Wednesday, September 14, 2005

110.நன்றி

நன்றி

தமிழில் தட்டச்சத் தெரியாது என்று கூறி இத்தனை வருடமாக எழுதாமல் இருந்த என்னை தமிழ்மணம் என்ற வலைபூ தளத்தைக் காட்டி எழுதத் தூண்டிய ரங்காவிற்கும்

குப்பைகளை வெட்டி ஒட்டி நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்த என்னை உங்கள் கருத்தை எழுதுங்கள் என்று வழிப்படுத்திய குழலி க்கும்

கதை கவிதை எழுத வருமா என்ற சந்தேகத்தை உடைத்து எழுதிப்பார் என்று சவால் விட்ட நாராயணன் வெங்கிட்டு மற்றும முகமூடி ஆகியோருக்கும்

என் பதிவுகளைப் படித்து ஆர்வமூட்டிய இன்ன பிற நண்பர்களுக்கும் என்னுடைய இந்த ஊக்கப் பரிசு காணிக்கையாகிறது.

தொடர்ந்து என் பதிவைப் படியுங்கள்.. உங்கள் கருத்தை எழுதுங்கள். உங்கள் கருத்துகள் படிக்கற்களாகவும் வாழ்த்துக்கள் தோரணமாகவும் என்பதிவை அலங்கரிக்கும்.

நான் போபால் கலவரம் பற்றிய பதிவை எழுதியதும், நிறைய பேர் என்னை பாராட்டினார்கள்.. முதல் பரிசு பெற்ற கதையாக எழுதிய அவருடைய அனுபவத்தையும் சுரெஷ் அந்த பதிவில் நினைவு கூர்ந்திருந்தார். இவை அனைத்துக்கும் மேலாக மாலன் இட்ட பின்னூட்டத்தில் இதை கதை யாக எழுதலாமே என்று எழுதி என் கதை எழுதும் ஆர்வத்தை தூண்டி விட்டார்..

ஒரு கதை எழுத வேண்டும் என்று இரண்டு கதைக் களங்களை சிந்தித்து வந்தேன்.. ஒன்று "காதல் விலங்கு" என்ற பெயரில் மூன்று பாகங்கள் எழுதப்பட்டு, இறுதி பாகம் எழுத நேரமில்லாமல் நிற்கிறது. இரண்டாவது
இறுதி பாகம் எழுத நேரமில்லாமல் நிற்கிறது. இரண்டாவது "யார் குற்றம்" என்ற கதை. இது லண்டனில் பிரசில் நாட்டவர் சுடப் படுவதற்கு முன்பாகவெ சிந்திக்கப் பட்டு விட்டது. இதை பற்றி நண்பர் ரங்காவிடம் கூறி ஓரிரு வாரங்களுக்குள்ளாகவே லண்டன் நிகழ்வு.. ரங்கா இடை விளையாட்டாக "விச்சு நினைக்கிறான் வெற எவனோ செய்யரான்" என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார்.

"அரசதிகாரம் மேற்கொண்ட அபத்தமான நடவடிக்கைக்காக, அந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர் ஏன் குற்ற உணர்விற்கு, அவமான உணர்விற்கு உள்ளாக வேண்டும் என்பது விளங்கவில்லை" என்று மாலன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

இது போன்ற ஒரு சுழலில் சிக்கி வெளிவர முடியாமல் தவிக்கும் கதாபாத்திரமாகவே கதாநாயகன் இருக்கிறான். எத்தனை சொன்னாலும் "நெருப்பில்லாமல் புகையாது" என்று பேசி புண்ணைக் கொத்தும் காக்கைகள் இருக்கும் வரை ராமர்கள் சீதையை தீக்குளிக்க வைப்பார்கள் என்பது தான் என் எண்ணம். இதனால் என்ன வந்தது என்று எண்ணும் மனப் பக்குவம் அவனுக்கு (என் கதாநாயகனுக்கு )இல்லை. நான் இங்கு (அமெரிக்காவில்) பார்த்த பலரின் பாதிப்பு தான் அந்த பாத்திரம்.

இரண்டாவது கதையான "சின்ன வட்டம் " என் அனுபவமே. அதில் என் கருத்துகளை சேர்த்து எழுதியிருந்தேன். தாத்தா கூறிய "Thinking big", எதாவது கருத்து கூறவேண்டும் என்று நான் நினைத்ததால் வந்தது. அது கதையின் ஆழத்தை நோக்கத்தை குறைத்தது, மாலன் கருத்தை படித்த பிறகு எனக்கும் விளங்குகிறது.

பரிசு பெற்ற இந்த கதைகளைப் பற்றி மாலன் எழுதிய கருத்துக்கள் ஒரு கதைக்கும் சிறந்த கதைக்கும் இடைப்பட்ட வேறு பாடுகளைத் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வளவு தூரம் ஆய்ந்து பரிசு வழங்கிய மாலன் அவர்களுக்கும் என்னுடைய நன்றி.

எனக்காக ஒரு சிறப்புப் பரிசை ஏற்படுத்திய முகமூடி அவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். சமீபத்தில் நெய்வேலி சித்ரா எழுதி இருந்தது போல, பரிசு மட்டும் மகிழ்ச்சி தரும் விஷயமல்ல, நம் கதைகூட எதோ ஒரு வழியில் சிறப்பானதாக இருக்கிறது என்ற எண்ணமும் நிறைய ஆர்வத்தைத் தூண்டும்.. மாலன் முதலில் ஒரு 10 கதைகளைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியிருந்தார். அவற்றில் ஐந்து தெரிந்து விட்டது. மற்ற ஐந்தையும் தெரிவிக்கலாமே. மற்றவர்களுக்கும் இது ஊக்கம் தருவதாயிருக்கும் என்பது என் எண்ணம். இதில் செயல் முறை இன்னல்கள் இருக்குமாயின் என் ஆர்வக்கோளாறை மன்னிக்கவும்.

