இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பேட்டியின் சுருக்கம்,
பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களை வெளியிடுவதில் பெங்களூரை விட சென்னை பின் தங்கியிருந்தது. இப்போது சென்னைப் பெண்களும் செக்ஸ் பற்றிய மனத் தடைகளை கடந்து வருகின்றனர். செக்ஸ் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேச முடிகிறது.
ஒரு பெண் தனது பாய் பிரண்ட் பற்றி உறுதியாக இருக்கும்போது அதை தன் பெற்றோரிடம் சொல்லலாம். தங்களது பெண் சீரியஸான ஒரு உறவை வைத்திருக்கும்போது அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.
ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்.
கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நான் காதலித்த நபரையே திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் எங்கள் உறவு குறித்து நிச்சயமாக இருந்ததால் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம். இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள். குழந்தைகள் எங்களுடனேயே தூங்குவதால் எங்களுக்கென்று நாங்கள் தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டிருக்கிறது.
மண வாழ்வில் ஈடுபடும் பெண்ணும் ஆணும் ஒருவருக்கு ஒருவர் உடல்ரீதியாகவும் மகிழ்ச்சியளிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முழுமையாக திருப்தியடையச் செய்வது தான் ஆனந்தம். சில தம்பதிகள் செக்ஸ் புத்தகங்கள், படங்களைப் பார்த்து இன்பத்தை பெருக்கிக் கொள்கின்றனர். அதை தவறு என்று சொல்ல முடியாது.
பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களைப் பேசினால் அவர்களைத் தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாற வேண்டும்.
இவ்வாறு குஷ்பு பேட்டியளித்துள்ளார்.
இந்த பேட்டிக்கு பல பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குஷ்பு, தனது கருத்தின் மூலம் தமிழ் கலாசாரத்தையும், தமிழ்ப் பெண்களையும் கேவலப்படுத்தி விட்டார், அவமானப்படுத்தி விட்டார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குஷ்புவின் கலாச்சார இழிவுப் பேட்டியைக் கண்டித்து தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய குஷ்புவை தமிழகத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோஷமிட்டனர்.
தமிழ்ப் பெண்களுக்கு மாசு கற்பிக்க நான் ஒருபோதும் நினைத்ததில்லை. தமிழ்ப் படங்களில் கூட அப்படிப்பட்ட வேடங்களில் நான் நடித்ததில்லை. இந்தியா டுடே நடத்திய சர்வேயின் முடிவுகளின் அடிப்படையில் அதுகுறித்து நான் வேதனையுடன் தெரிவித்த கருத்துக்கள் அப் பத்திரிக்கையில் தவறாக வந்து விட்டது.
யாரையும் புண்படுத்துவதற்காக அப்படி நான் பேசவில்லை. இந்த விஷயம் இவ்வளவு பெரிய பிரச்சினையாக வரும் என்று நான் நினைக்கவில்லை. இப்பிரச்சினை வந்ததையடுத்து நான் சிங்கப்பூருக்கு தப்பி ஓடி விட்டதாக வெளியான தகவல் எனக்கு மிகவும் வேதனையைத் தருகிறது. 3 மாதத்திற்கு முன்பே திட்டமிட்ட பயணம் அது.
தமிழ்ப் பெண்களின் மனதைப் புண்படுத்தும்படி நான் பேசியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் குஷ்பு அழுதவாரே.
பெண்களை இழிவாக பேசியதற்காக நடிகை குஷ்புவை கைது செய்ய வேண்டும். இதற்கு தார்மீக பொறுப் பேற்று நடிகர் சங்கப் பதவியை விஜயகாந்த் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகளின் தமிழ்ப் பாதுகாப்பு இயக் கத்தை சேர்ந்த பெண்கள் சென்னையில் நேற்று நடிகர் சங்கம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் குதித்தனர்.
பெண்களை பற்றி இழிவாக பேசிய குஷ்பு கைது செய்யப்பட வேண்டும். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் குஷ்பு பெண்களை இழிவாக பேசியதற்கு தார்மீக பொறுப்பேற்று நடிகர் சங்கத் தலைவர் பதவியை விஜயகாந்த் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர். நடிகர் சங்கத்திற்கு விடுமுறை நாள் என்பதால் அங்கு யாரும் இல்லை.
இதற்கிடையே குஷ்புவுக்கு எதிராக பாமகவும் போராட்டத்தில் குதிக்கவுள்ளது. இதுகுறித்து பாமக மகளிர் சங்க தலைவி சக்தி கமலாம்பாள் விடுத்துள்ள அறிக்கையில், நடிகை குஷ்பு கூறியுள்ள கருத்துக்கள் தமிழ் சமுதாயத்தையும், தமிழர்களின் வாழ்முறையையும் கேவலப்படுத்துவதாக, இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
அவரது கருத்தைக் கண்டித்து அவரது வீட்டு முன்பு மகளிர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்துவோம். தான் கூறியுள்ள கருத்துக்களுக்காக குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவர் கேட்காவிட்டால், தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக பிரமாண்டமான அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
இது தினமலர் மற்றும் தட்ஸ் தமில் வலைப் பக்கங்களிலிருந்து எடுதாளப் பட்டிருக்கிறது.
