Saturday, September 17, 2005

114. வாத்துப் போட்டி.

வாத்துப் போட்டி.

இது நிஜமாகவே வாத்துப் போட்டி..

ரப்பர் வாத்துப் போட்டி.

குளிக்கும் தொட்டியில் (bath tub) நீர் நிரப்பி குழந்தைகளைக் குளிப்பாட்டும் போது தொட்டியில் மிதக்க விடப்படும் பொம்மை இந்த ரப்பர் வாத்து (rubber duckie) .

கானடாவின் ஒட்டாவா நகரில் வருடம் தோறும் வசந்த காலத்தில் பனி உருகும் போது இந்த போட்டி நடத்தப் படுகிறது.. (நம்ம கனடா வலைப்பதிவாளர்கள் யாருமே இதைப் பற்றி எழுதவில்லையே?)

ஒரு கன்டைனெரில் பொம்மை வாத்துக்கள் நிரப்பப் பட்டு ஆற்றில் கொட்டப்படும்..

முதலில் வரும் வாத்துகள் மேல் பணம் கட்டியவருக்குப் பரிசு.. 5 $ கட்டணம். இதில் வரும் பணம் குழந்தைகள் கிழக்கு ஒன்டாரியோ குழந்தைகள் மருத்துவ மனைக்கு வழங்கப் படுகிறது..

இது போக, Hawaiiலும் ஒரு போட்டி நடக்கிறது.. இதன் வருமானம் செரிபரல் பால்சீ நோய் கழகத்திற்கு வழங்கப் படுகிறது.

மேலும் பல சிறு ஊர்களிலும் பல பொது நல காரணங்களுக்கு பணம் பெற இதே போல் போட்டிகள் நடத்தப் படுகின்றன..

நம்ம ஊரிலும் நடத்தப் படுகிறதா? விவரம் அறிந்தவர்கள் கூறுங்கள். (தண்ணி எங்கெ இருக்கிறது என்கிறீர்களா?)

சரி அப்படி என்ன இந்த ரப்பர் வாத்துகளுக்கு கிராக்கி என்று கேளுங்கள்.. உங்கள் குழந்தைகளை கேட்டுப் பாருங்கள்.. சேசமெ தெருவில் (sesame street) இருக்கும் ஏர்னி (Ernie) என்ற பொம்மை (puppet) யின் நண்பன்..

அவர்

Rubber Duckie, you're the one,
You make bathtime lots of fun,என்று பாடுவார்..

தமிழில்..

ரப்பர் வாத்தே, நீ என் நண்பன்
குளிக்கும் பொழுது உன்னால் இன்பம்..(எப்படி மொழிபெயர்ப்பு.. மொழி பெயர்த்தலுக்கு ஒரு போட்டி வைக்கலாம்)


அன்புடன் விச்சு

4 comments:

துளசி கோபால் said...

விச்சு வந்துட்டேன்.

இந்த ரப்பர் டக்கி நிகழ்வை இங்கே டி.வி யிலே முந்தி ஒருநாள் பார்த்திருக்கேன்.

Narayanan Venkitu said...

Vichu,

Very nice post. Yeah, it is interesting. Both my daughters were big fan of ducks in their bathtubs.!!

I didn't know about these competitions until you posted them today.!

Thank you. 'Quack Quack'.

Ramya Nageswaran said...

சிங்கையிலும் உண்டு இதே ரப்பர் வாத்துப் போட்டி..$10 ஒரு வாத்தின் விலை. பல தொண்டு நிறுவனங்களுக்கு போகும் இந்த காசு.

2002லே ஒரு மில்லியன் வாத்துக்கள் போட்டி போட்சுச்சாம்.

Nagarathinam said...

நண்பருக்கு,
உங்கள் வலைப்பூ அருமை. அருமையாக எழுதி உள்ளீர்கள்...
நான் மதுரையில் வசிக்கிறேன்.
தங்களைப் பற்றி அறிய ஆர்வம்.
நண்பன், நாகரத்தினம்
snagarathinam@gmail.com