Saturday, July 16, 2005

ரசித்த பாடல் - பட்டினப் பிரவேசம்..

மீண்டும் ஒரு கண்ணதாசன் - விஸ்வநாதன் பாடல்..

இந்த பாடலுக்கு ஒரு நல்ல கதை உண்டு.. எம் எஸ் வி இந்த பாடலுக்கு மெட்டாக த்னனதில் (த ந ந ந ந என்று கூறுவது) மெட்டு கூறியதும், கவிஞர், இதுக்கெல்லம் பாடல் எழுத முடியாது என்று கூறிவிட்டாராம். உடனெ MSV நீங்கள் எழுதும் கடினமான வரிகளுக்கு நான் இசை அமைப்பதில்லையா அதுபோல இதற்கும் எழுதிதான் ஆக வேண்டும் என்றிருக்கிறார்.. இது அவர்களுக்குள் இருந்த அன்பின் விளைவான ஊடல். பிறகு சிறிது நேரம் கழித்து MSV அதே மெட்டை "ல லல லல ல ல" என்று பாடினாராம்.. உடனே கவிஞர்.. இந்த பாடலை எழுதியதாகக் கூறுவதுண்டு. இதே போல் ஒரு கதை வறுமையின் நிறம் சிவப்பிலும் உண்டு. இவர்களது நட்பு தொழில் கடந்தது.

அன்புடன்

விச்சு

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா (2)
தேன் நிலா எனும் நிலா என் தேவி எண்ணிலா (2)
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா (வான்)

மானில்லாத ஊரிலே சாயல் கண்ணிலா (2)
பூவிலாத மண்ணிலே ஜாடைப் பெண்ணிலா (வான்)

தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா (2) பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா (2)
தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா (வான்)

வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒலியிலா (2)
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா (2)
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா (வான்)

1 comment:

Chandravathanaa said...

நல்ல நல்ல பாடல்களையெல்லாம் பதிக்கிறீர்கள். நன்றி.

இதே போல லாலா என்று முடியும் பாடலொன்றுக்கு
மம்மூட்டியும் அமலாவும் நடித்துள்ளார்கள். படப்பெயர் மறந்து விட்டது.
பாடல்:கல்யாணத்தேன்நிலா காய்க்காத பால்நிலா...
கேட்பதற்கு இப்பாடல் போலவே இதமாக இருக்கும்.

வறுமையின் நிறம் சிவப்பில் வருவது
சிப்பியிருக்குது முத்தும் இருக்குது... பாடல்தானே.
மிக அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
இதைத்தான் கொப்பி பண்ணி இப்போ (பார்த்திபன்கனவு படமென நினைக்கிறேன்)
ஆலங்கிளி போல்... என்று ஒரு பாடலை சினேகா சிறீராமுக்குக் கொடுத்திருந்தார்கள்.