இதைப் பார்க்கும் போது சில கேள்விகள் மனதில் வருகின்றன..
1.குஷ்பு என்ன சொன்னார் என்பது யாருக்குமே தெளிவாகத் தெரியவில்லை.. மேலெ வந்திருக்கும் செய்தி சரியான தாக இருந்தால், அவர் தமிழர் பண்பாடு பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை.. யாராவது உண்மையான கட்டுரையைப் தட்டச்சு செய்து அல்லது scan செய்து இட முடிந்தால் ஒரு தெளிவு கிடைக்கும்.
2. தமிழகத்தில் இந்தியா டுடேய் படிப்பவர்கள் எத்தனை பேர்? இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரிந்தெ இருக்காது இவர்கள் விளம்பரப் படுத்தாவிட்டால்.. ஆக இவர்கள் குறிக்கோள் இந்தக் கருத்து தமிழ் மக்களிடையே பரவக் கூடாது என்பதல்ல..
3. நம் வலைப் பதிவுகளில் குழலி இது பற்றிய பதிவில் "சகஜம்" என்ற பதத்தைக் கையாண்டிருக்கிறார்..
"குஷ்பு சமீபத்தில் "பெண்கள் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவு கொள்வது சகஜம்" என ஒரு புரட்சிகரமான கருத்தை வெளியிட்டுள்ளார், "
இந்த பேட்டியில் அது போன்ற கருத்துக்கள் கூறப்படவில்லை.
4. அதே பதிவில் "எனக்கென்ன ஒரு வருத்தம் குஷ்புவிடம் என்றால் அதென்ன கல்யாணம் ஆவதற்கு முன்பு (மட்டும்) என ஒரு கால வரையறை கல்யாணம் ஆன பின்பும் வேறு ஆண்களுடன் உறவு கொள்வது என்ன பாவமா?!" என்றும் கேட்டிருக்கிறார்
இதுவும் திரித்தல் தானே.. இவர் தங்கர் ஆதரவாளர் என்பது நினைவிற்கொள்ளத்தக்கது.
5. அதில் பின்னூட்டமிட்ட ஒருவர் "முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்த ஒரு பெண்ணின் கருத்தை வைத்து 'இஸ்லாமிய நெறி'யை இகழ்ந்துரைக்க ஒரு வாய்ப்பு என்று சரி காண்கிறவர்கள்.ஆனால் இந்த பி.ஜே.பிக்காரர்கள் 'தமிழுணர்வால்' தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதும் உண்மையல்ல" என்று கூறிருக்கிறார்.. இதில் மதமோ, குறிப்பிட்ட கட்சியோ எங்கு வந்தது என்று தெரியவில்லை
6. குஷ்பு சொல்லித்தான் தமிழர் பண்பாடு வாழவோ வீழவோ வேண்டும் என்பதைப் பார்க்கும் போது, தமிழர் பண்பாடு மேல் ஒரு நம்பிக்கை இன்மை வருகிறது..
7. கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான் இந்த கருத்தில் அவர் பெண்ணின் கன்னித்திரை பற்றிக் கூறியதாகவே படுகிறது. சமீபத்தில் திருமணத்தில் இதனால் பிரச்சினை வருகிறதென்று அறுவை சிகிச்சை செய்து கன்னித் திரையை செப்பனிட்டுக் கொள்கிறார்கள் என்று படித்த நினைவு.. நம் ஊர்களில் இன்னமும் முதலிரவுக்குப் பிறகு படுக்கையில் இரத்தக் கறை தேடும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
8. தினமலர் இன்று ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது பார்க் ஓட்டலில் குடித்துக் கும்மாளமிடும் ஒரு கும்பல் பற்றி.. இவர்கள் எல்லாம் குஷ்பு பேட்டியைப் படித்து தான் இப்படி செய்தார்கள் என்று நல்ல வேளையாக யாரும் கூறவில்லை.
9. கற்பை அவர் அவர் மனசாட்சிக்கு விட்டு விடுதல் நலம்.. தேன்துளி இது பற்றி அருமையாக எழுதி இருக்கிறார். பிறறால் ஒழுக்கங்கள் நடைமுறைப்படுத்தப் படும் போது தான் வன்முறை தலை தூக்குகிறது. இது குறித்த ஒரு செய்தி என் பதிவில்http://neyvelivichu.blogspot.com/2005/08/105.html
10. விஜயகாந்த் ராஜினாமா வேண்டுகொள் பற்றி படித்ததும் "தென்னை மரத்தைப் பற்றி கட்டுரை எழுதத் தெரியாதவர் பசு பற்றிய கட்டுரை எழுதி.. பசுவை தென்னை மரத்தில் கட்டுவோம் " என்று சொன்ன கதை நினைவுக்கு வந்தது..
இது மொத்தமும் ஒரு அரசியல் கூட்டணி ஒரு நடிகரை எதிர்க்கப் பயன்படுத்தும் செயல் முறைகள் என்று தோன்றுகிறது.. இது குஷ்பு கற்பைப் பற்றி சொன்னது மட்டு மல்ல.. நாளை எதாவது படத்தில் ஆங்கிலத்தில் வசனம் வந்தால் கூட போராட்டம் நடத்துவார்கள்..
இவர்கள் நிஜமாகவே இந்த விஷயத்தில் அக்கறை உள்ளவர்களாயிருந்தால் தமிழகத்தில் அழகிகள் கைது என்று செய்தி வராது. இது அரசியல் லாபத்துக்கு மட்டுமே செய்யப்படும் கூத்து.. யாருக்கோ அடுத்த தேர்தலில் அதிக இடங்கள் கேட்க வேண்டும்.. குஷ்பு மாட்டிக் கொண்டார்.. இன்னும் நிறைய பேர் வருவார்கள்.
நான் குஷ்பு இடத்தில் இருந்தால் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டேன்.. அவருக்கும் அரசியல் ஆசை இருப்பது போல் தோன்றுகிறது.. அதனால் தான் உடனே மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
அன்புடன் விச்சு
31 comments:
மிக அருமையான பதிவு.
//குஷ்பு என்ன சொன்னார் என்பது யாருக்குமே தெளிவாகத் தெரியவில்லை// - குறிப்பிடத்தக்க உண்மை.
//மேலெ வந்திருக்கும் செய்தி சரியான தாக இருந்தால், அவர் தமிழர் பண்பாடு பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை.. // - இக்கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.
//இதற்கு தார்மீக பொறுப் பேற்று நடிகர் சங்கப் பதவியை விஜயகாந்த் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகளின் தமிழ்ப் பாதுகாப்பு இயக் கத்தை சேர்ந்த பெண்கள் சென்னையில் நேற்று நடிகர் சங்கம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் குதித்தனர்.// - விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசத்தினால் நேரடியாக பாதிக்கப்படும் திருமாவளவன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்வதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
கண்டதையும், கேட்டதையும் அப்படியே எடுத்துக்கொண்டு உணர்ச்சி வசப்படுபவர்கள் மத்தியில், இப்படி ஒரு பதிவினை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நமது ஊடகங்கள் மற்றும் அரசியல் வாதிகளின் இயல்பை நன்கு அறிந்த பலரும் இதற்க்கு துணை நிற்பது தான் வேதனை அளிக்கிறது.
குஷ்பு என்ன அர்த்தத்தில் என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ள அவகாசம் கொடுத்தால், பிரச்னையை ஊதிப் பெரிதாக்குவது எப்படி என்ற அவசரத்திலேயே அத்தனைப் போராட்டங்களும் நடை பெறுவதாகவே தோன்றுகிறது.
பிரச்னையின் ஒரு பக்கத்தை வைத்து மட்டும் போராட நினைப்பவர்கள், ஆதாயம் தேடுவது வேறு எதற்கோதான்.
நானே இந்தியா டுடே ஆர்ட்டிக்கிளில் விகிதாச்சார விஷயங்கள் பற்றிமட்டும் வாசித்துவிட்டு குஷ்புவின் தனிப்பட்ட கருத்து தேவையற்றது என்று அடுத்த செய்திக்கு போய்விட்டேன். மீடியா அதை பெரிசு பண்ணியபிறகுதான் மறுபடி எடுத்து வாசித்தேன்.
பென்ணுக்கு எதிராக பெண்களையே போராட வைப்பது நல்ல ராஜ தந்திரம்தான்
http://pesalaam.blogspot.com/2005/09/blog-post_26.html
சொல்ல வந்ததை (அவர் வைத்த வாதம் நான் நினைத்ததை விட வேறு திசையில் இருந்தாலும்)
கோயிஞ்சாமி-எட்டுஏ பொறுமையாக சொல்லியிருக்கிறார். கற்பு என்று ஒன்று கற்பிக்கபடுவதன் நோக்கங்களை புரிந்து கொண்டால் கொஞ்சம் நல்லவிதமாக யோசிக்க முடியும். இதற்கு குஷ்புவை மிகவும் பாராட்டுகிறேன்.
nanRi aruL kumaar,thanu maRRum karthikramas.
intha pathivittathil oru puthu kuzhappam enakku..
I saw three + votes and 1 negative vote some time back.. now it has all become 4 negative votes.. hwo is that possible..
does these votes depend on something else also
i would be thankful if someone could clarify..
regards
vishy
Good post, vichchu. Dont worry about the votes, just post on.
I agree with Karthik too. Goinchamy has a great take on this issue :)
விச்சு: வாக்குகளை எண்ணி கவலைப்பாடாதீர்கள். என் சொந்த அனுபம் ஒன்றை வரிகளில் எழுதியபோது அதற்கே 10 - வாக்குகள் விழுந்திருந்தன. உண்மையை எழுதியதற்கே எதிர்ப்பவர்கள், அனுபவித்திருந்தால் தெரியும்.
