Thursday, June 30, 2005

நேர்காணல் - என் கேள்விக்கென்ன பதில்

அருண், ரங்கா, முகமூடி, டோண்டு மாமா, குழலி, பாஸ்டன் பாலா, மாயவரத்தான் உட்பட யார் வேண்டுமானாலும் பதில் தரலாம். உங்கள் பதில்கள் நல்ல சில கருத்துக்களை தமிழ் மணத்தில் பரப்ப வெண்டும் என்பதே நோக்கம்..,

உங்கள் வலைப்பதிவில் பதில் தந்தால் இந்த பதிவில் தயவு செய்து குறிப்பிடுங்கள்

ஷ்ரெயாவின் கேள்விகள், துளசி அக்கா சார்பில் என் பதில்கள்.

1. யாருடைய கண்ணிலும் தெரிய மாட்டீர்கள் (invisible) என்றால் என்னென்ன செய்வீர்கள்?அப்புறம் என்ன பயன். யாராவது கூட இருந்தாதானே மகிழ்ச்சியே. எல்லார் கண்ணிலும் தெரிவது எப்படின்னு கண்டு பிடிப்பேன்.

2. புதிதாய் எதோ ஒன்றைக் கண்டு பிடிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். என்னவாக இருக்கும்?அக்ஷய பாத்திரமாக இருக்கும்.. பசி தான் பெரிய கொடுமை.. அது இல்லமல் இருந்தால் பாதி பிரச்சினை இருக்காது.

3. உங்களுடைய முதல் ஞாபகம் என்ன?என் முதல் ஞாபகம் என் தங்கையுடன் விளையாடியது. இப்போது ஞாபகம் மட்டுமே மிச்சம்.

4. உலக வரலாற்றிலே எந்தக் காலகட்டத்திற்குமோ, அல்லது குறித்த ஒரு சம்பவத்திற்கோ 'செல்ல' முடிந்தால், எந்தக் காலம்/சம்பவத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
அப்படி எந்த காலத்திலும் பாலும் தேனும் ஓடியதாகத் தெரியவில்லை. பணக்காரர்களின் கதை மட்டுமே வரலாறாகிறது. ஏழைகளின் வாழ்க்கை இன்று இருப்பது போலவே தான் இருந்திருக்கும். இன்றைய தினமே மகிழ்ச்சியான நாள். இதைத்தான் கொண்டாடுகிறேன். கொண்டாடுவேன்.

5.கரப்பான் பூச்சிகளைப் பற்றி உங்கள் கருத்து?மருந்து அடித்து கொல்கிறேன் என்றால் குழந்தை இருக்கு ஆஸ்ப்ரின் போட்டுத் துரத்தலாம் (எதோ ஒரு மகளிர் பத்திரிகையில் வந்த குறிப்பு) என்று மனைவி கூறுகிறார். திருமணம் ஆன பின் மனைவி கருத்தே என் கருத்து (குறைந்த பட்சம் வீட்டு விவகாரங்களில்)

நான் கேள்வி கேட்டால் இப்படித்தான் இருக்கும்.

1. நமக்கு அரசியல் வாதிகள் தேவையா?

2. ஈழம் தமிழ் நாட்டின் ஒரு மாவட்டமாக இருந்தால் எப்படி இருக்கும்

3. ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக ஆனால் என்ன செய்வீர்கள்? (வேண்டாமென்றால் அமெரிக்காவின் அதிபராக என்று வைத்துக்கொள்ளுங்கள்)

4. ஒருவரை அழித்தால் உலகம் நாளை முதல் மகிழ்ச்சியாக இருக்கும் என்றால் நீங்கள் யாரை அழிப்பீர்கள்.. ஏன்?

5. உங்களுக்கு மூன்று வரம் தருகிறது ஒரு தேவதை.. உங்களுக்கு என்று எதுவும் கேட்கக்கூடாது. என்ன கேட்பீர்கள்.

