Saturday, July 30, 2005

நம்பிக்கை 5

நம்பிக்கை தோற்பதில்லை

தோல்வியும் துன்பமும் தொடர்கதை ஆனதால்
தோல்வியைத் தோண்டினேன் காரணம் தேடினேன்
அரைகுறை முயற்சியும் அவநம் பிக்கையும்
வெற்றியின் பாதையில் தடைகளாய் நின்றன.

துவண்ட மனதினைத் தூக்கி நிறுத்தினால்
தவறினை நீக்கினால் தலைவிதி மாறுமே
நம்பினோர் பாதையில் தடைகளே இல்லையே
வெற்றிச் சிகரங்கள் எட்டிடும் தூரமே.

3 comments:

குழலி / Kuzhali said...

நம்பிக்கை கவிதைகள் அசத்துறிங்க

குழலி பக்கங்களுக்கு இணைப்பு கொடுத்திருக்கும் அண்ணாத்தே விச்சு வாழ்க...

நானும் ஒன்று எழுதியுள்ளேன் நம்பிக்கை தொடர்பாக
கருவாகி உருவாகி ஹி ஹி ஒரு வெளம்பரம் தான்

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

நம்பிக்கை நல்ல கவிதை
//துவண்ட மனதினைத் தூக்கி நிறுத்தினால்
தவறினை நீக்கினால் தலைவிதி மாறுமே//

தவறுகளோ அல்லது தோல்விகளோ இல்லாமல் ஒருவன் முன்னேற முடியாது.

neyvelivichu.blogspot.com said...

nanRi kuzhali,

ungal kavithaiyum miga nanRaaga irukkirathu.

kangs,

karuththukku nanRi. thoolvigaL veRRiyin padikkattugaL, thavaRugaL thiruththappadumpoothu..

anbudan vichchu