நிறைய ஆண் வலை பதிவாளர்கள் நேர்மையாக சிந்திப்பது குறித்து நிறைவாக இருக்கிறது. நன்றிகள்
nanRi voice on wings, then thuLi pandi,
ithu vote paRRiya kavalai alla.. irukkum veettil yaarum oottai podukiRargaLo enRa kavalai..
i felt someone is manipulating the votes
anbudan vichchu
விச்சு,
நல்ல பதிவு.
சிறுத்தைங்க எதுக்காக குதிக்குதுன்னு தெரியலை.
எல்லாரும் அவுங்கவுங்க மனசாட்சியை அலசிப்பாக்கணும்.
அன்புக்குரிய விச்சு,
பதிவுக்கு நன்றி.
போன வாரமே சம்பந்தப்பட்ட (தமிழ்) இந்தியா டுடே வாங்கியிருந்தாலும்... இந்த பரபரப்புக்கெல்லாம் பிறகு இன்று காலை அலுவலுகம் வரும்போதுதான் அப்படி என்ன சொல்லியிருக்கிறார் என்று படித்தேன்... நான் படித்தவரை அதில் ஒன்றும் கேவலமாக சொல்லப்படவில்லை. அதுபோக கீழே கண்ட வரிகளை உற்று நோக்கினால்கூட, அவருடைய எண்ணத்தைதான், சிந்தனையத்தான் வெளியிட்டுருக்கிறாரே தவிர, யாரையும் குறிப்பிடவில்லை.
ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்.
கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மேலே உள்ள வரிகளைத்தவிர வேறு எதுவும் ஆட்சேபகரமனதாகவோ, அபயாமான கருத்தாகவோ அவருடைய பேட்டியில் எதுவும் இல்லை.
முடிந்தால் அந்தப்பக்கத்தை பிரதியெடுத்து இட முயற்சிக்கிறேன். அந்த இதழே ஒரு சிறப்பிதழ்: "செக்ஸ் & இளம்பெண்கள் பிரத்யேக சர்வே" அதில் பல புதிய (அல்லது முற்போக்கான:) விஷயங்களைப் பற்றி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதுபற்றியெல்லாம் யாரும் கவலைப்பட்டுக்கொள்ளாவில்லை.
விருந்தினர் பக்கத்தில் டாக்டர் ஷாலினி (மாறிவரும் சமன்பாடு), கவிஞை சுகிர்தராணி (ஒழுக்கம் பெண்ணுக்கு மட்டுமா?) மற்றும் குஷ்பு (காலாவதியாகும் கற்பு) என்ற கட்டுரைகளும் வந்துள்ளது.
பெஸ்டு கண்ணா! பெஸ்ட்டு!
சூப்பர் பதிவு
ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்ன்னு கேட்டிருக்கிறேன்.
இங்க பாருங்க கூத்தாடி ரெண்டுபட ஊர் கொண்டாடுது.
எல்லாரும் குளம்பிய குட்டையில மீன் பிடிக்க தான் பார்க்கிறாங்களே தவிர,
மனசாட்சியுடன் யோசிக்கிறதாகவோ! அல்லது செயல்படுறதாகவோ இல்லை.
உங்களை மாதிரி எல்லாரும் யோசிச்சா போதும்!
எல்லாம் சரிபடும்..... ஆனா
யோசிப்பாங்களா?....?....?
குஷ்புவிற்கு காண்பிக்கப்படும் இந்த அளவு எதிர்ப்புக்கு உள்குத்து அரசியலும் உண்டு என்று ஏற்கனவே வேறொரு பதிவில் பின்னூட்டமிட்டுள்ளேன்
குஷ்புவிற்கு இந்த அளவிற்கு எதிர்ப்பு வரக்காரணமே தங்கர் பிரச்சினையில் அளவுக்கு மீறி குஷ்பு கூவியது தான், அதனால் தான் பாமகவும் விடுதலை சிறுத்தை அமைப்பும் சதங்கை கட்டி ஆடுகின்றன, இல்லையென்றால் அதிகபட்சமாக மற்ற அரசியல்வாதிகளைப்போல ஒரு அறிக்கைவிட்டு விட்டு போயிருப்பார்கள்...
தங்கரை அளவுக்கதிகமாக அவமானப்படுத்தி திரைத்துறை என்றாலே தாங்கள் தான் என நிரூபிக்க முயன்றனர் நடிகர்/நடிகைகள் அதற்கு எதிர்வினையாக தற்போது குஷ்புவிற்கு செருப்பு,துடைப்பங்களை காண்பித்து எல்லாமே நாங்கள் தான் எங்களிடம் மோதினால் என்ன ஆகும் என்று தன் பலத்தை காண்பிக்க முயற்சிக்கின்றனர் அரசியல்வாதிகள்
தங்கர் பிரச்சினையில் தேவையின்றி அளவுக்கு மீறிய வினைபுரிந்த குஷ்பு தற்போது அதை அறுவடை செய்கின்றார்.
