அப்படி போடு அருவாள - கைதட்டினால் நோய் குணமாகும்
கைகளைத்தட்டி நமது மகிழ்ச்சியைத் தெரிவிப்பது உலகம் முழுவதும் உள்ள நல்ல பழக்கம். கைகளைத் தட்டினால் 90 சதவீத நோய்கள் குணமாகின்றன என சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. முகவரி: www.clap-clap.com
கைகளைத் தட்டும் போது ஏற்படும் உடலின் அதிர்வுகள் ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்குகின்றன என மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு நோய்களுக்கு அடிப்படைக் காரணமாகும். இந்த அடைப்பு நீக்குவதினால் ரத்த நாளங்களில் எல்லாப் பகுதிகளிலும் ரத்த ஓட்டம் தங்குதடையின்றி சீராக நடைபெறுகின்றது. இதனால் ரத்த நாளங்களில் படியும் கொழுப்பு நீக்கப்படுகின்றது.
உடல் உறுப்புகளின் நரம்பு நுனிகள் கைகளில் முடிவடைகின்றன. கை தட்டுவதால் ஏற்படும் இந்த அதிர்வுகள் நரம்பு மண்டலத்திலுள்ள தேவையற்ற முடிச்சுக்களை நீக்கி நரம்பு மண்டலத்தைச் சீராக்கிறது. உணர்வுகளும் இதனால் சீர்படுகின்றது. ரத்த ஓட்டமும் நரம்பு மண்டலமும் சீராகி பலமடைவதால் உடலில் 90 சதவீத நோய்கள் குணமாவது சாத்தியமாகின்றது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் கைகளைத் தட்ட வேண்டும். ஒரு நிமிடத்திக்கு 60 முதல் 100 தடவை வரை கைகளை தட்டலாம்.
கை தட்டல் ஒலி பலமாகத் கேட்க வேண்டும் என்பதில்லை. இந்தப் பயிற்சிக்கு வயது வரம்பு ஏதுமில்லை. கை தட்டல் பயிற்சியின் மூலமாக ரத்த அழுத்தம் இதய நோய் சர்க்கரை நோய், எழும்பு தொடர்பான நோய்கள் குணமாகியுள்ளன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் கை தட்டும் பயிற்சியை புதுவித யோகா பயிற்சியாக அங்கீகரித்துள்ளது என்பது கைத்தட்டல் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் உணர்த்துகின்றது.
எல்லாரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க பார்க்கலாம்..
நன்றி தினமலர்.
Tuesday, June 21, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment