இரு காதல் கவிதைகள்
நண்பருடன் பேசும்போது நம்பிக்கை கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெறும் கவிதை பற்றி பேச்சு வந்தது..
பின் கவிதை எப்பொழுது எழுதத்தொடங்கினோம் என்று..
பின் அது தொடர்பாக இரு கவிதைகளும் வந்தன.
இரண்டும் ஒரே தலைப்பில்
காதல் கவிதை
1. மனைவியைக் காதலி
சண்டைதான் வரும்
என்ன நம்பிக்கை(!).
2. காதலிக்கும் போது எழுதினேன் கவிதைகள்;
காதலியை மணந்தேன்
இப்போதொ எழுதுவதெல்லாம் காசோலையில் மட்டும்.
அன்புடன் விச்சு
Saturday, July 30, 2005
நம்பிக்கை 5
நம்பிக்கை தோற்பதில்லை
தோல்வியும் துன்பமும் தொடர்கதை ஆனதால்
தோல்வியைத் தோண்டினேன் காரணம் தேடினேன்
அரைகுறை முயற்சியும் அவநம் பிக்கையும்
வெற்றியின் பாதையில் தடைகளாய் நின்றன.
துவண்ட மனதினைத் தூக்கி நிறுத்தினால்
தவறினை நீக்கினால் தலைவிதி மாறுமே
நம்பினோர் பாதையில் தடைகளே இல்லையே
வெற்றிச் சிகரங்கள் எட்டிடும் தூரமே.
தோல்வியும் துன்பமும் தொடர்கதை ஆனதால்
தோல்வியைத் தோண்டினேன் காரணம் தேடினேன்
அரைகுறை முயற்சியும் அவநம் பிக்கையும்
வெற்றியின் பாதையில் தடைகளாய் நின்றன.
துவண்ட மனதினைத் தூக்கி நிறுத்தினால்
தவறினை நீக்கினால் தலைவிதி மாறுமே
நம்பினோர் பாதையில் தடைகளே இல்லையே
வெற்றிச் சிகரங்கள் எட்டிடும் தூரமே.
Friday, July 29, 2005
மீண்டும் நம்பிக்கை
யாரிவர் என் கவிதை பொத்தானை தட்டிவிட்டவர்..
அன்புடன் விச்சு
மீண்டும் நம்பிக்கை
மண்ணில் விழுந்த விதைகளே மரங்களாய்
இலைகளாய் கனிகளாய் விதைகளாய் விறகுமாய்.
மனதில் விழுந்த நம்பிக்கை வெற்றியாய்
செயல்களாய் புதுமையாய் முயற்சியும் முடிவுமாய்
கண்ணில் விழுந்த காட்சிகள் வரைஞனின்
வண்ணக்குழம்பிலெ உலகமாய் உண்மையாய்
என்னில் எழுந்த சிந்தனை வாழ்க்கையில்
பொன்னிலே பொறித்திடும் சாதனை செயல்களாய்

Thursday, July 28, 2005
இவருக்கும் பரிசு உண்டா..
இவருக்கும் பரிசு உண்டா..
கண்ண தாசன் கவிதை இது..
காலத்தை வென்றது..
உண்மை நிலைசொல்லும்
உயரிய வார்த்தைகள்.
அன்புடன் விச்சு
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை இதில்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயன்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

நம்பிக்கை 3
நம்பிக்கை 3
கண்ணில்லதவர் பாடிப் பிழைத்தார்
காலில்லதவர் கடையொன்றமைத்தார்
சொல்லில்லா ஊமை செவிகேளா மனிதர்
கையாலே பேசி வாழ்வைப் பிழைத்தார்
ஏழ்மையும் துன்பமும் வாழ்க்கையை நிறுத்துமோ
சோம்பி திரிந்திடல் வாழ்விற்கடுக்குமோ
உடலிலே ஊனம் உள்ளத்தில் இல்லை
உன்னைநீ நம்பினால் வானமே எல்லை.

நம்பிக்கை 2
நம்பிக்கை கவிதை 2.
நம்பிக் கைதந்த நாயகி ஒருபுறம் - என்மேல்
நம்பிக்கை தந்த குழந்தைகள் ஒருபுறம்.
நம்பிக்கை வளர்த்த பெற்றோர் ஒருபுறம் -தினம்
நம்பித் தோள்தரும் தோழர் ஒருபுறம்..
இவரென்னை நாடி வந்தாரோ இல்லை
அவரை நம்பிநான் நின்றேனோ வாழ்வில்
நம்பிக்கை போனால் நானென்ன நீயென்ன
நம்பினோர் வாழ்க்கையில் நாளும் வசந்தமே

தினந்தோறும் அல்லது நம்பிக்கையே வாழ்க்கை
நம்பிக்கை கவிதைப் போட்டிக்கு http://mentalcentral.blogspot.com/2005/07/blog-post_112192738039102868.html என் ஆக்கம்.. சுத்தமாக நேரம் இல்லை. வலைபதிந்து ஒரு வாரம் ஆகிறது.. நண்பர் ரங்கனாதன் சொன்னார்.. உன்னால் முடியும் என்று நம்பிக்கை வை.. எழுத நேரம் கிடைக்கும் என்று.. இதோ நான் எழுதியது..
வேலை அழைக்கிறது.
அன்புடன் விச்சு
தினந்தோறும் அல்லது நம்பிக்கையே வாழ்க்கை
காலையில் விழித்தேன் நல்ல நாள் இதுவென்று
அவசரம் அவசரம் ஆயிரம் அவசரம்
குளித்து துடைத்து கண்டதை உடுத்தி
முட்டி மோதி பேருந்து பிடித்து
அலுவல் முடித்தால் மீண்டும் ஓட்டம்
வாழ்க்கை வழிமுறை மாறுமென்ற கனவுகள்
நம்பிக்கை மனதிலே நல்லநாள் விரைவிலே
படுக்கையில் விழுந்தேன் நாளை நல்ல நாள்
வேலை அழைக்கிறது.
அன்புடன் விச்சு
தினந்தோறும் அல்லது நம்பிக்கையே வாழ்க்கை
காலையில் விழித்தேன் நல்ல நாள் இதுவென்று
அவசரம் அவசரம் ஆயிரம் அவசரம்
குளித்து துடைத்து கண்டதை உடுத்தி
முட்டி மோதி பேருந்து பிடித்து
அலுவல் முடித்தால் மீண்டும் ஓட்டம்
வாழ்க்கை வழிமுறை மாறுமென்ற கனவுகள்
நம்பிக்கை மனதிலே நல்லநாள் விரைவிலே
படுக்கையில் விழுந்தேன் நாளை நல்ல நாள்
Wednesday, July 20, 2005
ரசித்த பாடல் இதயக் கோவில்
ராஜாவின் இசையில் அவர் அண்ணன் பாவலர் வரதராஜன் எழுதிய பாடல். (அவர் இறந்த சிலகாலம் கழித்து பயன்படுத்தப்பட்டது). மணிரத்னம் இயக்கிய இரண்டாவது படம். சத்திய ராஜ் நடித்த பகல் நிலவு தான் முதல் என்று நினைக்கிறேன்.
மற்ற பாடல்களும் இனிமை தான்.. முடிந்தால் பின்னர் தருகிறேன்.
வழக்கம் போல பாலு கலக்கிட்டார்.
அன்புடன் விச்சு
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நாவரண்டு பாடுகின்றேன் (2)
..................வானுயர்ந்த..........................
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை
....................வானுயர்ந்த.........................
ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி
....................வானுயர்ந்த............................

Tuesday, July 19, 2005
கடவுள் இல்லை
(பத்மா அரவிந்துக்கு நட்சத்திரமானதற்கு பாராட்டுகளுடன்.)
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்
ஏழை சிரித்தால் இறைவனைக் காண காத்திருந்தேன்
ஏழை சிரிக்கவில்லை, இறைவனைக் காணவில்லை
ஏழையை சிரிக்கச் சொன்னால் ஏழை சொன்னான்
எங்கள் வாழ்க்கை தான் சிரிப்பாய் சிரிக்கிறதே
இதில் நான் வேறு சிரிக்கணுமா?
பத்மா அரவிந்தின் வலைப்பதிவைப் (http://www.domesticatedonion.net/blog/thenthuli/?item=560)படித்ததும் வந்த சிந்தனை..(இது கவிதையா என்று தெரியவில்லை)

காதல் விலங்கு (பாகம் 1)
நீதிமன்ற வாசலில் ஒரு பெரிய கூட்டம். எல்லார் கண்களும் ஒரே விஷயத்தை எதிர் பார்த்து காத்திருக்கின்றன. ஜானகிக்கு என்ன தண்டனை கிடைக்கும்? தீர்ப்பு வழங்கப் படுவதற்கு முன் ஜானகி யார்? அவளுக்கு எதற்கு தண்டனை என்று பார்ப்போம்.
************************
இனிமையான பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ஜானகி கம்பியில் மாட்டியிருந்த உடைகளை அளைந்து கொண்டிருந்தாள்.. எதை உடுத்துவது என்று முடிவு செய்ய முடியவில்லை. உடையை முடிவு செய்ய முடியலையா? எதையுமே முடிவு செய்ய முடியலயா என்று மனம் தவித்துக் கொண்டிருந்தது.
சந்துரு ரொம்ப நல்லவன் தான்.. 21 வருடமாகத் தெரியும். பக்கத்து தெருவில் தான் இருக்கிறான். அதே பள்ளி , கல்லூரியில் தான் இருவரும் படித்தார்கள். அவன் குடும்பத்தில் உள்ள அத்தனை பேர்களையும் நன்றாகத் தெரியும்.. அவர்களுக்கும் இவளை நன்றாகத்தெரியும். சந்துருவுக்கு எதிலும் குறைவில்லை.. 6 அடிக்கு மேல் உயரம்..எம் பி ஏ படித்துவிட்டு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை.. அப்பாவுக்கு நல்ல வியாபாரம்.. ஒரு சகோதரி மட்டும் தான். பள்ளி நாட்களிலேயே இருவரும் சேர்ந்து பழகத் தொடங்கி காதலாக மாறி இன்று வேணுமா என்ற கேள்விக்கு வந்திருக்கிறது.
ஜானகிக்கும் எந்த குறையும் இல்லை.. அவன் படித்த அதே கல்லூரியில் தான் அவளும் எம் பி ஏ படித்தாள். நல்ல அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாள். மூன்று தோழிகள் சேர்ந்து ஒரு விளம்பர நிறுவனம் நடத்தி வந்தார்கள். சென்ற வருடம் வேகமாக வளரும் 100 சிறு நிறுவனங்களில் அவர்களது நிறுவனமும் இடம் பிடித்திருந்தது.
இன்றைக்கு சந்துரு அவளை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். பல நாட்களாக முடிவு செய்த விஷயம் தான்.. போன வாரம் அவன் இவள் வீட்டுக்கு வந்திருந்தான். திருமணம் பற்றி பேசினார்கள். அதிலிருந்து தான் இந்த தயக்கம், குழப்பம் எல்லாம்.
இந்த குடும்பம் என்ற மாயையில் சிக்க வேண்டுமா.. குழந்தை வந்தால் தொழில் என்ன ஆகும்.. தினக் காப்பகத்தில் குழந்தையை விட வேண்டியது தானா.. அதுவும் என்னைப் போலவே அப்பா அம்மா பாசத்துக்காக ஏங்குமா.. அது போல ஒரு கஷ்டம் தான் தரப் போகிறோம் என்றால் குழந்தை எதற்கு.. திருமணம் செய்தால் குழந்தை பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். சமூகத்தின் கண்ணில் திருமணமாகி குழந்தை இல்லாமல் இருந்தால் எதோ பிரச்சினை என்பது போலப் படும். சந்துருவிடம் இதைச் சொன்னால் "நதி வரும் போது பாலத்தைப் பற்றி யோசி" என்று சொல்கிறான்.
திருமணம் ஒரு சிக்கல் என்று சாராவின் திருமணம் நிரூபித்தது. சாரா, ஜானகியின் கல்லூரித்தோழி. தோழிகளாகச் சேர்ந்து நிறுவனம் தொடங்கியதும் அதில் இருந்த நாலாவது நபர். கல்லூரி முடிந்ததும் ஜேம்ஸை திருமணம் செய்து கொண்டாள். குடும்பத்தையும் தொழிலையும் சேர்ந்து கவனிப்பது கஷ்டமாக இருந்தது. ஜேம்ஸ் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தொழில் முறையாக தேவை ஏற்பட்டது. மனைவியையும் உடன் அழைத்துச் செல்ல அனுமதித்தனர். ஆனால் சாராவுக்கு தொழிலை விட்டு போவதா என்று ஒரு தயக்கம்.. கொஞசம் நாள் இருவரும் வெவ்வேறு நாடுகளில் இருந்தனர். 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்துக் கொண்டனர். ஜேம்ஸ்க்கு மனைவி உடனிருக்க வேண்டும் என்று தோன்றத் தொடங்கியது.. நீ என்னுடனேயே வந்துவிடு.. தொழில் எல்லாம் வேண்டாம் என்று கூறினான். இது ஒரு பெரிய பிரச்சினை ஆனது.. பிறகு, எல்லாரும் அறிவுரை கூறிய பின் சாரா அவளுடைய விருப்பங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு ஜேம்சுடன் சென்றுவிட்டாள்..
அவள் இடத்தில் நான் இருந்தால் என்று ஜானகி அடிக்கடி மனதுக்குள் பெரிய வாக்கு வாதமே நடத்துவாள். அந்த வாக்கு வாதங்களின் விளைவுதான் இந்த மன உளைச்சல். இந்த சந்துரு வைத் திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரச்சினை வந்தால் விட்டுவிட்டு போய்விட முடியாது. உடைந்து போய் விடுவான்.. இப்போதே எல்லா விஷயங்களிலும் விட்டுக்கொடுத்து விடுவான். ஆனால் அவர் ஒரு குழந்தைப் பைத்தியம். இப்போதே 4 குழந்தைகள் தேவை என்று தேவைப்பதிவும் செய்தாயிற்று.
தொலைபேசி கிணுகிணுத்தது. சந்துரு தான்.. "10 நிமிஷத்தில் தயாராக இரு போகலாம்".. ஜீன்ஸ் தான் போடுவேன், இந்திய உடை கிடையாது என்று சொன்னதும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டான். இதை வைத்து ஒரு சின்ன சண்டை போட்டு வரமாட்டேன் என்று சொல்லலாம் என்றால் என் திட்டத்தில் மண்...உனக்கு எது சரியோ அதைச் செய் என்று பொத்தாம் பொதுவில் கூட சொல்ல வில்லை. ஜீன்ஸ் போட்ட இளவரசியா.. இன்னிக்கி எனக்கு ராஜ யோகம் என்று சொன்னான். இவனை என்ன செய்ய.. என் உதவிக்கு யாராவது வாருங்களேன். ********************************************
கொஞ்சம் மெது மெதுவாக (நேரம் கிடைக்கும் பொது) தொடரும்
இது என் முதல் கதை. தொடரவேண்டுமா என்றும் பின்னூட்டமிட்டும் நட்சத்திரங்களை சொடுக்கியும் சொல்லுங்கள்

Saturday, July 16, 2005
ரசித்த பாடல் - பட்டினப் பிரவேசம்..
மீண்டும் ஒரு கண்ணதாசன் - விஸ்வநாதன் பாடல்..
இந்த பாடலுக்கு ஒரு நல்ல கதை உண்டு.. எம் எஸ் வி இந்த பாடலுக்கு மெட்டாக த்னனதில் (த ந ந ந ந என்று கூறுவது) மெட்டு கூறியதும், கவிஞர், இதுக்கெல்லம் பாடல் எழுத முடியாது என்று கூறிவிட்டாராம். உடனெ MSV நீங்கள் எழுதும் கடினமான வரிகளுக்கு நான் இசை அமைப்பதில்லையா அதுபோல இதற்கும் எழுதிதான் ஆக வேண்டும் என்றிருக்கிறார்.. இது அவர்களுக்குள் இருந்த அன்பின் விளைவான ஊடல். பிறகு சிறிது நேரம் கழித்து MSV அதே மெட்டை "ல லல லல ல ல" என்று பாடினாராம்.. உடனே கவிஞர்.. இந்த பாடலை எழுதியதாகக் கூறுவதுண்டு. இதே போல் ஒரு கதை வறுமையின் நிறம் சிவப்பிலும் உண்டு. இவர்களது நட்பு தொழில் கடந்தது.
அன்புடன்
விச்சு
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா (2)
தேன் நிலா எனும் நிலா என் தேவி எண்ணிலா (2)
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா (வான்)
மானில்லாத ஊரிலே சாயல் கண்ணிலா (2)
பூவிலாத மண்ணிலே ஜாடைப் பெண்ணிலா (வான்)
தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா (2) பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா (2)
தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா (வான்)
வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒலியிலா (2)
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா (2)
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா (வான்)

Friday, July 15, 2005
கடலுக்கு வேண்டுகோள்
காற்றும் மழையும் கொஞ்சமோ - அலை
கடலும் மீண்டும் பொங்குமோ
பாடு பட்டு வேர்வை சிந்தி தினம்
சேர்த்த செல்வம் தங்குமோ.
உறவு முறைகளை காணுமே - நாளைய
உணவுக்கு வழியும் வேணுமே
நாளை என்பது இருக்குதா இல்லை
செத்து நீரில் மிதக்குதா
கடலை அண்டி வாழ்கிறோம் பெற்ற
தாயை போல காண்கிறோம்
நீயே உந்தன் பிள்ளையை ஒரு
பேயாய் மாறிக் கொல்வதோ
காற்றும் புயலும் தேவலை - உயிர்
கடலில் போனதைத் தேடலை
கடலே வீட்டில் வந்து என்
வாழ்வைத் தின்பது சரியில்லை
உப்பும் மீனும் தந்தவள் எங்கள்
உணவும் உடையும் தந்தவள்
உயிரைத்தந்த தாயினும் எங்கள்
உணர்வில் கலந்து நின்றவள்
தவறு செய்தால் தண்டனை, எங்கள்
தவறு என்ன சொல்லம்மா
உன்னை நம்பி வாழ்கிறோம், தினம்
எம்மைக் காப்பாய் கடலம்மா.
கடலும் மீண்டும் பொங்குமோ
பாடு பட்டு வேர்வை சிந்தி தினம்
சேர்த்த செல்வம் தங்குமோ.
உறவு முறைகளை காணுமே - நாளைய
உணவுக்கு வழியும் வேணுமே
நாளை என்பது இருக்குதா இல்லை
செத்து நீரில் மிதக்குதா
கடலை அண்டி வாழ்கிறோம் பெற்ற
தாயை போல காண்கிறோம்
நீயே உந்தன் பிள்ளையை ஒரு
பேயாய் மாறிக் கொல்வதோ
காற்றும் புயலும் தேவலை - உயிர்
கடலில் போனதைத் தேடலை
கடலே வீட்டில் வந்து என்
வாழ்வைத் தின்பது சரியில்லை
உப்பும் மீனும் தந்தவள் எங்கள்
உணவும் உடையும் தந்தவள்
உயிரைத்தந்த தாயினும் எங்கள்
உணர்வில் கலந்து நின்றவள்
தவறு செய்தால் தண்டனை, எங்கள்
தவறு என்ன சொல்லம்மா
உன்னை நம்பி வாழ்கிறோம், தினம்
எம்மைக் காப்பாய் கடலம்மா.
என் திருமணம்
கடவுள் அமைத்து வைத்த மேடை - எந்தன்
தோளிலே சூடினேன் கல்யாண மாலை.
கனவிலே கண்ட என் தேவி
கட்டி வந்தாள் வண்ணச் சேலை.
சேலையும் மாலையும் சேர
எத்தனை துன்பங்கள் கண்டோம்.
பிரிக்க ஒர் உலகமே உண்டு ஆயின்
சேர்க்க இங்கெவருமே இல்லை.
மதமென்று சொல்லி ஒரு பக்கம் சாதி
இனமென்று சொல்லி ஒரு பக்கம்.
மொழியென்று சொன்னோரும் உண்டு
எம்காதலைத் தடுப்பதற்கென்று.
சாதகம் சேரவே இல்லை இதில்
கோள்களின் சண்டைகள் தீரவே இல்லை.
செவ்வாயின் தோஷமெனச் சொன்னார் அவள்
செவ்வாயில் (புன்)னகையன்றி வேறொன்றும் காணேன்.
பணம் பொருள் செல்வங்கள் வேண்டாம் உங்கள்
பெண்ணெனும் பெருஞ்செல்வம் தாருங்கள் என்றால்
பிரச்சினை இருக்குதோ என்றார் என்னில்
பைத்தியம் பெரும் பிணி இருக்குமெனக் கொண்டார்.
குடும்பத்தின் தகுதிகள் பார்த்து எங்கள்
இனம் குலம் கோத்திரம் பார்த்துஆயிரம்
சிந்தனை செய்கின்றார் வீணில் எங்கள்
சிந்தை கலந்ததைக் காணார்
உணவிலே வேற்றுமை உண்டு ஆயின்
எங்கள் உணர்விலே வேறுபாடில்லை எங்கள்
கனவுகள் மெய்ப்பட வேண்டும் நிச்சயம்
காதலில் வெற்றியும் கண்டாக வேண்டும்
மனமொத்த வாழ்க்கைதான் வேண்டும் தினம்
மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கிட வேண்டும்இரு
மனம் இணைந்திட்ட பின்னே உலகின்
பிரித்திடும் சக்திகள் என் செய்யக் கூடும்?
மனதிலே வரைமுறை வேண்டும் தினமும்
துணைவரைத் தெய்வமென தொழுதிடல் வேண்டும்
தாலிதான் வேலியென்றில்லை கற்பைப்
பொதுவிலேகொண்டாற் துன்பங்களில்லை.
உறவென்று சொல்லுவார் இல்லை காதல்
உயர்வுணர் நண்பர்கள் உடனோடி வந்தார்
திருமணப் பதிவுடன் ஒன்றாகி விட்டோம் இனிப்
பிரிவுகள் என்றுமே இல்லை.

Thursday, July 14, 2005
ரசித்த பாடல் - அவள் அப்படித்தான்
உன்னொரு நல்ல பாடல் தந்து மனதைத் தொட்ட ராம்கிக்காக (http://stationbench.blogspot.com ) இந்த இரு பாடல்களும்.
ருத்ரையாவின் கறுப்பு வெள்ளை படம்.. கமல் நடித்தது.
பன்னீர் புஷ்பஙகள் படத்தின் பெயர் இந்த பாடலில் இருந்து தான் வைக்கப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறென்.
கமல் பாடிய முதல் பாடல் இது.
இவ்வளவு அழகாக கருத்து சொல்லும் இந்தப் பாடலைப்பாடிய கமலின் வாழ்க்கையில் வந்த பெண்கள் எல்லாம் இந்த பாடலை நினைப்பார்கள்..
ஆண் கொண்ட தாகம் தீர்க்கின்ற தேகம் பெண்ணென்ற ஓரினமோ... இது யார் பாவம்...
ஆண் செய்த சட்டம் அவர் போட்ட வட்டம் அதற்கென்று பெண்ணினமோ... இது யார் சாபம்...
அன்புடன் விச்சு
1.
பன்னீர் புஷ்பங்களே...
கானம் பாடு...
உன்னைப்போலே யென்தன் உள்ளம் ஆடுது...
புது தாளம் தொட்டு...ஓ....
புது ராக மெட்டு...
ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ...
இது யார் பாவம்...
ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதற்கென்று பெண்ணினமோ...
இது யார் சாபம்...
நியாயங்களோ பொதுவானது...
புரியாமல் போனது....(பன்னீர்)
பாஞ்சாலி வாழ்ந்த
பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை...
நிஜ வாழ்க்கையிலே...
பலபேரைச் சேரும்
பரன்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இன்த போமியிலே...
நியாயஙளோ பொதுவானது...
புரியாமல் போனது...
பன்னீர் புஷ்பஙளே...
கானம் பாடு...
2.
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்.. வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம்..
வளர்கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

ரசித்த பாடல்கள்.. நிழல் நிஜமாகிறது
பாலசந்தரின் கறுப்பு வெள்ளை ஓவியம்..
மெல்லிசை மன்னரும் கவியரசரும் இறக்கை கட்டிப் பறந்த காலம்.
ஒரு பாடலை முப்பது வருடங்கள் கழித்துக் கேட்டாலும் இளமையாய் தெரியும் வரிகள்..
பாலு அவர் பங்கிற்கு ஒருபக்கம் பட்டையைக் கிளப்புகிறார்.
இவர்கள் எல்லாருடைய சிறந்த பாடல் வரிசையிலும் வரும் இரு பாடல் கள்.
அந்த நாள் ஞாபகம்..
அன்புடன்
விச்சு
1.
இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்
(இலக்கணம்)
கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான தாகம் ஏனிந்த கானம்
வெண்மேகம் அன்று
கார்மேகம் இன்று
யார் சொல்லித்தந்தார் மழைக்காலமென்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ பெண்மை தந்தானோ
(இலக்கணம்)
மணியோசையென்ன இடியோசையென்ன
எது வந்தபோதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனைக் காக்கக்கண்டேன்
நீயெது நானெது ஏனிந்த சொந்தம் பூர்வஜென்ம பந்தம்
(இலக்கணம்)
தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுப்பாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காகப்பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை உரைப்பது கீதை
புரியாததாலே திரைபோட்டு வைத்தேன்
திரைபோட்ட போதும் அணைபோட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கிவைப்பாயோ விளக்கிவைப்பாயோ
(இலக்கணம்)
2.
கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ
(கம்பன்)
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ - அந்த தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ
(கம்பன்)
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொருவரிசையை நான் கண்டேன் - அந்தவரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அடநானும் ஏமாந்தேன்
ஆத்திரம் என்பது பெணகளுக்கெல்லாம்அடுப்படி வரைதானே - ஒருஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்அடங்குதல் முறைதானே

மாக்களின் ஜனநாயகம்
அவர்கள்முதலில் சமுதாய வளர்ச்சி என்றார்கள்
நாங்கள் ஓட்டுப் போட்டோம்
எம் தலைவர் நல்லவர் என்று
தொடர்ந்துதமிழை காப்போம் என்றார்கள்
நாங்கள் இந்தியை ஏசினோம்
எம் தலைவர் தமிழைக் காப்பார் என்று
பின்னர் ஈழத் தமிழர் என்றார்கள்
நாங்கள் ஊர்வலங்கள் போனோம்
எம் தலைவர் மனிதாபிமானி என்று
அடுத்து
மதச்சார்பின்மை என்றார்கள்
எம் மதக் குறிகளை அழித்தோம்
பெயரைச் சிதைத்தோம்
எம் தலைவர் சமத்துவ வாதிஎன்று
கடைசியாக, என் மகனுக்கு ஆட்சி என்றார்கள்
தலைவர் மகனன்றோ
ஓட்டளித்து விட்டோம்.
அரசரின் பிள்ளைகள் அரியணை ஏறினர்
ஜாதி மதங்களால் ஆட்சி அமைந்தது
இந்தி தெரிந்ததால் பதவி கிடைத்தது
சவக்குழியிலும் ஊழல் செய்தவர்
சந்து பொந்தெலாம் தோட்டம் வாங்கினார்
வளராத சமுதாயம் அப்படியெ இருந்தது
அழியாமல் இந்தி அவையில் வளர்ந்தது.
மதங்கள் உடைந்து ஜாதிகள் பெருகின
ஈழத்தமிழரை யாரென்றே தெரியலை.
வளர்ந்தோரெல்லம் அரசியல் வாதிகள்
லஞ்ச ஊழலில் தின்று கொழுத்தவர்.
கூட்டணி போட்டு குடும்பம் வளர்த்தவர்
அரசியல் ஜாதியின் மேல்தட்டு மானிடர்
கொட்டிக் கொடுத்தவர் பதவிகள் பெற்றார்
ஓட்டுப் பெட்டி நிறைத்தவர் வாரியம் பெற்றார்
உடன்பிறவாதவர் உலகையே பெற்றார்
உழைத்தவருக்கு இதயத்தில் இடம்
அதனாலென்ன
உயிரினும் மேலான தம்பிகளல்லவா
ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பல்லவா,
உறவுதான் பெரிது உடமையா பெரிது?
கடமையை(?) செய்வோம் காசு பணம் எதற்கு?
இன்றும்
ஊர்வலம் போவோம் அவர் சந்ததி வாழ
உயிரை எரிப்போம் அவர்ஆட்சியிலேற.
ஆயிரம் முழுமனிதர் வருவார்
முஷ்டி மடித்து நீட்டி முழக்கி,
"அண்ணன் வாழ்க! தலைவ(வி)ன் வாழ்க!
ஐம்பது ருபாய்க்கு ஆயிரம் கோஷம்
உயரத்தில் நின்றவர் கையை அசைத்தார்
நீங்கள் உருப்படாத கூட்டமென எழுதிப் படித்தார்.
நாங்கள் கை தட்டி ரசித்தோம்.
தலைவர் பெயரை போற்றித்துதித்தோம்.

அதிகார வர்கம் ஒரு சந்தேகம்
கீழ்க்காணும் கட்டுரையை உண்மை பத்திரிகையில் படித்தேன்.
சில சந்தேகஙள் எழுகின்றன..(இவை இந்தக் கட்டுரையிலிருந்து மட்டுமல்ல) யாராவது விளக்குங்கள்.
1. சாதி இந்துக்கள், ஆதிக்க வர்கம் இரண்டும் ஒன்றா.. அதில் இடம் பெறுபவர்கள் பிராமணர்கள் மட்டும் தானா அல்லது தேவர் நாடார் செட்டியார் படைஆட்சி வெள்ளாளர் கவுண்டர் முதலியார் நாயுடு போன்றவர்கள் (எனக்கு இவ்வளவு சாதிகள் தான் தெரியும்:)))) நிலச்சுவாந்தார்கள் தொழில் வியாபாரம் போன்ற வற்றில் சிறந்த இனங்களும் உண்டா?
2. அப்படியானால் இவர்களும் ஆரியர்கள் தான?
3. இல்லைஎன்றால் அவர்களும் ஆதி திராவிடர் என்ற பிரிவுக்குள் வருகிரவர்களா? அவர்களுக்கும் எ ஸி எஸ் டி பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு உண்டா..
4. நம் அரசர்களில் (அதிலிருந்து கடவுள்களாக மாறிய) யாருமே பிராமணர்கள் இல்லை என்று படிக்க நேர்ந்தது.. அப்படியானால் பிராமணர்கள் எப்பொதிலிருந்து ஆதிக்க ஜாதி ஆனார்கள்? கடவுள் களுக்கு நூல் மாட்டியது யார்? அவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யார்?
5. பிராமணரல்லாத அரசர்களும் மனு நேதி சாஸ்திரத்தை பின்பற்றியே அரசாண்டார்களா.. அப்போதும் கல்வி மறுப்பு, தீண்டாமை போன்றவை இருந்ததா. இது பற்றி சரித்திரக் குறிப்பு ஏதும் உண்டா.. இல்லை சென்ற நூற்றாண்டில் தான் பிராமணர்கள் ஆதிக்க ஜாதி ஆனார்களா?
6. தமிழகத்தில் இன்றும் பிராமணர்கள் ஆதிக்கம் நீங்கவில்லையா? 30 ஆண்டு திராவிட அரசாங்கங்கள் இதை மாற்ற முயற்சி செய்யவில்லையா? 100 சதவீத கல்வி, வேலை வாய்ப்பை தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கொடுக்கத் தடையாயிருந்தது எது?.. யார்?
7. சூத்திரர்கள் (டெக்னாலஜிச்ட், சூத்திரம் - தொழில் நுட்பம், சாத்திரம் - வழிமுறைகள். தொழில் நுட்பம் தெரிந்தவன் சூத்திரன் ஆனான் சாத்திரம் தெரிந்தவன் சாஸ்திரி ஆனான்) என்பது பிராமணர்கள் அல்லதவரைக்குறிக்கும் சொல்லா? க்ஷ்த்திரியர்களும் (அரசர் அமைச்சர் படை வீரர்கள்) வைசியர்களும் (வியாபாரிகள், பெரும்தனக் காரர்கள்) நல்ல சமுதாய அந்தஸ்தில் இருந்தவர்கள் தானே. அவர்களுக்கும் ஆதிதிராவிடர்களுக்கான சலுகைகள் உண்டா.. அது ஏன்?
8. அரசியல் லாபத்துக்காக ஜாதிகளை உபயோகப்படுத்துகிறார்களா.. அப்படியென்றால் அரசியல் கட்சிகள் இருக்கும் வரை ஜாதியை அழிக்கவே முடியாதே. இதற்கு என்ன முடிவு?
இன்று ஒருவர் இது பற்றி எழுதி இருந்தார் வலைப்பதிவில்.. அதிலிருந்து எழுந்த கேள்விகள் இவை.
உண்மையில் வந்த கட்டுரை கீழே படியுங்கள்.
அன்புடன் விச்சு.
இந்தியா முழுவதும் முஸ்லீம்கள் வாழ்கிற காரணத்தால் மத அடிப்படையில் இந்தியாவைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் ஜின்னாவுக்கு 1939 வரையில் ஏற்படவில்லை.
ஆங்கிலேயர்களின் ஆளுமையிலிருந்து இந்தியா விடுதலை பெற்றபின் இந்தி மொழிக்கும் ஆரியர்களுக்கும் அடிமையாக திராவிடர்களைப் போல முஸ்லீம்களும் இருக்க நேரும் என்று, அன்றைய நீதிக்கட்சித் தலைவராக இருந்த தந்தை பெரியார் தலைமையில் பம்பாய் சென்ற 5 பேர் குழு 8- 1 - 1940 அன்று ஜின்னாவிடம் தெரிவித்தது. இந்த நிகழ்வில் அண்ணல் அம்பேத்கரும் கலந்து கொண்டார்.
1919-லேயே (12-8-1919 லண்டனில் பாராளுமன்ற குழுவின் முன்னால்) தென்னிந்தியாவுக்கு தனி டொமீனியன் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அன்றைய நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான சர். கே. வி. ரெட்டிநாயுடு, எழுப்பியதையும் அப்பேச்சின் போது இக்குழுவினர் நினைவு கூர்ந்தார்கள்.
இதற்குப் பின்னர்தான், முழுவதும் உருது மொழியை மட்டுமே பேசுகின்ற முஸ்லீம்கள் வாழுகின்ற சிந்து மாகாண பகுதிக்கு (இன்றைய பாகி°தான்) டொமீனியன் அந்தஸ்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முகமது அலி ஜின்னாவால் எழுப்பப்பட்டது.
இத்தகைய சூழலில் இந்தியா முழுவதும் பரவியுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் (ஆதிதிராவிடர்) பாதுகாப்பு குறித்து கவலை கொண்ட பெங்களூர் ஆதிதிராவிட மகாஜன சபையினர், 10-6-1940 அன்று, பெங்களூர் கன்டோன்மென்டில் மாநாடு ஒன்றைக் கூட்டினார்கள். இந்த மாநாட்டில் அன்றைய ஆதி திராவிட மக்களின் தனிப்பெரும் தலைவராக விளங்கிய இரட்டைமலை சீனிவாசனார் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார்.
லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் ஆதிதிராவிட மக்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் இரட்டைமலை சீனிவாசனார் என்பதால், அவரிடம் இதுபற்றி கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய முக்கிய உரை தமிழாக்கம் செய்யப்பட்டு கீழே தரப்பட்டுள்ளது.
இந்த உரை ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு பெங்களூர் ஆதிதிராவிடர் மகாஜன சபையினரால் 12-5-1940 அன்று வெளியிடப்பட்டது ஆகும்.
கனவான்களே,
தாழ்த்தப்பட்ட மக்களின் கவனத்தைக் கட்டாயமாக அய்ரோப்பாவில் நடக்கும் போருக்கு அழைக்கும்போது, ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களின் எதிர்காலத்தின் மீது அது ஒரு நேரடி பாதிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இந்தியாவை ஆங்கிலேயர்கள் முதலில் ஆக்ரமித்தது போல, இப்போதும் எதிரிகள் (ஜெர்மன்) வெற்றி அடைந்து இந்தியாவை ஆக்கிரமித்தால், புதிய ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற உயர்ஜாதி இந்துக்கள் செய்திகளை எல்லாம் தவறாகத் தெரிவித்து, அவர்களின் நல்லெண்ணத்தைப் பெற்று, பழமையான பழக்க வழக்கங்கள், ஜாதி மற்றும் மத நடைமுறைகளின் அடிப்படையில், தற்போது ஒடுக்கப் பட்ட பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் என்று அறியப்படும் இந்த நாட்டின் ஆதி இனமான திராவிட மக்களை ஒடுக்கவே முயல்வார்கள். இப் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றால் எந்த வகை யிலேனும் ஆங்கில அமைச்சரவையிடமிருந்து ஆதிக்கம் செலுத்தும் அந்தஸ்தை ஜாதி இந்துக்கள் கோரி பெறுவார் கள்.
இந்தியாவில் உள்ள கோடிக்காணக்கான ஒடுக் கப்பட்ட, பிரிவு மக்களை அடக்கி ஆளும் கொடுங் கோன்மை நிறைந்த யதேச்சதிகார அரசை இவ்வாறு மீண்டும் கொண்டு வருவார்கள்.
நிலை இவ்வாறு தெளிவில்லாமல் இருக்கும்போது, இந்தியாவைப் பிரித்து இந்துக்களுடன் பகிர்ந்து கொள்ள முஸ்லிம்கள் ஓர் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்கள். இவ்வாறிருக்கையில், இந்த பங்கீட்டில் நாங்கள் எங்கே வருகிறோம், எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கேட்பது மிகச் சரியானதே.
ஆங்கிலேயரை இந்தியாவை விட்டு விரட்டுவது என்ற உயர்ஜாதி இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் வாதம் ஆங்கிலேயர் அன்னியர்கள் என்பதன் பலத்தின் மீது மட்டுமே நிற்பதாகும். இதே கருத்தை வைத்துக் கொண்டு பார்க்கும்போது, இந்தியாவை ஆங்கிலேயர்கள் வென்றடைந்திருந்தாலும் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவேண்டும் என்று கோரும் போது, இதே வாதத்தை முன்வைத்து முஸ்லிம்கள், இஸ்லாம் மதத்திற்கு மாறிய திராவிடர்கள், ஆரியப் பார்ப்பனர்கள், ஜாதி இந்து திராவிடக் குழுக்கள்(சூத்திரர்கள்), கிறித்துவர்கள், பார்சிகள் மற்ற பிறருக்கும் இந்தியாவின் மீது எந்தப்பிடிப்பும் இல்லை; அவர்கள் முற்றிலும் அந்நியர்கள் அல்லது தங்களின் முன்னோர்களின் மதங்களை விட்டு ஓடிச் சென்று அந்நிய நாட்டு மதங்களையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் ஏற்றுக் கொண்டவர்களே என்னும் சாதாரணமான காரணமே இதற்குப் போதுமானது. எனவே மண்ணின் மைந்தர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளத் தகுதி படைத்த ஒரே பிரிவு மக்கள், அட்லாண்டிக் நிலப் பகுதியில் வாழ்ந்தவர்கள் (சிந்து) முதல் இமயமலை அடிவாரத்திலிருக்கும் கங்கை, பிரம்மபுத்திரா சமவெளியில் வரை பரவியுள்ள, தற்போது 10 கோடி மக்கள் தொகை கொண்டுள்ளதாக சுமாராக மதிப்பி டப்பட்டுள்ள, இனக் கலப்பின்றி திராவிட இனத்தின் வழிவந்த, தற்போது தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் என்று அறியப் பட்டுள்ளவர்கள் மட்டும்தான்.
திராவிடர்கள் தங்களின் வளமான நாட்களில் ஓர் உயர்ந்த கலாசாரம் படைத்த இனத்தைச் சேர்ந்தவர் களாக இருந்தனர். அவர்களின் மொழியும் மதமும் தமிழ் மட்டுமே. ‘தங்கக் கதவுக் கோட்டை’ என்ற ழைக்கப்பட்ட ஒரு கோட்டையையும், காற்றின் சக்தி யால் செயல் படும் ‘ஆகாய விமானம்’ என்னும் விமா னங்களையும் அவர்கள் பெற்றிருந்தனர். அவர்களின் கலாசாரம், நாகரிகம் முற்றிலுமாக நசுக்கப்பட்டு விட்டதென் றாலும், இந்த மண்ணின் உண்மையான மைந்தர்கள் யார் என்பதைத் தேடி அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் என்று கண்டுபிடிக்கக் கோரி வலியுறுத்த அவர்கள் அனைத்து உரிமையும் பெற்றுள்ளனர்.
நமது நாட்டைத் திரும்ப நாமே எடுத்துக் கொள்ளத் தயாராக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, பொருளாதார நிலை ஆகியவை மற்ற ஜாதி மக்களின் நிலைக்கு உயரும் வரை ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று நாம் கோருகிறோம். அப்போதுதான், அப்போது மட்டும் தான், எந்தக் கலப்புமற்ற பண்டைய திராவிட இனத் தின் வழிவந்த தாழ்த்தப்பட்ட மக்களிடம் இந்தியா வின் நிர்வாகச் சாவியைக் கொடுத்து விட்டுச் செல்ல மேதகு இங்கிலாந்து நாட்டின் அரசரால் இயலும்.
இதற்கிடையே இந்த உலகப் போரில் நேசநாடுகள் விரைவில் வெற்றிபெற வேண்டும் என விரும்பும் நாம் நமது கோரிக்கைகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.

Wednesday, July 13, 2005
விசிலடித்த ரஜினியும் வியந்து போன ராஜாவும்
வழக்கமாக ரஜினி ஒரு நிகழ்சிக்கு வந்தால் பரபரப்பாகவே இருப்பார்.. அவரது பேச்சுக்கான வாய்ப்பு எப்போது வரும், பேசிவிட்டு ரசிகர்களிடமிருந்து தப்பி கிளம்பிப் போகலாம் என்றே இருப்பார். ஆனால் இந்த நிகழ்சியில் (திருவாசகம் சிம்பொனி வெளியீட்டு விழா) ஒரு பொறுமையான ரஜினி யைப் பார்த்தோம். அமர்ந்த இடத்திலேயே நகராமல் இருந்த அவர் சிரித்து, குரலெழுப்பி தன் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தார். முதல் சில பேர்களில் ஒருவராக வந்த ரஜினி கடைசி வரை இருந்தார்.
இத்தனைக்கும் மேலாக, வை கோ பேசும் போது (அவர் திருவாசகத்தின் வரிகளில் ஏன் ராஜா சிலவற்றை தவிர்த்தார் சிலவற்றை பயன் படுத்தினார் என்று ஆராய்ச்சி செய்து பேசினார்) ஒரு இடத்தில் ரஜினி தன் விரல் களை வாயில் வைத்து விசில் அடித்து விட்டார். ஆச்சர்யப் பட்ட இளையராஜா கூட திரும்பிப் பார்த்து உரக்க சிரித்தார்.
ரஜினி இப்படி செய்ததை அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த பங்குத்தந்தை வின்சென்ட் சின்னதுரை (தலைவர் , தமிழ் மையம்) வியந்து "இது விழாவில் ரஜினியின் ஈடுபாட்டைக் காட்டுகிறது. நான் கூட அவரிடம் -என்ன இள வயது நினைவுகள் திரும்புகின்றனவா என்று கேட்டேன்" என்று கூறினார்
நன்றி சென்னை ஆன்லைன். (என்னால் மொழிபெயர்க்கப்பட்டது)

நான் ரசித்த பாடல்கள் -நிழல்கள்..
பாரதி ராஜாவின் திரைச் சித்திரம்.
இளையராஜா, வைரமுத்து இருவரும் அணிசேர்த்து அலங்கரித்த படம். நான்கு முத்தான பாடல்கள்.
வறுமையின் நிறம் சிவப்புடன் வெளியிடப்பட்ட வேலையில்லாத் திண்டாட்டத்தை விளக்கிய படம். .. கதை புரியவில்லை என்பதால் ஓடாத படம். ரசிகர்கள் திரைஅரங்கில் நின்று கதையை விளக்கினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
நிழல்கள் ரவி, சந்திர சேகர், ரோகிணி (என்று நினைக்கிறேன், விருமாண்டியில் பத்திரிகையாளராக வருவாரே).
ராஜா சொன்னார்.. புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே..இசைக்கென்று இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் -எனக்கே தான் எவ்வளவு உண்மை..
அன்புடன் விச்சு
நிழல்கள் திரைப்படத்தின் இனிய பாடல்கள்.
1. பொன் மாலை பொழுது
இது ஒரு பொன் மாலை பொழுது
வான மகள் நாணுகிறாள்வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன் மாலை பொழுது
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும் (2)
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூ மரங்கள் சாமரங்கள் வீசாதொ
(இது ஒரு பொன் மாலை...)
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும் (2)
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
(இது ஒரு பொன் மாலை...)
2. மடை திறந்து... தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்...
நினைதது பலித்தது.......
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
கானம் விளைந்தது.. நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே...(2)
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் ... நான்.......(மடை திறந்து)
நேற்றின் அரங்கிலே... நிழல்களின் நாடகம்
இன்றின் எதிரிலே.. நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் (2)
இசைக்கென்று இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
-எனக்கே தான்...........(மடை திறந்து)
3. பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆகா கா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்..ம்ம். (பூங்கதவே தாள்)
திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.
(பூங்கதவே தாள்)
4. தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்(தூரத்தில்)
சுகம் நூறாகும் காவியமே..
ஒரு சோகத்தின் ஆரம்பமே…
இது உன்னை யெண்ணிப் பாடும் ராகம்..(தூரத்தில்)
வேய்ங்குழல் நாதமும் கீதமும்..ஆஆஆஅ..ஆஆஆஆ. ஆஆஅ…ஆஆஆஆஅ…ஆஆஆஆஅ (வேய்ங்குழல்)
மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே..
ஐயன் உன் தஞ்சம் என் நெஞ்சமே…
தினம் அழைத்தேன்… ப்ரபு உனையே..
ஆடும் காற்றிலே… புது ராகம் தோன்றுமா..(தூரத்தில்)
காதல் எனும் கீதம் பாடி
உருகும் ஒரு பேதையான மீரா..
(மீரா..மீரா..மீரா..மீரா..)
வேளை வரும் போது வந்து… காக்கும் கரம் காக்கும் என்று வீணை மீட்டும் தேவி உள்ளமே
தீராத ஆசையோடு.. வாடாத பூக்களோடு..
காலை மாலை பூஜை செய்து சேர்க்கவில்லையா
கனவு போல வாழ்வில் என்தன்
லால லால லால லால...
கவலை யாவும் மாற வேண்டும் (கனவு)
இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ
நாளும் எனை ஆளும் துணை நீயே என வாழ்ந்தேன்
மறவேன் மறவேன் மறவேன்
உன் நினைவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்
வரும் விழி தரும் அதில்
உறவுகள் தெரிவதும் ஒரு சுகம்
வானமும் மேகமும் போலவே...
வானமும் மேகமும் போலவே
நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் மறைந்த வானின் தனிமை
இன்று நான் கண்டதும் உண்மையே..
தினம் அழைத்தேன்.. ப்ரபு உனையே..
ஆடும் காற்றிலே.. புது ராகம் தோன்றுமா… (தூரத்தில்)

அப்படி போடு அருவாள... அடுத்தவர் பெயரில் மொ.க.
அட நம்ம வலைப்பதிவு பிரசினை போலவே இருக்கே.. எதாவது தொடர்பு உண்டா?
அன்புடன்
விச்சு
தினமலர் டீக்கடை பெஞ்சிலிருந்து.
""மொட்டை பெட்டிஷன் போடுறதை கேள்விப்பட்டிருக்கோம்... அடுத்தவங்க பெயருல மொட்டை பெட்டிஷன் போடுறது பார்த்திருக்கீங்களா பா...'' என்றார் அக்பர்பாய்.
""அதெப்படி அடுத்தவங்க பெயருல போட முடியும்... தெரிஞ்சா உதைக்க மாட்டாங்களா...'' என்றார்அண்ணாச்சி.
""அந்த நிலைமை வந்திருக்காம் பா... நாமக்கல் நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினரா காந்தி முருகேசன்ங்கறவர் இருக்கார் பா...
நாமக்கல்நகராட்சி தலைவர் காந்தி செல்வன் மேல ஊழல் புகார் சொல்லி முதல்வர் தனிப்பிரிவுக்கு அவர் பெயருல புகார் போயிருக்கு... அந்த புகார் தொடர்பா விசாரிக்கறதுக்கு காந்தி முருகேசனை அதிகாரிகள் தொடர்பு கொண்டு கேட்டாங்களாம் பா...
"புகாரே அனுப்பாத போது எப்படி எங்கிட்ட விசாரிக்கிறீங்க'ன்னு காந்தி முருகேசன் கேட்டாராம்... அப்ப தான் அந்த புகாரை அவரோட பேருல வேறு யாரோ அனுப்பிருக்கற விஷயம் தெரிஞ்சதாம் பா...'' என்றார் அக்பர்பாய்.
""அது ஏன் குறிப்பா அவர் பெயருல அனுப்பணும்...'' என்று கேள்வி எழுப்பினார் அண்ணாச்சி.
""அதுக்கு காரணம் இருக்காம் பா... அவர் அ.தி.மு.க., பிரமுகராம்... அவர் பெயருல அனுப்பினா தான் முதல்வர் தனிப்பிரிவுல நடவடிக்கை எடுப்பாங்கன்னு நினைச்சு அவர் பெயரை பயன்படுத்திட்டாங்களாம்... இப்ப விவகாரம் தலைக்கு மேல போயிட்டதால யார் புகாரை அனுப்பிருப்பாங்கன்னு தோண்டித் துருவிருக்கா... அ.தி.மு.க., தி.மு.க., கவுன்சிலர்கள் சேர்ந்து தான் அனுப்பிருக்காங்களாம்... எல்லாம் "கட்டிங்' சரியா வராதது தான்னு சொல்றாங்க பா...'' என்றார் அக்பர்பாய்.

அவதூறான பின்னூட்டங்களைத் தடுக்க
திருடர்கள் தாங்கள் செய்வதை நியாயப்படுத்த்வது வழக்கமே. திருடனாய்ப்பார்த்து திருந்துவது நெடுனாள் காத்திருக்க வேண்டிய ஒரு வழி. அதற்குள் மக்களின் ஆர்வம் தொலைந்து விடுமோ என்பது ஒரு அச்சம்.
ஐ பி முகவரியை தடை செய்ய ஏதும் வழி இருக்கிறதா என்று கண்டறியலாம்.. இப்போது பெரும்பாலானவர்கள் அப்படி அவதூறுப் பின்னூட்டமிடும் நபர்களின் ஐ பி யை கண்டு பிடிக்கமுடியும் என்று தெரிவிக்கிறார்களே..
நேராக பிலாக்ஸ்பாட்டிலேயெ அந்த ஐ பி யிலிருந்து பின்னூட்டமிட தடை செய்ய வேண்டும். வலைப்பதிவாளருக்கு தடுக்கும் அதிகாரம் தரலாம். பலருக்கும் அதே நபர் துன்பம் தந்தால் பொதுவாக (globally) அவர் ஐ பி யைத் தடை செய்யலாம். இது பிளாக் ஸ்பாட் நடத்துபவர்கள் செய்யவேண்டிய மாறுதல். நம்மில் யாருக்காவது அது செய்யும் வழி தெரியுமானால் மென்பொருளை எழுதி அவர்களுக்கு வழங்கலாம்.
இதிலும் பிரச்சினைகள் வரலாம்..ஐ பி யை மறைத்துப் பதிவிடலாம் என்று யாரோ எழுதி இருந்தார்கள் நுனிப்புல் வலைப்பதிவில்.. அது போல் நடந்தால் ஐ பி தடை உதவாது..
என்னுடய 2 காசு..(my two cents). (இந்த அணிலின் பங்களிப்பு என்று சொல்லவேண்டுமா)

அன்னியனும் மெய்ப்பொருளும்
அன்னியன் விமர்சனங்களைப் படிக்கும் போது ஒரு திருக்குறள் நினைவுக்கு வருகிறது.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.
அன்னியன் படம் பற்றி வந்த விமர்சனங்களில் பெரும்பாலும் இனத்தைப் பற்றியோ, திரைப்பட தொழில் நுட்பங்களைப்பற்றியோ , வடமொழி பற்றியோ வன்முறை பற்றியோ தான் விவாதிக்கப்படுகிறது.
இது போல பல தவறுகள் நாட்டில் நடக்கின்றன, இது மாறவேண்டும் என்பது தான் இந்த படத்தின் முக்கிய கருத்தாக எனக்குப் பட்டது. இதை யாருமே கண்டு கொள்ளாததைப்பார்க்கும் போது, நிஜமாகவே இந்த கருத்து மக்களைப் போய் சேரவில்லையா என்ற கேள்வி எழுகிறது? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.
திரைப்படத்தில் பாடல் காட்சியில் தலைவனும் தலைவியும் மரத்தைச் சுற்றி ஓடி காதல் செய்வது நிஜ வாழ்க்கையில் எவ்வளவு சாத்தியம் என்று எந்த படத்திற்கான விமர்சனத்திலும் படித்ததாக நினைவில்லை.
கருட புராணமும், பிராமண குடும்பமும் கதையமைப்பைச் சார்ந்தது. மருந்தைப்பற்றி பேசாமல் அது அடைத்து வந்த அட்டைப் பெட்டியையும் குப்பியையும் மேல் தடவியிருந்த இனிப்பையும் பற்றிப் பேசுகிரோமே? கருத்தை விட்டு அதைச் சொன்ன விதத்தை பற்றிப் பேசுவது பலன் தருமா.
மெய்ப்பொருளைக் கண்டோமா.. இல்லை காண விருப்பமில்லையா..
அன்புடன்
விச்சு
திரையில் திணறும் தமிழ் -கோவி.லெனின்
இதோ "அந்நியன்' வந்துவிட்டான் அநியாயம் செய்பவர்களை அழிப்பதற்கு! இயக்குநர் ஷங்கர் படங்களில் சமூகத்தைப் பற்றிய பார்வை இருக்கும்.கொஞ்சம் ஹாலிவுட் பாணி, கொஞ்சம் அறிவுஜீவிகளின் ஒத்துழைப்பு, கொஞ்சம் மக்கள் மனநிலை இவற்றின் கலவையாகத் தயாரிக்கப்பட்ட லென்ஸ் வழியே சமூகத்தைப் பார்ப்பது ஷங்கர் வழக்கம்.
""ஸ்கூலுக்குப் போனா மார்க் இருந்தாலும் சேர்க்க மாட்டேங்குறான். டொனேஷன் கேட்குறான்'' என்பது நடுத்தர வர்க்கத்திருந்து எழும் குமுறல். ""பஸ் கண்டக்டர் சில்லறை கொடுக்க மாட்டேங்குறான். யாராவது ஒரு டிரைவரையோ, கண்டக்டரையோ அடிச்சிட்டா மாநிலம் முழுக்க பஸ் ஸ்டிரைக் பண்றாங்க'' என்பது அவசரமாக அலுவலகம் செல்லும் அனைவருக்கும் இருக்கும் கோபம்.
""இந்த கவர்மெண்ட்டு ஆஸ்பத்திக்குப் போனா டாக்டரு, நர்சு, கம்பவுண்டரு, ஆயா எல்லாருமே காசு புடுங்குறாங்க. காசு கொடுத்தாதான் உயிருக்கு உத்தரவாதம். இல்லேன்னா பொணமாதான் வீட்டுக்குத் தூக்கிட்டு வரணும்'' இது ஏழை மக்களின் வேதனை. இவற்றை திரை மூலம் காட்டி, அதிரடியாகத் தீர்வு சொல்வது ஷங்கர் சூத்திரம்.
"நாம நினைச்ச மாதிரி ஒருத்தன் கிடைத்திருக்கான். இப்படி ஒருத்தன் இருந்தால் நாட்டிலே எந்த அக்கிரமமும் நடக்காது' என்று பார்வையாளர்களின் மனதில் ஒரு பிம்பத்தை அவர் பதிய வைத்துவிடுவார். அனால், அந்தப் பிம்பம் திரையில் செய்வது நடைமுறையில் சாத்தியமா என்பதை ரசிகர்களிடமே விட்டுவிடுவார்.
அந்நியனில் அவர் கையாண்டிருப்பது, அக்கிரமம் செய்கிறவனுக்கு "கருடபுராணம்' என்கிற சமஸ்கிருத ஏட்டில் சொல்லப்பட்டிருக்கிறபடி தண்டனை என்பதுதான்.மரண தண்டனையையே ரத்து செய்ய வேண்டும் என்று உலகின் எல்லா நாடுகளிருந்தும் மனித உரிமைக் குரல்கள் தோன்றியுள்ள நிலையில், கருடபுராணத்தைத் தோண்டியெடுத்துப் புரட்டி அதன்படி தண்டனை என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. எனினும், பார்க்கும் ரசிகர்கள் பிரமிக்கும் வகையில் காட்சிகளை அமைத்து, சமஸ்கிருத மந்திரத்தை முன்னிலைப்படுத்துவதைச் சமர்த்தாகச் செய்துவிட்டார் ஷங்கர்.
அநியாயம் இல்லாத ஆட்சி அமைவதற்கு சமஸ்கிருதம்தான் வழி சொல்யிருக்கிறது என்பது போன்ற தோற்றத்தை இது உண்டாக்குகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்ததைய தமிழ் மறையான திருக்குறளில் 1330 குறட்பாக்கள் இருக்கிறதென்றால், அதில் 381ஆவது குறளிருந்து 630ஆவது குறள் வரை 250 குறட்பாக்கள் அரசியலைப் பற்றித்தான் சொல்கின்றன. அதன்பிறகும் நாடு, அமைச்சு, அரண், படைமாட்சி இவை பற்றியெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. தவறு செய்யும் ஆட்சியாளர்கள் எழைகளின் கண்ணீருக்கு பதில் சொல்லியகவேண்டும் என்பதுதான் ஷங்கர் படக் கதைகளின் மைய இழை. அதைத்தான் திருக்குறளும்,"
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை'
என்கிறது.
தமிழில் எத்தனையோ அரசியல் சூத்திரங்கள் இருக்கும் நிலையில், தமிழ்த் திரையுலகப் படைப்பாளிகள் மேற்கத்திய நாடுகளிருந்தும், சமஸ்கிருதத்திருந்தும் "சுடுவது' நீண்டகாலமாகவே இருந்துவரும் ஒரு நாகரீகம்.
நன்றி சினிக்கூத்து

Saturday, July 09, 2005
காணாமல் போன கட்டுரை
இதை நேற்று பதித்திருந்தேன்.. இன்று காணாமல் போய் விட்டது.. எனவே மீள் பதிப்பு
அன்புடன் விச்சு
கலைந்துபோன 'திராவிடஸ்தான்' கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்!
விஸ்வாமித்ரா என்பவர் திண்ணையில் எழுதிய கட்டுரைகளும் அதற்கு விடுதலை நாளிதழில் வந்த பதில் கட்டுரையும் இங்கே தருகிறேன். இது தான் அனேகமாக திண்ணை மின்னிதழிலிருந்து எடுதாளப்படும் கடைசி பதிவு.
முதல் கட்டுரையில் கூறிய கருத்துக்களை இரண்டாம் கட்டுரை மறுக்க வில்லை. மாறாக பிராமணர்களையும் சங்கராசாரியாரையும் பற்றிப் பேசுகிறது. இன்று நம் வலைப்பதிவிலும் இதே நிலை காணப்படுகிறது.
அப்படியானால் இது வலைப்பதிவுகளுக்குள் மட்டும் இருக்கும் நோயல்லவா?
நான் படித்ததை அடுத்தவர்களும் படிக்கட்டும் என்பதே குறிக்கோள். வித்தியாசமான கருத்துக்கள் நம் எண்ணங்களை பண்படவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அன்புடன்விச்சு
கட்டுரை 1.
திண்ணைப்பள்ளியில் 11 வயதில் நான்காம் வகுப்பைத் தட்டுத்தடுமாறித் தேறியதும்படிப்பை நிறுத்திவிட்டுத் தன் தந்தையாரின் மண்டியில் வேலை செய்யப் போய்விட்டகன்னடத்துக்கார ஈ.வே.ராமசாமி நாயக்கர் தன்னைத் திராவிடர் தலைவராக உயர்த்திக் கொண்டது அவரது சுயமுயற்சியாலா?
நிச்சயம் அல்ல.சுதந்திர வேட்கையில் ஒன்றுபட்ட இந்தியாவை எப்படியெல்லாம் பிளவுபடுத்தலாம் என்று வெள்ளை அரசின் குள்ளநரிகள் குயுக்தியான வழிகளைத் தேடிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குத் தோதாய் அகப்பட்டவர்தான் ஈ.வே.ரா.
இன்றைய தமிழில் சொன்னால் ரௌடித்தனமாய் பேசிக் கொண்டு 'பேட்டைதாதா'வாய் விளங்கிய ஈ.வே.ரா., 'திராவிடஸ்தான்' என்ற பெயரில் தென்னிந்தியாவைத் தனியே துண்டாக்கி விடலாம் என்ற பிரிட்டிஷ் திட்டத்துக்குத் துணைபோன தேசத்துரோகியே.
கவியரசு கண்ணதாசன் (ஆதாரம்: நூல் - நான் பார்த்த அரசியல்) கூறுகிறார்:“பெரியார் ராமசாமி அவர்கள் காங்கிரஸிலே இருந்து பிரிந்த பிற்பாடு, பிராமணர்களை எதிர்க்கிறேன் என்கிற போக்கிலே இந்தியாவையே எதிர்க்கத் தலைப்பட்டார்.இந்திய விடுதலைக்கு விரோதமாகப் போகவும் தலைப்பட்டார். இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கக் கூடாது என்பதிலே அவர் முன்னணியிலே நின்றார்.பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கை ஆரம்பமானபோது திராவிடஸ்தான் பிரிவினையையும் அவர் ஆரம்பித்தார். பிராமணர்கள்தான் இந்திய தேசிய காங்கிரஸ்; பிராமணர்களுடைய ஆதிக்கம்தான் இந்தியாவில் இருக்கிறது என்பது போல் ஒரு கற்பனையைச் செய்து கொண்டு தென்னாட்டில் அவர்களை ஒழிப்பதற்காகவே, வெள்ளைக்காரர்கள் இருக்கவேண்டுமென்ற ஆசையை அவர்கள் மக்கள் மனதில் வளர்க்கத் தொடங்கினார்கள்.இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று தந்தி கொடுத்தவர்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருந்தார்கள்.பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது 'நான் போய் இந்த வெள்ளைக்காரனைப் பார்த்தேன். அவனிடம் சொன்னேன். என்னய்யா யோக்கியதை இது! நீ பாகிஸ்தான் கொடுத்தது போல திராவிடஸ்தான் கொடுத்து விட்டல்லவா விடுதலை கொடுத்திருக்க வேண்டும் என்றேன். ஆனால் வெள்ளைக்காரனுடைய யோக்கியதையைப் பாருங்கள். அவன் அதைக் கடைசியில் ஏற்றுக் கொள்ளவில்லை.' என்று அவரே பேசியிருக்கிறார்.”
கண்ணதாசன் அவர்கள் ஏதோ மயக்கத்தில் எழுதிவிட்டதாக இனி சிலர் மடல் அனுப்புவார்கள்.
அவர்களுக்காகவே மேலும், 1940 களின் விடுதலை இதழ்களில் இந்தத் திராவிடஸ்தான் கொள்கையை பகிரங்கமாய் முன்வைப்பதைச் சுட்டுகிறார் ம.வெங்கடேசன்.
27-8-1944-ல் சேலம் நகரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டிலே கீழ்வரும் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது:'திராவிடர் கழகத்தின் முக்கியக் கொள்கைகளில் திராவிடநாடு என்ற பெயருடன்நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும்நேரே பிரிட்டிஷ் செக்கரட்டரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டதுமானஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.'இங்கே இன்னொரு சுவையான தகவலும் உண்டு. ஆரிய திராவிட இனவாதத்தைமுற்றாய் நிராகரித்த தேசியவாதியான பெருந்தலைவர் அம்பேத்கர் ஆரம்பத்திலிருந்தேஇந்தத் திராவிடஸ்தான் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் அவர் சுதந்திர இந்தியாவின் முதல் மந்திரிசபையிலும் பதவியேற்றவுடன் ஈ.வே.ரா.வுக்குப் பொறுக்கவில்லை.'இந்தியநாடு பிரிக்கப்படக் கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தையே இன்றைய நிலையில் அம்பேத்கர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாட்களில் திராவிடநாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்று அஞ்சுகிறேன்.'(குடியரசு 8-7-1947)ஈ.வே.ரா. அஞ்சியபடியே திராவிடஸ்தான் கனவு நனவாகவில்லை. கன்னட பலிஜவார் என்றே தன்னை அடையாளப்படுத்தி வாழ்ந்த ஒருவர் தலைமையில் சில தெலுங்கு பேசும் நாயுடுக்களும், மலையாள நாயர்களும், பிராமணத் துவேஷத்தால் ஈவேராவின் பின்வந்த சில தமிழ் வேளாளர்களும் சேர்ந்து வெள்ளை அரசின் ஆதரவுடன் அமைக்கத் துடித்த இந்தத் திராவிடஸ்தானில் பாதுகாப்பு கிடைக்காதென்று 'ஆரியர்' என்று முத்திரை குத்தப்பட்ட, தமிழையே தாய்மொழியாகக் கொண்ட அந்தணர் மட்டும் அஞ்சவில்லை. மூளைச்சலவை செய்ய முடியாத, தமிழ்ப்பண்பாட்டை மறக்காத இதர சாதியினர் பலரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாகச் சொல்லப் போனால் தாழ்த்தப்பட்டவர்களே அதை ஏற்றுக் கொள்ளவில்லை.அன்றைய தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக விளங்கிய வி.ஐ.முனுசாமி அவர்கள்அச்சமயம் ஒரு கோரிக்கை வைத்தார்:'இந்தியத் தூதர்கள் பதவிகள் உட்பட எல்லா உயர்பதவிகளிலும் ஆதி திராவிடர்களையே நியமிக்க வேண்டும். தென்னிந்தியாவில் திராவிடஸ்தான் என்று அமைக்கப்பட்டால் ஹரிஜனங்களுக்கு ஆதிதிராவிடஸ்தான் என்று தனியாகக் கொடுக்கப்பட வேண்டும்.'அதை ஆத்திரத்துடன் விமர்சித்த 'விடுதலை' தலையங்கம் சொன்னது என்ன தெரியுமா?'ஆதிதிராவிடஸ்தான் வேண்டும் என்று பிதற்றியிருக்கிறார் .... வெறும் பதவிகள்மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு இனத்தையோ, சமுதாயத்தையோ உயர்த்திவிடமுடியாது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.... எனவே பழங்குடிமக்கள்முழு உரிமையுடன் வாழ வேண்டுமானால் ஒரு சிலர் பெரிய பதவிகளைப் பெறுவதால்மட்டுமே முடியாது. அவர்கள் திராவிடர்களுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும்.'(விடுதலை - 10-7-1947)திராவிடஸ்தான் கேட்டால் அது கொள்கையாம். ஆதிதிராவிடஸ்தான் கேட்டால்அது பிதற்றலாம்! ஏக இந்தியாவிற்குப் பதில் திராவிடஸ்தான் தீர்வு என்றால்,சாதி இந்துக்களின் ஏக திராவிடஸ்தானுக்குப் பதில் ஆதிதிராவிடஸ்தான்தான்தீர்வாக இருக்க முடியும் அல்லவா?எப்படியோ அம்பேத்கர் போன்ற பல தேசியவாதத் தலைவர்களின் ஆதரவில்லாததால்நாடு துண்டாக்கப் படாமல் தப்பித்தது.ஈ.வே.ராவின் கோபம் அவருக்கு ஆதரவாக நிற்காத தமிழ்ப் பண்டிதர்களின் மேல்திரும்பியது. தமிழை நன்கறிந்த பண்டிதர் பலரும் ஆரம்பத்திலிருந்தே இந்தத்திராவிட இனவாதத்தை ஏற்கவில்லை. 'திராவிடம்' என்ற சொல்லே சங்ககால முதல்எங்குமில்லை என்றும், திராவிடம் என்ற பொய்யின் கீழ் தென்னகத்தைச் சேர்ப்பதுஇயலாது என்றும் அவர்கள் பல இடங்களில் சுட்டிக்காட்டி வந்தனர்.அதன் காரணமாகவே தமிழ்மொழி, பழந்தமிழ் நூல்கள், தமிழ்ப்பண்டிதர், பாவலர்என்று ஒட்டுமொத்தமாய்த் தாக்கி வந்தார் ஈ.வே.ரா. மேலும் தமிழன் என்றஅடையாளத்துடன் தன்னைப் பிணைத்துக் கொள்வதற்கு, கன்னடரான அவரின்உள்ளுணர்வும் இடம் கொடுக்கவில்லை என்பதும் மற்றொரு காரணம்.ம.வெங்கடேசன் அவர்கள் தோண்டியெடுத்திருக்கும் ம.பொ.சி. அவர்களின் தமிழ்முரசு தலையங்கம் ஒன்று அன்றைய தமிழர் தலைவர்களின் நாட்டுப்பற்றுக்கு ஓர் அருமையான உதாரணம்.
திண்ணைப்பள்ளியில்கூட ஒழுங்காய்ப் படிக்காத கன்னடர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்தமிழர்தம் காவியமான சிலப்பதிகாரத்தைத் தூற்றிச் சொன்ன முத்துக்கள்:'சிலப்பதிகாரம் என்பது ஆரியத்தைப் பரப்புகிற ஒரு நூலென்பது அல்லாமல் வேறு என்ன? ஆரம்ப முதல் இறுதிவரை ஒரே ஆரியந்தானே காட்சி அளிக்கிறது!''கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடக்கிற கல்யாணம் பெண்ணடிமைத் திருமணம். அடுத்தபடியாக அது பணமூட்டைகளின் திருமணம்.''கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருந்ததென்று யாராவது ஒப்புக்கொள்ள முடியுமா?'
இப்படிப் பல மேடைகளில் முழங்கிவந்த ஈ.வே.ராமசாமி நாயக்கருக்குப் பதிலடியாய் 'கண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர்' என்ற தலைப்பிட்டு சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்கள் 1951 ஏப்ரல் மாத தமிழ்முரசில் எழுதிய தலையங்கம்:சிலப்பதிகாரத்திற்குச் சிறப்பு தேடத் தேசியவாதிகள் மாநாடு கூட்டுகிறார்கள் என்ற செய்தி கேட்டவுடனே, திராவிடர்கழக வட்டாரத்தில் கலக்கங் கண்டுவிட்டது.காங்கிரஸ்காரர்கள் என்றாலே வடமொழிக்கும், வடவருக்கும் அடிமைப்பட்டவர்கள், தமிழுக்கும், தமிழருக்கும் துரோகம் செய்பவர்கள் என்று இத்தனை காலமும் செய்துவந்த பிரச்சாரமெல்லாம் பொய்யாய் - கனவாய் - பழங்கதையாய்ப் போய்விடுமே என்பதுதான் கலக்கத்திற்குக் காரணம். ஆகையால் சிலப்பதிகார மாநாடு நடக்கும் முன்பே சிலம்பின் பெருமையைப் பற்றி 'விடுதலை' தானே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டது.திராவிடர் கழகத்தின் இலக்கியப் பிரசாரகரான புலவர் இலக்குவனார் ஆம்பூரில் சிலப்பதிகாரத்தின் சிறப்பினைப் பற்றிச் சொற்பொழிவாற்றினார். அதை 15-3-51-ல் 'சிலப்பதிகாரத்தின் பெருமை' என்ற தலைப்பு கொடுத்துப் பிரசுரித்தது விடுதலை.மீண்டும் 29-3-51 இதழில் சாமிசிதம்பரனாரைக் கொண்டு சிலப்பதிகாரத்தைப் பற்றி மிக நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதச் செய்து அதையும் பிரசுரித்தது விடுதலை.இவற்றால் நாம் மருளவில்லை; மகிழ்ந்தோம். சிலம்பைப் பழித்தவர்களும் அதன் சிறப்பை உணர்ந்து பாராட்டுவதென்றால் மகிழத்தானே வேண்டும். மொழித்தொண்டு கட்சிப்பூசல்களுக்கு அப்பாற்பட்டதல்லவா?ஆனால் ஈ..வே.ரா. இத்தனைக்கும் எதிர்மாறான போக்கிலே 30-3-51-ல் காங்கேயத்தில் சிலப்பதிகாரத்தைப் பழித்துப் பேசியிருக்கிறார்."உண்மையான திராவிடன் - தமிழ்மகனாக - இருந்தால் சிலப்பதிகார மாநாடு நடத்துவானா? பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதற்காக நடத்தப்படுவது என்பதல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?" - என்று சிலப்பதிகார மாநாடு நடத்தியவர்களுக்குச் 'சிறப்புரை' வழங்கியிருக்கிறார் ஈ.வே.ரா. அவர் கருத்துப்படி, சிலப்பதிகார மாநாடு நடத்துவோர், அந்தக் காவியத்தின் சிறப்புப்பற்றிப் பேசுவோர் அத்தனைபேரும் போலித்தமிழராகின்றனர். இதற்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பைப் புலவர் பெருமக்களிடம் விட்டு விடுகிறோம்."சிலப்பதிகாரம் என்பது ஆரியத்தைப் பரப்புகிற ஒரு நூலென்பது அல்லாமல் வேறு என்ன? ஆரம்ப முதல் இறுதிவரை ஒரே ஆரியந்தானே காட்சி அளிக்கிறது!" என்கிறார் ஈ.வே.ரா.மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அதுபோல் எப்போதோ எதற்காகவோ 'ஆரியம்' என்ற வெறுப்பேற்பட்டதன் காரணமாக, காண்பதெல்லாம் ஆரியமாகக் காட்சியளிக்கிறது ஈ.வே.ராவுக்கு!கொடுங்கோலனை எதிர்த்துப் போராடும் கண்ணகியின் புரட்சி 'ஆரியம்!'அறியாது செய்த பிழைக்கு தனது உயிரையே அர்ப்பணிக்கும் நெடுஞ்செழியனின் தியாகம் 'ஆரியம்!'அரசன் உயிர்நீத்த அக்கணமே தானும் உயிர்நீத்த கோப்பெருந்தேவியின் அன்பு நிறைந்த காதல் 'ஆரியம்!'வாய்கொழுத்துப் பேசிய வடவேந்தருடன் போரிட்டுத் தமிழரின் ஆற்றலைப் புலப்படுத்திய செங்குட்டுவனின் செயல் 'ஆரியம்!'மூன்றாகப் பிளவுபட்டுக் கிடந்த தமிழகத்தை ஒன்றாகப் பிணைத்துக் காட்டிய இளங்கோவனின் சித்திரம் 'ஆரியம்!'பரத்தையர் குல மகளுக்குப் பிறந்தும் ஒருவனையே காதலித்து வாழ்ந்து அவன் இறந்தபிறகு வாழ்விற்குரிய இன்பங்கள் அனைத்தையும் இழந்துவிட்ட மாதவியின் மனப்பண்பு 'ஆரியம்!'இத்தனையும் தமிழ்ப்பண்பிற்கு எதிரான 'ஆரியப்'பண்புதான் என்றால் அந்த ஆரியப்பண்பு நீடூழி வாழ்வதாக!ஈ.வே.ரா. தமிழ்ப்பண்பைப் பற்றி முதலில் யாரிடமேனும் பாடங்கற்றுக் கொள்ளட்டும். அப்புறம் அதைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால் அவருக்கும் நன்மையுண்டு; நாட்டிற்கும் நன்மையுண்டு."கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடக்கிற கல்யாணம் பெண்ணடிமைத் திருமணம். அடுத்தபடியாக அது பணமூட்டைகளின் திருமணம்" - என்கிறார் ஈ.வே.ரா.எங்கோ யாரோ செய்து கொண்ட திருமணத்தை நினைப்பில் வைத்துக் கொண்டு, கண்ணகியின் திருமணத்தைக் கண்டித்துப் பேசியிருக்கிறார் போலும்! உடைமைக்காக அல்லாமல், கடமைக்காகவும் அல்லாமல், வெறும் உணர்ச்சிக்காக மட்டும் திருமணம் செய்து கொண்ட பெண் அல்லள் கண்ணகி; கண்ணகியின் காதலன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன்தான்.ஆனால், அவனுடைய பணத்துக்காக தனது இளமையை அடகுவைக்கும் அறிவு கெட்டநிலை கண்ணகிக்கு இருந்ததில்லை. கண்ணகி பருவம் கடந்து பழுதுபட்டவளும் அல்லள்; கோவலன் எழுபது வயதுக் கிழவனும் அல்லன். இருவரும் இளமை இன்பம் துய்ப்பதற்கான இளம்பருவத்தினர். மகளென இருந்தவளை அவள் விருப்பம் அறியாமலே திருமணப்பதிவுப் பத்திரத்தில் கையொப்பம் பெற்று மனைவியாக்கிக் கொள்ளும் கொடுமையைப் பார்த்திருக்கிறோம். அது போன்ற அடிமைத்தனத்தில் கண்ணகியை வைத்துக் கோவலன் மணம் செய்து கொள்ளவில்லை.பார்ப்பனப் புரோகிதர், மறைவழிப்படி நடத்தி வைத்ததற்காக, அவர்களுடைய திருமணத்தைப் பழிப்பது ஆராய்ச்சி அறிவன்று; ஆபாசக் கூக்குரல்."கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருந்ததென்று யாராவது ஒப்புக்கொள்ள முடியுமா?" - என்று கம்பீரமாகக்கேள்வி போடுகிறார் ஈ.வே.ரா.முதலில் தந்தையாக உறவு கொண்டு, பிறகு அவரையே கணவராகக் காதலிக்கும் பெண் அறிவுக்குப் புறம்பானவள்தான். உணர்ச்சிக்காக அல்லாமல், உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித உணர்ச்சி அற்றவள்தான். ஊரார் பழிக்கும் நிலைமையிலும், உணர்ச்சி அற்ற கட்டையாக கிழத்தோடு பவனி வரும் பெண் தன்மானம் அற்றவள்தான்.இந்தக் குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈவேரா சந்தித்து விட்டார் போலும். அவளை நினைவில் வைத்துக் கொண்டு கண்ணகியைச் சாடுகிறார்.கண்ணகிக்கு அறிவு இருந்ததால்தான் கணவனைப் பிரிந்த காலத்திலும் கற்புநெறி தவறாது வாழ்ந்தாள்.மனித உணர்ச்சி இருந்ததால்தான், ஆயர்சேரியில் கோவலன் தன்னை இறுதியாகப் பிரியும்போது, அவனது போற்றா ஒழுக்கத்தை எடுத்துக்காட்டிக் கொடுங்கோல் அரசை அழித்தாள்!அத்தகைய பெண்ணரசியையா பழிப்பது? அதுவும் மணியம்மையின் காதலரா பழிப்பது? என்ன துணிச்சல்! புலவர் பெருமக்களே, நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் பரம்பரைதானா நீங்கள்? ஆம் என்றால் இளங்கோவைப் பழிப்பதைப் பார்த்தும் பொறுத்திருப்பதேன்? ஒருவேளை தமிழே வீரத்தை விட்டு விலகி விட்டதோ? அறிவு, பீடத்தை விட்டு அகன்று விட்டதோ? பதில் கூறுங்கள்.திராவிடத்தாருக்கு ஒரு நிலையான கொள்கை கிடையாது என்று நாம் கூறினால்கோபம் பொத்துக் கொண்டு வருகிறது, சில பு..ர..ட்..சி...வீரர்களுக்கு! இதோ பாருங்கள், இலக்கியத்துறையில் இவர்களுக்குள்ள ஞானத்தை!'சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமைப்படுத்தும் பேரிலக்கியம்' - என்று பேசுகிறார்திராவிடக்கழகத்தின் பிரச்சாரகரான புலவர் இலக்குவனார்! அதை 'சிலப்பதிகாரத்தின்சிறப்பு' என்று தலைப்பு கொடுத்துப் பிரசுரிக்கிறது விடுதலை.சிலப்பதிகாரம் சிந்தித்து ஆராய்வதற்குரிய சிறந்த தமிழ்நூல்... தமிழர் நாகரிகத்தை விளக்கும் நூல்... ராமாயணத்தைப் போல், பெரியபுராணத்தைப் போல், சீவகசிந்தாமணியைப் போல் பூசை பண்ணும் மனப்பான்மையை உண்டாக்கும் நூலல்ல.. இதுதான் இந்த நூலுக்குரிய தனிச்சிறப்பு என்று 21-3-51 'விடுதலை'யில் எழுதுகிறார் ஈ.வே.ரா.வை நிழல்போல் பின்பற்றிச் செல்லும் சாமிசிதம்பரனார். இதை, 'சிலப்பதிகாரம் சொல்லும் செய்திகள் யாவை? பகுத்தறிவு, ஜனநாயகம், தன்மானமே தமிழர்பண்பு' - என்று கொட்டை எழுத்தில் இரண்டு காலம் தலைப்புக் கொடுத்து விடுதலையில் பிரசுரித்திருக்கிறார் அதன் ஆசிரியர். அந்தக் கட்டுரையில் சாமி சிதம்பரனார் மேலும் கூறுவதைப் படியுங்கள்."கண்ணகி சிறந்த குணமுடையவள். அழகும், அரிய குணங்களும் அவளிடமிருந்தன" - என்கிறார் ஈ.வே.ரா.வின் சீடர்.குருவுக்கு, அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் முதலிய நல்ல குணங்கள் அற்றவளாகக்காட்சியளிக்கிறாள் கண்ணகி. சீடருக்கோ அத்தனை குணங்களும் உடையவளாகக் காட்சி அளிக்கிறாள். ஒரே பாத்திரம் - இரு வேறு காட்சிகள். காண்பவர் இருவரும் ஒரே கட்சியினர். அது மட்டுமல்ல - குருவும், சீடரும். இதைக்கண்டு வெட்கப்படுவது மட்டுமல்ல - இவர்களைப் பொதுவாழ்வில் நடமாட விட்டதற்காக வேதனையும் படவேண்டும்.சிலப்பதிகாரத்தின் கருப்பொருளைப் பற்றிக் கூறும்பொழுது "ஆரியநெறியைப் பரப்புவதற்காகவே எழுதப்பட்டது" என்கிறார் ஈ.வே.ரா. "ஆரம்பம் முதல் இறுதிவரையில் ஆரியந்தானே காட்சியளிக்கிறது" என்றும் ஆத்திரத்தோடு கேட்கிறார்.அவருக்கு நாம் பதிலளிக்கத் தேவையில்லை. அவரது சீடர் சிதம்பரனாரைக் கொண்டே பதிலளிக்கச் செய்கிறோம். விடுதலையில் தாம் எழுதிய கட்டுரையில் இறுதியில் சீரிய கணக்கோடு கூறுகிறார் சிதம்பரனார்."சிலப்பதிகாரக் கதையிலே கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்களைப் புகுத்திப்படித்தால், இந்த மூன்று உண்மைகளை மறுக்க முடியாது.1. சடங்குகளால் பயனில்லை.2. அறிவின்றி விசாரணையில்லாமல் நிரபராதிகளுக்குத் தண்டனை அளிக்கும் அரசாங்கம் பொதுமக்களால் அழிக்கப்படும்.3. தமிழன் தன்னை அவமதிக்கும் எவனுக்கும் தலை வணங்கமாட்டான். தன்னை அவமதிப்போரை அடக்கித் தன்மானத்தைக் காப்பாற்றியே தீர்வான். பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் தமிழன் ஏமாற மாட்டான்.இந்த உண்மைகளை விளக்கவே சிலப்பதிகாரம் எழுதப்பட்டது. இதை மெய்ப்பிக்க நாம் எப்போதும் தயார். எந்த இடத்திலும் வாதிக்கவும் முன்நிற்போம்.சீடரானவர் குருவுக்கு முரணாய் இப்படி சிலப்பதிகாரம் பயனுள்ள நூல், கழிக்கத் தக்கன சில இருப்பினும் பொதுவாகப் பாராட்ட வேண்டிய நூல் என்று கூறுவது மட்டுமல்ல; அவரது கூற்றை மறுப்போரை வாதுக்கும் அழைக்கிறார்.ஈ.வே.ரா.வுக்குத் தன்மானமிருப்பின் சாமிசிதம்பரனாரோடு சமருக்குச் செல்லட்டும். இல்லையேல் சிதம்பரனாரின் சிலப்பதிகாரப்பற்று உண்மையாயின் தமது மானத்தைக் காத்துக் கொள்வதற்கேனும் ஈ.வே.ரா.வின் வட்டாரத்தை விட்டு அவர் வெளியே வரட்டும். 'பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்' என்பது போல தமிழுக்கும் தொண்டு செய்வதாக நடிப்பது, அதே சமயத்தில் , தமிழின் பெருமையை இழித்துப் பேசும் ஈ.வே.ரா.வுக்குத் துதி பாடுவது என்ற இழிநிலை இனியும் நீடிக்கக் கூடாது.இப்படி முன்னுக்குப்பின் முரணாக, ஒருவருக்கு ஒருவர் எதிர்மாறாகப் பேசும் ஒரு கூட்டமும் தமிழ்நாட்டில் இருக்கிறதே!இந்த லட்சணத்தில் சிலப்பதிகார மாநாடு கூட்டியவர்களின் தமிழ்ப்பற்றை நையாண்டி செய்கிறது 'திராவிடநாடு.' அது மட்டுமல்ல, தாங்கள் என்றென்றும் சிலப்பதிகார பக்தர்கள் போலவும், தேசிய வாதிகள் இப்போதுதான் சிலம்பின் சிறப்பைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி இருப்பதாகவும் கூறுகிறது.தமிழ்மொழிக் கலைகளுக்கோ, காவியங்களுக்கோ திராவிடத்தார்கள் எந்தக் காலத்திலும் மதிப்பளித்ததில்லை. அது மட்டுமல்ல; அவற்றிற்கு மதிப்பளிக்கும் அறிஞர்களின் மனத்தைக் கெடுக்கும் வகையில் ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு ஏசிப் பேசுவதும் அவர்களின் அன்றாட வேலை.ஆங்கிலேயன் இந்த நாட்டை விட்டுப் போக மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தவரை, திராவிடத்தார்கள் ஆங்கில மாயைக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்.சைமன் ராமசாமி, ஸ்டாலின் ஜெகதீசன், எட்வர்டு மாணிக்கம், மேயோ குப்பம்மாள்,மிஸஸ் மிராண்டா என்று மேல்நாட்டாரின் ஆங்கிலப் பெயர்களைத் தங்கள் பெயர்களுக்கு முன்னே முடிசூட்டியது போன்று வைத்துக் கொள்வதில் ஆனந்தப் பட்டார்கள். ஆனால் தேசிய எழுச்சியாலும், பாரதியாரின் உழைப்பாலும் மக்களிடையே நாட்டுப்பற்றோடு மொழிப்பற்றும் வேகமாக வளர்ந்தது. அதோடு வெள்ளையாட்சி வெளியேறுவது திண்ணம் என்ற நிலையும் தோன்றியது.ஆகவே தந்தை வாழ்த்தினாலொழிய தாம் வாழ முடியாது என்பதை உணர்ந்து கொண்டனர் திராவிடத்தார்கள். அதனால் சைமன், ஸ்டாலின், எட்வர்டு, மேயோ, மிராண்டா என்ற பெயர்களுக்கெல்லாம் தலைமுழுக்குப் போட்டுவிட்டு,நாராயணசாமி நெடுஞ்செழியரானார்.ராமையா அன்பழகரானார்..நடராஜர் கூத்தரசரானார்.ஆம், விலை போகாத பண்டங்களுக்கு வியாபாரி லேபிள் மாற்றுவது போல! புதிய பெயர்களில் பழைய பேயாட்டங்களைத் தொடர்ந்து நடத்தினர். உள்ளத்தில் உண்மைத் தமிழ்ப்பற்று இல்லாவிடினும், இவர்களது நடிப்பில் மயங்கி, இவர்களும் உண்மையான தமிழ்ப்பற்றுடையவர்கள்தாம் என்று நம்பினர், நம்புகின்றனர் பண்டிதப் பெருமக்களில் பலர்.ஆனால் என்னதான் திறமையாக வேடம் போட்டாலும், சில சந்தர்ப்பங்களில் வேடம் கலைந்து உண்மை வெளிப்பட்டு விடுகிறது.சிலப்பதிகாரம் சொல்வதென்ன?நாம் திராவிடர் அல்லர் - தமிழர்;நமது தாயகத்தின் பெயர் திராவிடமன்று - தமிழகம்;அதன் வடக்கெல்லை விந்தியமன்று, வேங்கடம்;தமிழ்நாட்டு அந்தணர் ஆரியரல்லர், தமிழர்.தமிழருடைய பண்பாடும் பழக்கவழக்கங்களும், வேங்கடத்திற்கு வெளி உள்ளவர்களின்பன்பாட்டுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் சற்றே வேறானதாயினும் விரோதமானதல்ல என்பவற்றைத் தௌ¤வாக வற்புறுத்துகின்றது.இந்த உண்மைக்கு நேர்மாறான போக்கிலே 'காலட்சேபம்' நடத்திக் கொண்டிருக்கும் ஈ.வே.ரா. சிலப்பதிகாரத்தை எதிர்ப்பதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், ஒருகோடி ஈ.வே.ரா.க்கள் புறப்பட்டாலும், தமிழ் மக்களிடையே சிலப்பதிகாரத்திற்குள்ள செல்வாக்கைக் குறைக்க முடியாது!(நன்றி: தமிழ்முரசு - ஏப்ரல் 1951)ம.பொ.சி. அவர்களின் இந்தத் தலையங்கம் பல உண்மைகளை நமக்குத் தெரிவிக்கிறது.ஈ.வே.ராமசாமி நாயக்கர், தமிழர்தம் ஒப்பற்ற இலக்கியமான நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தை, தமிழ்ப்பண்பாட்டை விளக்குகின்ற சிலப்பதிகாரத்தை, தனது 'திராவிடஸ்தான்' என்ற கேடுகெட்ட அரசியல் நோக்கத்திற்கு ஒவ்வாமல் போன ஒரே காரணத்திற்காகவே இப்படிக் கேவலமாக விமர்சித்து இருக்கிறார் என்பதைத் தௌ¤வாய்க் காணும்போது அவரைத் 'தமிழர் தலைவர், தமிழுக்குப் பாடுபட்டவர்' என்றெல்லாம் சொல்வது ஏமாற்று வேலை அல்லவா?மானமுள்ள தமிழர்கள் தமிழைப் பழித்த ஈ.வே.ரா.வை ஒருபோதும் தமிழர் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படி ஏற்றுக் கொள்பவர்கள் மானமில்லாதவரே, தமிழுக்குத் துரோகம் செய்வோரே என்று பச்சைத் தமிழர்களாகிய நாம் சொன்னால் அதில் தவறென்ன இருக்க முடியும்?கட்டுரை 2.
“திண்ணை தூங்கிகளுக்கு” ஒரு சவுக்கடி!
“திண்ணைப் பள்ளியில் 11 வயதில் நான்காம் வகுப்பைத் தட்டுத் தடுமாறித் தேறியதும் படிப்பை நிறுத்திவிட்டுத் தன் தந்தையரின் மண்டியில் வேலை செய்யப் போய்விட்ட கன்னடத்துக்கார ஈ.வெ. ராமசாமி நாயக்கர் தன்னைத் திராவிடர் தலைவராக உயர்த்திக் கொண்டது அவரது சுயமுயற்சியா? நிச்சயம் அல்ல.
சுதந்திர வேட்கையில் ஒன்றுபட்ட இந்தியாவை எப்படியெல்லாம் பிளவுபடுத்தலாம் என்று வெள்ளை அரசின் குள்ள நரிகள் குயுக்தியான வழிகளைத் தேடிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குத் தோதாய் அகப்பட்டவர்தான் ஈ.வெ.ரா. இன்றைய தமிழில் சொன்னால் ரவுடித்தனமாகப் பேசிக்கொண்டு ‘பேட்டை தாதா’வாய் விளங்கிய ஈ.வெ.ரா. ‘திராவிட°தான்’ என்ற பெயரில் தென்னிந்தியாவைத் தனியே துண்டாக்கி விடலாம் என்ற பிரிட்டிஷ் திட்டத்துக்குத் துணைபோன தேசத் துரோகியே!”
‘திண்ணை’ இணையதள இதழ்.ஓநாய்களும், ஆடுகளும்!
அருமைத் தமிழ் நெஞ்சங்களே, திண்ணை வாசகர்களே உங்களுக்கு வணக்கங்களும், வாழ்த்துகளும். அமெரிக்காவின் காலில் சக்கரங்களுடன் ஓடும் வாழ்க்கையில் இவ்வளவு நாட்கள் திண்ணை இதழ்கள் படிக்க இயலவில்லை. அண்மையில் ஒரு தமிழன்பர் ஏதோ அவரது வீட்டு மாடுமேய்ப்பவரைப் பற்றி பேசுவது போல ஈ.வெ.ரா., பற்றி உங்களுக்குத் தெரியுமா என்று கொச்சைப் படுத்தி எழுதியிருந்ததைப் படித்தார். அது ‘திண்ணை’யிலிருந்து என்றார். எப்போதும் கொஞ்சம் நன்றியுடைய தமிழர் இப்படிப் பேசுகிறாரே என்று ‘திண்ணை’ பார்த்தேன். உடனே எனக்கு ஓநாய்களும் ஆடுகளுந்தான் நினைவுக்கு வந்தன.
பொதுவாக நான் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசுவதுமில்லை, எழுதுவதுமில்லை, திண்ணை வாசகர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். சில நூல் போட்ட தோல்கள் கெட்டியானவை, அவற்றிற்கு உரைக்க வேண்டுமே என்றுதான் எழுதுகிறேன்.
தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் மிகவும் அக்கறையுடன் நடிக்கும் ஓநாய்கள் பற்றியும் அவர்களை நம்பும் நமது தமிழ் ஆடுகளைப் பற்றியுந்தான் சொல்கிறேன்.
தமிழை நீச மொழி என்று சொல்லியவரும் தமிழில் பேசிவிட்டால் மீண்டும் ‘°நானம்’ செய்ய வேண்டுமே என்றவரும், தமிழையும் தமிழ் நாட்டையும் வஞ்சித்து தமிழர்கள் தன்னைத் தொட்டுவிடக் கூடாது என்று கைகால்களை மூடிக்கொண்டு அலைந்ததுகளும் நடமாடுந் தெய்வங்கள். அவாள் குரல் ‘தெய்வத்தின் குரல்’. ஒரு குலத்துக்கொரு நீதி என்ற மனு நீதி தெய்வங்கள் இன்று ஒவ்வொரு நீதிமன்றமாய் மனு போட்டு மானங்கெட்டு அலையும் அவலம்!
தமிழையும், தமிழினத் தலைவர்களையும் கொச்சைப்படுத்தி எழுதி, பேசி, விபச்சாரம் செய்து தமிழர்களின் பணத்தினால் உஞ்ச விருத்தி செய்பவர் இந்த நடமாடுந் தெய்வங்கள் பற்றி அறிந்தும் தெரிந்தும் ‘மடத்தைப் பற்றி என்னால் ஒன்றும் குறைவாக எழுத முடியாது’ என்று தோளில் தொங்கும் நூலைப் பிடித்துச் சொல்பவர் தமிழறிஞர் - ஓநாய்களின் புகழுக்கும் ஆடுகளின் மரியாதைக்கும் உரியவர். சரித்திர பூர்வமான கும்பகோணம் மடம் ‘காமம்’ கோடி மடமான ஆண்டுகள் தெளிவாக இருக்கும்போது 2500 ஆண்டுகள் கீர்த்தி பெற்ற மடம் என்று பெரியவாள் பொய்யைப் பரப்பி வருபவர்தானே! தமிழினத் தலைவர்கள், தமிழறிஞர்கள் பற்றித் தரக்குறைவாய் எழுதும் தறுதலைகளின் சிகரமே எப்போதாவது படியேறிய நடமாடும் தெய்வங்களைப் பற்றி, ஓடிப்போன உண்மைக் கதை பற்றி தெரிந்திருந்தும் அனைவரையும் ஏமாற்றி எழுதி வந்தாயே, உனக்குப் பத்திரிகை ஒரு கேடா? இந்த உண்மைகள் தெரிந்திருந்தும் ஓடிப்போனவளை தண்ணீர் தெளித்து அழைத்து வந்த கதையாய் ஸ்ரீமான் ஸ்ரீமதி வெங்கடராமய்யர் அனைத்து இந்துக்களையும், ஒரு நாட்டின் தலைமகனாக இருந்து அரசியல் சட்டத்தையும் ஏமாற்றலாமா?நான் அவாள் தலைவரைப் பற்றி ஏன் எழுதுகிறேன் என்றால் ஓநாய்கள் என்னதான் தமிழர்களைப் பற்றி ஓலமிட்டாலும் அவாளை நம் ஆடுகள் அழைப்பது போல பேசமாட்டாட அம்பி! நன்னா புரிஞ்சுக்கோடா! அவாள்ட்டே கற்றுக்க வேண்டியது நிறைய இருக்கோன்னா! அதற்காகத்தான், ஆடுகளைக் கோயில், சாமி என்று பணங்கொடுத்து வாங்கிடாலாம்னு நெனைச்சா, ‘தீர்த்தம் குடிக்கல்லாம் நெறைய செய்தேன்! அவாளே என்னைக் கைவிட்டுட்டா!’ என்று புலம்பினாரே நோக்கு நன்னாத் தெரியுமோன்னா!
‘பெரியார்’ என்பது பெண்களுக்காகப் போராடியதற்காக, மனு ‘அநீதியிலே’ பெண்கள் எப்படியெல்லாம் நடத்தப்பட வேண்டுமென்று சொல்லியதை விளக்கி தனது உறவினர்க்கே விதவை மணம் புரிந்து - உறவினர்களால் ஒதுக்கப்பட்டு வாழ்ந்தவருக்காக பெண்கள் மாநாட்டிலே பெண்களால் அழைக்கப்பட்டப் பெயர். அந்தப் பெயரைச் சொல்லக் கூடத் தகுதியல்லாத நாய்கள் அதைப் பயன்படுத்தாதது நல்லதே! அவாள் வீட்டுப் பெண்கள் - வாழ்விலே வளம் பெற்றுத் தமிழர்களுடன் வாழும் சாதிகள் இல்லையடி பாப்பாக்கள் பெரியார் என்று தகுதி பெற்றுச் சொல்லக் கேட்டிருக்கிறேன் அவர்கள் வாழ - மனுநீதி ஒழியக் காண்கின்றோம்.
‘நாயக்கர்’ என்பதை தன் பெயரில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் உதறியவர். ஓநாய்களோ வெளியே பெயருக்குப்பின் போடுவதை விட்டுவிட்டு உள்ளே தோளிலும் உடலின் ஒவ்வொரு அணுவிலும் நூல் தொங்க அலைகிறார்கள் என்பதை ஆடுகள் புரிந்து கொண்டால் போதும். சர் ஏ.டி. பன்னீர்செல்வம் - பார். அட்-லா, கிருத்துவர். அவர் அன்று கேலி செய்தவர்கட்குச் சொன்னார், “உங்களுக்கு மகாத்மா என்னவோ அதுதான் எங்களுக்குப் பெரியார்!” என்று.நமது ஊரிலே நாய் இங்கும் அங்கும் நக்கி விட்டு வருவது போல ஒரு ஓநாய் ஆங்காங்கே மற்ற தமிழர்கள் சொன்னச் சில வரிகளைச் சொல்லி அவதூறு ஓலமிட்டுள்ளதைப் பார்த்தேன். தன்னைப் பற்றி ஒளிவு மறைவு இல்லாத வார்த்தைகளைச் சொன்ன மகாத்மா காந்தியிடம் அவருடைய கொள்கைகளுக்காக உழைத்தார். கள்ளுக்கடை மறியலை நிறுத்தக் காந்தியிடம் வேண்டியபோது அது என் கையில் இல்லை! ஈ ரோட்டில் கண்ணம்மா, நாகம்மா என்று இரண்டு பெண்களின் கையிலிருக்கிறது என்று சொன்னவர். அவரிடம் ஆட்டு மந்தையின் எனது அருமைத் தமிழர் வீட்டின் மாடு மேய்ப்பவர் ஈ.வெ.ரா. விவாதமிட்டதைப் பற்றிப் படியுங்கள்.
கடைசியிலே வர்ணாசிரமத்தில் மிகவும் நம்பிக்கையுள்ள வைஷ்யாள் காந்தி கேட்டாராம், ‘நீர் என்ன நல்ல பார்ப்பனரே இல்லை என்று சொல்கிறீரா?’ என்று. அதற்குப் பெரியார் ‘ஆம்’ என்று சொன்னாராம். அதற்கு மகாத்மா ‘எனக்குத் தெரிந்து ஒருவர் இருக்கிறார்! அவர் பெயர் கோகலே!’ என்றாராம். உடனே பெரியார் சொன்னாராம், ‘நீங்கள் பெரிய மகாத்மா! உங்களுக்கே ஒருவர்தான் தெரிகிறது! நான் வெறும் ஆத்மா! எனக்கு ஒருவரும் தெரியவில்லை!’ என்று -
நம்மில் பலருக்குப் பார்ப்பன நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் பார்ப்பனர்களாகத்தானே இருக்கிறார்கள்!... இராஜாஜியையும் பெரியாரையும் விடவா? ஆனால் ‘மூதறிஞர்’ என்று போற்றப்பட்டவர் பார்ப்பனராகத்தானே கடைசி வரை இருந்தார்! ‘குலக்கல்வி’த் திலகமாகத்தானே இருந்தார். வியாசர் விருத்திலே இதை ஆராய்ச்சியெல்லாம் செய்யக் கூடாது! நம்பிக்கையுடன் படிக்கவேண்டும்! என்று தானே சொல்கிறார்.
காமராசருக்கு ஓட்டுப்போடக் கேட்டபோது ‘பூணூலைப் பிடித்துக் கொண்டு என்மீது பழியைப் போட்டு ஓட்டுப் போடுங்கள்’ என்றாரே!
பெரியாரைப் பற்றிக் கேட்டார்களாம். உங்கள் கொள்கைகளை நீங்கள் மாற்றிக் கொள்கிறீர்களே என்று! அதற்கு அவர் சொன்னது ‘நான் என்ன கல்லா? மாறாமல் அப்படியே இருப்பதற்கு? காலத்திற்கேற்ப, நமது அறிவு மாற வேண்டும். நமது பழைய கொள்கைகள் மாறத்தானே வேண்டும் என்று. பல செய்திகள் தெரிந்தும் நடமாடுந் தெய்வம் மீண்டும் நடமாடத் தொடங்கி விட்டதே. தமிழர்கள் கல்லாய் இருப்பதால்தானே! கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்தானே!
எனது தமிழ் நண்பர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். பாபாசாகேப் அம்பேத்கர் - பெரியார் சந்திப்புகளைப் படியுங்கள். பார்ப்பனீயத்தைப் பற்றி அறிந்துகொள்ள அம்பேத்கரையும், சுவாமி விவேகானந்தரையும் படியுங்கள். விவேகானந்தரைப் போல இந்து மதத்திற்கு உழைத்தவர்கள் அதிகம் இல்லை! அவரைப் பார்ப்பனர்கள் படுத்திய பாட்டை அதுவும் நமது தமிழ்த்திரு நாட்டின், உஞ்சி விருத்திக் கூட்டம் அவமானப்படுத்தியதைப் படியுங்கள். அவர் அமெரிக்கா வந்த கதையை அவரது வாயாலேயே கேளுங்கள்.ஆடுகள் நனைவது பற்றி ஓநாய்கள் கவலைப்படுவது - அவர்கள் தர்மப்படுத்திய படிக்கட்டுச் சாதி முறையை ‘The graded inequality’ பாபா சாகேப் எழுதியுள்ளதைப் படியுங்கள். நம்மைப் பிரித்து நமக்கு நண்பர்களாக நடிக்கும் இந்த அறிவு மேதைகளின் தோல்களில் தொங்கும் நூலைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். இது நன்றியுள்ள, நாயல்ல! மாடுகளைப் பிரித்துச் சிங்கத்திடம் தள்ள வந்த தந்திர நரி என்ற கதைதானே!
நமது அழுக்கை நாம்தான் களையவேண்டும். சாதி என்ற பேய் விதைக்கப்பட்ட வைரs. அதில் வாடும் உயிர்கள் தமிழ் உயிர்கள். இது தலைவர்களால் மட்டுந் தீர்ந்து விடாது. நமது குழந்தைகள் சிறு வயது முதலே ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கவேண்டும், சேர்ந்து பழக வேண்டும். அமெரிக்கா நாட்டிலே வாழும் வளரும் நமது குழந்தைகளே பலர் காதல் மணத்திலே கலந்து விட்டனர். நிறமே மாறியுள்ளவர்கள் சேர்ந்து வாழ உதவியது எது! வளரும் சூழ்நிலை! இந்தச் சூழ்நிலை அனைத்துக் குழந்தைகட்கும் நமது நாட்டிலே கட்டாயமாக்கப் படவேண்டும். குழந்தைகள் சேர்ந்த கலை நிகழ்ச்சிகள், கோடை மற்ற விடுமுறைக் கூட்டங்கள் camps, விளையாட்டு நிறுவனங்கள் என்று எவை எவை இளம் பிஞ்சுகளை ஒன்று சேர்க்குமோ அதை அரசு மட்டுமின்றி நாமும் நடத்தவேண்டும். ஆங்காங்கே திருக்குறள் வகுப்புகள் அனைத்துக் குழந்தைகட்கும் நடத்தவேண்டும். ஆண்-பெண் பாகுபாடின்றி குழந்தைகள் சேர்ந்து உட்கார்ந்து, சேர்ந்து விளையாடி, கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கலப்புக் காதல் மணங்கள் உருவாக வேண்டும், சாதிகள் இல்லையடி பாப்பாக்களினால்தான் முடியும், ஓநாய்களால் அல்ல! சாக்கடையில் முத்தைத் தேடலாமா?
“நான் படித்துப் பட்டம் பெற்ற அறிஞன் அல்ல! எனக்குத் தெரிந்ததை என்னால் முடிந்த அளவிற்குச் சொல்கிறேன். அதில் உங்களுக்குச் சரியென்று படுவதை எடுத்துக்கொள்ளுங்கள் - நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்! தமிழர்கள் மானமும் அறிவும் உள்ளவர்களாக வாழவேண்டும்! அவ்வளவுதான்!” பெரியார் திறந்த புத்தகம், ஒளிவு, மறைவு, சூழ்ச்சிகள் இல்லை நண்பர்களே!படித்து விட்டதாலோ, பட்டங்கள், பதவிகள் பெற்றுவிட்டதாலோ என்ன வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என்று ‘பெரியார் குறை பாடும்’ நண்பர்களே, பெரியார் சொன்னது தன்மானமும், பகுத்தறிவும் என்பதை மறந்து விடாதீர்கள்!
- டாக்டர் சோம. இளங்கோவன், சிகாகோ

