சில கருத்துகளுக்கு என் பின்னூட்டம்
//கவனிக்க: இஸ்லாத்தின் பார்வையில் தமிழ் ஒரு நீச மொழியல்ல!)//
எனக்குத் தெரிந்து, கிறிஸ்துவத்தில் தமிழ் வழிபாடு உண்டு.. இந்துக்கள் அவர்கள் விரும்பும் மொழியில் வழிபடலாம். (தமிழ் இலக்கியத்தில் பாதி பக்தி இலக்கியம் தான்.. )
ஆனால் இஸ்லாத்தில் அரபி யில் தான் குரான் ஓதப்படுகிறது என்று நினைக்கிறேன்..
இந்துக்கள் செய்வதை மாற்றிச்செய்வதே இஸ்லாம் என்ற கருத்தும் எனக்கு உண்டு.. இவர்கள் (இந்துக்கள்) மீசை இல்லாமலோ , அல்லது மீசை வைத்தால் தாடி வைத்துக்கொண்டோ இருக்கவேண்டும் என்று சொன்னால்.. இஸ்லாத்தில் மீசைஇல்லமல் தாடி மட்டும் வைக்க சொல்வார்கள்..
இவர்கள் உருவ வழிபாடு செய்தால், அவர்கள் அதை வேண்டாம் என்று சொல்வார்கள்.. இவர்கள் சூரியனை கண்டு பூஜை செய்தால் அவர்கள் நிலவை கண்டு பூஜை செய்வார்கள். இதுபோல் பல விஷயங்கள் உள்ளன
வட மாநிலங்களில் இரவில் திருமணம் செய்வதும், தலையில் சேலை போட்டு மூடுவதும் இஸ்லாமிய வழக்கங்களே. (தில்லித் துருக்கர் வழக்கமடி.. பாரதி இதைப்பற்றி எழுதியது)
என்னுடய நோக்கு அல்லது புரிதல் தவறாகவும் இருக்கலாம். உங்கள் விளக்கங்களை வரவேற்கிறேன்.
அன்புடன் விச்சு
http://kgans.blogspot.com/2005/06/blog-post.html க்கான பின்னூட்டம்
Thursday, June 09, 2005
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
தமிழ் நீசமொழி என்று சொல்வது இந்துமதமல்ல, இந்துமதத்திலுள்ள சில குறுகிய மனம் படைத்தோர் சொல்வதற்கும், இந்து மதம் சொல்வதற்கும் உள்ள வேறுபாடு உலகைவிடப் பெரிது.
அன்புள்ள விச்சு,
விளக்கங்களை எதிர்நோக்கி சில ஐயங்களை எழுப்பி உள்ளீர்கள்..
இஸ்லாத்தில் எந்த ஒரு மொழிக்கும் தனிப்பட்ட சிறப்பு இல்லை. குர்ஆன் மூலம் அரபியில் உள்ளதால் மட்டுமே மற்ற அனைத்து மொழிகளும் தாழ்ந்தவை என்று பொருள் கொள்ளல் ஆகாது. இஸ்லாமியர் நம்பிக்கைப்படி குர்ஆன் இறைவனின் சொல். அந்த மூல சொல்லாட்சி மற்றும் பொருளைப் பேணும் பொருட்டே அரபியில் படிக்கப் படுகிறது. இது வாழ்வை கற்பிக்கும் நூல் எனவே இது ஒரு மந்திர நூல் அன்று. புரிந்து வாழ்வியலில் கடைப்பிடிக்கப் பட வேண்டிய கோட்பாடு.
இஸ்லாத்தின் பார்வையில் எந்த ஒரு மொழியும் மற்ற ஒரு மொழியை விட உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ அன்று. அல்லது எந்த ஒரு இனமும் மற்ற ஒரு இனத்தை விட உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ அன்று.
ஒரே இறைவனை மட்டும் வணங்கச் சொல்லும் இஸ்லாம், வேறு யாரையும் (உயிருடனிருந்தாலும், இறந்து விட்டாலும்) எந்த ஒரு பொருளையும் வணங்கக் கூடாது என்றும் சொல்கிறது, அவற்றில் சூரியன், நிலவு, கோள்கள், தாரகைகள், மனிதர்கள் மற்றும் மனிதர்கள் உருவாக்கியவை அனைத்தும் அடக்கம்.
தாடி வைக்கும் இந்துக்களும் தாடி வைக்காத முஸ்லிம்களும் உள்ளனர். திருமண முறை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். ஒருமுறை அபூமுஹை, சுடர், நல்லடியார், அபூஉமர், இறைநேசன், சலாஹுத்தீன் மற்றும் அப்துல்லாஹ் ஆகியோரின் பதிவுகளையும் பார்வையிடுங்கள்.
வேலை நேரம் என்பதால் அதிகம் எழுத இயலவில்லை. அதிக விளக்கங்கள் தேவைப்பட்டால் எழுதுங்கள் அல்லது தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.
இஸ்லாம் பற்றி எனக்கு நிறையத் தெரியாது. இந்து மதம் பற்றி ஏதோ கொஞ்சம் தெரியும்.
இன்றைக்கு மதங்கள் என்பது பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. ஆகையால்தான் இத்தனை பிரச்சனைகள்.
மனிதர்களாக வாழக் கற்றுக் கொண்டு வாழ்கையில்...இந்த வேறுபாடுகள் எதுவுமே தோன்றாது.
முத்து உங்கள் கருத்துக்கு நன்றி.
அன்புடன்
விச்சு
நன்றி contivity,
தெரியாத ஒன்றை தெரிந்து கொள்வதால் நிறைய சந்தேகங்கள் தீரும்.. அடுத்தவர்களை குறை கூறும் மனப்பாங்கு போகும் என்பதால் தான் கேட்டிருந்தேன்.
அன்புடன்
விச்சு
//இன்றைக்கு மதங்கள் என்பது பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. ஆகையால்தான் இத்தனை பிரச்சனைகள்.//
உண்மை தான் ராகவன்.. மதங்கள் மட்டுமல்ல, மொழி, இனம் எல்லமே பழக்க வழக்கங்களாலேயே அமைகின்றன.. நாகரீகம் என்பதும் அதை அடிப்படையாக கொண்டதுதானே..
உங்கள் ராமாயணம் பற்றிய கதை படித்தேன்.. மிகவும் நன்றாக உள்ளது.. நிறைய எழுதுங்கள்
அன்புடன்
விச்சு
அன்புள்ள விச்சு,
//தெரியாத ஒன்றை தெரிந்து கொள்வதால் நிறைய சந்தேகங்கள் தீரும்.. அடுத்தவர்களை குறை கூறும் மனப்பாங்கு போகும் என்பதால் தான் கேட்டிருந்தேன்.//
மிக நல்ல அணுகுமுறை. வேறு சிலரைப்போல அல்லாமல் ஆரோக்கியமாக அணுகி இருக்கிறீர்கள்
நன்றி
***மிக நல்ல அணுகுமுறை. வேறு சிலரைப்போல அல்லாமல் ஆரோக்கியமாக அணுகி இருக்கிறீர்கள்***
contivity, same side goal-ஆ?
அனானிமசு,
எது ஐயா sameside goal?என்னுடைய முந்தைய பின்னூட்டங்களைப் படித்திருக்கிறீர்களா இல்லையா?
//என்னுடய நோக்கு அல்லது புரிதல் தவறாகவும் இருக்கலாம். உங்கள் விளக்கங்களை வரவேற்கிறேன்.//
இதைச் சொல்லியதற்கு உங்களைப் பாராட்டலாம்.
விச்சு,
/இந்துக்கள் அவர்கள் விரும்பும் மொழியில் வழிபடலாம். /
ஆனால் இஸ்லாத்தில் அரபி யில் தான் குரான் ஓதப்படுகிறது என்று நினைக்கிறேன்..// :-0
வட இந்தியாவில் கிருஷ்ணருக்கு இந்தியிலே பூசை செய்கிறார்களே? அது குறித்து என்ன சொல்வீர்கள்?
தமிழ்நட்டிலே சமஸ்கிருதத்திலெ பூசை செய்கிறார்களே என்பது வேண்டுமெனில் , பதிவுக்கு சம்பந்தமில்லாதது என்று விட்டுவிடலாம்.
அனால் இத்தனை சந்தேகங்களையும் வைத்துக்கொண்டு " இஸ்லாமும் இந்துமதமும்.. நேர் எதிர் பாதைகள்" என்று தலைப்பிடுவதுதான் கண்டிக்கப்ப்டவேண்டியது. கண்டிக்கிறேன்.
முதலில் , நீங்கள் இந்து மதம் (? :-) )பற்றியோ , முக்கியமாக இஸ்லாம் பற்றியோ ஏதோ ஒரு வாசிப்பைச் செய்துவிட்டு கேள்விகளை வைக்கலாம். இணையத்திலே "னேசகுமாரை" (nesakumar.blogspot.com)வாசிக்கலாம். *பின்பற்றக்கூடாது*.
அன்புள்ள கார்திக்ராமாஸ் (சரியாக தமிழ் படுத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்)
இந்த பின்னூட்டம் அளித்ததற்கு முதற்கண் நன்றி.
