reading between the lines என்பதை இப்படி மொழி பெயர்த்திருக்கிறென். இனி கொஞ்சம் ஊடாடிப் படிப்போம்:
கீழே உள்ளது இன்று செய்தித்தாளில் வந்த செய்தி. (எல்லா கருத்துகளும் நகைச்சுவை உணர்போடு எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.. நான் யாருடனும் சொற்போர் புரிய விரும்பவில்லை)
."வெளியில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர் அல்ல' கவிஞர் பா.விஜய் நுõல் வெளியிட்டு கருணாநிதி பேச்சு!
சென்னை:""அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் அயோக்கியர்களும் கிடையாது; வெளியில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர்களும் கிடையாது,'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய 12 நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி நூல்களை வெளியிட கவிஞர் வாலியும், நடிகர் கமலஹாசனும் பெற்றுக் கொண்டனர். விழாவில் கருணாநிதி பேசியதாவது:
நடிகர் கமலஹாசனுக்கு "கலை ஞானி' என்றும், கவிஞர் வாலிக்கு "காவியக் கவிஞர்' என்றும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு "இசை ஞானி' என்றும், கவிஞர் வைரமுத்துவுக்கு "கவிப் பேரரசு' என்றும் நான் பட்டங்கள் வழங்கினேன். அந்த பட்டங்கள் நீடித்து, நிலைத்து பெயர் பெற்றன.
அப்படியா.. முதல் இரண்டயும் கேட்டதாகவே தெரியவில்லையெ..
அந்த வரிசையில் திறமையாக பாடல் எழுதும் பா.விஜய்க்கு, "வித்தகக் கவிஞர்' என்ற பட்டத்தை வழங்குகிறேன்.
இதாவது நிலைக்குமா.. கவர்ச்சியாக இல்லையே
விஜய் தனது நூலில் அரசியல்வாதிகளைப் பற்றி எழுதியுள்ளார். "அரசியல் வாதிகள் ஏன் பொய் பேசுகின்றனர் என்றால், அவர்கள் உண்மை பேசினால் மக்கள் நம்புவதில்லை' என்று கூறியிருக்கிறார்.
நாங்களும் உண்மைகள் பேசுவோம், அடுத்தவரைக் குறை சொல்லும் போது மட்டும். எல்லாரும் நம்புவதில்லை என்று கூற முடியாது.. என் கட்சி காரர்கள் நிச்சயம் நம்புவார்கள். இல்லாவிட்டால் இத்தனை பேர் ஓட்டு போடுவார்களா.
"அரசியல்' என்ற சொல் தகாத சொல் அல்ல ; வேண்டத் தகாததும் அல்ல.
அதை அகராதியிலிருந்து நீக்கிவிட்டால் நாங்கள் என்ன செய்வது.
அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் அயோக்கியர்களும் கிடையாது ; வெளியில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர்களும் கிடையாது. அரசியலிலும், வெளியேயும் சில "கறுப்பாடுகள்' இருக்கலாம். ஒட்டுமொத்தமாக எல்லாரையும் அயோக்கியர்கள் என்று கூறிவிட முடியாது.
பதவிக்கு வராத, வர முடியாத அரசியல் வாதிகள் பற்றிக் கூறுகிறேன். அவர்கள் அரசியலில் இருந்தாலும் அவர்கள் அயோக்கியர்கள் இல்லை. ஆனால் அவர்களிலும் சில கறுப்பாடுகள் உள்ளன. அதனால் அரசியலில் பதவிக்கு வெளியில் இருப்பவர்கள் எல்லரும் யோக்கியர்களும் இல்லை.
அதனால் அரசியல் என்ற சொல் தவறான சொல் அல்ல. திருக்குறளில் பொருட்பால் அதிகாரத்தில், 381ம் குறள் முதல் 630ம் குறள் வரை எல்லாமே அரசியல் சம்பந்தபட்ட குறள்கள் தான். அரசியல் என்ற சொல் தவறு என்றால் திருவள்ளுவர் எழுதியிருப்பாரா?
அவர் அப்படி எழுதி இருந்தால் திருக்குறளே பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகியிருக்குமே, மஞ்சள் துண்டிட்டு மூடிவைத்திருக்க மாட்டோமா?
டாக்டர்கள் சிலர் தவறு செய்கின்றனர் என்பதற்காக எல்லா டாக்டர்களுமே தவறு செய்பவர்கள் அல்ல.
தைலா புரத்தில் (இருப்பவர் கூட்டணியைப் பிரிக்க முற்படும் போது )மட்டும் தான் அப்படி.
சிலர் கொள்ளை அடிக்கின்றனர் என்பதற்காக எல்லாருமே கொள்ளைக்காரர்கள் என்று கூற முடியாது.
அம்மையார் மட்டும் தான் அப்படி இருக்கலாம்.. லாலு வைப்பற்றி அப்படி கூறலாமா? சர்காரியா கமிஷனுக்குப் பிறகு மக்களால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு என்னை முதலமைச்சர் ஆக்கப்பட்ட காரணத்தால் இன்று நான் அதைப் பற்றி பேச அருகதை உள்ளவனாகிறேன். (அம்மையாருக்கு இது பொருந்தது ஏனெனில் அவர் மக்களிடம் நான் கேட்டது போல் "இந்த தண்டனை போறாதா" என்று கேட்கவில்லை.)
நிர்வாகம் தெரியாமல் சிலர் இருக்கின்றனர் என்பதற்காக எல்லாருமே நிர்வாகம் தெரியாதவர்கள் என்று அர்த்தம் அல்ல.
இச்டாலின் நிர்வாகம் தெரியாவிட்டலும் கற்றுக்கொள்ளுவார்.. நான் கற்றுக்கொடுத்துவிட்டுத் தான் போவேன்..அதற்காக வைகோ விடம் தி மு க வை தந்துவிட முடியாது. வைகோ தம்பி தான் மகன் இல்லை.. ஆகவே சொத்தில் பங்கில்லை.
"நான்' என்ற வார்த்தை தவறா என்று கவிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். "நான்' என்று எப்போதும் கூறக் கூடாது, "நாம்' என்று தான் கூற வேண்டும் என்று பல ஆண்டாக நான் வலியுறுத்தி வருகிறேன்.
அம்மையார் இதை மறுத்துக் கூறினால் முரசொலியின் ஏடுகள் சான்று பகரும். உதவியாளர் புள்ளி விவரங்களைத் தயாராக வைத்திருக்கிறார்.
சுட்டிக் காட்டக் கூடிய இடத்தில் மட்டுமே "நான்' என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். "நான் செய்தேன், நான் இல்லா விட்டால் செய்ய முடியாது' போன்றெல்லாம் கூறக் கூடாது. இது அகம்பாவத்தையும், எதேச்சதிகாரத்தையும் ஏற்படுத்தி விடும்.
இதனை அம்மையார் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்பரும், பாரதிதாசனும் கூட "நாம்' என்ற வார்த்தையைத் தான் தெரிவித்துள்ளனர். எனவே "நாம்' நாமாகவே இருப்போம். அந்த உறுதியை மனதில் ஏற்போம்.
தமிழகத்தில் கூட்டணியை இச்டாலின் முதலமைச்சர் ஆகும் வரையாவது காப்போம்.
அப்பரைப் பற்றிப் பேசி இருப்பதை கவனிக்கவும். சங்கராச்சாரியாரும் (காப்பாற்றுவேன் என்று) இதைப் புரிந்து கொண்டுவிட்டார். அந்தணர்களும் மடத்தை நம்பும் மற்ற இனத்தவர்களும் (அம்மையார் செய்வது போல்) ப்ல்லாயிரம் கோவில் கட்டி குடமுழுக்கு செய்த வகையில் இதை ஏற்று தி மு க விற்கு வாக்களியுங்கள்.
(பாரதிதாசனைச் சேர்த்ததால் பகுத்தறிவுவை கொள்கையயும் விட்டு விட வில்லை)
Friday, July 01, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தமிழர்களின் 145 ஆண்டு கனவு நனவாகும் நேரத்தில் நெய்வேலித் தமிழரே, நீங்கள் இப்படி ஊடாடலாமா?ஒருநாள் ஓய்வெடுத்துவிட்டு மதுரை விழாப் பேச்சு வரிகளில் ஊடாடத் தயாராக இருங்கள்
அதெல்லாம் இருக்கட்டும் விச்சு,
உங்கள் வலைப்பதிவில் இதுபோல உள்ளதே :-((
"உங்களையும் சேர்த்து 0
பேர் இங்கே இருக்கிறார்கள்"
Post a Comment