நண்பர் Sanjeeth (in the feedback of the prize announcement) சொன்னது போல, தமிழ்மணமெ இது போல் ஆண்டிற்கொருமுறையோ இரு முறையோ போட்டிகள் நடத்தலாமெ.. இதற்கு என்னாலான பங்களிப்பைச் செய்ய / தரத் தயாராக இருக்கிறேன்.

என் கதை இரண்டாம் பரிசு பெறும் என்று நினைத்ததாக எழுதி இருந்த "தேன் துளி" பத்மா அரவிந்துக்கு ஒரு சிறப்பு நன்றி. என் மேல் இவ்வளவு பேர் நல்லெண்ணம் வைத்திருப்பதைப் பார்க்கையில் நான் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை.

இந்தப் போட்டியில் கதை எழுதி பங்குகொண்ட அனைத்து சக போட்டியாளர்களுக்கும், பரிசு பெற்றவர்களுக்கும் என்னுடைய நன்றியும் பாராட்டுகளும்.

இறுதியாக, என் கதையைப் படித்து விட்டு, அமெரிக்காவில் இது போன்ற சென்சிடிவ் விஷயங்களை பொது இடத்தில் பேசக்கூடாது என்று பல நிகழ்வுகளின் மூலம் தெரிந்தும் அதைப் பற்றிப் பேசி சிக்கலில் மாட்டிக் கொண்ட உன் கதா பாத்திரங்களுடையது தான் குற்றம் என்று தீர்ப்பளித்த என் மனைவிக்கும் நன்றி. இந்த தீர்ப்புக்கு அப்பீலே இல்லை

அன்புடன் விச்சு

7 comments:

ooviyam said...

அன்புள்ள விசு,
என்னுடைய ஆட்டோகிரா•ப் படித்து விட்டு நீங்க எழுதிய கடிதத்திற்கே பதில் போட்டு திரும்பி வந்து விட்டது.ஏன்? என்பது புரியவில்லை. இருந்தாலும் நம்ப நெய்வேலி முந்திரிப்பழத்தைப் பற்றிக் கேட்டு எழுதியிருந்தீங்க! பாக்க நன்றாக நல்ல மணத்தோடு இருந்தாலும் சாப்பிட்டால் உவ்வே! அதே போல் இங்கேயும் பாக்க நம்ப ஊர் சின்ன சைஸ் பலாப்பழம் போல் முகர்ந்து பார்த்தால் நேரே சொர்க்கத்திற்குப் போகலாம் போன்ற நெஞ்சடைக்கும் மணத்துடன் டுரியான் பழம் என்று ஒன்று இருக்கிறது. ஆனால் சாப்பிட்டால் அந்த சுவை பிடித்துப் போய் விட்டால் நம்ப நெய்வேலி பலாப்பழத்தைப் போல படு சுவையாக இருக்கும் என்று கற்பூர வாசனை அறிந்த சிலர் சொல்கிறார்கள். இந்த உவமையும் சில பரிசு பெறும் விஷயங்களுக்குச் சொல்லலாம். வாழ்த்துக்கள். உங்க கதை இரண்டையும் படித்து விட்டு அப்புறம் என்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
சித்ரா

வீ. எம் said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் விச்சு,
அதிலும் உங்களின் 2 கதைகள் பரிசு பெற்றுள்ளது.. இரட்டிப்பு மகிழ்ச்சி , இரண்டு வாழ்த்துக்கள்..
என் ரிலே ரேஸ் பார்ட்னர் வெற்றிபெற்றிருப்பது மிக்க சந்தோஷம்..
//மற்ற ஐந்தையும் தெரிவிக்கலாமே. மற்றவர்களுக்கும் இது ஊக்கம் தருவதாயிருக்கும் என்பது என் எண்ணம். இதில் செயல் முறை //

நல்லதொரு கருத்து.. முகமூடி அவர்கள் ஆவண செய்வாரா??

neyvelivichu.blogspot.com said...
This comment has been removed by a blog administrator.
neyvelivichu.blogspot.com said...

அன்புள்ள சித்ரா,

கருத்துக்கு நன்றி. என்னுடைய மின்னஞ்சல் svishy@gmail.com. பலாப் பழமும் மாம்பழமும் தினமும் தின்று சலித்துப் போன காலம் அது.. இங்கெ மெக்சிகோவிலிருந்து வரும் ஒரு மாம்பழம் தான்.. எங்கள் வீட்டில் 8 வகையான மாம்பழங்கள் இருந்தன..ம்ம்ம்ம்...

ஒன்று வேண்டுமென்றால் ஒன்றை விடத்தான் வேண்டும்..

என் கதைகளைப் பற்றி உங்கள் கருத்தை எழுதுங்கள். (காரசார மான சுப்புடு வகை விமர்சனம்)

மொத்தமாக இப்பொது நெய்வேலிக்காரர்கள் நான்கு பேர் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். மாயவரம் மாபியா போல ஒரு குழு ஆரம்பிக்கலாம்..

அன்புடன் விச்சு

neyvelivichu.blogspot.com said...

அன்புள்ள வி எம்.

கருத்துக்கு நன்றி,

னானும் முகமூடி எதவது கருத்து சொல்வார் என்று எதிர் பர்த்து காத்திருக்கிறென்.. அவர் ஆளையே காணும்..

அன்புடன் விச்சு

Anonymous said...

powerful WYSIWYG Text Editor
import pre-recorded voice or music file

Anonymous said...

##Deadeasy##