Friday, June 03, 2005

வாபஸ் வாங்கும் காலம்.

அம்மா வாபஸ் வாங்கி முடித்து விட்டார்.. இப்பொது அன்னையின் காலம்.. நடை மேடை சீட்டு விலை அதிகரிப்பு வாபஸ்.. பெட்ரோல் விலையில் வாபஸ் உண்டா?





ரயில்வே பிளாட்பார டிக்கெட் கட்டண உயர்வு "திடீர்' வாபஸ்!
சென்னை: ரயில்வே பிளாட்பார டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வந்த இரண்டாவது நாளிலேயே திடீரென வாபஸ் பெறப்பட்டது. பிளாட்பார டிக்கெட்டுக்கு வழக்கம்போல் மூன்று ரூபாய் கட்டணமே வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் பயணிகள் அல்லாதவர்கள், தொலைதூர பயணிகளை வழியனுப்பி வைப்பவர்கள் பிளாட்பார டிக்கெட் எடுக்க வேண்டும். இதற்கான கட்டணம் மூன்று ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ரயில் நிலையங்களுக்கு வருபவர்கள் டிக்கெட் மிஷின் மூலமாகவும், நீண்ட வரிசையில் நின்று கவுன்ட்டர்களிலும் பிளாட்பார டிக்கெட்டைப் பெற்று வந்தனர். இந்த டிக்கெட் மூன்று மணி நேரம் மட்டுமே செல்லத்தக்கது.

மத்திய அரசு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில், பிளாட்பார டிக்கெட் கட்டணம் ஐந்து ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு நேற்று முன்தினம் (ஜூன் 1 ) அமலுக்கு வந்தது. இந்த டிக்கெட் கட்டண உயர்வுக்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், கட்டண உயர்வு அமலுக்கு வந்து இரண்டாவது நாளான நேற்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. வழக்கம்போல் பிளாட்பார டிக்கெட் கட்டணம் மூன்று ரூபாயாகவே இருக்கும் எனவும், இந்த கட்டண முறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிளாட்பார கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளாட்பார டிக்கெட் கட்டண உயர்வால் கூட்ட நெரிசல் குறைவதுடன், ரயில்வே துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று நம்பப்பட்டது. எனினும், பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பிளாட்பார டிக்கெட் கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- நன்றி தினமலர்.

அன்புடன்

விச்சு

2 comments:

ஏஜண்ட் NJ said...

புலி வேறு... பூனை வேறு !

neyvelivichu.blogspot.com said...

vaapas vaapas thaane...

annayai poonai endru kooriyathai kamarajar aatchi amaikka irukkum thamizhaga congressin ( ) privu saarbil vanmayaaga kandikkiren.

edu vendumendralum pottukkollalam.(ilangovan, vaasan, chidambaram. j.natarajan, etc etc)

anbudan vichchu