அட நம்ம வலைப்பதிவு பிரசினை போலவே இருக்கே.. எதாவது தொடர்பு உண்டா?
அன்புடன்
விச்சு
தினமலர் டீக்கடை பெஞ்சிலிருந்து.
""மொட்டை பெட்டிஷன் போடுறதை கேள்விப்பட்டிருக்கோம்... அடுத்தவங்க பெயருல மொட்டை பெட்டிஷன் போடுறது பார்த்திருக்கீங்களா பா...'' என்றார் அக்பர்பாய்.
""அதெப்படி அடுத்தவங்க பெயருல போட முடியும்... தெரிஞ்சா உதைக்க மாட்டாங்களா...'' என்றார்அண்ணாச்சி.
""அந்த நிலைமை வந்திருக்காம் பா... நாமக்கல் நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினரா காந்தி முருகேசன்ங்கறவர் இருக்கார் பா...
நாமக்கல்நகராட்சி தலைவர் காந்தி செல்வன் மேல ஊழல் புகார் சொல்லி முதல்வர் தனிப்பிரிவுக்கு அவர் பெயருல புகார் போயிருக்கு... அந்த புகார் தொடர்பா விசாரிக்கறதுக்கு காந்தி முருகேசனை அதிகாரிகள் தொடர்பு கொண்டு கேட்டாங்களாம் பா...
"புகாரே அனுப்பாத போது எப்படி எங்கிட்ட விசாரிக்கிறீங்க'ன்னு காந்தி முருகேசன் கேட்டாராம்... அப்ப தான் அந்த புகாரை அவரோட பேருல வேறு யாரோ அனுப்பிருக்கற விஷயம் தெரிஞ்சதாம் பா...'' என்றார் அக்பர்பாய்.
""அது ஏன் குறிப்பா அவர் பெயருல அனுப்பணும்...'' என்று கேள்வி எழுப்பினார் அண்ணாச்சி.
""அதுக்கு காரணம் இருக்காம் பா... அவர் அ.தி.மு.க., பிரமுகராம்... அவர் பெயருல அனுப்பினா தான் முதல்வர் தனிப்பிரிவுல நடவடிக்கை எடுப்பாங்கன்னு நினைச்சு அவர் பெயரை பயன்படுத்திட்டாங்களாம்... இப்ப விவகாரம் தலைக்கு மேல போயிட்டதால யார் புகாரை அனுப்பிருப்பாங்கன்னு தோண்டித் துருவிருக்கா... அ.தி.மு.க., தி.மு.க., கவுன்சிலர்கள் சேர்ந்து தான் அனுப்பிருக்காங்களாம்... எல்லாம் "கட்டிங்' சரியா வராதது தான்னு சொல்றாங்க பா...'' என்றார் அக்பர்பாய்.
Wednesday, July 13, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment