Friday, September 16, 2005

மகாலட்சுமியும் ஆந்தையும்

எல்லாரும் வாத்து பதிவே போட்டால் நன்றாக இருக்காது என்று என் சார்பில் ஒரு ஆந்தை பதிவு.

ஒரு மாதம் இந்தியனாபோலிசில் இருந்து திரும்ப நியூஜெர்சி வந்தால் போதும் என்றாகி விட்டது.. ஊர் மிக மிக பொறுமை. எனக்கு தாங்கவில்லை..

அங்கே ஒரு குழந்தைகள் அருங்காட்சியகம் இருக்கிறது. உலகத்திலேயே மிகப் பெரியதாம். அமெரிக்காவில் யாராவது உலகத்திலேயே என்று கூறினால் நாங்கள் எந்த உலகத்தில் என்று கேட்பது வழக்கம். ஏனென்றால் அங்கே உலக அளவில் என்று குறிப்பிடப்படும் விளையாட்டுகள் எல்லாம் அவர்கள் மானிலங்களுக்குள்ளே தான் நடக்கும். நியூயார்க்கைத் தாண்டி எதுவுமே இல்லை இந்த நாட்டில்.

ஜார்ஜ் புஷ் ஆப்கானிஸ்தான் , இராக் போன்ற நாடுகளுடன் சண்டையிட்டதே அமெரிக்கர்களின் பூகோள அறிவை விருத்தி செய்யத்தான் என்று ஒரு நகைச்சுவையும் உண்டு.

சரி விஷயத்திற்கு வருவோம்.

அந்த அருங்காட்சியகத்தில் இந்த புகைப்படம் எடுத்தேன். தீபாவளி பற்றி ஒரு குறிப்பு இருந்தது.. அதில் மகாலட்சுமி ஆந்தையுடன் இருப்பது போல ஒரு படம் இருந்தது.. வழக்கமாக யானை தான் பார்த்திருக்கிறேன்.. சரஸ்வதியானால் ஒரு மயில் இருக்கும். ஆண்டாள் அல்லது மீனாட்சி ஆனால் கிளி இருக்கும். இது ஏன் ஆந்தை .. விஷயம் தெரிந்தவர்கள் விளக்குங்கள்.







ஜப்பான் நாட்டில் வைக்கப் படும் கொலு பற்றியும் ஒரு படம் இருந்தது..



















இந்தியானாபோலிஸில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் நம்ம காந்தித் தாத்தாவின் மூன்று குரங்கு பொம்மை வேறு மாதிரி இருந்தது..

இதற்கென்ன அர்த்தம்..

போர் புரிவதாக முடிவு செய்து விட்டால், ஆதாரங்களைப் பார்க்காதே.. ஐ நா சபை மற்ற உலக நாடுகள் சொல்வதை கேட்காதே, அடுத்த தேர்தலில் இதைத் தவிர எதைப் பற்றியும் பேசாதே என்றா?

அன்புடன் விச்சு

5 comments:

ரங்கா - Ranga said...

வித்தியாசமான புகைப்படம். நேரம் கிடைக்கும் போது மற்ற படங்களையும் பார்க்க ஆவல்.

பழூர் கார்த்தி said...

காந்தி தாத்தாவின் மூன்று குரங்கு பொம்மைகளுக்கு நீங்கள் கொடுத்த
விளக்கம் சூப்ப்ப்பரப்பூ..... கலக்குங்க...

G.Ragavan said...

வங்காளத்தில் லட்சுமியின் வாகனமாக ஆந்தையைத்தான் வைத்திருக்கின்றார்கள். துர்காபூஜாவின் போது நடுவில் துர்க்கை. இருபுறமும் லட்சுமியும் சரஸ்வதியும். அவர்களின் ஓரத்தில் கணபதியும் சுப்பிரமணியனும். இதில் எல்லோருடைய வாகனங்களும் இருக்கும். லட்சுமிக்கு ஆந்தைதான்.

neyvelivichu.blogspot.com said...

nanRi ranga, somberi paiyan (veettila eppadi koopiduvaanga?) raagavan..

raagavan.. neenga sonna viLakkaththiRku nanRi.. ithuvarai appadi iruppathu enakkuth theriyaathu.. irhaRku ethavathu kathai irukkiRathaa?

anbudan vichchu

G.Ragavan said...

தெரியாது விச்சு. ஏன் ஆந்தையென்று தெரியாது. ஆனால் ஆந்தையை லட்சுமியோடு பார்த்திருக்கிறேன். அவ்வளவே.