Tuesday, May 31, 2005

வண்ணத் தோரணமும் வாசல் படிக்கட்டுகளும்

மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி.. 5 நாள் காத்திருந்து, "மர"த்தின் வலைப்பூ வில் உதவி கேட்டு பின்னூட்டமிட்டு இன்று காலை வந்து பார்த்தால் என் பெயரும் தமிழ்மணதில் இருந்தது..

என்னை அனுமதித்ததில் யாருக்கெல்லாம் பங்குண்டோ அவர்கள் அனைவருக்கும் நன்றி..

தமிழ்மணத்தில் வரும் முன்பே வந்து பின்னூட்டமிட்ட டோண்டு மற்றும் வி எம் க்கு நன்றி. ஒருவர் என் வலைப்பூவில் நட்சத்திரத்தை மட்டும் சொடுக்கி சென்றிருக்கிறார் அவருக்கும் நன்றி.

அடிக்கடி வருவேன்.. நீங்கள் அளிக்கும் வாழ்த்துப்பூக்கள் தோரணமாகும்.. விட்டெரியும் விமர்சனக்கற்கள் படிக்கட்டுகளாகும்.. உதவும் அனைவருக்கும் நன்றி..

என் வலைப்பூவில் பெயரில்லதோர் பின்னோட்டமிட இயலாது.. மன்னிக்கவும்.. பெயர் சொல்லி துணிந்து திட்டுங்கள்.. ஆட்டோ வில் ஆட்கள் வர மாட்டர்கள்.. ஆசிட் பாட்டில்கள் வராது.. வெடிகுண்டுகள் தபாலில் வராது.. மிஞ்சிப்போனால் ஒரு நன்றி அறிவித்தல் வரும்.. நிச்சயமாக வரும்..ஏனென்றால்பூக்கள்கூட வாடிப்போகலாம்.. நான் வளர உதவும் படிக்கட்டுகள் என்றும் அழியாது..மறக்கவும் மாட்டேன்

அன்புடன்

விச்சு

2 comments:

Muthu said...

விச்சு,
நன்றாகத் தமிழ் எழுதுகிறீர்கள். தொடருங்கள்.

Unknown said...

கலக்குங்க நைனா!! இந்தப் பதிவில ஒரு அரசியல்வாதியின் தோரணை தெரியுது?. விட மாட்டனே!!