உறுதி மொழியும் மன விழைவும்
குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பல நல்ல கருத்துக்களை மக்களிடையே பரப்பி வருகிறார். சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.
அவர் உறுதி மொழி எடுத்துக்கொள்ள வைக்கும் மக்கள் அதை எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதாகக் கொள்கிறார்கள் என்பது சிந்தனைக்குறியது.
சமீபத்தில் வந்த அன்னியன் திரைபடத்திற்கு வலைப்பதிவுகளில் வந்த விமர்சனங்களைப் படித்த போது, பலர் அதில் சாதி பற்றியும் சிலர் தொழில் நுட்பம் பற்றியும் எழுதி இருந்தார்கள்.. யாருமே தனி மனித ஒழுக்கக் குறைவைப்பற்றி அதில் கூறப்பட்ட கருத்துக்களைக் குறித்து எதுவுமே எழுத வில்லை. தனிமனித ஒழுக்கக் குறைவைப் பற்றி இப்படித்தான் கூற வேண்டும் என்றோ இதைப் பற்றிக் கூறுவதால் என்ன நடந்துவிடப் போகிறது என்றோ நினைத்தார்களோ?
இந்தியன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். நமக்கு இதெல்லாம் தவறு என்று உறைக்காமலேயே போய் விட்டது என்று. அடுத்தவர் உயிர் போகும் போது "னிற்கிறேன், காயமடைந்தவரைக்கொண்டு வா" என்று கூறி அவர் கொண்டு வருவதற்குள் சென்ற வனுக்கு தண்டனை தருவது தப்பு. அவருக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கலாம். தெருவில் கிடப்பவருக்கு உதவுவதா அவர் வேலை என்று ஒரு வலைப் பதிப்பிலும், ஒரு பத்திரிகையிலும் கூட எழுதி இருந்தார்கள். நம் சிந்தனை இவ்வளவு தானா.
அந்த நபரைக் கொன்று அவரது தவறைப் புரியவைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் ஒரு உயிர் போகும் போது காப்பாற்றக் கூட கணக்கு பார்ப்பது நம்முடைய மனிதாபிமானம் எவ்வளவு கீழே பொய் விட்டது என்பதைக்காட்டுகிறது. அதை நியாயப் படுத்துவதை என்னவென்று சொல்வது.
நமக்கு என்று வராதவரை, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கருத்து சொல்பவர்கள் நாம். காணாமல் போன ஒரு 5 வயதுப் பையனைத்தேடி ஒரு ஊரில் உள்ளவர்கள் மூன்று நாட்கள் தேடியதாக அமெரிக்க பத்திரிகையில் படிக்கும் போது நம் ஊரில் " நாம என்ன செய்யரதுங்க. போலீஸ்ல சொல்லுங்க தேடித்தருவாங்க " என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.
இங்கே (USA) உதவி வண்டிகள் வரும்போது எவ்வளவு பரபரப்பான சாலையிலும் , எந்த வேளையிலும் சாலையை விட்டு ஒதுங்கி நிற்க வேண்டும். அவர்கள் போன பிறகு தான் செல்ல முடியும். அண்ணா சாலையில் உதவி வண்டிகள் வரும்போது போட்டி போட்டு அதன் முன்னால் செல்லும் ஆட்களைப் பார்த்திருக்கிறேன்.
நமக்கு எல்லாம் பணமாகிவிட்டதோ என்று கூடத் தோன்றுகிறது. இந்த நிலையில் இந்த உறுதிமொழிகள் சொல்லும் நாள் தவிர மற்ற நாட்களில் நினைவாவது இருக்குமா?
அன்புடன்
விச்சு
மக்கள் பின்பற்ற கலாம் அறிவித்த உறுதிமொழிகள்கோவை, ஜூலை 8-
கோவையில் நடந்த விழாவில் மக்கள் பின்பற்ற வேண்டிய 7 உறுதி மொழிகளை கூறினார் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.
கோவை மணிமேல் நிலைப் பள்ளியில் நேற்று நடந்த சிறுதுளி அமைப் பின் பசுமைப் பயணத் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:
இந்தியாவைப் பொருத்தவரை நாளொன் றுக்கு 5 லட்சம் பேர் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வருகின்றனர். இந்த உறுதிமொழிகளை வழிபாட்டுத் தலங்களில் தனித்தனி அறிவிப்பு பல கையாக வைப்பதன் மூலம் பக்தர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். இதைப் படிக்கும் 10 சதவிகிதம் பேர் அவற்றில் ஏதாவது ஒன் றைப் பின்பற்றினாலே நாட்டில் அமைதி நிலவும், சமுதாயம் தழைத்தோங் கும் என்றார் அவர்.
அவர் கூறிய உறுதி மொழிகள்:
1. என் வாழ்நாளில் 5 மாணவர்களையாவது 3 ஆண்டுகளுக்கு எனது பொறுப்பில் படிக்க வைப் பேன்.
2. எனது வீட்டின் அருகே உள்ள சிறு குளங்களைப் புனரமைக்கும் பணிகளைச் செய்வேன்.
3. உறவினர்களுடனான அனைத்துப் பகைமையையும் விட்டு விடுவேன். நீதி மன்றங்களில் தொடர்ந்த வழக்குகளை திரும்பப் பெறுவேன்.
4. ஐந்து பழ வகை மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.
5. சூதாட மாட்டேன்; போதைக்கு அடிமையாக மாட்டேன்.
6. எனது குடும்பத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சம கல்வி அளிக்க பாடுபடுவேன்.
7. நேர்மையாக வாழ்வேன்; ஊழலை ஒழிக்கப் பாடுபடுவேன்.
நன்றி: விடுதலை

