Thursday, July 14, 2005

மாக்களின் ஜனநாயகம்

அவர்கள்முதலில் சமுதாய வளர்ச்சி என்றார்கள்
நாங்கள் ஓட்டுப் போட்டோம்
எம் தலைவர் நல்லவர் என்று

தொடர்ந்துதமிழை காப்போம் என்றார்கள்
நாங்கள் இந்தியை ஏசினோம்
எம் தலைவர் தமிழைக் காப்பார் என்று

பின்னர் ஈழத் தமிழர் என்றார்கள்
நாங்கள் ஊர்வலங்கள் போனோம்
எம் தலைவர் மனிதாபிமானி என்று

அடுத்து
மதச்சார்பின்மை என்றார்கள்
எம் மதக் குறிகளை அழித்தோம்
பெயரைச் சிதைத்தோம்
எம் தலைவர் சமத்துவ வாதிஎன்று

கடைசியாக, என் மகனுக்கு ஆட்சி என்றார்கள்
தலைவர் மகனன்றோ
ஓட்டளித்து விட்டோம்.
அரசரின் பிள்ளைகள் அரியணை ஏறினர்

ஜாதி மதங்களால் ஆட்சி அமைந்தது
இந்தி தெரிந்ததால் பதவி கிடைத்தது
சவக்குழியிலும் ஊழல் செய்தவர்
சந்து பொந்தெலாம் தோட்டம் வாங்கினார்

வளராத சமுதாயம் அப்படியெ இருந்தது
அழியாமல் இந்தி அவையில் வளர்ந்தது.
மதங்கள் உடைந்து ஜாதிகள் பெருகின
ஈழத்தமிழரை யாரென்றே தெரியலை.

வளர்ந்தோரெல்லம் அரசியல் வாதிகள்
லஞ்ச ஊழலில் தின்று கொழுத்தவர்.
கூட்டணி போட்டு குடும்பம் வளர்த்தவர்
அரசியல் ஜாதியின் மேல்தட்டு மானிடர்

கொட்டிக் கொடுத்தவர் பதவிகள் பெற்றார்
ஓட்டுப் பெட்டி நிறைத்தவர் வாரியம் பெற்றார்
உடன்பிறவாதவர் உலகையே பெற்றார்
உழைத்தவருக்கு இதயத்தில் இடம்

அதனாலென்ன
உயிரினும் மேலான தம்பிகளல்லவா
ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பல்லவா,
உறவுதான் பெரிது உடமையா பெரிது?
கடமையை(?) செய்வோம் காசு பணம் எதற்கு?

இன்றும்
ஊர்வலம் போவோம் அவர் சந்ததி வாழ
உயிரை எரிப்போம் அவர்ஆட்சியிலேற.

ஆயிரம் முழுமனிதர் வருவார்
முஷ்டி மடித்து நீட்டி முழக்கி,
"அண்ணன் வாழ்க! தலைவ(வி)ன் வாழ்க!
ஐம்பது ருபாய்க்கு ஆயிரம் கோஷம்

உயரத்தில் நின்றவர் கையை அசைத்தார்
நீங்கள் உருப்படாத கூட்டமென எழுதிப் படித்தார்.
நாங்கள் கை தட்டி ரசித்தோம்.
தலைவர் பெயரை போற்றித்துதித்தோம்.

6 comments:

துளசி கோபால் said...

Good one!

பினாத்தல் சுரேஷ் said...

super vishy!

முகமூடி said...

// நீங்கள் உருப்படாத கூட்டமென எழுதிப் படித்தார்.
நாங்கள் கை தட்டி ரசித்தோம். // - விஷி போட்டுத்தாக்கிட்டீரய்யா... உணர்ச்சி மிகு கவிதை...

ப.ம.க வுக்கு அரசவைக்கவி இல்லாத குறையை போக்க வந்த ராசகவி (விஷிதகிங்) மேலும் பல கவிதைகள் தருவார் என பொதுக்குழு தீர்மானிக்கிறது (இதுதாண்டா சனநாயகம்)

neyvelivichu.blogspot.com said...

நன்றி துளசி அக்கா, சுரேஷ்.

தலைவர் முகமூடியாரே,
முதற்கண் வணக்கம்.

நன்றி சொல்ல வார்த்தை இல்லை.. (அதனால் சொல்லாமல் விட்டு விடுகிறென்)
பதவி எல்லாம் பெரிய தொல்லை (எவனாவது என்னைப் போல் கவிதை எழுதி கிண்டலடிப்பான்)
தலைவன் சொல்லைத் தட்டவில்லை
கடமை தானே வாச முல்லை..

கடமை உணர்ச்சியால் இப்பதவியை ஏற்றுக் கொள்கிறேன். பதவி தந்து கௌரவித்தமைக்கு நன்றி.. (பணமுடிப்பு எப்போ தருவீங)

அன்புடன்

விச்சு

சினேகிதி said...

thaakuthal super

ரங்கா - Ranga said...

அருமையான கவிதை. தொடர்ந்து எழுதவும்.