Wednesday, July 13, 2005

விசிலடித்த ரஜினியும் வியந்து போன ராஜாவும்

வழக்கமாக ரஜினி ஒரு நிகழ்சிக்கு வந்தால் பரபரப்பாகவே இருப்பார்.. அவரது பேச்சுக்கான வாய்ப்பு எப்போது வரும், பேசிவிட்டு ரசிகர்களிடமிருந்து தப்பி கிளம்பிப் போகலாம் என்றே இருப்பார். ஆனால் இந்த நிகழ்சியில் (திருவாசகம் சிம்பொனி வெளியீட்டு விழா) ஒரு பொறுமையான ரஜினி யைப் பார்த்தோம். அமர்ந்த இடத்திலேயே நகராமல் இருந்த அவர் சிரித்து, குரலெழுப்பி தன் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தார். முதல் சில பேர்களில் ஒருவராக வந்த ரஜினி கடைசி வரை இருந்தார்.

இத்தனைக்கும் மேலாக, வை கோ பேசும் போது (அவர் திருவாசகத்தின் வரிகளில் ஏன் ராஜா சிலவற்றை தவிர்த்தார் சிலவற்றை பயன் படுத்தினார் என்று ஆராய்ச்சி செய்து பேசினார்) ஒரு இடத்தில் ரஜினி தன் விரல் களை வாயில் வைத்து விசில் அடித்து விட்டார். ஆச்சர்யப் பட்ட இளையராஜா கூட திரும்பிப் பார்த்து உரக்க சிரித்தார்.

ரஜினி இப்படி செய்ததை அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த பங்குத்தந்தை வின்சென்ட் சின்னதுரை (தலைவர் , தமிழ் மையம்) வியந்து "இது விழாவில் ரஜினியின் ஈடுபாட்டைக் காட்டுகிறது. நான் கூட அவரிடம் -என்ன இள வயது நினைவுகள் திரும்புகின்றனவா என்று கேட்டேன்" என்று கூறினார்

நன்றி சென்னை ஆன்லைன். (என்னால் மொழிபெயர்க்கப்பட்டது)

No comments: