இந்த கட்டுரையில், முன்னாள் BBC நிருபர் மார்க் துலி இந்து மத வெறியர்களால் வட இந்தியாவின் அயோத்தி நகரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நினைவு கூறுகிறார்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எல்லா பத்திரிகையாளர்களுமே எதோ ஒரு நிகழ்ச்சியை தவறாக கணித்திருப்பார்கள்.என்னுடைய பங்குக்கு நான் 1992ல் 1,50,000 இந்து தேசியவாத ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் அயோத்தியில் குழுமியிருந்த போது நடக்கவிருந்ததைத் தவறாகக் கணித்தேன்.
அவர்கள் ராமரின் பிறந்த இடமாக நம்பப்பட்ட இடத்தில் கோவில் கட்ட எண்ணியிருந்தார்கள்.
ஆர் எஸ் எஸ் வெறும் அடிக்கல் நாட்டுவதற்கான மதச் சடங்கு மட்டுமே நடக்கும் என்றும் மசூதியை எதுவும் செய்ய மாட்டோம் என்றும் உறுதி அளித்திருந்தார்கள்.
பின்னாளில் இந்தியாவின் துணைப் பிரதமரான திரு எல் கே அத்வானி, அப்போது எதிர்கட்சியிலும், பாபர் மசூதியை இடித்துக் கோவில் கட்ட விழைந்த இயக்கத்தின் தலைவராகவும் இருந்தார். அவர் பிரதம மந்திரிக்கு எந்த தவறும் நேராது என்று உறுதியளித்திருந்தார்.
போலிஸ் மற்றும் துணை ராணுவப் படைகள் அயோத்தியில் குவிக்கப்பட்டிருந்தது. பிரதமரின் ஆலோசகர்கள் மசூதி பத்திரமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிக்கலாமென்றும் பிரதமரிடம் கூறியிருந்தனர்.
ஆர் எஸ் எஸ் இயக்கம் கட்டுப்பாட்டிற்குப் பெயர் போனது. அந்த நற்பெயருக்கு இந்தச் சடங்கு "இப்பொதும் முடியுமா?" என சவால் விடுவதாக இருந்தது.
ஆனால் துவக்கத்திலேயெ இது அமைதியான ஒர் நிகழ்ச்சி அல்ல என்பது தெளிவாகிவிட்டது.
அது துவங்கும் முன்னர் நான் அருகில் மசூதியை நோக்கிய, தொலைபேசி வசதியுள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் அமர்ந்து செய்தி சேகரிப்பதற்காக இதனைப் பார்த்திருந்தேன்.
அந்த காலகட்டத்தில் செயற்கைக்கோள் தொலைபேசிகள் இந்த அளவு இருக்க வில்லை.
இந்துக்களின் நீண்ட சடங்குகளை நான் பார்த்துக்கொண்டிருந்த போது தலையில் மஞ்சள் துணி அணிந்த இளைஞர்கள் வேலித்தடுப்பை உடைத்துக்கொண்டு சடங்கு நடந்த இடத்திற்குள் புகுந்த காட்சியை படம் காட்டுவது போல என் வார்த்தைகளால் தொலைக்காட்சியின் படத்துக்கு ஈடாக விவரிக்க முடியுமா என்று வியந்து கொண்டிருந்தேன்.
தொலைக்காட்சி குழுவினர் தான் அவர்களது குறி. அவர்களை கழிகளால் தாக்கி, கீழே தள்ளி அவர்களது படப்பிடிப்புக் கருவிகளை உருட்டிக் கொண்டு சென்றனர். இது மசூதியின் மீது நடக்க விருந்த தாக்குதலுக்கு கட்டியம் கூறுவது போல இருந்தது.
துப்பாக்கி சூடு நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த போலிசாரை நோக்கி கோஷமிட்டுக் கொன்டிருந்த இந்துக்கள் அலை அலையாக, மசூதி நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
திடீரென்று இரண்டு இளைஞர்கள் மசூதியின் கோபுரத்தின் மீதேறி அதை உடைக்கத்தொடங்கியதைப் பார்க்க முடிந்தது.
அது தான் கடைசியாக நான் மசூதியின் கோபுரத்தைப் பார்த்தது. அந்தக் கும்பல் தொலைபேசி தொடர்புகளை துண்டித்து விட்டதால் நான் செய்தி தருவதற்க்காக அருகிலுள்ள பைசா பாத் நகரத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று.
நான் அயோத்யா திரும்பியதும் கும்மாளமிட்டுக்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிராக அசிங்கமான கோஷங்களிட்டுக் கொண்டு ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் குறுகிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தார்கள்.
நான் காரை விட்டு இறங்கியதும் கோபமாக என்னைச் சூழ்ந்து கொண்ட ஒரு கும்பல் என்னை ஒரு பழைய கோவிலில் அடைத்து வைத்தனர்.
என்னை விடுதலை செய்த போது, இருட்டியிருந்தது. மசூதி முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டிருந்தது.
இதுபோல பல நிகழ்ச்சிகளை இந்தியாவில் நான் பார்த்திருந்தாலும், BBC க்கு செய்தியாகத் தொகுத்ததில் ஒரு நிகழ்ச்சி பற்றி கூறும்படி கேட்ட போது, இந்த நிகழ்ச்சியையே தேர்ந்தெடுத்தேன்.
ஏனெனில் இது "இந்தியர்கள் இப்படி செய்வார்கள் இப்படி செய்ய மாட்டார்கள்" என்ற எனது எண்ணத்தைப் பொய்ப்பித்த நிகழ்ச்சி.
இந்தியப் பண்பாடு இயற்கையிலேயே எல்லா வற்றையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. பல நூற்றாண்டுகளாக பல்வேறு மதஙளை தன்னகத்தெ ஏற்றுக்கொண்டு வாழ வைத்திருக்கிறது.
இந்துக்கள் பலகாலமாக கடவுளை அடைய பல வழிகள் உண்டு என்று ஒத்துக்கொண்டவர்கள் மற்றும் ஒரு 20ம் நூற்றாண்டு அறிஞர் சொன்னது போல "மற்றா மதஙளின் விட்டுக்கொடுக்கத கொள்கை ரீதியான உறுதிப்பாடு (பிடிவாதம்) இந்துக்களுக்கு அதிர்ச்சி ஊட்டுவதாகவும், புரிந்துகொள்ள முடியாததாகவும் இருந்தது"..
அதனால் பெருவாரியான இந்துக்களைஉடைய இந்தியா மதவெறியால் பாதிக்கப்படாத இடமாக இருக்க வேண்டும். உலகத்தின் பல்வேறு நாடுகளில் பல மத அடிப்படையில் சேர்ந்து வாழ முடியாத மக்களுக்கு இந்தியாவின் பல மதஙகள் இணைந்த சமுதாயம் ஒரு தெளிவான உதாரணமாகத் திகழ வேண்டும்.
Wednesday, July 06, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment