Friday, May 05, 2006

நீல சாயம் வெளுத்துப் போச்சு

ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:தி.மு.க., அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய வரத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவரது நிழலில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேறும், என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். (Dinamalar)

அப்போ ஜெ சொன்னது சரிதானா.. மத்திய அரசு உதவுவதில்லை. தமிழ்நாட்டு நிதிநிலைமையில் இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்க முடியாது.. 3.50 க்கு வழங்கவே 1300 கோடி செலவாகிறது. ப.சி. வேறு மான்யங்களைக் குறைக்கிறார் என்று..

இந்துஸ்தான் டைம்ஸில் வந்ததாக கூறப்படும் "வாக்குறுதிகளைக் கொடுத்து விடலாம், நிறைவேற்றும் போது பார்த்துக் கொள்ளலாம்" என்பதும் இந்த பேச்சோடு ஒத்துப் போகின்றது போலத் தெரிகிறதே..

யாராயிருந்தாலும் நிறைவேற்ற மட்டார்கள். தி மு க அறிவியல் பூர்வமாக யாரையாவது விட்டு "பொதுமக்கள் வரிப் பணத்தை வீணாக்குகிறார்கள்" என்று பொது நல வழக்கு போட வைத்து வழங்காது என்று நெல்லை கண்ணன் என்பவர் பேசியதும் நினைவுக்கு வருகிறது..

அய்யோ பாவம் மக்கள்.


வாக்குறுதி. (ஹைக் கூ)

ஏழை நாய்
எலும்புத்துண்டு
அட, இதுவும் ப்ளாஸ்டிக்..

அன்புடன் விச்சு

4 comments:

ஜெயக்குமார் said...

மக்கள் தங்கள் ஓட்டு மழையால், இந்த நரிகளின் வேஷங்களை களையவேண்டும்.
செய்வார்களா?

Anonymous said...

ஜெயலலிதா என்ற மாயப்பேயை தமிழகத்தில் இருந்து ஒழிக்கவேண்டும்.

neyvelivichu.blogspot.com said...

நன்றி ஜெயகுமார். இலவச தொலைக்காட்சியும் இலவச தங்கமும் ஓட்டை நிர்ணயிக்கும் வரை மழையும் வராது.. வேஷமும் கலையாது..

அனானி, எல்லாருமே மாயப் பேய்கள் தான்.. புதியதோர் உலகம் செய்வோம் என்பது தான் சரியான பதம்.

அன்புடன் விச்சு

Anonymous said...

கருணாநிதி என்ற காத்து கருப்பை முதலில் ஒழிப்போம்.