அருண், ரங்கா, முகமூடி, டோண்டு மாமா, குழலி, பாஸ்டன் பாலா, மாயவரத்தான் உட்பட யாருக்கெல்லம் பதில் தர வேண்டுமொ தாருங்கள்.., உங்கள் வலைப்பதிவில் பதில் தந்தால் இந்த பதிவில் தயவு செய்து குறிப்பிடுங்கள்

அன்புடன்

விச்சு

16 comments:

துளசி கோபால் said...

:-)))))

இந்த அக்ஷய பாத்திரம் 'சூப்பர் ஐடியா'வாஇருக்கே!!!! அப்ப இதை வச்சுக்கிட்டே காலத்தை ஓட்டிரலாம். சமைக்கவேணாம்!!!

அய்யோ, இந்த ஐடியா ச்'சட்'னு எனக்கு வராமப் போச்சே!!!!

என்றும் அன்புடன்,
துளசியக்கா

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//இந்த அக்ஷய பாத்திரம் 'சூப்பர் ஐடியா'வாஇருக்கே!!!! அப்ப இதை வச்சுக்கிட்டே காலத்தை ஓட்டிரலாம். சமைக்கவேணாம்!!!//

ஆஹா..விரைவில இதை யார்ராவது கண்டுபிடியுங்க! :o)

துளசி..என்னைப்போலத்தானா நீங்களும்?(சமையலுக்குக் கள்ளம்?)

ஹூம்..கள்ளப்பட்டு என்ன பிரயோசனம்? என்னதான் மாயம் பண்ணினாலும் நானேதான் சமைக்க வேண்டி வந்திருது! :o(

ஈழநாதன்(Eelanathan) said...

கேள்வி 2 ஈழத்தை தமிழ் நாட்டின் மாவட்டம் ஆக்கவேண்டாம் இருக்கிற பிரசனை இன்னும் கூடிவிடும் எங்காவது வடமாநிலத்துடன் கொஞ்சம் பவர் உள்ள இடமாய்ச் சேர்த்துவிடுங்கள்

முகமூடி said...

//அருண், ரங்கா, முகமூடி, டோண்டு மாமா, குழலி, பாஸ்டன் பாலா, மாயவரத்தான் உட்பட யாருக்கெல்லம் பதில் தர வேண்டுமொ தாருங்கள்..,//
இதுக்கு இன்னாபா அர்த்தம்... நெசமாவே வெளங்கல...

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

ஈழநாதன் - நீர் நான் கேட்டதுக்குப் பதில் எப்ப சொல்லப் போறீர்?அல்லது வசந்தன் மாதிரி "கட்டாயம் எழுதுவன்" என்டப்போறீரோ?

குமரேஸ் said...

"ஈழம் தமிழ் நாட்டின் ஒரு மாவட்டமாக இருந்தால் எப்படி இருக்கும்"

ஏன் உங்களுக்கு ஈழம் உருப்படியாக இருக்கவேண்டாம் என்ற விபரீத ஆசை,

அவர்களும் தமிழ்நாட்டைப்போல் ஊழல் (விஞ்ஞானரீதியானது உட்பட), சினிமா மாயை, ஆடம்பரமாக வாழ்ந்து சிறைக்குப் போகும் முற்றும் துறந்த காவிகள், மூடநம்பிக்கையை வளர்க்கும் ஊடகங்கள், கலாச்சாரத்தை சீரழிக்கும் தலைவர்களின் பல தார மணவாழ்க்கை, குடும்ப அரசியல் இப்படி பல அசிங்கங்களில் சிக்கி அழிய வேண்டுமா என்ன?

1967 களிலேயே, அங்குள்ள தமிழ் அறிஞர்கள், தமிழ்நாட்டு சஞ்சிகைகளால் ஈழத்தில் தமிழிற்கு ஆபத்து என்று எச்சரிக்கை செய்துவிட்டார்கள்.

வேண்டாம் இந்த விபரீத ஆசை

neyvelivichu.blogspot.com said...