உள்குத்து அரசியலை யார் வேண்டுமானாலும் எழுதலாமே... ஏற்கனவே முதல் குத்தையும் எழுதிவிட்டேனே என்ன பின்னூட்டத்தில் எழுதினேன் பதிவாக எழுதாமல்
//அதே பதிவில் "எனக்கென்ன ஒரு வருத்தம் குஷ்புவிடம் என்றால் அதென்ன கல்யாணம் ஆவதற்கு முன்பு (மட்டும்) என ஒரு கால வரையறை கல்யாணம் ஆன பின்பும் வேறு ஆண்களுடன் உறவு கொள்வது என்ன பாவமா?!" என்றும் கேட்டிருக்கிறார்
//
சரி இவ்வளவு சொன்ன குஷ்பு இதையும் சேர்த்து சொல்லியிருக்கலாமே என்ற ஒரு ஆதங்கம் தான்...
ஆமா... வலைப்பதிவில் பேசும் பெரும்பாலானோர் திருமணத்திற்கு முன் என்று பேசுகின்றனரே ஏன் திருமணத்திற்கு பின்னும் அப்படியிருந்தால் என்ன தவறு என்று புரியாமல் தான் கேட்கின்றேன். எதுக்கும் சிரிப்பு குறியீடு போட்டுக்கொள்கின்றேன் :-))
// விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசத்தினால் நேரடியாக பாதிக்கப்படும் திருமாவளவன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்வதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை
//
எல்லாம் அரசியல் தான் அருள், முன்பு விஜயகாந்த்தின் முறை தற்போது திருமா,பாமக முறை அவ்வளவே...
குஷ்பு என்ன சொன்னார்..
"அந்த இதழில் வந்திருந்த அந்தச் செய்தியின் அடிப்படையில் ஒரு நாளிதழ் குஷ்புவிடம் ""இப்படி சொல்லியிருக்கிறீர்களே?'' என்று கேட்டது. அதற்கு குஷ்பு ""என்னுடைய கருத்து படித்தவர்களுக்குப் புரியும். தமிழ்நாட்டில் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளாதவர்கள் இருக்கிறார்களா?'' என்று கூற அதன் பிறகுதான் பிரச்சினையே பூதாகரமானது."
- DINAMANI 27/09/2005
குஷ்பு கருத்து: பாஜக கண்டனம்:
நமது கட்டுப்பாடுகள்தான் ஒழுக்கத்தைப் பேணி வளர்க்கிறது. கட்டுப்பாடு இல்லாத கருத்துக்கு ஆதரவான தன்மை சமூகத்தை சீரழித்துவிடும். இதை குஷ்பு உணர்ந்து கொள்வது நல்லது என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
- DINAMANI 27/09/2005
good post..
பாதுக்காப்பிற்காக உடன் பிறப்புக்கள் கத்தி வைத்துக் கொள்(கொல்)ளலாம் என்று "ஒருவர்" சொன்னால் வீர தமிழ் பண்பாடு !!
விச்சு,
நல்ல பதிவு..
ஆனா, நான் என்ன யோசிக்கிறேன்.. ரெண்டு (குஷ் & தங்கர்) பேருமே கருத்து சுதந்திரம் என்ற பேரிலே எதையோ உளறிட்டாங்க..
அதை கண்டித்தவர்கள் , இதை கண்டிக்கவில்லை..
இதை கண்டித்தவர்கள் , அதை கண்டிக்கவில்லை..
ஏன் அது?
நான் உள்ளிட்ட சிலரே ரெண்டு பேரும் சொன்னதும் தவறு என்கிறோம்.. (ஒரே அளவுகோல்)
இப்படி பேசிய குஷ்பு தங்கர் சொன்ன கருத்துக்கு குதித்திருக்க கூடாது..
அப்போ குதித்த குஷ்பு இப்படி பேசியிருக்ககூடாது..
//நான் குஷ்பு இடத்தில் இருந்தால் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டேன்.. //
தங்கர் இடத்தில் இருந்திருந்தாலும் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டீங்களா விச்சு.. மனதைத்தொட்டு சொல்லுங்க
//பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களை வெளியிடுவதில் பெங்களூரை விட சென்னை பின் தங்கியிருந்தது. இப்போது சென்னைப் பெண்களும் செக்ஸ் பற்றிய மனத் தடைகளை கடந்து வருகின்றனர். செக்ஸ் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேச முடிகிறது.//
இது அவர் சொன்னது போல அந்த பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவை பற்றி சொல்லியிருக்கலாம்.
//ஒரு பெண் தனது பாய் பிரண்ட் பற்றி உறுதியாக இருக்கும்போது அதை தன் பெற்றோரிடம் சொல்லலாம். தங்களது பெண் சீரியஸான ஒரு உறவை வைத்திருக்கும்போது அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.//
இது காதல் திருமணம் பற்றிய அவரது கருத்து.. தவறில்லை.. நல்ல கருத்து..
கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான்.
இதை எந்த ரகத்தில் சேர்ப்பீர்கள்? ..
திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இது என்ன விதமான கருத்து?
