Thursday, July 14, 2005

ரசித்த பாடல்கள்.. நிழல் நிஜமாகிறது

பாலசந்தரின் கறுப்பு வெள்ளை ஓவியம்..

மெல்லிசை மன்னரும் கவியரசரும் இறக்கை கட்டிப் பறந்த காலம்.

ஒரு பாடலை முப்பது வருடங்கள் கழித்துக் கேட்டாலும் இளமையாய் தெரியும் வரிகள்..

பாலு அவர் பங்கிற்கு ஒருபக்கம் பட்டையைக் கிளப்புகிறார்.

இவர்கள் எல்லாருடைய சிறந்த பாடல் வரிசையிலும் வரும் இரு பாடல் கள்.

அந்த நாள் ஞாபகம்..

அன்புடன்
விச்சு
1.
இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்
(இலக்கணம்)

கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான தாகம் ஏனிந்த கானம்
வெண்மேகம் அன்று
கார்மேகம் இன்று
யார் சொல்லித்தந்தார் மழைக்காலமென்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ பெண்மை தந்தானோ
(இலக்கணம்)
மணியோசையென்ன இடியோசையென்ன
எது வந்தபோதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனைக் காக்கக்கண்டேன்
நீயெது நானெது ஏனிந்த சொந்தம் பூர்வஜென்ம பந்தம்
(இலக்கணம்)
தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுப்பாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காகப்பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை உரைப்பது கீதை

புரியாததாலே திரைபோட்டு வைத்தேன்
திரைபோட்ட போதும் அணைபோட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கிவைப்பாயோ விளக்கிவைப்பாயோ
(இலக்கணம்)

2.
கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ
(கம்பன்)
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ - அந்த தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ
(கம்பன்)
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொருவரிசையை நான் கண்டேன் - அந்தவரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அடநானும் ஏமாந்தேன்
ஆத்திரம் என்பது பெணகளுக்கெல்லாம்அடுப்படி வரைதானே - ஒருஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்அடங்குதல் முறைதானே
(கம்பன்)

2 comments:

ஜென்ராம் said...

பழைய நினைவுகளில் ஈடுபடும் மனம் இறக்கத்தில் ஓடும் வண்டி போன்றது.. இந்து என்ற பாத்திரப் படைப்பு அற்புதம்.. உங்கள் இந்தப் பதிவு பார்த்ததால் நானும் ஒரு பாடல் போட்டு விட்டேன்..
ராம்கி, http://stationbench.blogspot.com

G.Ragavan said...

தமிழ்த் திரையிசையில் வெளிவந்த அற்புதமான பாடலில் இதொன்று என்பது மறுக்க முடியாத கருத்து. அழகான வரிகள். அவைகளுக்குப் பொருந்தும் மெட்டு. இனிய குரல்.