அன்புள்ள முகமூடி

ப ம க தலைவரும் பதில் தரவேண்டும் என்ற விருப்பம் தான்

தருவீர்கள் தானே..

அன்புடன் விச்சு

வீ. எம் said...

நமக்கு அரசியல் வாதிகள் தேவையா?

நிச்சயமாக தேவை, தொ¨நோக்கு பார்வையுள்ள, நல்ல சிந்தனைகள் கொண்ட, மக்கள் , தேச நலனில் அக்கறையுள்ள அரசியல் வாதிகள் தேவை. இன்று அப்படி பட்டவர்களை தேட வேண்டியுள்ளது!
ஈழம் தமிழ் நாட்டின் ஒரு மாவட்டமாக இருந்தால் எப்படி இருக்கும்
ஈழம் பற்றி ஏதோதோ பேசிவரும் அரசியல்வாதிகள் வாயடைக்கப்படும்.. தமிழகத்தில் இருபோருக்கு ஈழம் பற்றி ஒரளவுக்காவது தெளிவு கிடைக்கும்
ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக ஆனால் என்ன செய்வீர்கள்?
ஒரு நல்லவரை, முதல் கேள்வியில் சொன்ன தகுதிவுடையவரை தேடி, நிரந்தர பிரதமராக்கிவிட்டு ஓய்வு பெறுவேன்.
ஒருவரை அழித்தால் உலகம் நாளை முதல் மகிழ்ச்சியாக இருக்கும் என்றால் நீங்கள் யாரை அழிப்பீர்கள்.. ஏன்?
ஊழல், லஞ்சம் என்னும் அந்த மகாசக்தி பொருந்தியவரை அழிக்க முடியுமா என பார்ப்பேன்

உங்களுக்கு மூன்று வரம் தருகிறது ஒரு தேவதை.. உங்களுக்கு என்று எதுவும் கேட்கக்கூடாது. என்ன கேட்பீர்கள்.
1. இந்தியா வல்லரசாக மாற உழைக்ககூடிய மனவலிமை, உடல் வலிமை அனத்து இந்தியருக்கும்
2. நல்லவர்கள் மட்டுமே பிரதமர், முதல்வர் மற்றும் அனைத்து உயர் பதவியில்மென்றும் அமர வேண்டும்
3. இந்தியாவிற்கு அனைத்து பகுதிகளிலும் சமமான நல்ல இயற்கை வளம்.

dondu(#11168674346665545885) said...

விச்சு அவர்களே, மேலே என் பெயர் மற்றும் போட்டோவுடன் வந்தப் பின்னூட்டம் நான் எழுதியதல்ல. போலி டோண்டு எழுதியது. எலிக்குட்டியை அவர் பெயரின் மேல் வைத்து பார்த்தல் உண்மை தெரிந்து விடும்.

வழக்கமாக என் பதிவு என் தனிப்பதிவில் வரும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

என்னுடைய இப்போதையப் பதிவையும் பார்க்கவும் http://dondu.blogspot.com/2005/06/blog-post_30.html

That person has opened a new blog with my user name and copy pasted my profile and photo.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

உங்களது அழைப்புக்கு நன்றி விச்சு, என் பதிவிலிட்டு பின் சுட்டி தருகின்றேன்.

குழலி / Kuzhali said...

விச்சு உங்கள் கேள்விகளுக்கான பதிலை என் பதிவிலிட்டுள்ளேன், சுட்டி விச்சுவின் கேள்விகளுக்கு பதில்

நன்றி

Boston Bala said...

>>1. நமக்கு அரசியல் வாதிகள் தேவையா?//

எனக்கு அரசியல்வாதிகளின் தேவை, நான் அரசியலுக்குப் போனால் நிச்சயம் ஏற்படும். கூட நாலைந்து கரை வேட்டி இல்லாமல் அரசியல் செய்வது எப்படி ;-) (கேள்வி எண்-3-க்கும் இந்த பதிலுக்கும் சம்பந்தம் இருக்கிறது :D)


>>2. ஈழம் தமிழ் நாட்டின் ஒரு மாவட்டமாக இருந்தால் எப்படி இருக்கும்//

234 தொகுதிகள் 250 ஆகியிருக்கும். 39-இல் இருந்து 42-ஆவது, தேசிய கூட்டணி ஆட்சி பேரத்தில் கை கொடுக்கும். புதிய வாக்கு வங்கிகள் உதயமாவதால் கூட்டணிகளில் கட்சிகள் அதிகரித்திருக்கும்.