ஆணோ , பெண்ணோ, மனதளவில் கட்டுப்பாடுடன் இருந்து திருமணத்திற்கு பிறகு செக்ஸ் வைத்துக்கொள்வதே நல்லது என்று சொல்லியிருந்தால் அவருக்கு கட்டிய கோவிலில் கும்பாபிஷேகம் செய்யலாம்.. ஆனால் செக்ஸ் வெச்சிக்கோங்க.. ஆனா கர்பமாகாமல் .. நோய் வராமல் பார்த்துக்கோங்கனு சொன்னா என்ன அர்த்தம்?
//குழந்தைகள் எங்களுடனேயே தூங்குவதால் எங்களுக்கென்று நாங்கள் தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டிருக்கிறது //
ரொம்ப முக்கியமான தகவல் இது ...
//பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களைப் பேசினால் அவர்களைத் தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாற வேண்டும்.//
வரவேற்கவேண்டிய கருத்து..
//ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்//
இதுக்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லையே..என்ன சொல்ல வருகிறார்கள்?
சில ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து சொன்னவர் , நல்ல தலை வாழை இலை போட்டு சூப்பர் சாப்பாடு பறிமாறி நடுவுல கொஞ்சமா மனித கழிவை வெச்ச மாதிரி ஏன் சில கருத்துக்களை சொன்னாரு? அதான் புரியலை.. அருசுவை விருந்தை..ஒரு துளி "..." விஷயத்தை வைத்து கெடுத்துவிட்டார்..
இது குறித்து முத்தமிழ் மன்ற விவாதக்களத்தில் நடந்து வரும் கருத்துப் பரிமாற்றங்களையும் இங்கேபார்க்கவும்
குஷ்பு கூறியதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. அது அவரது சொந்த கருத்து. ஒரு கருத்துக்கணிப்பைக் காட்டி அது குறித்து அவரது வாயைக் கிளறி என்னவித கை சரக்கையோ சேர்த்து உருவாக்கப்பட்டதாகவும் இருக்கலாம். எனது தனிப்பட்ட எண்ணம் இது இத்தனை பெரிது படுத்த வேண்டிய தேவையில்லாத விடயம். ஒரு தேசிய கட்சி இந்த விவகாரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. என்ற போதிலும் விடுதலை சிறுத்தைகள் போன்ற எதிர்வினையை பாஜக கொடுக்காமல் அடக்கி வாசித்திருப்பது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. கற்பு என்பது மனதை பொறுத்தது. இருபாலருக்கும் பொதுவானது. கன்னித்திரையைப் பொறுத்ததல்ல. குஷ்பு பணியாற்றும் திரை உலகு கடுமையான மனவியல் அழுத்தங்களை அளிக்கும் உலகு. சமுதாய ஆழ்-ஆசைகளின் பலி பீடங்களில் பலரை காவுகொடுத்து தம்மை வளர்த்து கொண்டுள்ள உலகு. உதாரணம் சில்க் சுமிதா. இந்நிலையில் அத்தகையதோர் கடும் வாழ்விலிருந்து (எத்தனை துரோகங்களை அவர் தாங்கி மீண்டாரோ யார் அறிவார்?) தமக்கென ஒரு வாழ்க்கையை தைரியமாகவும் வெற்றிகரமாகவும் அமைத்துக் கொண்டவர் அந்த சகோதரி. அவரது கருத்துக்கள் அவர் வாழ்க்கையை எதிர் கொண்ட விதத்தைக் காட்டுகின்றன. 1971 இல் பாகிஸ்தானிய இராணுவத்தால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்பட்ட வங்க சகோதரிகளை சொந்த குடும்பங்களே நிறையழிந்தவளென கைவிட்டு அவர்களில் பலர் பாலியல் தொழிலாளிகளாக மாறினர் என்றும் கூறப்படுகிறது. இன்றைக்கும் பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலாளிகளாக்கப்படும் நிகழ்வும் தெற்காசிய நாடுகளில் நடக்கிறது. இத்தகைய சூழலில் 'கன்னித்திரையை' கற்பாக மாற்றும் கருத்தியலை மீறி பரிணமிக்க வேண்டிய தேவை நமது சமுதாயத்திற்கு இருக்கிறது. இவையனைத்தையும் கருத்தில் கொண்டு குஷ்புவின் வார்த்தைகளை நாம் சிந்திக்க வேண்டும்.
பாவம் குஷ்பு. அவர் சொன்ன கருத்தில் எந்த பிழையும் இல்லை. அதனால் எந்தப் பண்பாடும் அழியப்போவதில்லை. ஒரு நடிகையின் பேட்டியால் பண்பாடு சீரழியுமானால் அது என்ன பண்பாடு? வீணாக அரசியலாக்கப்படும் விடயம் இது. அவருக்கு என் அனுதாபங்கள்
பெண்கள் குறித்து ஆண்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை! கவலை!!பொறுப்பு!!!
படுப்பதை பற்றி குஷ்பு எப்படிக் கதைக்கலாம்? சானியா மிர்ஸாவின் பாவாடை எவ்வளவு மில்லிமீற்றர் கூட இருக்க வேண்டும்? என்று இந்த ஆண்களுக்கு தலை நிறையப் பிரச்சினைகள்.
ஆண் தனது அதிகாரத்தை தக்க வைக்கவும், பெண்ணை உடமையாய், அடிமையாய், தாசியாய் காலந்தோறும் வைத்திருக்கவும் கட்டியமைத்துள்ள கற்பிதம் நொருங்கிக்கொண்டு போவதைப் பார்த்து குலை நடுங்குகிறார்கள். தமது வழமையான தற்பாதுகாப்பு ஆயுதங்களான கற்பு, கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு தம்மை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
துடித்துப் பதைத்து தங்கள் ஆண்குறிக்கு ஒளிவட்டம் போடும் இந்த ஆண்களைப் பார்த்து ஆத்திரப்படலாமா? ஆணியம் உடைத்து நொருக்கப்படுவதால் பயந்து நடுங்கி மூத்திரம் போகும் இந்த ஆண்களைப் பார்த்து கை தட்டிச் சிரிக்கலாமா?
நல்ல பார்வை விச்சு...
அருமையான பத்வு
எனக்கு என்ன தோணுதுன்னா இதெ பலர் அரசியல் ஆக்கறாங்களோன்னு
அடுத்து குஷ்பு சொன்னதில் தவறு இருக்கும்பட்சத்தில் அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். பிறகும் இந்த அளவிற்கு இவ்விஷயத்தைப் பெரிது படுத்துவதில் ஏதோ இருப்பதாக நமக்கு படவில்லையா?
ஆண்கள் வரிந்துக் கட்டிக்கொண்டு நிற்கிறார்களே, இவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை (பொதுவில்) எப்படி நடத்துகிறார்கள் என்பது நமக்கு தெரியாதா? அன்பு நண்பர்களே மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள், நாம் இன்னும் பெண்களுக்கு அவர்களுக்கான சம உரிமையைக் கொடுக்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரியும்.
(ஒரு சிறு உதாரணம்: கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போய்விட்டு வீட்டிற்கு வரும்போது எத்தனை கணவர்கள் அடுப்படிக்கு சென்று சமைக்கிறார்கள், சரி சமையல் வேண்டாம், உட்கார்ந்தவுடன், யார் காப்பி போட்டுக் கொண்டு வருகிறார்கள்?) (இந்த இழையின் விவாதத்திற்கு உடன்பட்டது அல்ல என்றாலும் ஏதோ கேட்க தோன்றியது)
இன்று சில பெண் கவிஞர்கள் எழுதும் கவிதைகளை அக்கு வேறு ஆணி வேறாகப் புரட்டும் பலர், ஆண்கள் இதைவிட மோசமாக எழுதியதைப் படித்து ரசித்துதானே இருக்கிறார்கள்?
ஏன் இட ஒதுக்கீட்டிற்கு இத்தனை நாட்கள்? இதில் அனைத்து கட்சிகளும் ஆதரவு வேறு தருகிறதாம்? முதலை கண்ணீர் வடித்தக் கதை!.
இந்த விவாதம் தேவையில்லாதது. குஷ்பு எதையோ நினைத்து சொல்லப்போய், நாவின் சுழற்சியால் வேறு எதுவோ வந்து விழுந்துவிட்டதாகத்தான் நான் நினைக்கிறேன். அதற்க்காக அவர் பொது மன்னிப்பு கேட்டவுடன் இந்த விசயத்தை மறப்போம், மன்னிப்போம் என்பதை விட்டுவிட்டு இவ்வளவு தூரம் இதை இழுப்பது சரியாகப் படவில்லை.
இங்கே வீ.எம்-ன் கருத்துக்களோடு பெரும்பாலும் உடன்படுகிறேன்.
உண்மையிலேயே எனக்குத் தெரியாத ஒரு விஷயம் என்னவெனில்..அது என்ன எல்லோரும் "தமிழ்ப் பண்பாடு..தமிழ்ப் பண்பாடு.."அப்படி என்கிறார்களே அது என்ன? யாருக்குமே இல்லாத பண்பாடு இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது?
மனிதப் பண்பாடு என்று ஒன்று இருக்கலாம்; ஆனால் அது என்ன தமிழ்ப் பண்பாடு?
இந்தக் 'கெட்ட வார்த்தை' எப்போது ஒழியுமோ?
ஏற்கெனவே குழலி, வீ. எம் போன்றவர்கள் சரியாகச் சொல்லிவிட்டார்கள்.
என் கருத்து இங்கே
தருமி,
>> அது என்ன தமிழ்ப் பண்பாடு?
இந்தக் 'கெட்ட வார்த்தை' எப்போது ஒழியுமோ? >>
"இந்திய தேசியம்", "இந்துப் பண்பாடு" போன்றவை ஒழிந்த கையோடு நீங்கள் குறிப்பிடும் 'கெட்ட வார்த்தையும்' ஒழிந்து விடக் கூடும்.
