Wednesday, July 13, 2005

அன்னியனும் மெய்ப்பொருளும்

அன்னியன் விமர்சனங்களைப் படிக்கும் போது ஒரு திருக்குறள் நினைவுக்கு வருகிறது.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.

அன்னியன் படம் பற்றி வந்த விமர்சனங்களில் பெரும்பாலும் இனத்தைப் பற்றியோ, திரைப்பட தொழில் நுட்பங்களைப்பற்றியோ , வடமொழி பற்றியோ வன்முறை பற்றியோ தான் விவாதிக்கப்படுகிறது.

இது போல பல தவறுகள் நாட்டில் நடக்கின்றன, இது மாறவேண்டும் என்பது தான் இந்த படத்தின் முக்கிய கருத்தாக எனக்குப் பட்டது. இதை யாருமே கண்டு கொள்ளாததைப்பார்க்கும் போது, நிஜமாகவே இந்த கருத்து மக்களைப் போய் சேரவில்லையா என்ற கேள்வி எழுகிறது? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

திரைப்படத்தில் பாடல் காட்சியில் தலைவனும் தலைவியும் மரத்தைச் சுற்றி ஓடி காதல் செய்வது நிஜ வாழ்க்கையில் எவ்வளவு சாத்தியம் என்று எந்த படத்திற்கான விமர்சனத்திலும் படித்ததாக நினைவில்லை.

கருட புராணமும், பிராமண குடும்பமும் கதையமைப்பைச் சார்ந்தது. மருந்தைப்பற்றி பேசாமல் அது அடைத்து வந்த அட்டைப் பெட்டியையும் குப்பியையும் மேல் தடவியிருந்த இனிப்பையும் பற்றிப் பேசுகிரோமே? கருத்தை விட்டு அதைச் சொன்ன விதத்தை பற்றிப் பேசுவது பலன் தருமா.

மெய்ப்பொருளைக் கண்டோமா.. இல்லை காண விருப்பமில்லையா..

அன்புடன்
விச்சு

திரையில் திணறும் தமிழ் -கோவி.லெனின்

இதோ "அந்நியன்' வந்துவிட்டான் அநியாயம் செய்பவர்களை அழிப்பதற்கு! இயக்குநர் ஷங்கர் படங்களில் சமூகத்தைப் பற்றிய பார்வை இருக்கும்.கொஞ்சம் ஹாலிவுட் பாணி, கொஞ்சம் அறிவுஜீவிகளின் ஒத்துழைப்பு, கொஞ்சம் மக்கள் மனநிலை இவற்றின் கலவையாகத் தயாரிக்கப்பட்ட லென்ஸ் வழியே சமூகத்தைப் பார்ப்பது ஷங்கர் வழக்கம்.

""ஸ்கூலுக்குப் போனா மார்க் இருந்தாலும் சேர்க்க மாட்டேங்குறான். டொனேஷன் கேட்குறான்'' என்பது நடுத்தர வர்க்கத்திருந்து எழும் குமுறல். ""பஸ் கண்டக்டர் சில்லறை கொடுக்க மாட்டேங்குறான். யாராவது ஒரு டிரைவரையோ, கண்டக்டரையோ அடிச்சிட்டா மாநிலம் முழுக்க பஸ் ஸ்டிரைக் பண்றாங்க'' என்பது அவசரமாக அலுவலகம் செல்லும் அனைவருக்கும் இருக்கும் கோபம்.

""இந்த கவர்மெண்ட்டு ஆஸ்பத்திக்குப் போனா டாக்டரு, நர்சு, கம்பவுண்டரு, ஆயா எல்லாருமே காசு புடுங்குறாங்க. காசு கொடுத்தாதான் உயிருக்கு உத்தரவாதம். இல்லேன்னா பொணமாதான் வீட்டுக்குத் தூக்கிட்டு வரணும்'' இது ஏழை மக்களின் வேதனை. இவற்றை திரை மூலம் காட்டி, அதிரடியாகத் தீர்வு சொல்வது ஷங்கர் சூத்திரம்.

"நாம நினைச்ச மாதிரி ஒருத்தன் கிடைத்திருக்கான். இப்படி ஒருத்தன் இருந்தால் நாட்டிலே எந்த அக்கிரமமும் நடக்காது' என்று பார்வையாளர்களின் மனதில் ஒரு பிம்பத்தை அவர் பதிய வைத்துவிடுவார். அனால், அந்தப் பிம்பம் திரையில் செய்வது நடைமுறையில் சாத்தியமா என்பதை ரசிகர்களிடமே விட்டுவிடுவார்.

அந்நியனில் அவர் கையாண்டிருப்பது, அக்கிரமம் செய்கிறவனுக்கு "கருடபுராணம்' என்கிற சமஸ்கிருத ஏட்டில் சொல்லப்பட்டிருக்கிறபடி தண்டனை என்பதுதான்.மரண தண்டனையையே ரத்து செய்ய வேண்டும் என்று உலகின் எல்லா நாடுகளிருந்தும் மனித உரிமைக் குரல்கள் தோன்றியுள்ள நிலையில், கருடபுராணத்தைத் தோண்டியெடுத்துப் புரட்டி அதன்படி தண்டனை என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. எனினும், பார்க்கும் ரசிகர்கள் பிரமிக்கும் வகையில் காட்சிகளை அமைத்து, சமஸ்கிருத மந்திரத்தை முன்னிலைப்படுத்துவதைச் சமர்த்தாகச் செய்துவிட்டார் ஷங்கர்.

அநியாயம் இல்லாத ஆட்சி அமைவதற்கு சமஸ்கிருதம்தான் வழி சொல்யிருக்கிறது என்பது போன்ற தோற்றத்தை இது உண்டாக்குகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்ததைய தமிழ் மறையான திருக்குறளில் 1330 குறட்பாக்கள் இருக்கிறதென்றால், அதில் 381ஆவது குறளிருந்து 630ஆவது குறள் வரை 250 குறட்பாக்கள் அரசியலைப் பற்றித்தான் சொல்கின்றன. அதன்பிறகும் நாடு, அமைச்சு, அரண், படைமாட்சி இவை பற்றியெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. தவறு செய்யும் ஆட்சியாளர்கள் எழைகளின் கண்ணீருக்கு பதில் சொல்லியகவேண்டும் என்பதுதான் ஷங்கர் படக் கதைகளின் மைய இழை. அதைத்தான் திருக்குறளும்,"

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை'

என்கிறது.

தமிழில் எத்தனையோ அரசியல் சூத்திரங்கள் இருக்கும் நிலையில், தமிழ்த் திரையுலகப் படைப்பாளிகள் மேற்கத்திய நாடுகளிருந்தும், சமஸ்கிருதத்திருந்தும் "சுடுவது' நீண்டகாலமாகவே இருந்துவரும் ஒரு நாகரீகம்.

நன்றி சினிக்கூத்து

1 comment:

enRenRum-anbudan.BALA said...

//தமிழ்த் திரையுலகப் படைப்பாளிகள் மேற்கத்திய நாடுகளிருந்தும், சமஸ்கிருதத்திருந்தும் "சுடுவது' நீண்டகாலமாகவே இருந்துவரும் ஒரு நாகரீகம்.
//
nalla kUththu ! pOngka :)