Thursday, September 22, 2005

116. சானியா சானியா











வெற்றி பெற்ற பொழுதெல்லாம் பதிவு போட்ட நான் இப்போது தோற்றதுக்கும் பதிவு போடுகிறேன்.


இந்தப் பெண் குட்டைப் பாவாடை அணிய வில்லை என்று ஒரு பத்திரிகை முதல் சுற்று வெற்றியைப் பற்றி குறிப்பிட்டிருந்தது.. இவர்கள் அடித்த கூத்து மனதில் எந்த விதமான உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும் என்பது கேள்வி. பாலியில் தோற்றதற்கும் இங்கே தோற்றதற்கும் அது தான் காரணமோ என்றும் தோன்றுகிறது.

இவரது உடைகளைக் கட்டுப் படுத்தத் தொடங்கினால் கடைசியில் இவரும் கறுப்பு முக்காட்டிற்குள் ஒளிந்து கொண்டு பிள்ளை பெறும் இயந்திரமாக வேண்டியது தான்..

முழு உடை அணிந்து கொலை கொள்ளை சூதாட்டம் ஆடினாலும் கண்டு கொள்ளாத மதம், நன்றாக ஆடிப் பெயர் பெற்றார் என்றதும் முன்னால் வந்து முகத்தைக் காட்டுவதேன்.. நிழல் மனிதர்கள் பலரும் இவர்கள் மதத்தவர்கள் தானெ.. அவர்களுக்கு ஒரு தடை உத்தரவு தரலாமே.. ஏன் செய்யவில்லை?

அய்யா இந்த பெண்ணை விட்டு விடுங்கள்.. அவரது திறமையை வீணாக்கி விடாதீர்கள்..இந்த கருத்துக் கணிப்பு அமெரிக்க ஓப்பனில் எடுக்கப்பட்டது.. நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் இவரை கறுப்பு மேகங்கள் சூழ்ந்து மறைக்க வேண்டாம்..

அன்புடன் விச்சு

4 comments:

Narayanan Venkitu said...

I feel very sad reading about the things that are going around in India about Sania's Dress.

Stupidity at the height. These people who complain are living in the 10th century.

I wish they'll let the sports survive. We all already pathetic in sports....Let's leave this gem Sania alone.!

Ganesh Gopalasubramanian said...

விச்சு... முற்றிலும் உண்மை
ஆனாலும் எனக்கு "I am cute no shit" போன்ற வாசகங்கள் தேவையில்லாதவை என்றே தோன்றுகிறது

neyvelivichu.blogspot.com said...

அன்புள்ள நராயணன் வெங்கிட்டு, கணேஷ்,

தங்கள் கருத்துக்கு நன்றி..

இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டுள்ள கருத்து நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை போலத் தெரிகிறது. இதுவரை வந்துள்ள ஐந்து வாக்குகளில் நான்கு "-" வாக்குகள்.. "-" வாக்கு அளிப்பவர்கள் அதற்கான காரணத்தையும் கூறினால் இது போன்ற தவறான கருத்துக்களைத் (??)திருத்திக்கொள்ள உதவும்....

இந்தக் கருத்து இருவரைத்தவிர யாருக்குமெ என் கருத்துக்கள் பிடிக்காமல் போனது விந்தை..

விளையாட்டில் மதம் நுழைவதை ஆதரிக்கும் பலர் (இந்த பதிவை எதிர்த்து வாக்களித்தவர்களை வேறு என்ன சொல்வது) அரசியலில் மதம் கலப்பதைப் பற்றி கவலைப் படுகிறார்கள். ஒரு பெண்ணின் மன உளைச்சலைத் தரும் இது போன்ற விஷயஙளை ஆதரிக்கும் அவர்களே, பெண் விடுதலை சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.

சுதந்திர நாட்டில் ஒரு இனத்தில் பிறந்ததற்காக ஒரு பெண்ணின் வளர்ச்சி தடைப் பட வேண்டுமா.. இவர்களுக்கு தடை சொல்லும் மக்கள் ஏன் தீவிரவாதிகளுக்கும் நிழல் மனிதர்களுக்கும் தடை சொல்வதில்லை..

மதம் எல்ல வற்றையும் தட்டிக் கேட்க்க வேண்டும் இல்லை எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும். வலியவர் தவறு செய்தால் பார்த்துக்கொண்டிருப்பதும் ஏமாந்த எளியவரை துன்பப்டுத்துவதும் தவறு..

அனனிமஸ் பின்னோட்டமிருந்தால் இந்த சிங்கங்கள் அசிங்கமான தங்கள் கருத்துக்களை அழகாக இட்டிருப்பார்கள்.. நேரில் நின்று பேசினால் பெயர் கெட்டுவிடுமே என்று எண்ணும் கூட்டம்..

உங்கள் கருத்தில் தெளிவாயிருங்கள்.. எந்த மேடையிலும் பதிவிலும் முகம் காட்டி பெயர் சொல்லி கருத்து சொல்வதில் பயம் இருக்காது.

அன்புடன் விச்சு

தருமி said...

சில விதயங்களைப்பற்றி எழுதும்போது இந்த + / - பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள்.
உங்களுக்குச் சரி என்று படுகிறதா...go ahead!