>>3. ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக ஆனால் என்ன செய்வீர்கள்? (வேண்டாமென்றால் அமெரிக்காவின் அதிபராக என்று வைத்துக்கொள்ளுங்கள்)//

If at all I became PM in one fine day, I will try to be PM for my full term. காலகட்டத்துக்கு ஏற்றவாறு கட்டாய சமுதாயப் பணி போன்ற பொருத்தமான, அதிரடி ஆக்ஷன் இல்லாத திட்டங்கள் செயல்படுத்தலாம்.


>>4. ஒருவரை அழித்தால் உலகம் நாளை முதல் மகிழ்ச்சியாக இருக்கும் என்றால் நீங்கள் யாரை அழிப்பீர்கள்.. ஏன்?//

அடுத்த விடையை பார்க்க...


>>5. உங்களுக்கு மூன்று வரம் தருகிறது ஒரு தேவதை.. உங்களுக்கு என்று எதுவும் கேட்கக்கூடாது. என்ன கேட்பீர்கள்.//


அ. ஒருவரை அழித்தால் உலகம் நாளை முதல் மகிழ்ச்சியாக இருக்குமாமே? யார் அவர்?

ஆ. ஈழம் தமிழ் நாட்டின் ஒரு மாவட்டமாக ஆகக் கூடாது.

இ. விச்சு கேள்வி கேட்டு படுத்தக் கூடாது :-)

neyvelivichu.blogspot.com said...

யக்கொவ்.. நம்ம கேள்விக்கு பதில் என்னக்கா? இதுக்கும் பதில் குடுங்க.. ஷ்ரெயாக்கா (அக்காவா தங்கச்சியா?) கேள்விக்கு மட்டும் பதில் தந்தீங்களே..

ஷ்ரெயாக்கா.. உங்களுக்கும் தான்.. என் கேள்விக்கென்ன பதில்?

ஈழ நாதனும் முகமூடியும் கமென்டோட காணாம போய்ட்டாங்க.. டோண்டு சாரும் அவர் டுபிளிகேட்டும் சேர்ந்து 4 கமென்ட் பொட்டு இருக்கிறார்கள்.. கேள்விக்கு பதில் சொல்ல மாட்டென் என்கிறார்.. டுபிளிகேட் நீங்க உங்க பதில சொல்லுங்க.. டோண்டு அவர் பதில சொல்லுவார்.. அவர் நாலு அஞ்சு மொழி பேசரவர்.. பதில் சொல்லத் தெரியாதா என்ன?

வி எம் பாஸ்டன் பாலா வுக்கு நன்றி.. ரொம்ப படுத்தரேனா பாலா.. பொறுத்துக்கோங்க...பழகிடும்..

குழலி, பதில்களுக்கு நன்றி..

இராவணமா, இராணுவமா.. எழுதுப் பிழையா இல்ல எதும் சொல்ல வரீங்களா.. நிறைய திட்டங்கள் வச்சிருக்கீங்க.. ஒரு நாள் பிரதமராக வாழ்த்துக்கள். நிசசயமா நல்லது நடக்கும்னு நம்பலாம்.

நீங்கள் சொன்ன தேர்தல் செலவு கட்டுப்பாடு சேஷன் நடத்திய ஒரு தேர்தலில் காணக் கிடைத்தது.. அப்புறம் அவரையே அனுப்பிட்டாங்க..

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி

அன்புடன் விச்சு

neyvelivichu.blogspot.com said...