உங்கள் கருத்துக்களும் நான் எழுதியதும் வேறு படுகின்றன.
நான் எழுதியது.
/இந்துக்கள் அவர்கள் விரும்பும் மொழியில் வழிபடலாம். /
ஆனால் இஸ்லாத்தில் அரபி யில் தான் குரான் ஓதப்படுகிறது என்று நினைக்கிறேன்..// :-0
நீங்கள் எழுதியது.
வட இந்தியாவில் கிருஷ்ணருக்கு இந்தியிலே பூசை செய்கிறார்களே? அது குறித்து என்ன சொல்வீர்கள்?
தமிழ்நட்டிலே சமஸ்கிருதத்திலெ பூசை செய்கிறார்களே என்பது வேண்டுமெனில் , பதிவுக்கு சம்பந்தமில்லாதது என்று விட்டுவிடலாம்.
என் கருத்து:
"விரும்பும் மொழி"களில் தமிழும் இந்தியும் சமஸ்கிருதமும் அடங்கும் என்று நினைக்கிறேன்.
கோவிலில் சென்று அங்கே பூசாரியிடம் செய்விக்க சொல்வதுதான் பூசை என்று கருதுகிறீர்கள் போலத் தெரிகிறது. தென்கலை என்ற வைணவ சம்ப்ரதாய பிரிவே தமிழில் பூசை செய்ய வேண்டும் என்பதால் வந்தது தான். தேவாரம் திருவாசகம், திருப்பாவை, கந்தர் சஷ்டி கவசம், வினாயகர் அகவல்.. போல துதிப் பாடல்கள் (ச்லோகங்கள்) உள்ளன.. " தென்னடுடய சிவனே போற்றி" எனத்துவங்கும் அருச்சனை முறைகளும் உள்ளன.. (தமிழில் சமய சம்பந்தமான இலக்கியங்களே பெரும்பான்மையானவை).
திராவிடன் என்று எம்மை நாமே அடையாளம் காணத்துவங்கியது சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தான்.. அது வரை சமயமும் தமிழும் கலந்தே இருந்தது. இஸ்லாமிய, ஆங்கிலேய( கிருஸ்துவ என்றும் கொள்ளலாம்) மதங்கள் ஊடுருவிய பிறகு தான் தமிழகத்தில் சமஸ்கிருதம் வழிபாட்டில் முதன்மை பெற்றது எனவும் கூறலாம். கோவில் களில் உள்ளகல்வெட்டுகளே இதற்கு சான்று. தமிழகத்தில் சமஸ்கிருத கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப் படவில்லை என்பதுவும் உண்மை.
தமிழில் எந்த இஸ்லாமிய வழிபாட்டுத்தலத்திலும் கடவுள் துதிக்கப்படுவதில்லை என்பதும் உண்மை.
உங்கள் கருத்து
அனால் இத்தனை சந்தேகங்களையும் வைத்துக்கொண்டு " இஸ்லாமும் இந்துமதமும்.. நேர் எதிர் பாதைகள்" என்று தலைப்பிடுவதுதான் கண்டிக்கப்ப்டவேண்டியது. கண்டிக்கிறேன்.
என் கருத்து
நான் எழுதிய பொருள்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று மாறு பட்டதே. வித்தியாசம் நிறைய இருப்பதால் தான் இவை தனித் தனி மதங்களாக உள்ளன.. ஒரே ஒற்றுமை கடவுளை வழிபட வேன்டும் என்றது மட்டுமே.
எப்படி வழிபட வேண்டும் என்பதிலும் நேர் எதிரான கருத்துக்களே. உருவம் வேண்டுமா வேண்டாமா என்பதும் எதிரான கேள்விகளே. இதில் கண்டிக்க என்ன இருக்கிறது.. இருப்பதை கூறுவதை கண்டிப்பது தவறு.
உங்கள் கருத்து
முதலில் , நீங்கள் இந்து மதம் (? :-) )பற்றியோ , முக்கியமாக இஸ்லாம் பற்றியோ ஏதோ ஒரு வாசிப்பைச் செய்துவிட்டு கேள்விகளை வைக்கலாம். இணையத்திலே "னேசகுமாரை" (னெசகுமர்.ப்லொக்ச்பொட்.cஒம்)வாசிக்கலாம். *பின்பற்றக்கூடாது*.
என் கருத்து
இந்து மதம் பற்றி பொதுமான அளவு தெரிந்து வைத்திருக்கிறேன்.. உங்களுக்கு வேண்டுமானாலும் விளக்கத் தயார்.
