அப்பிடிப்போடு ன் கருத்துக்கு பின்னூட்டம்
http://tamilkudumbam.blogspot.com/2005/05/blog-post_26.html
எல்ல தலைவர்களும் ஒரே மாதிரி தன் செயல்படுகிறார்கள்.. இவ்வளவு நாள் அரசியலிலேயே இருந்த பிறகு.. அண்ணனுக்கு பின் தம்பியாக அரசியலில் வந்த கருணா நிதி ஆட்சியில் ஊழல் இருக்க வில்லையா என்ன..(மிசா என்று திட்டி, பின் சர்காரியா கமிஷன் கைது வாரண்டை தவிர்க்க , மீசையில் மண் துடைத்து கூட்டணி வைத்த கதை மறந்து விட்டதா). எம் ஜி ஆர் ஊழல் என்று கூறிவிட்டீர்கள்.. அம்மையார் கதை உலகறிந்தது.
இது ஜன நாயகம் தி மு க பாணி.. எல்லாரும் இன்னாட்டு மன்னர்.. ஆனால் நாங்கள் சொல்லுபவர் தன் நிஜமான மன்னர் என்பது போல..
மாறன் வாரிசு, மருத்துவர் வாரிசு எல்லாம் வந்து விட்டார்களே... இசுடாலின் (என்றைக்காவது கலைஞர் இப்படி முரசொலியில் எழுதினாரா அவர் பெயரை?) திறமை இன்றி வை கோ விடம் தி மு க வை இழந்து விட்டால் கலைஞர் வாரிசு வராமல் போய் விடுமே என்ற பயமா. இல்லை கலைஞ்ர் போனதும் கட்சியில் உடைந்த பங்குடன் மு. அ ஆகும் பலரது கனவை கெடுத்துவிடுவார் என்ற கவலையா?
அவரும் (வி.கா) வந்து முட்டி பார்க்கட்டுமே.. திறமை இருந்தால் மு.அ ஆகட்டுமே... இப்பொழுதே எதற்கு இவ்வளவு எதிர்ப்போ புரியவில்லை.. என்ன பயம்.. தோற்று விடுவோமென்றா.. எம் ஜி ஆரையே பார்த்தவர்களாச்சே.. எதையும் தாங்கும் இதயங்கள் அல்லவா.. அஞ்சற்க.
அன்புடன்
விச்சு
Saturday, May 28, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வாங்க ! வாங்க கேப்டன் சார், பொது ஜனம் தலைல ஓரமா கொஞ்சம் இடம் இருக்கு... உங்க பங்குக்கு முக்கா கிலோ மொளகா எடுதுனு வாங்க !!!
நன்றி VM.
தலையைக் காட்டிக்கொண்டு நின்றால் மிளகாய் அரைக்காமல் விடுவார்களா.. ஓட்டுப்போடும் போது மனசாட்சியொடு ஓட்டு போடவேண்டும்..
சிந்தித்துப் பார்த்தேன். எல்லம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை.. இதில் யார் வந்தாலும் நம்மை ஏமாற்றப்போகிறார்கள்..
எம்பி, எம் எல் ஏ ஆகி வீடு கார் தொழில் நிறுவனம் தொடங்காத ஒரு சிலரைத் தவிர.. கொள்ளை அடிப்பவர்களுக்கு தான் பட்டுக்கோட்டை எழுதினார், திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியது என்று.. நடக்குமா...
அதுசரி.. இங்கே விசய காந்தை,ரசிகர் மன்றங்களை மிரட்டுபவர்களை எல்லாம் பார்க்கையில் "ஆடு நனைந்ததே என்று.. எதோ அழுததாம்" என்ற பழமொழி ஞாபகம் வந்து தொலைக்கிறது..
இந்தக் கட்சிகளும் திரைப்படம் மூலம் ரசிகர்களை உண்டாக்கி தொண்டர்களாக மாற்றியவைதானே.. பாமாக சாதி உணர்வுகளை உசுப்பி விட்டு தொண்டர் சேர்த்தது.. எனக்கு பெரிய வேறுபாடு தெரியவில்லை.. இதில் பாஜ கட்சியை வேறு குற்றம் கூறுகிறோம். நல்ல வேடிக்கை.
அன்புடன் விச்சு
Post a Comment