Friday, July 08, 2005
ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி ப.ஜீவானந்தம் - விஸ்வாமித்ரா
மீண்டும் திண்ணை.. இந்த முறை கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா பேசியது.. இப்போதைய வலைபதிவுகளில் வரும் பல (போலிப் பின்னூட்ட நிகழ்வுகள் தொடர்புடைய) கருத்துக்களுக்குப் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
அன்புடன் விச்சு
1957 ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் ஜீவா அவர்கள் பேசியது:
தோழர்களே! இனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியத் தீர்மானமான 'ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகப் போராட்டமும்' என்பதைப் பற்றிய தீர்மானத்தை உங்களிடம் சற்று விளக்கிச் சொல்ல விரும்புகிறேன்.
பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப்புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பு, தேசியக்கொடி எரிப்பு ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈவேராவால் நடத்தப்படுகிற திராவிடக்கழகப் போராட்டம் தமிழகம் முழுவதிலும் மட்டுமல்ல, அனைத்திந்தியாவிலும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உச்சிக்குடுமி கத்தரிப்பு, பூணூல் அறுப்பு முதலிய 'அறப்போர்' முறைகள் இந்த நகரத்தில் செயல்படுத்தப்பட்டன.
இந்தப் போராட்டமுறை சரியா, தவறா என்பதைப்பற்றி பின்னால் கவனிப்போம். முதலில் இந்தப் போராட்டத்தின் லட்சியம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். ஜாதி ஒழிப்புக்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துவதாக ஈ.வே.ரா. கூறுகிறார்.
ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்.
ஜாதியமுறையை விரும்பாத, ஜாதியமுறையை எதிர்க்கிற, தம்மைப் பொறுத்த முறையில் ஜாதியமுறையை ஒழித்துவிட்ட எல்லாப்பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளால் மட்டுமே சர்க்காரை ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
இந்தப் பெரும்பணியை ஆற்றுவதற்கு ஜனநாயக ரீதியான சமாதானமான மனமாற்றும் முறைகள் மிகச்சிறந்த முறை என்பதையும் பலாத்காரமுறை தகுந்தமுறை அல்ல என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.
நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதிய தீய பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக்கட்டி விடுகிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி இந்தச் சிலரின் பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்துவிட முடியும் என்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்.
இனி ஈவேரா நடத்தும் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா 'காங்கிரஸில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'பார்ப்பனீயம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'சனாதன தர்மம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'இந்துமதம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'மதங்களே ஒழிய வேண்டும்' என்றும் போகப்போக பிரச்சாரம் செய்து கொண்டே போனார்.
(சிரிப்பு)
நெடுகலும் அவருடைய போக்கு இப்படித்தான். விரும்பினால் ராமமூர்த்தியை ஆதரிப்பார், ராஜகோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். வேறொரு பித்தம் கிளம்பினால் அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார்.
நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், சீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்காக காரணம் சொன்னார்.
(சிரிப்பு)
இன்று ஜாதி ஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இத்றகு ஒரு காரணம் சொல்கிறார்.
கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார், அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைத் தமிழ்நாடு நன்கறியும். அவர் காட்டிய வழியால் தமிழ்நாட்டில் ஜாதியவெறியும் ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக, பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து.
அன்பர்களே! ஜாதி ஒழிப்புக் கொள்கையைப் பொறுத்தமட்டில் ஒரு திட்டவட்டமான கருத்து இல்லாதவர் ஈவேரா என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டவே இதுவரை நான் சில கருத்துக்களைச் சொன்னேன்.
இனி இன்று அவர் நடத்தும் போராட்ட முறைகளை ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.
காவிரி ஆற்றங்கரையில் நாலைந்து பார்ப்பனர்கள் - இந்த நாட்டில் ஜாதி பிறந்ததற்கும், அது வளர்ந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்குநேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள், தங்கள் வழக்கப்படி குளித்து பூசை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அவர்கள் வைத்திருந்த சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தார்கள்; அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள்; அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள்; ஓட ஓடத் துரத்தினார்கள். ஈவேராவைப் பின்பற்றுகிற திகவினர் எடுத்த ஜாதி ஒழிப்பு நடவடிக்கை இது.
சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா?
(ஒரே சிரிப்பு)
காவிரி ஆற்றுவெள்ளம் ஒரு தனிமனிதனுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிறபொழுதே, ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதி முறையையும் அடித்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறார்களா? (சிரிப்பு)
நாலைந்து ஆட்களுடைய உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுத்தால் எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம்?
(சிரிப்பு)
குடுமியைக் கத்தரித்தால் ஜாதி போய்விடுமா? குருட்டு ஆவேசத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதிமுறையைக் கல்லால் அடித்ததாகுமா?
(சிரிப்பு)
ஓட்டல்களில் உள்ள ட்யூப்லைட்களை உடைத்து நொறுக்கினால் சாதிமுறையை உடைத்து நொறுக்கி விட்டதாகக் கருதுகிறார்களா?
(சிரிப்பு)
பூணூலையும், உச்சிக்குடுமியையும் அறுப்பது என்று வந்தால், நாடு முழுவதிலும் உள்ள பூணூல்களையும், உச்சிக்குடுமிகளையும் ஒரு சிலர் அறுக்க அனுமதிப்பார்களா? அல்லது தாக்குதலுக்கு பயந்து ஓடுவார்களா? எதிர்த்துத் தற்காப்பிற்குத் துணியமாட்டார்களா? இப்படிச் சிலர் மனம் போன போக்கில் மற்றவர்களைத் தாக்கும்போது பக்கத்தில் இருப்போர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்களா? அராஜகக் குழப்பத்தின் நடுவிலன்றி, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கின்ற தாறுமாறு பிடித்தாட்டும் சூழ்நிலையிலன்றி, சில கட்டுத்திட்டத்தில் இயங்கும் எந்தச் சர்க்காரும் இதை அனுமதித்துக் கொண்டிருப்பார்களா?
எந்த வகையாலும் இந்தகைய அநாகரிகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல என்பதை என்னோடு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆழம் பாய்ந்த ஒரு சமுதாயக் கேட்டை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும் என்றால், சகல பகுதி மக்களின் ஒத்துழைப்போடு சர்க்காரின் நடவடிக்கையும் தேவை என்பதையும், அதுதான் ஜனநாயகமுறை என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்வீர்கள். இந்தப் பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு போன்ற செயல்கள் நாகரிகச் செயல்கள் அல்ல, அநாகரிகச் செயல்கள் என்கிறோம். நிதானமான செயல்கள் அல்ல, வெறித்தனமான செயல்கள் என்கிறோம்.
எனவே இந்தச் செயல்களை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
இது மட்டுமல்ல; சிலருடைய உச்சிக்குடுமி, பூணூல் அறுப்பு திருப்பணி தொடர்ந்து அனுமதிக்கப் பட்டால் .. என்று வைத்துக் கொள்வோம். சிலரிலிருந்து பலராக விரியும். உச்சிக்குடுமி பிடிக்காமல் அறுத்தால், தாடி பிடிக்காமல் அறுக்கத் தூண்டும். (சிரிப்பு)
இதிலிருந்து வெட்டுப்பழி, குத்துப்பழிக்கு வழிபிறக்கும். அதிலிருந்து ஒரு ஜாதியை ஒரு ஜாதி ஒழித்துக்கட்டும் அத்தியாயம் ஆரம்பமாகும். இறுதியில் நாடு சுடுகாடாகும். இந்தப் போக்கு - இந்த அநாகரிகப் போக்கு அனுமதிக்கப்படத் தக்கதுதானா? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
குறிப்பிட்ட ஒரு ஜாதியை தனிமைப்படுத்தி, அநாகரிகமான முறையில், கண்மூடித்தனமாகத் தாக்குவதால், சமுதாயம் முழுவதிலும் பரவி நிற்கும் ஜாதிமுறையை ஒழித்துக்கட்டிவிட முடியாது.
இன்றைய யதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்த்தால் பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிர்ப்பு என்றோ, மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றோ சொல்வதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இன்னும் கேட்டால் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களே மேலும் மேலும் பெருகி வருகிறார்கள். இது கண்கண்ட உண்மை.
ஆகவே ஜாதி ஒழிப்பின் பேரால், பார்ப்பனர்களை மட்டும் - இன்னார் இனியார் என்று பாராமல் - தாக்கி வெறிச்செயல் நடத்துவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் துளிக்கூட பொருந்தாத தரங்கெட்ட செயலாகும்.
(நூல்: மேடையில் ஜீவா)

Wednesday, July 06, 2005
பாபர் மசூதி இடிப்பும் மார்க் துலியும்
இந்த கட்டுரையில், முன்னாள் BBC நிருபர் மார்க் துலி இந்து மத வெறியர்களால் வட இந்தியாவின் அயோத்தி நகரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நினைவு கூறுகிறார்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எல்லா பத்திரிகையாளர்களுமே எதோ ஒரு நிகழ்ச்சியை தவறாக கணித்திருப்பார்கள்.என்னுடைய பங்குக்கு நான் 1992ல் 1,50,000 இந்து தேசியவாத ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் அயோத்தியில் குழுமியிருந்த போது நடக்கவிருந்ததைத் தவறாகக் கணித்தேன்.
அவர்கள் ராமரின் பிறந்த இடமாக நம்பப்பட்ட இடத்தில் கோவில் கட்ட எண்ணியிருந்தார்கள்.
ஆர் எஸ் எஸ் வெறும் அடிக்கல் நாட்டுவதற்கான மதச் சடங்கு மட்டுமே நடக்கும் என்றும் மசூதியை எதுவும் செய்ய மாட்டோம் என்றும் உறுதி அளித்திருந்தார்கள்.
பின்னாளில் இந்தியாவின் துணைப் பிரதமரான திரு எல் கே அத்வானி, அப்போது எதிர்கட்சியிலும், பாபர் மசூதியை இடித்துக் கோவில் கட்ட விழைந்த இயக்கத்தின் தலைவராகவும் இருந்தார். அவர் பிரதம மந்திரிக்கு எந்த தவறும் நேராது என்று உறுதியளித்திருந்தார்.
போலிஸ் மற்றும் துணை ராணுவப் படைகள் அயோத்தியில் குவிக்கப்பட்டிருந்தது. பிரதமரின் ஆலோசகர்கள் மசூதி பத்திரமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிக்கலாமென்றும் பிரதமரிடம் கூறியிருந்தனர்.
ஆர் எஸ் எஸ் இயக்கம் கட்டுப்பாட்டிற்குப் பெயர் போனது. அந்த நற்பெயருக்கு இந்தச் சடங்கு "இப்பொதும் முடியுமா?" என சவால் விடுவதாக இருந்தது.
ஆனால் துவக்கத்திலேயெ இது அமைதியான ஒர் நிகழ்ச்சி அல்ல என்பது தெளிவாகிவிட்டது.
அது துவங்கும் முன்னர் நான் அருகில் மசூதியை நோக்கிய, தொலைபேசி வசதியுள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் அமர்ந்து செய்தி சேகரிப்பதற்காக இதனைப் பார்த்திருந்தேன்.
அந்த காலகட்டத்தில் செயற்கைக்கோள் தொலைபேசிகள் இந்த அளவு இருக்க வில்லை.
இந்துக்களின் நீண்ட சடங்குகளை நான் பார்த்துக்கொண்டிருந்த போது தலையில் மஞ்சள் துணி அணிந்த இளைஞர்கள் வேலித்தடுப்பை உடைத்துக்கொண்டு சடங்கு நடந்த இடத்திற்குள் புகுந்த காட்சியை படம் காட்டுவது போல என் வார்த்தைகளால் தொலைக்காட்சியின் படத்துக்கு ஈடாக விவரிக்க முடியுமா என்று வியந்து கொண்டிருந்தேன்.
தொலைக்காட்சி குழுவினர் தான் அவர்களது குறி. அவர்களை கழிகளால் தாக்கி, கீழே தள்ளி அவர்களது படப்பிடிப்புக் கருவிகளை உருட்டிக் கொண்டு சென்றனர். இது மசூதியின் மீது நடக்க விருந்த தாக்குதலுக்கு கட்டியம் கூறுவது போல இருந்தது.
துப்பாக்கி சூடு நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த போலிசாரை நோக்கி கோஷமிட்டுக் கொன்டிருந்த இந்துக்கள் அலை அலையாக, மசூதி நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
திடீரென்று இரண்டு இளைஞர்கள் மசூதியின் கோபுரத்தின் மீதேறி அதை உடைக்கத்தொடங்கியதைப் பார்க்க முடிந்தது.
அது தான் கடைசியாக நான் மசூதியின் கோபுரத்தைப் பார்த்தது. அந்தக் கும்பல் தொலைபேசி தொடர்புகளை துண்டித்து விட்டதால் நான் செய்தி தருவதற்க்காக அருகிலுள்ள பைசா பாத் நகரத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று.
நான் அயோத்யா திரும்பியதும் கும்மாளமிட்டுக்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிராக அசிங்கமான கோஷங்களிட்டுக் கொண்டு ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் குறுகிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தார்கள்.
நான் காரை விட்டு இறங்கியதும் கோபமாக என்னைச் சூழ்ந்து கொண்ட ஒரு கும்பல் என்னை ஒரு பழைய கோவிலில் அடைத்து வைத்தனர்.
என்னை விடுதலை செய்த போது, இருட்டியிருந்தது. மசூதி முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டிருந்தது.
இதுபோல பல நிகழ்ச்சிகளை இந்தியாவில் நான் பார்த்திருந்தாலும், BBC க்கு செய்தியாகத் தொகுத்ததில் ஒரு நிகழ்ச்சி பற்றி கூறும்படி கேட்ட போது, இந்த நிகழ்ச்சியையே தேர்ந்தெடுத்தேன்.
ஏனெனில் இது "இந்தியர்கள் இப்படி செய்வார்கள் இப்படி செய்ய மாட்டார்கள்" என்ற எனது எண்ணத்தைப் பொய்ப்பித்த நிகழ்ச்சி.
இந்தியப் பண்பாடு இயற்கையிலேயே எல்லா வற்றையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. பல நூற்றாண்டுகளாக பல்வேறு மதஙளை தன்னகத்தெ ஏற்றுக்கொண்டு வாழ வைத்திருக்கிறது.
இந்துக்கள் பலகாலமாக கடவுளை அடைய பல வழிகள் உண்டு என்று ஒத்துக்கொண்டவர்கள் மற்றும் ஒரு 20ம் நூற்றாண்டு அறிஞர் சொன்னது போல "மற்றா மதஙளின் விட்டுக்கொடுக்கத கொள்கை ரீதியான உறுதிப்பாடு (பிடிவாதம்) இந்துக்களுக்கு அதிர்ச்சி ஊட்டுவதாகவும், புரிந்துகொள்ள முடியாததாகவும் இருந்தது"..
அதனால் பெருவாரியான இந்துக்களைஉடைய இந்தியா மதவெறியால் பாதிக்கப்படாத இடமாக இருக்க வேண்டும். உலகத்தின் பல்வேறு நாடுகளில் பல மத அடிப்படையில் சேர்ந்து வாழ முடியாத மக்களுக்கு இந்தியாவின் பல மதஙகள் இணைந்த சமுதாயம் ஒரு தெளிவான உதாரணமாகத் திகழ வேண்டும்.

