http://tamilkudumbam.blogspot.com/2005/05/blog-post_26.html
இந்த வலைப்பூ விற்கு பதில்
//அதென்ன 'நீங்க' எல்லாம் வி.கா ஆதாரவா கிளம்பீட்டிங்க?. //
இதற்கு என்ன பொருள் என்று புரியவில்லை.. அய்யர் பட்டமா? கலைஞர் வள்ளுவருக்கு இத்தனை நூற்றாண்டுகள் கழித்து கொடுத்த பட்டமய்யா அது.. நீங்கள் வாரிவழங்குகிறீர்களே.. இது தவறான எண்ண ஓட்டம்.. யாரையும் ஜாதி மத அடிப்படையில் குறிப்பிட்டு தாக்குவதை தவிருங்கள். நீங்களும் தமிழ் இனம் திருந்துவதற்கு உதவியவராவீர்கள். அப்புறம் அதை பின்பற்றுவதும் ப்ற்றாததும் உங்களுடைய அறிவு மூப்பைப் பொறுத்தது.
சிஷ்யன் குருவிடம் அய்யா பெண்ணை தொட்டு காப்பாற்றினீர்களே என்று கேட்டதற்கு குரு சொன்னாராம், நான் அங்கேயே அவளை இறக்கி விட்டு விட்டேன்.. நீ ஏன் இன்னும் சுமந்து கொண்டு வருகிறாய் என்று
வி. கா வை ஆதரித்ததால் பார்ப்பான் பட்டம் கிடைத்தால், அவருக்கு தோல்வி நிச்சயம்.. அரசாங்க வேலைவாய்ப்பு, 35 மார்க் கல்லூரி இடம் இதெல்லாம் விட்டுவிட்டு அவரை ஆதரிப்பதாவது..
இதையும் சிந்தியுங்கள், இன்றிருக்கும் ஆட்சியின் பின்னிருப்பவர்களிள் எத்தனை பேர் நீங்கள் சொன்ன இனத்தை சேர்ந்தவர்கள்.. கொள்ளை அடிப்பதில் 50 % அவர் வீட்டில் இருப்பவர்களும் (யாரென்று சொல்லத்தேவையில்லை) 50% மற்ற அமைச்சர்களும் தான் சாப்பிடுகிறார்கள்.. அடுத்த கட்சி ஆட்சியில் சாப்பிட்டு, நாட்டைக்கெடுத்தவர்கள் எல்லோரும் நீங்கள் சொன்ன ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லை..
50 வருடஙளில் ஜப்பான் எங்கே போனது தெரியுமல்லவா? 40 வருட ஆட்சியில் என்ன மாறியது? இரட்டை குவளைகளா? ஏழைகளின் கஷ்டங்களா? நாட்டை காக்க முடியாத நிலையை மறைக்க ஏமாற்றும் அரசியல் வியாதிகள் செய்வது இந்த இனத்தின் மீது பாய்வது.. இந்த இனத்தவர் மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் நன்றகத்தான் வாழ்கிறார்கள். நாசமாய் போனது நாம் தான்.
விகா ஜாதி பேர் சொல்லி வாக்கு கேட்க மாட்டார் என்று நினைக்கிறேன். அப்படி கேட்காமல் , அவருடைய சொந்த தகுதிகள் மூலம் ரசிகர்கள் ஆதரவு கிடைப்பதை பயன்படுத்துவது தவறா..
அவர் ஆடினார் பாடினார், என்னமோ செய்தார்.. மரம் வெட்டி நாட்டை வீணக்கவில்லை, பாத்திமா பாபு போன்றோறை துன்புறுத்தி பொறுக்கித்தனம் செய்யவில்லை. இசுடாலின், மூ க முத்து போன்றோர் முயற்சி செய்தது தெரியதா..
சுய முயற்சியால் முன்னேறும் திறமை கூட இன்றி, தந்தையின் புகழில் சவாரி விடும் இளம் தலைவர்களை (இசுடாலின், அன்புமணி, கார்த்திக் சிதம்பரம், GK வாசன்) ஆதரிக்கலாம் என்றால், விகா விற்கு என்ன குறை.. சொந்த காலில் நிற்கிறார் அய்யா..
இசுடாலினுக்கு சென்னை மேயர் பதவி என்றால் அவருக்கு ஒரு நடிகர் சங்க தலைவர் பதவி.. அவர் கடன் முழுவதையும் அடைத்தார், நிலையான வருமனத்துக்கு வழி செய்தார் என்று அனைவரும் ஒத்துக்கொள்கிறார்களே.. திறமை இல்லாமல் இதெல்லம் செய்தாரா? அப்படியானால் அவருக்கு முன்னால் வந்தவர்கள் ஏன் கடனை விட்டுச்சென்றார்கள்?
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை..(இதுவும் ஒரு நடிகர் தான் சொன்னார். அவர் இறந்ததும் ஒரு தலைவர் அவர் புகைப்படத்தை சுவரொட்டியில் பதித்து வாக்கு கேட்டார்.. இந்த தண்டனை போதாதா என்று.. மறந்து விட்டோம் இல்லையா?)
மக்களின் இன, மத, ஜாதி உணர்வுகளில் குளிர் காயும் தலைவர்களும், அவர்களை ஆதரிக்கும் கட்சிகளும் இவர் வரவை எதிர்த்தால் புரிந்துகொள்ள முடிகிறது..படித்த உங்களுக்கு என்ன ஆச்சுதையா?
நடிகன் செய்ததைக்கூட அதற்கு முன் ஆண்ட தலைவர்கள் செய்ய முடியவில்லை..(காமராஜர் தவிர).. சொந்த லாபங்கள் தான் பெருகின.