ஒரு வேளை "Our Way of Life", "Democratic Free country like ours.." போன்ற punchlines உள்ல வரை இந்தக் கெட்டவார்த்தையும் மிச்சமிருக்கலாம்.
நல்ல பதிவு . குழலியின் பதிவிலிருந்த நக்கலை நானும் ரசிக்கவில்லை. தங்கர் விவகாரத்துக்கான பழிவாங்கல் நடைவடிக்கைத் தான் இந்த போரட்டம் எல்லாம்.இதைப் பற்றிய என்ண்டைய பதிவு
http://koothaadi.blogspot.com/
ல் இருக்கிறது.
குஷ்பு சொல்லித்தான் இந்தக்கால பெண்களைப்பத்தி தெரியணுமா ? :-)
பொதுவா நகரங்களில 40 சதவிகிதம் காலேஜ் பெண்கள் கல்யாணத்துக்கு முன்னாலயே தங்கள காமத்தை தணித்துக்குதாங்கன்னு புள்ளிவிபரமே இருக்குதுங்களே.
என்யா கற்பு பெண்ணுக்கு மட்டும் தானா ஆணுக்கும் உண்டான்னு கேள்வி கேட்குதாங்க பொம்பள்ளைங்க..
இது காலத்தின் கொலமுங்க. சுத்த தமிழ்ல சொன்னாலும், சாதாரணமா சொன்னாலும் .. காலம் மாறிப்போச்சு
சேழர்காலத்தில இருந்த மாதிரியா இன்னிக்கும் நம்ம பெண்கள் இருக்காங்க ? தமிழ் பெண்கள் கண்ணகிமதிரி இரூந்தா நம்ம ஊர்ல தண்ணியேன் இல்லாம போவுது ? பெய்யென பெய்யணுமே ??
சட்டத்தில தங்களுக்கு இருக்கும் எல்லா சலுகையும் use பண்ணிக்கிட்டு, இன்னும் 33%ம் கேட்டுக்கிட்டு, .... பொய்யா டவுரிக்கேஸ் போடும் பெண்களை பத்தி நீங்களும் தெரிஞ்சுக்க கழேயுள்ள வரிகளை படிங்க
நண்பன்
விநாயகம்
Reading your post, and contemplating on the many issues there, I feel your readers should know the dark side of Indian Marriages, especially the misuse of laws by Indian wives these days. The resultant injustice to Indian men and families is enormous
Do you know that 1000s of innocent Indian men are being victimized by the misuse of anti dowry law - a particular Section 498A of Indian Penal code ?.
Newly wed wives unable to adjust with their husbands, some who are unable to live in a new environment, some others caught in adulterous conduct and even greedy Indian wives are known to file FALSE dowry cases against their husbands and In - Laws. They falsely accuse their husbands' of treating them with cruelty AND demanding dowry during marriage.
Since dowry is legally prohibited and severely punishable in India, many of these newly married men stand the gruesome prospect of being arrested and thrown into and Indian prison ... for years !!
The intention of these Indian wives of course is to settle scores or extract money from their in laws.
Once a dowry case is filed the Indian police are forced to arrest the husband and in some cases, even their un suspecting parents & sisters are arrested and jailed. Unable to bear the insult some have committed suicide.
As most of the male victims would be innocent and would not have EVEN stepped into a police station, let alone be arrested, they are forced to NEGOTIATE AND PAY these women
Section 498A of the Indian Penal Code is badly lacking the "..due process of law .." i.e. Under any normal legal process, an accused is considered innocent unless proven guilty. However under Sec. 498A - I.P.C., the accused is immediately assumed to be guilty and has to loose liberty immediately....
There are 1000s of victims all over India
It is reported that ".......In Andhra Pradesh (one of the Indian States), for example, a third of all the pending cases related to “atrocities on women” as on June 30 2005 are those under sections 498 and 498(A). In the first six months this year, 3801 new cases under just these two sections were instituted..........."
http://www.indianexpress.com/full_story.php?content_id=79802
This is a smear on the image of India
Some of the courts are aware of this. Recently the Chennai High Court has stopped police from arresting people on dowry cases
See for e.g.
http://tinyurl.com/8mtqp
or
http://www.chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID=%7B1CDE2C71-E13B-435F-AC79-95CBEEAF2B26%7D&CATEGORYNAME=Chennai
2.4. As per the above judgment, the POLICE HAVE to refer Dowry complaints to Dowry Prohibition officers AND NOT ACT ON DOWRY COMPLAINTS i.e POLICE *CANNOT ARREST YOU*
If any reader here is about to get married or if you are facing a difficult relationship with your wife, please be aware. Take necessary precautions !!
Best regards
Vinayak
--
http://batteredmale.blogspot.com/
http://blog.360.yahoo.com/blog-Y2MTaSA0RLDVTunp3KQgKh0-
http://my2cents.rediffblogs.com/
http://spaces.msn.com/members/Vinayak123/
http://groups.google.com/group/DLMI?lnk=li
http://groups.google.com/group/DivorceCases?lnk=li
http://groups.google.com/group/DivorceFAQ?lnk=li
Post a Comment