“வருண வேறுபாடுகள் இருக்க வேண்டும்; ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவராசியமாக இருக்கும். தமிழைவிட சமற்கிருதந்தான் உயர்வானது; பிறமொழி கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும்; பேச வேண்டும் என்கின்ற தமிழறிஞர்கள் தம்மைத்தாமே நக்கிக்கொள்ளும் நாய்கள்; சமற்கிருதம் இங்கே தரித்து வளர்க்கப் பட்டிருந்தால் ங்கிலம் இப்படி நுழைந்திருக்காது” எனக் கடந்த 23.04.05 இல் சென்னையில் சேவாசமிதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார்."

இது மகேஷ் என்பவர் மலேஷிய தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் எழுதியதாக வலைப்பூவில் படித்தேன்.

இப்படி ஜெயகாந்தன் பேசினாரா.. அவர் பேச்சை சிவகுமாரின் வலைப்பூவில் கேட்டேன்.. அதில் இப்படி ஒன்றும் கேட்கவில்லையெ.. வேறு எங்கும் பேசினாரா..

அந்த சுட்டி கிடைக்குமா.. ஏதும் பத்திரிகையில் இருக்கிறதா..

நேற்று குமுதத்தில் கோவை விழா பற்றி படித்ததும் http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_09.html உண்மையை தெரிந்து கொள்ள ஆவல் அதிகமாகிறது...

அத்வானி மேற்கோள் காட்டியதை http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_111816728654143529.html ஊதி ஊதிப் பெரிசாக்கியது (அய்யோ.. எந்த ஜாதியையோ வேறு யாரயுமோ குறிப்பிடவில்லை) போல செவி வழி வதந்தியாக பெரிதானதோ என்றும் ஒரு சந்தேகம்..

கண்களால் காண்பதும் பொய், காதுகளாள் கேட்பதும் பொய்.. தீர விசாரித்து அறிவதே மெய்.. அதனால் யாராவது சுட்டுங்கள்..உண்மையை அறிய உதவுங்கள்

அன்புடன்

விச்சு

4 comments:

குழலி / Kuzhali said...

விச்சு இப்ப என்னதான் சொல்றீங்க அப்படி பேசினாரா இல்லையா

Thangamani said...

//வருண வேறுபாடுகள் இருக்க வேண்டும்; ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவராசியமாக இருக்கும்//

இது இராணி சீதை ஹாலில் பேசியது. விவேகானந்தரை சாட்சிக்கு அழைத்திருப்பார்.

//பிறமொழி கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும்; பேச வேண்டும் என்கின்ற தமிழறிஞர்கள் தம்மைத்தாமே நக்கிக்கொள்ளும் நாய்கள்;//

இது சம்ஸ்கிருத சமிதியில் பேசியது.

குழலி / Kuzhali said...
This comment has been removed by a blog administrator.
குழலி / Kuzhali said...

//வருண வேறுபாடுகள் இருக்க வேண்டும்; ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவராசியமாக இருக்கும்//

//இது இராணி சீதை ஹாலில் பேசியது. விவேகானந்தரை சாட்சிக்கு அழைத்திருப்பார்.//

ஜெயகாந்தன் அவர்கள் கீழ் வர்ணமாக இருக்கும் போது அவருக்கு இந்த வர்ண வேறுபாடும் ஏற்றத்தாழ்வு சுவராசியமாக இருக்குமா??

இயற்கை அழிவுகளில் பல லட்சம் பேர் இறக்கும்போது மக்கள் தொகையை இப்படி ஏதாவது செய்துதான் இயற்கை கட்டுப்படுத்தும் எனக்கூறுபவர்கள்(என் காது பட கூறி வாங்கிக்கட்டிக்கொண்டார்கள்) அந்த இயற்கைப்பேரழிவு அவர்கள் வீட்டில் இரண்டு பேரை எடுத்துக்கொண்டு மக்கள் தொகை குறைப்பை செய்தால் எப்படியிருக்கும் அவர்களுக்கு,

இதே மனநிலைதான்
ஜெயகாந்தனின் பேச்சில் தெரிகின்றது