Wednesday, July 20, 2005

ரசித்த பாடல் இதயக் கோவில்

ராஜாவின் இசையில் அவர் அண்ணன் பாவலர் வரதராஜன் எழுதிய பாடல். (அவர் இறந்த சிலகாலம் கழித்து பயன்படுத்தப்பட்டது). மணிரத்னம் இயக்கிய இரண்டாவது படம். சத்திய ராஜ் நடித்த பகல் நிலவு தான் முதல் என்று நினைக்கிறேன்.

மற்ற பாடல்களும் இனிமை தான்.. முடிந்தால் பின்னர் தருகிறேன்.

வழக்கம் போல பாலு கலக்கிட்டார்.

அன்புடன் விச்சு

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நாவரண்டு பாடுகின்றேன் (2)

..................வானுயர்ந்த..........................

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை

....................வானுயர்ந்த.........................

ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி

....................வானுயர்ந்த............................

1 comment:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Manirathnam directed a kannada film with anil kapoor. that's his first, i think.

beautiful song.

-Mathy