Wednesday, July 13, 2005

நான் ரசித்த பாடல்கள் -நிழல்கள்..

பாரதி ராஜாவின் திரைச் சித்திரம்.

இளையராஜா, வைரமுத்து இருவரும் அணிசேர்த்து அலங்கரித்த படம். நான்கு முத்தான பாடல்கள்.

வறுமையின் நிறம் சிவப்புடன் வெளியிடப்பட்ட வேலையில்லாத் திண்டாட்டத்தை விளக்கிய படம். .. கதை புரியவில்லை என்பதால் ஓடாத படம். ரசிகர்கள் திரைஅரங்கில் நின்று கதையை விளக்கினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

நிழல்கள் ரவி, சந்திர சேகர், ரோகிணி (என்று நினைக்கிறேன், விருமாண்டியில் பத்திரிகையாளராக வருவாரே).

ராஜா சொன்னார்.. புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே..இசைக்கென்று இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் -எனக்கே தான் எவ்வளவு உண்மை..

அன்புடன் விச்சு

நிழல்கள் திரைப்படத்தின் இனிய பாடல்கள்.

1. பொன் மாலை பொழுது
இது ஒரு பொன் மாலை பொழுது
வான மகள் நாணுகிறாள்வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன் மாலை பொழுது

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும் (2)
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூ மரங்கள் சாமரங்கள் வீசாதொ
(இது ஒரு பொன் மாலை...)

வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும் (2)
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
(இது ஒரு பொன் மாலை...)

2. மடை திறந்து... தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்...
நினைதது பலித்தது.......

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
கானம் விளைந்தது.. நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே...(2)
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் ... நான்.......(மடை திறந்து)

நேற்றின் அரங்கிலே... நிழல்களின் நாடகம்
இன்றின் எதிரிலே.. நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் (2)
இசைக்கென்று இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
-எனக்கே தான்...........(மடை திறந்து)

3. பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆகா கா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்..ம்ம். (பூங்கதவே தாள்)

திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.
(பூங்கதவே தாள்)

4. தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்(தூரத்தில்)
சுகம் நூறாகும் காவியமே..
ஒரு சோகத்தின் ஆரம்பமே…
இது உன்னை யெண்ணிப் பாடும் ராகம்..(தூரத்தில்)

வேய்ங்குழல் நாதமும் கீதமும்..ஆஆஆஅ..ஆஆஆஆ. ஆஆஅ…ஆஆஆஆஅ…ஆஆஆஆஅ (வேய்ங்குழல்)
மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே..
ஐயன் உன் தஞ்சம் என் நெஞ்சமே…
தினம் அழைத்தேன்… ப்ரபு உனையே..
ஆடும் காற்றிலே… புது ராகம் தோன்றுமா..(தூரத்தில்)

காதல் எனும் கீதம் பாடி
உருகும் ஒரு பேதையான மீரா..
(மீரா..மீரா..மீரா..மீரா..)
வேளை வரும் போது வந்து… காக்கும் கரம் காக்கும் என்று வீணை மீட்டும் தேவி உள்ளமே
தீராத ஆசையோடு.. வாடாத பூக்களோடு..
காலை மாலை பூஜை செய்து சேர்க்கவில்லையா
கனவு போல வாழ்வில் என்தன்
லால லால லால லால...
கவலை யாவும் மாற வேண்டும் (கனவு)
இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ
நாளும் எனை ஆளும் துணை நீயே என வாழ்ந்தேன்
மறவேன் மறவேன் மறவேன்
உன் நினைவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்
வரும் விழி தரும் அதில்
உறவுகள் தெரிவதும் ஒரு சுகம்
வானமும் மேகமும் போலவே...
வானமும் மேகமும் போலவே
நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் மறைந்த வானின் தனிமை
இன்று நான் கண்டதும் உண்மையே..
தினம் அழைத்தேன்.. ப்ரபு உனையே..
ஆடும் காற்றிலே.. புது ராகம் தோன்றுமா… (தூரத்தில்)

3 comments:

neyvelivichu.blogspot.com said...

test

Chez said...

வாவ்.. நிழல்கள் படத்துல பாடல்கள் ஒவ்வொன்றும் இனிமை தான்..! :-)

முரளிகண்ணன் said...

டெரிபிக் காம்பினேசன்