Saturday, June 04, 2005

தருமபுரி எங்கே இருக்கிறது?

இரண்டு செய்திகளைப் படித்ததும், ஒரு கேள்வி மனதில் வந்தது. யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

அன்புடன்

விச்சு

செய்தி 1.


தண்டனை வழங்குவதில் தமிழகம் சாதனை: ஜெ
ஜூன் 3, 2005
சென்னை:
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் தமிழக காவல் துறை சாதனை படைத்துள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் நிம்மதிக்கும் அடிப்படையாக இருப்பது அமைதியான சூழ்நிலையே ஆகும். அத்தகைய அமைதியான சூழலை உருவாக்கிட அடித்தளமாக அமைவது காவல் துறைப் பணியே. எனவே தான் எனது தலைமையிலான அரசு காவல்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால் தான் தமிழ்நாடு காவல்துறை உற்சாகத்துடன் செயல்பட்டு குற்ற எண்ணிக்கையை குறைத்து குற்றங்களை கண்டுபிடிக்கும் சதவீதத்தை உயர்த்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனையை விரைந்து பெற்றுத் தருவதில் சாதனை படைத்து வருகிறது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட 17 நாட்களுக்குள் ஒரு கொலை வழக்கிலும், 16 நாட்களுக்குள் மற்றொரு கொலை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்து தமிழ்நாடு காவல் துறை சாதனை படைத்துள்ளது.
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும் என்ற அடிப்படையில் குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும், குற்றம் செய்தவர்கள் அதற்குரிய தண்டனையை விரைந்து பெற்றிட வேண்டும் என்பது தான் எனது அரசின் எண்ணமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்தி 2.

தர்மபுரி மாணவிகள் எரிப்பு வழக்கு: அரசுக்கு நீதிபதி மீண்டும் 'டோஸ்'
சென்னை:
தர்மபுரியில் 3 கல்லூரி மாணவிகள் அதிமுகவினரால் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கு விசாரணையில் தமிழக அரசு அலட்சியமாக நடந்து கொள்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கனகராஜ் மீண்டும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தøத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்¬றையில் ஈடுபட்டனர்.
தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் வந்த பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் 3 மாணவிகள் உயிருடன் எரிந்து சாம்பலாயினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. 31 அதிமுகவினர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த விசாரணை 'உல்டா புல்டா' ஆனது.
ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக விசாரணை நடந்து வருவதாக கூறி இறந்த மாணவிகளில் ஒருவரான கோகில வாணியின் தந்தை வீராசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ் கடந்த 2003ம் ஆண்டு, வழக்கை சேலம் விரைவு நீதிமன்றதிதற்கு மாற்றி உத்தரவிட்டார். அங்கும் இந்த வழக்கு இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளது.
காரணம், இந்த வழக்குக்காக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞருக்கு தமிழக அரசு இரண்டு வருடமாகியும் இன்னும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரே தரவில்லை.
இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் கோகிலவாணியின் தந்தø வீராசாமி அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கனகராஜ், விசாரணையை தாமதப்படுத்தி வருவதற்காக தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜாரன வழக்கறிஞர், பஸ் எரிப்பு வழக்கு தொடர்பான முக்கிய ஆவண கட்டுகள் தொலைந்து போய் விட்டதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனால் கோபமடைந்த நீதிபதி, இந்த வழக்கின் ஆவணங்களை 3 நாட்களுக்குள் போலீசார் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
இந்த மனு மீது இன்றும் நீதிபதி கனகராஜ் விசாரணை நடத்தினார். அப்போது, மிகவும் முக்கியமான இந்த வழக்கை அரசுத் தரப்பு இவ்வளவு அலட்சியமாகவும், அக்கறையில்லாமலும் நடத்தி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நாளிலிருந்து இன்று வரை வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்கு விசாரணையை காலதாமதம் செய்ததற்கான காரணங்கள் ஆகியவற்றை அறிக்கையாக, உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றம் உத்தரவிட்ட நாளிலிருந்து இன்று வரை அந்தந்த காலகட்டத்தில் உள்துறை செயலாளர்களாக இருந்தவர்கள் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி கனகராஜ், வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்

2 comments:

Online Security Tips and Tricks for Kids said...

அருமையான தலைப்பு.. ஒரு வேளை அரசுக்கு, செலட்டிவ் அமீனீசியாவா ?

neyvelivichu.blogspot.com said...

//தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும் என்ற அடிப்படையில் குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும்//

நீதி மறுக்கப்பட வேண்டும் என்பது தான் எண்ணமோ?

அன்புடன் விச்சு