நேற்று சானியாவின் பாலி, கொல்கொத்தா போட்டிகளின் தோல்வி குறித்து ஒரு பதிவிட்டிருந்தேன். சானியா சானியா
இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டுள்ள கருத்து நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை போலத் தெரிகிறது. இதுவரை வந்துள்ள ஐந்து வாக்குகளில் நான்கு "-" வாக்குகள்..
"-" வாக்கு அளிப்பவர்கள் அதற்கான காரணத்தையும் கூறினால் இது போன்ற தவறான கருத்துக்களைத் (??)திருத்திக்கொள்ள உதவும்....
இந்தக் கருத்து இருவரைத்தவிர யாருக்குமெ என் கருத்துக்கள் பிடிக்காமல் போனது விந்தை..
விளையாட்டில் மதம் நுழைவதை ஆதரிக்கும் பலர் (இந்த பதிவை எதிர்த்து வாக்களித்தவர்களை வேறு என்ன சொல்வது) அரசியலில் மதம் கலப்பதைப் பற்றி கவலைப் படுகிறார்கள். ஒரு பெண்ணின் மன உளைச்சலைத் தரும் இது போன்ற விஷயஙளை ஆதரிக்கும் அவர்களே, பெண் விடுதலை சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.
சுதந்திர நாட்டில் ஒரு இனத்தில் பிறந்ததற்காக ஒரு பெண்ணின் வளர்ச்சி தடைப் பட வேண்டுமா.. இவர்களுக்கு தடை சொல்லும் மக்கள் ஏன் தீவிரவாதிகளுக்கும் நிழல் மனிதர்களுக்கும் தடை சொல்வதில்லை..
மதம் எல்ல வற்றையும் தட்டிக் கேட்க்க வேண்டும் இல்லை எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும். வலியவர் தவறு செய்தால் பார்த்துக்கொண்டிருப்பதும் ஏமாந்த எளியவரை துன்பப்டுத்துவதும் தவறு..
அனனிமஸ் பின்னோட்டமிருந்தால் இந்த சிங்கங்கள் அசிங்கமான தங்கள் கருத்துக்களை அழகாக இட்டிருப்பார்கள்.. நேரில் நின்று பேசினால் பெயர் கெட்டுவிடுமே என்று எண்ணும் கூட்டம்..
உங்கள் கருத்தில் தெளிவாயிருங்கள்.. எந்த மேடையிலும் பதிவிலும் முகம் காட்டி பெயர் சொல்லி கருத்து சொல்வதில் பயம் இருக்காது.
இங்கே பதிபவர்கள் எல்லாரும் வளர்ந்த முழு மனிதர்கள் (adults) தான்.. குழந்தைகளோ விடலைப் பிள்ளைகளோ இல்லை. தெரியாமல் செய்தால் தான் தவறு தெரிந்தே செய்வது குற்றம். ஒரு பதிவைத் தவறு என்று குறிப்பிட உங்களுடைய பக்க நியாயத்தையும் மற்ற வலைப்பதிவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.
பெயர் சொல்லி கருத்து சொல்வதில் என்ன பயம்..
துணிவே துணை.. துணிந்து பெயரிட்டு எழுதுங்கள்.
அன்புடன் விச்சு
Thursday, September 22, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//விளையாட்டில் மதம் நுழைவதை ஆதரிக்கும் பலர் (இந்த பதிவை எதிர்த்து வாக்களித்தவர்களை வேறு என்ன சொல்வது) அரசியலில் மதம் கலப்பதைப் பற்றி கவலைப் படுகிறார்கள்.//
சானியா மிர்ஸா ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை மட்டும் தனிப்படுத்தி இந்த விஷயத்தை விமர்சிப்பது தவறு.: சோ
http://appaavi.blogspot.com/2005/09/dress-code.html
Post a Comment