//படித்தவர்கள் கணிசமாக உயர்ந்த இக்காலத்திலாவது இம்மாதிரி முட்டாள்தனங்கள் குறைய வேண்டும்.//
படித்தவர்கள் அவர்களுக்கு வசதியான முட்டாள் தனங்களை ஆதரிக்கலாமா?
Monday, May 30, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நீங்கள் சுட்டிய வலைப்பூவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கும் இட்டு உங்களது இந்தப் பின்னூட்டப் பெட்டியை ஆரம்பித்து வைக்கிறேன். வாழ்க நலமுடன்.
இது சுதந்திர நாடு. அவரவருக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் உண்டு. விஜயகாந்தை எடுத்து கொள்வோம். தான் தேர்தலில் நின்று ஜெயிக்க முடியும் என்று நினைக்கிறார். தான் சம்பாதித்தப் பணத்தை போட்டு தேர்தலில் நிற்கிறார். அவர் கட்சி வேட்பாளர்களும் நிற்கிறார்கள். பெரும்பான்மை பலம் பெற்றால் பதவி பெறுகிறார். இல்லாவிட்டால் பணமெல்லாம் இழந்து அரசியலை விட்டு விலகுகிறார். எதுவானாலும் ஓட்டு போடும் மக்கள் பார்த்து கொள்வார்கள். அதிலும் தமிழ் வாக்காளர்கள் விவரமானவர்கள். அவர்கள் ஒரு போதும் தொங்கும் சட்டசபையைக் கொண்டு வந்ததில்லை.
பிறகு அவர் அரசியலுக்கு வர வேண்டுமா கூடாதா என்று மற்றவர்கள் விவாதிப்பது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை? ஒரு மூலதனமும் இன்றி தலைவர் மகன் என்ற ஒரே தகுதியில் தேர்தலில் நிற்காமலேயே மந்திரி ஆவதை விட விஜயகாந்த் தன் அரசியல் தகுதியை மக்கள் மன்றத்தில் வைத்து பரிசோதிப்பது கேவலம் இல்லை. எம்.ஜி.ஆர். ஒரு வழியில் பதவிக்கு வந்தார், என்.டி.ஆர். வேறு மாதிரி வந்தார். சிவாஜி, அமிதாப் பச்சன் ஆகியோர் வந்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று களத்திலிருந்து விலகினர். எல்லாவற்றையும் காலம் பார்த்து கொள்ளும்.
நேரு குடும்பத்தில் பிறந்ததாலேயே இந்திரா, ராஜீவ், அவர் மனைவி சோனியா மற்றும் ராகுல் காந்தி அரசியலில் குப்பை கொட்ட முடிந்திருக்கிறது. நேரு சம்பந்தம் இல்லாதிருந்தால் இவர்களில் யாராவது தலைவர் பதவியை நினைத்து கூட பார்த்திருக்க முடியுமா? எல்லாம் நேரம்தான்.
1970-ல், ஒரு வக்கீல் மற்றும் நடிகர் ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். எல்லோரிடமும் கருத்து கேட்டார். முக்கால்வாசி பேர் இது உருப்படும் காரியமில்லை என்று திருவாய் மலர்ந்தருளினர். அவ்வாறு கூறியவர்கள் கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் யார் என்பதைக்கூட சிரமப்பட்டுத்தான் நினைவுக்கு கொண்டு வர வேண்டியிருக்கிறது. பத்திரிகை? அமோகமாக நடக்கிறது. பத்திரிகை பொருளடக்கம்? அரசியல், அரசியல் மற்றும் அரசியல். கவர்ச்சி படங்கள்? மூச். தனி நபர் தாக்குதல் கிடையவே கிடையாது. கிளு கிளு செய்திகள் - அண்ணாச்சி, ஜயலக்ஷ்மி முதலியோரைப் பற்றி? யார் அவர்கள்? நான் இங்கு எந்தப் பத்திரிகையைக் குறிப்பிடுகிறேன் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா?
இதெல்லாம் நடக்கும் என்று யாராவது 1970-ல் நினைத்து பார்த்திருக்க முடியுமா? பத்திரிகைத் துறையில் அனுபவம் வாய்ந்த குடும்பத்தால் ஆரம்பிக்கப்பட்ட பெஸ்ட் கண்ணா பெஸ்ட் பத்திரிகை நொண்டுகிறது. எது நடக்கும் என்று யார் கூற முடியும்? இவர் பத்திரிகையோ சீராகச் சென்று கொண்டிருக்கிறது.
நடிகனோ, பொறியாளனோ, எழுத்தாளனோ யாராயிருந்தாலும் அரசியலுக்கு வருவதை எதிர்க்க நாம் யார்? வேண்டுமானால் தேர்தலில் அவர்களுக்கெதிராகப் பிரசாரம் செய்யுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
விச்சு,
தமிழ் வலைப்பதிவுலகத்திற்கு உங்களை வரவேற்கிறேன் :)
நல்ல கருத்துக்களையும், கேள்விகளையும் முன் வைத்துள்ளீர்கள் !!!! தொடர்ந்து எழுதுங்கள் !!
**********
//படித்தவர்கள் கணிசமாக உயர்ந்த இக்காலத்திலாவது இம்மாதிரி முட்டாள்தனங்கள் குறைய வேண்டும்.//
படித்தவர்கள் அவர்களுக்கு வசதியான முட்டாள் தனங்களை ஆதரிக்கலாமா?
**********
இது தானே நடைமுறை ;-)
என்றென்றும் அன்புடன்
பாலா
Post a Comment