Friday, July 01, 2005
ஊடாடிப் படித்தல்.
reading between the lines என்பதை இப்படி மொழி பெயர்த்திருக்கிறென். இனி கொஞ்சம் ஊடாடிப் படிப்போம்:
கீழே உள்ளது இன்று செய்தித்தாளில் வந்த செய்தி. (எல்லா கருத்துகளும் நகைச்சுவை உணர்போடு எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.. நான் யாருடனும் சொற்போர் புரிய விரும்பவில்லை)
."வெளியில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர் அல்ல' கவிஞர் பா.விஜய் நுõல் வெளியிட்டு கருணாநிதி பேச்சு!
சென்னை:""அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் அயோக்கியர்களும் கிடையாது; வெளியில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர்களும் கிடையாது,'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய 12 நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி நூல்களை வெளியிட கவிஞர் வாலியும், நடிகர் கமலஹாசனும் பெற்றுக் கொண்டனர். விழாவில் கருணாநிதி பேசியதாவது:
நடிகர் கமலஹாசனுக்கு "கலை ஞானி' என்றும், கவிஞர் வாலிக்கு "காவியக் கவிஞர்' என்றும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு "இசை ஞானி' என்றும், கவிஞர் வைரமுத்துவுக்கு "கவிப் பேரரசு' என்றும் நான் பட்டங்கள் வழங்கினேன். அந்த பட்டங்கள் நீடித்து, நிலைத்து பெயர் பெற்றன.
அப்படியா.. முதல் இரண்டயும் கேட்டதாகவே தெரியவில்லையெ..
அந்த வரிசையில் திறமையாக பாடல் எழுதும் பா.விஜய்க்கு, "வித்தகக் கவிஞர்' என்ற பட்டத்தை வழங்குகிறேன்.
இதாவது நிலைக்குமா.. கவர்ச்சியாக இல்லையே
விஜய் தனது நூலில் அரசியல்வாதிகளைப் பற்றி எழுதியுள்ளார். "அரசியல் வாதிகள் ஏன் பொய் பேசுகின்றனர் என்றால், அவர்கள் உண்மை பேசினால் மக்கள் நம்புவதில்லை' என்று கூறியிருக்கிறார்.
நாங்களும் உண்மைகள் பேசுவோம், அடுத்தவரைக் குறை சொல்லும் போது மட்டும். எல்லாரும் நம்புவதில்லை என்று கூற முடியாது.. என் கட்சி காரர்கள் நிச்சயம் நம்புவார்கள். இல்லாவிட்டால் இத்தனை பேர் ஓட்டு போடுவார்களா.
"அரசியல்' என்ற சொல் தகாத சொல் அல்ல ; வேண்டத் தகாததும் அல்ல.
அதை அகராதியிலிருந்து நீக்கிவிட்டால் நாங்கள் என்ன செய்வது.
அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் அயோக்கியர்களும் கிடையாது ; வெளியில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர்களும் கிடையாது. அரசியலிலும், வெளியேயும் சில "கறுப்பாடுகள்' இருக்கலாம். ஒட்டுமொத்தமாக எல்லாரையும் அயோக்கியர்கள் என்று கூறிவிட முடியாது.
பதவிக்கு வராத, வர முடியாத அரசியல் வாதிகள் பற்றிக் கூறுகிறேன். அவர்கள் அரசியலில் இருந்தாலும் அவர்கள் அயோக்கியர்கள் இல்லை. ஆனால் அவர்களிலும் சில கறுப்பாடுகள் உள்ளன. அதனால் அரசியலில் பதவிக்கு வெளியில் இருப்பவர்கள் எல்லரும் யோக்கியர்களும் இல்லை.
அதனால் அரசியல் என்ற சொல் தவறான சொல் அல்ல. திருக்குறளில் பொருட்பால் அதிகாரத்தில், 381ம் குறள் முதல் 630ம் குறள் வரை எல்லாமே அரசியல் சம்பந்தபட்ட குறள்கள் தான். அரசியல் என்ற சொல் தவறு என்றால் திருவள்ளுவர் எழுதியிருப்பாரா?
அவர் அப்படி எழுதி இருந்தால் திருக்குறளே பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகியிருக்குமே, மஞ்சள் துண்டிட்டு மூடிவைத்திருக்க மாட்டோமா?
டாக்டர்கள் சிலர் தவறு செய்கின்றனர் என்பதற்காக எல்லா டாக்டர்களுமே தவறு செய்பவர்கள் அல்ல.
தைலா புரத்தில் (இருப்பவர் கூட்டணியைப் பிரிக்க முற்படும் போது )மட்டும் தான் அப்படி.
சிலர் கொள்ளை அடிக்கின்றனர் என்பதற்காக எல்லாருமே கொள்ளைக்காரர்கள் என்று கூற முடியாது.
அம்மையார் மட்டும் தான் அப்படி இருக்கலாம்.. லாலு வைப்பற்றி அப்படி கூறலாமா? சர்காரியா கமிஷனுக்குப் பிறகு மக்களால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு என்னை முதலமைச்சர் ஆக்கப்பட்ட காரணத்தால் இன்று நான் அதைப் பற்றி பேச அருகதை உள்ளவனாகிறேன். (அம்மையாருக்கு இது பொருந்தது ஏனெனில் அவர் மக்களிடம் நான் கேட்டது போல் "இந்த தண்டனை போறாதா" என்று கேட்கவில்லை.)
நிர்வாகம் தெரியாமல் சிலர் இருக்கின்றனர் என்பதற்காக எல்லாருமே நிர்வாகம் தெரியாதவர்கள் என்று அர்த்தம் அல்ல.
இச்டாலின் நிர்வாகம் தெரியாவிட்டலும் கற்றுக்கொள்ளுவார்.. நான் கற்றுக்கொடுத்துவிட்டுத் தான் போவேன்..அதற்காக வைகோ விடம் தி மு க வை தந்துவிட முடியாது. வைகோ தம்பி தான் மகன் இல்லை.. ஆகவே சொத்தில் பங்கில்லை.
"நான்' என்ற வார்த்தை தவறா என்று கவிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். "நான்' என்று எப்போதும் கூறக் கூடாது, "நாம்' என்று தான் கூற வேண்டும் என்று பல ஆண்டாக நான் வலியுறுத்தி வருகிறேன்.
அம்மையார் இதை மறுத்துக் கூறினால் முரசொலியின் ஏடுகள் சான்று பகரும். உதவியாளர் புள்ளி விவரங்களைத் தயாராக வைத்திருக்கிறார்.
சுட்டிக் காட்டக் கூடிய இடத்தில் மட்டுமே "நான்' என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். "நான் செய்தேன், நான் இல்லா விட்டால் செய்ய முடியாது' போன்றெல்லாம் கூறக் கூடாது. இது அகம்பாவத்தையும், எதேச்சதிகாரத்தையும் ஏற்படுத்தி விடும்.
இதனை அம்மையார் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்பரும், பாரதிதாசனும் கூட "நாம்' என்ற வார்த்தையைத் தான் தெரிவித்துள்ளனர். எனவே "நாம்' நாமாகவே இருப்போம். அந்த உறுதியை மனதில் ஏற்போம்.
தமிழகத்தில் கூட்டணியை இச்டாலின் முதலமைச்சர் ஆகும் வரையாவது காப்போம்.
அப்பரைப் பற்றிப் பேசி இருப்பதை கவனிக்கவும். சங்கராச்சாரியாரும் (காப்பாற்றுவேன் என்று) இதைப் புரிந்து கொண்டுவிட்டார். அந்தணர்களும் மடத்தை நம்பும் மற்ற இனத்தவர்களும் (அம்மையார் செய்வது போல்) ப்ல்லாயிரம் கோவில் கட்டி குடமுழுக்கு செய்த வகையில் இதை ஏற்று தி மு க விற்கு வாக்களியுங்கள்.
(பாரதிதாசனைச் சேர்த்ததால் பகுத்தறிவுவை கொள்கையயும் விட்டு விட வில்லை)

'பழம் பஞ்சாங்கம்'
இது கணினி பற்றி அமெரிக்கர்கள், பிற நாட்டினர் நினைப்பதற்கு முன்னலே நம் நாட்டில் நடந்துவரும் கணிதம் தொடர்பான முன்னேற்றம். மூட நம்பிக்கை என்று ஒதுக்கப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இது போன்ற் பல நூறு விஷயங்கள் வட மொழியில் உள்ளது. பிராமணர்களை வெறுத்ததால் வட மொழியை வெறுத்தோம். கடவுளை வெறுத்ததால் தமிழில் உள்ள மருத்துவ அறிவியல் நூல்களையும் வெறுத்தோம்.
இப்போது இவை ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்படுகிறது. அன்னிய நாட்டவர் கற்று உரிமை பெற விழைகிறார்கள்.. தடுக்க ஊர் ஊராக அலைகிறோம்..
வேடிக்கை மனிதர்கள் நாங்கள்.
அன்புடன் விச்சு
'பழம் பஞ்சாங்கம்' என்று அடிக்கொரு தரம் அலுத்துக்கொள்வார் நண்பர். 'கம்ப்யூட்டர் யுகம் சார் இது. இப்ப போயி இந்தப் பழம் பஞ்சாங்கம் இப்படிச் சொல்கிறது' என்று யாரைப் பற்றியாவது சொல்வார். ஆனால் கணினி யுகத்தில் பஞ்சாங்கம் - பாம்புப் பஞ்சாங்கம் மட்டும் எவ்வளவு விற்கிறது தெரியுமா? நம்புங்கள். இரண்டரை லட்சம் பிரதிகள். ஆமாம். அசல் 28 நெ. ஈஸ்வர சுத்த வாக்ய பஞ்சாங்கம்தான்.
பலருக்குப் பஞ்சாங்கம் என்றால் பாம்புப் பஞ்சாங்கம்தான். 'வேற பஞ்சாங்கம் கூட இருக்கிறதா என்ன' என்று கேட்பவர்களும் உண்டு. மேலட்டையில் நீண்டு கிடக்கும் ஐந்து தலைப் பாம்புதான் இந்தப் பஞ்சாங்கத்தின் பெயர்க் காரணம் என்பது புரிகிறது. ஆனால், அதென்ன அசல் 28 நெ.?
பாம்புப் பஞ்சாங்கம் முதன் முதலில் கொன்னூர் மாணிக்க முதலியாரால் 150 வருஷங்களுக்கு முன்னால் பதிப்பிக்கப் பட்டது. அவருடைய அதிர்ஷ்ட எண் 28. அவர் வீட்டுக் கதவிலக்கம் 28. இந்த எண் ராசி அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. பஞ்சாங்கம் 28 பக்கங்கள் கொண்டதாகப் பதிப்பிக்கப் பட்டது. இந்த ஆண்டு வந்திருக்கும் பஞ்சாங்கத்தை வேண்டுமானால் புரட்டிப் பாருங்களேன்!
அப்படியாகத்தான் 28 நெ பஞ்சாங்கத்தின் பெயரோடு இணைந்தது. ராசியைப் பற்றிய நம்பிக்கையைக் கொஞ்சம் தளர்த்தினால் பக்கங்களின் எண்ணிக்கையைக் கூட்டி, விளம்பரங்களும் பிரசுரிக்கலாம். அதிக வருவாய் கிட்டும். ஆனால் பதிப்பாளர்கள் இந்த விஷயத்தில் விட்டுக் கொடுப்பதாக இல்லை. அப்புறம் சுத்த வாக்கியம் என்ற பெயர். பஞ்சாங்கம் வாக்கிய கரண அடிப்படையில் கணிக்கப்படுவதால் அந்தப் பெயர்.
வடசென்னையின் கொண்டித்தோப்புப் பகுதியிலிருந்து வெளிவரும் இந்தப் பஞ்சாங்கம் தமிழ்நாடெங்கும் பயன்படுத்தப்படுகிறது. மட்டுமல்ல. தமிழ் கூறும் நல்லுலகம் எங்கெங்கு உண்டோ அங்கங்கெல்லாம் பாம்புதான் நல்ல நேரத்தைக் கணிப்பதற்குப் பயன்படுகிறது. 'சிங்கப்பூர், மலேசியாவில் மட்டும் ஆயிரம் பிரதிகள் செலவாகின்றன' என்கிறார் பஞ்சாங்கத்தைத் தற்போது பதிப்பிப்பவர்களில் ஒருவரான திரு. சிவகுமார். 'கனடாவிலும்
அமெரிக்காவிலும் உள்ள தமிழர்கள் அவர்களுடைய நேர அமைப்பிற்கேற்றபடி தனிப்பஞ்சாங்கம் போடும்படி கேட்கிறார்கள். விரைவில் அவர்களின் தேவையையும் பூர்த்தி செய்வோம்' என்கிறார்.
ஆங்கில ஆண்டின் ஏப்ரல் மாதத்தில்தான் தமிழாண்டு தொடங்குகிறது. எனினும் பஞ்சாங்க வேலைகள் எப்போது தொடங்குகின்றன தெரியுமா? இந்த ஆண்டு மே மாதம், அடுத்த தமிழாண்டுக்கான பஞ்சாங்க வேலைகளைத் தொடங்குவார்கள். ஒவ்வோராண்டும் இப்படித்தான். கிட்டத்தட்ட ஓராண்டு முன்னதாகவே வேலை ஆரம்பித்துவிடும். வினாயக சதுர்த்தி வருவதற்குள் வேலை முடிந்து ஒரு திருத்தாப் படிவம் (rough copy) தயாராகிவிடும். அடுத்த ஆங்கில ஆண்டு ஜனவரி மாதம் பஞ்சாங்கம் விற்பனைக்கு வந்துவிடும். அதாவது தமிழ் ஆண்டு பிறப்பதற்குச் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னாலேயே!
அப்படி இருந்தாலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இந்த கால அவகாசமும் போதவில்லை. 'இன்னும் முன்னால் கொண்டு வாருங்கள்' என்கிறார்களாம். ஆமாம். முகூர்த்தம் குறித்தால்தானே திருமணச் சத்திரங்களை முன்னதாகப் பதிவு செய்துகொள்ளலாம்? முகூர்த்த நாளன்று அத்தனைச் சத்திரங்களுக்கும் கிராக்கி ஏறிவிடும். ஐந்தாறு மாதங்கள் முன்னதாகப் பதிவு செய்துவிட்டால் வசதியாக இருக்கும் என்பது அவர்களின் வேண்டுகோள்.
இந்துக்கள் மட்டுமல்ல. முஸ்லிம்களும் பாம்புப் பஞ்சாங்கத்தையே விரும்பிப் புரட்டுகிறார்கள். பிறை தோன்றும் நேரம் போன்ற அவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்கிறது பாம்புப் பஞ்சாங்கம்.
இருபத்தோராம் நூற்றாண்டு வந்துவிட்டால் மட்டும் அடிப்படை நம்பிக்கைகள் மாறிவிடுமா, பஞ்சாங்கம்தான் தேவையற்றுப் போய்விடுமா? 'கணினி யுகத்துப் பழம் பஞ்சாங்கத்தைப் பற்றி முணுமுணுத்த நண்பருக்குத் தெரியாத ரகசியம் ஒன்றைச் சொல்லவா? இப்போதெல்லாம், அதாவது கடந்த ஐந்தாண்டுகளாக, பாம்புப் பஞ்சாங்கத்தைக் கணிப்பதற்குக் கம்ப்யூட்டர் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது. இது கணினி யுகத்துப் பஞ்சாங்கமா அல்லது பயன்படுத்தப்படுவது பஞ்சாங்க யுகத்துக் கணினியா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
இது அமெரிக்காவில் வரும் தென்றல் இதழிலிருந்து. இதை அரி கிருஷ்ணன் மொழி பெயர்த்திருந்தார்.. மூல ஆசிரியர் பற்றிய குறிப்பு இல்லை

Subscribe to:
Posts (Atom)