குமரேஷ்,

உங்க கருத்துக்கும் நன்றி.

ஈழம் அங்கேயே இருக்கட்டும்.. தனி நாடா ஆனா சந்தோஷம். தமிழனுக்கு உதவி செஞ்சா அரசாங்கமே ஆடிப்போகுது.. என்னத்த அவங்க கிட்ட எதிர்பார்க்கரது..

மதத கேள்விகளுக்கும் உங்ககருத்த சொல்லுங்க.


அன்புடன் விச்சு

ரங்கா - Ranga said...

1. நமக்கு அரசியல் வாதிகள் தேவையா?
எந்த விதமான அரசாக இருந்தாலும், அதாவது ஜனநாயகம், கம்யூனிசம் மற்றும் கொடுங்கோல் (டிக்டேடர்), அதில் நல்லதும் உள்ளது, கெட்டதும் உள்ளது. இதில் நல்லது அதிகம் நடக்க வாய்ப்பு, ஜனநாயகத்தில் தான் உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் அவசியம் தேவை. அதே சமயத்தில் அவர்கள் தரமானவர்களா? தற்போதைய அரசியல் வாதிகள் தேவையா என்றால், பதில் வேறுமாதிரியாக இருக்கும்.

2. ஈழம் தமிழ் நாட்டின் ஒரு மாவட்டமாக இருந்தால் எப்படி இருக்கும்
நல்லவேளை அப்படி இருக்கவில்லை! தமிழை வளர்த்ததில் கடந்த நூற்றாண்டில் ஈழத்தின் பங்கு தமிழ் நாட்டை விட மிக அதிகம். தமிழ் நாட்டின் மாவட்டமாக இருந்தால் நிச்சயமாக இந்த அளவு வளர்ச்சி இருந்திருக்காது.

3. ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக ஆனால் என்ன செய்வீர்கள்? (வேண்டாமென்றால் அமெரிக்காவின் அதிபராக என்று வைத்துக்கொள்ளுங்கள்)
ஊரில் ஒரு பழமொழி உண்டு! 'ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுத்தாற் போல்' என்று. நிச்சயமாக அதுபோல நடக்க மாட்டேன்.

4. ஒருவரை அழித்தால் உலகம் நாளை முதல் மகிழ்ச்சியாக இருக்கும் என்றால் நீங்கள் யாரை அழிப்பீர்கள்.. ஏன்?
உலகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் குறைந்தபட்சம் ஒரு மனிதராவது விரும்புவர்; யார் மறைந்தாலும், ஒருவராவது துக்கப் படுவது நிச்சயம். அதனால் மறு நாளில் இருந்து உலகம் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை நான் நம்பவில்லை!

5. உங்களுக்கு மூன்று வரம் தருகிறது ஒரு தேவதை.. உங்களுக்கு என்று எதுவும் கேட்கக்கூடாது. என்ன கேட்பீர்கள்.
உலகில் உள்ள மற்ற எல்லாருக்கும் நல்ல குணமும், பணமும், என்னை விரும்பும் மனமும் வேண்டும் எனக்கேட்பேன்.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நீங்க கேட்டதுக்கு நான் பதிலப் போட்டு, திரும்ப வேற 5 கேள்விகள் உங்களைக் கேட்டு நீங்க அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லிட்டு வேற 5 கேள்வியோட என்னிடம் வந்து நிற்பீங்க போலருக்கே... ஐயய்யோ..இதென்னடா வம்பாப்போச்சு! கேள்விக்கு பதில் சொல்லிட்டு, என்பங்குக்கு கேள்வியும் கேட்டுட்டேன்...இனிமேல் ரிவர்ஸில் வரக்கூடாது(எல்லாருமே முன்னோக்கி முன்னேற வேண்டும்!!;o) )

ஷ்ரேயா - அக்காவோ தங்கச்சியோ இல்லாம நண்பியா இருக்கலாமே...(விட்டா எல்லாரும் அக்கா ஆன்டி என்பீங்க..ஆள விடுங்க!)