Thursday, July 14, 2005

ரசித்த பாடல் - அவள் அப்படித்தான்

உன்னொரு நல்ல பாடல் தந்து மனதைத் தொட்ட ராம்கிக்காக (http://stationbench.blogspot.com ) இந்த இரு பாடல்களும்.

ருத்ரையாவின் கறுப்பு வெள்ளை படம்.. கமல் நடித்தது.

பன்னீர் புஷ்பஙகள் படத்தின் பெயர் இந்த பாடலில் இருந்து தான் வைக்கப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறென்.

கமல் பாடிய முதல் பாடல் இது.

இவ்வளவு அழகாக கருத்து சொல்லும் இந்தப் பாடலைப்பாடிய கமலின் வாழ்க்கையில் வந்த பெண்கள் எல்லாம் இந்த பாடலை நினைப்பார்கள்..
ஆண் கொண்ட தாகம் தீர்க்கின்ற தேகம் பெண்ணென்ற ஓரினமோ... இது யார் பாவம்...
ஆண் செய்த சட்டம் அவர் போட்ட வட்டம் அதற்கென்று பெண்ணினமோ... இது யார் சாபம்...


அன்புடன் விச்சு

1.
பன்னீர் புஷ்பங்களே...
கானம் பாடு...
உன்னைப்போலே யென்தன் உள்ளம் ஆடுது...
புது தாளம் தொட்டு...ஓ....
புது ராக மெட்டு...

ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ...
இது யார் பாவம்...
ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதற்கென்று பெண்ணினமோ...
இது யார் சாபம்...
நியாயங்களோ பொதுவானது...
புரியாமல் போனது....(பன்னீர்)

பாஞ்சாலி வாழ்ந்த
பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை...
நிஜ வாழ்க்கையிலே...
பலபேரைச் சேரும்
பரன்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இன்த போமியிலே...
நியாயஙளோ பொதுவானது...
புரியாமல் போனது...

பன்னீர் புஷ்பஙளே...
கானம் பாடு...

2.

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்.. வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..

வாழ்வென்பதோ கீதம்..
வளர்கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது


உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே..

6 comments:

neyvelivichu.blogspot.com said...

நீங்கள் சொன்னது சரி தான் சம்மி,

ஒரு குழப்பம்.. உங்களுக்காக அந்த பாடலைத் தேடிப்பார்த்தேன் கிடைக்க வில்லை. யாருக்காவது கிடைத்தால் பதிவு செய்யுங்கள்

கருத்துக்கு, திருத்தத்திற்கும் நன்றி

அன்புடன் விச்சு

Chandravathanaa said...

அருமையான பாடல்கள்

ஜென்ராம் said...

//உன்னொரு நல்ல பாடல் தந்து மனதைத் தொட்ட ராம்கிக்காக (http://stationbench.blogspot.com ) இந்த இரு பாடல்களும்.//
நன்றிகள் பற்பல விஷிதிகிங்,
உங்களுக்காக இந்த வரிகள்..நினைவில் நின்ற வரையில்..
ஒரு காதல் தேவதை..
"கடல் நீலம் கொண்ட கூந்தல் கண்ணா நீ பூச்சூட
மடல் கொண்ட வாழை தடம் தந்த தேகம் மன்னா நீ கொண்டாட
மாமல்லன் என்னைக் கொஞ்சும் சிவகாமி நீயாக
காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக
மேலாடையாய் நான் மாறவோ
கூடாதென நான் கூறவோ
வா நெருங்கி வா
ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ ரதி தேவி அம்சமோ"

பத்மா அர்விந்த் said...

விச்சு:
எனக்கு பிடித்த படம், பாடல்களை நினவு படுத்தியமைக்கு நன்றி. நீங்கள் எப்போது நெய்வேலியில் இருந்தீர்கள்.

neyvelivichu.blogspot.com said...

thanks padma for the comments.. though i was born in Kerala.. i was in neyveli between 67 to 94..(after 84 on and off)..

why are u asking.. were you in neyveli too..

anbudan vichu

பத்மா அர்விந்த் said...

Vichu
My brother was at NLC for 86-89. He was an engineer. I had visited him many times. My unlce lived there for almost 40 years.