
சானியா மிர்ஸா இரண்டாவது சுற்றில் வெற்றி..
சானியாவிற்கு வாழ்த்துக்கள். இது வரை எந்த இந்திய பெண்ணும் செய்யாத ஒன்றைச் செய்திருக்கிறார்.
அடுத்த (3rd) சுற்றிலும் அவருக்கு மரியன் பார்டோலி என்பவருடன் மோதும் வாய்ப்பு. 21 வயதாகும் இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இவரதும் அதிக பட்ச சாதனை மூன்றாவது சுற்றில் ஆடியது தான். தற்போது 43ம் இடத்தில் இருக்கிறார். (சானியா 42இல்). இதிலும் வெற்றி பெறும் வாய்ப்பு நன்றாக இருக்கிறது.

அடுத்த (4th) சுற்றில் அனேகமாக உலக முதல் இடத்திலும் இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவார் என்று கணிக்கப்படுபவருமான (ஆட்ட தரவரிசைப் படி) மரியா ஷரபோவாவைச் சந்திப்பார். யாருக்குத் தெரியும் ஜெயித்தாலும் ஜெயிக்கலாம் (இது நம்பிக்கையா.. பேராசையா?)
இரண்டாவது சுற்றில் வென்று அடுத்த சுற்றில் பிரவேசிக்கும் இந்த வேளையில் அவரது விளையாட்டு எவ்வளவு நன்றாக இருந்தது என்பது ஒரு கேள்வி.. கீழே இருக்கும் விவரங்களைப் பாருங்கள்.. எதிலுமே (சரி சரி.. ஒரு விஷயம் தவிர) சானியா முன்னணியில் இல்லை.. அதிக பட்ச ஓட்டுகள் வாங்கினாலும் தொகுதிகளில் ஜெயிக்காத அரசியல் தலைவர் போல் மரியா கேமரின் தோற்றுப் போனார்.

இது அடுத்த சுற்றில் தாஙுமா..
என்ன இருந்தாலும் எங்கள் நாட்டுப் பெண்.. (பாரதியார் பாணியில் "வாராது வந்த மாமணி). ஜெயிக்க வாழ்த்துக்கள்..
அன்புடன் விச்சு
2 comments:
Unforced Errors :((
winners :))
Similar situ in the 1st round too; Luck favors the prepared mind.
முதல் ஆட்டத்தில் எதோ வயிற்றுப் பிடிப்பு என்று எழுதியிருந்தார்கள்.. அதனால் பரவாயில்லை என்று நினைத்தேன்.. தினமும் அப்படிதான் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான்..
னேற்று ஜென்கின்ஸ் - நடால் ஆட்டம் பார்த்து நினைத்துக் கொண்டேன் ஜென்கின்ஸ்க்கு கொஞ்சம் பொறுமையாக ஆட சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று.. சானியாவிற்கும் அது பொருந்தும்.
பார்க்கலாம்.
அன்புடன் விச்சு
Post a Comment