Saturday, April 29, 2006

தேர்தல் காலம்

இது பத்திரிகைகள் தங்கள் வலையகங்களை காசு கொடுத்துப் படிக்கும் தளமாக மாற்றும் காலம் போலத்தெரிகிறது.

துக்ளக் போல எடுத்ததுமே சந்தா தளமாக இல்லாமல் முதலில் இலவசமாகவும் பின் பதிவு செய்து படிக்கும் தளமாகவும் மாறி இப்போது சந்தா கட்டி படிக்கும் தளமாக பல தளங்கள் மாறும் போல தெரிகிறது.

இன்றைய மாறுதல் நக்கீரன். (www.nakkheeeran) (கவனிக்க: மூன்று e ).

இருபது அமெரிக்க வெள்ளி சந்தா. அறிமுக சலுகையாக 15 வெள்ளி.

அடுத்து குமுதமும் இதே வழியில் போகும் போலத்தெரிகிறது. (தள வடிவமைப்பு மாறியிருக்கிறது இந்த வாரம்)

தேர்தல் முடியும் வரை (என்ன இன்னும் ஒரு வாரம் தான்) தமிழ்முரசும் தினகரனும் சந்தா தளங்களாக மாறாது என்று நினைக்கிறேன். இது தினமலருக்கும் பொருந்தும்.

அது சரி இந்தியாவில் இருந்த போது ஆளுக்கு ஒரு பத்திரிகை வாங்கி பரிமாறிக்கொள்ளுவது பழக்கம்.. இங்கேயும் அப்படிதான் செய்யவேண்டும் போல இருக்கிறது.

பத்து பத்திரிக்கை 20 வெள்ளி என்றால் வரவு செலவு கணக்கில் இடிக்குமே..

இல்லையென்றால் கேபிள் தொலைக்காட்சி போல் யாராவது பொதுவாக சந்தா வசூலித்து பல பத்திரிகைகளை குறைந்த விலையில் தரலாம்.

அடுத்த வலையகத்தேர்தலில் ப ம க இதை இலவசமாக தருவதாக வாக்குறுதி தரலாம். (முக மூடியார் உதைக்க வருமுன் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்)

அன்புடன் விச்சு

4 comments:

மாயவரத்தான் said...

மூன்று ஈ எல்லாம் கரெக்ட் தான். அப்புறம் ஒரு 'ஹெச்' வரணுமே சார்.

மாயவரத்தான் said...

மூன்று ஈ எல்லாம் கரெக்ட் தான். அப்புறம் அதுக்கு முன்னாடி ஒரு 'ஹெச்' வரணுமே சார்.

neyvelivichu.blogspot.com said...

நன்றி மாயவரத்தான்..

தவறு சரி செய்யப்பட்டு விட்டது

உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன..

அன்புடன் விச்சு

மாயவரத்தான் said...

பாராட்டுக்கு நன்றி விச்சு சார். :)