செய்தி 1.
"சன் டி.வி. பற்றி சுவாரஸ்யமான ஒரு தகவல். சமீபத்தில் செய்திப் பிரிவில் எட்டுப்பேரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது டி.வி. நிர்வாகம். இடைத்தேர்தல் குறித்த செய்திகளை ஒளிபரப்பியபோது மக்கள் பேட்டியும் ஒளிபரப்பாகியிருக்கிறது. அப்படி காட்டப்பட்ட ஒரு பேட்டியில். ‘அ.தி.மு.க. ஆயிரம் ரூபாய் குடுத்தாங்க... தி.மு.க. ஐந்நூறு ரூபாய்தான் குடுத்தாங்க’ என ஒருவர் சொல்ல, அதை எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பி விட்டார்களாம். இதுதான் நடவடிக்கைக்குக் காரணமாம்...’’
செய்தி 2.
"காஞ்சீபுரம் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுகிறேன் என்ற போர்வையில் கரன்ஸிகளைக் கொடுத்தும் அமைச்சர்களை தொகுதிகளிலேயே தங்க வைத்து பணத்தை அள்ளி இறைத்தும் வெற்றியைப் பெற்றிருக்கிறார் ஜெயலலிதா." மு க ஸ்டாலின்.
http://thatstamil.indiainfo.com/news/2005/05/29/stalin.html
இதில் என் கருத்து வேறு வேண்டுமா.. தேவைப்பட்டதை மட்டும் சொல்லி மற்றதை மறைப்பது Statistics என்று கூறுவார்கள்.. இவர்களை அதில் "வல்லுனர்கள்" என்று கூறலாமா?
ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை.
Wednesday, June 01, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இரண்டு செய்திகள்...ஒன்றுக்கொன்று தொடர்புடையவை போலும்...!
Post a Comment