எனக்கு கிடைத்த பதில்களைப் பாருங்கள்
//தாடி வைக்கும் இந்துக்களும் தாடி வைக்காத முஸ்லிம்களும் உள்ளனர். //
//திருமண முறை பற்றி ஒரு தனி பதிவே போடலாம்.//
என் பதிவை திரும்ப படித்துப் பாருங்கள். இந்துக்கள் தாடி வைக்க கூடாது முஸ்லிம்கள் தாடி வைத்திருக்க வேண்டும் என்றா எழுதி இருக்கிறேன்? அல்லது இஸ்லமியர்களின் திருமண முறை பற்றி எதும் தரக்குறைவாக கூறி இருக்கிறேனா? இரண்டு முறைகளையும் ஒப்பிட்டு சில கேள்விகள் கேட்டிருக்கிறேன்.
நீங்கள் எல்லம் தெரிந்தவர் போல தெரிகிறதே..
நான் எழுதிய வேறுபாடுகள் "இந்துக்கள் செய்வதை மாற்றிச்செய்வதே இஸ்லாம் " என்று கருத வைக்கிறது என்பதை மாற்றி, இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒரே விஷயத்தைத் தான் செய்கிறார்கள் என்று விளக்குங்களேன்.
முடிந்தமட்டும் மற்ற நண்பர்கள் (கான்டிவிடி போன்றவர்கள்) கூறுவது போல விளக்குங்கள். உனக்கு என்ன தெரியும் எனக்கு என்ன தெரியும் என்று குற்றம் சாட்டுவதிலும் (விதண்டா) வாதம் புரிவதிலும் இறங்காதீர்கள்.
அன்புடன் விச்சு
விச்சு,
நீண்ட பதிலுக்கு நன்றி,
/ஆனால் இஸ்லாத்தில் அரபி யில் தான் குரான் ஓதப்படுகிறது என்று நினைக்கிறேன்../
/"விரும்பும் மொழி"களில் தமிழும் இந்தியும் சமஸ்கிருதமும் அடங்கும் என்று நினைக்கிறேன். /
சரியாகச் சொன்னீர்கள். விரும்பும் மொழி, தமிழிலிருந்து , சமஸ்கிருதமாகலாம், இந்தியா -கலாம் ஆனால் உருது வாக மட்டும் இருக்ககூடாது என்று ஏன் சொல்கிறீர்கள்? இஸ்லாமியர்கள் அவர்கள் விரும்பும், உருதுவில் அவர்கள் ஓதக்கூடாது என்று இந்துவாகிய நாம் எப்படி சொல்லமுடியும் அல்லது அதை எப்படி வித்தியாசம் பாரட்டமுடியும் முடியாதல்லவா?
/கோவிலில் சென்று அங்கே பூசாரியிடம் செய்விக்க சொல்வதுதான் பூசை என்று கருதுகிறீர்கள் போலத் தெரிகிறது./
இந்தை மறுப்பது போண்ரு சொல்ல்யுள்ளீர்கள். சரிதான். ஆனால் கீழே
/.. ஒரே ஒற்றுமை கடவுளை வழிபட வேன்டும் என்றது மட்டுமே./ இதையும் சொல்கிறிர்கள்.
இந்த ஒரு ஒற்றுமை போததா? மழித்தலும் நீட்டலும் வேறு வேராக இருந்தால் அதனால் என்ன?
/என்று கருத வைக்கிறது என்பதை மாற்றி, இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒரே விஷயத்தைத் தான் செய்கிறார்கள் என்று விளக்குங்களேன்/
கி கி.. நான் விளக்கிவிடுவேன்.. அது உங்களுக்கு விளங்குமா விளங்காதா என்று என்னால் உறுதியாய்ச் சொல்லமுடியாது.
அண்ணே, இஸ்லாத்திலே கல்பு-பிரகாசம் என்பதுதான் நீங்கள் சொல்லும் இந்துவிலே ஈசன் இருப்பிடம் ______() என்று பேசப்ப்ட்டுள்ளது என்று சொன்னால் உங்களுக்கு விளங்கவா போகிறது. நீங்கள் சொன்ன தென்கலையிலே இருதயகமலம் என்று பேசப்ப்ட்டுள்ளது என்று சொன்னால் உங்களுக்கு விளங்கவா போகிறது. இஸ்லாத்தில் தஜல்லியம் என்பதுதான் இந்துவிலே சுயம்பிரகாசம் என்று சொல்லப்பட்டுள்ளது என்று சொன்னால் உங்களுக்கு புரியுமா புரியாத என்று எனக்கு த்ரியும். இஸ்லாத்திலே கபிர் என்பதை இந்து விலே எப்படிச்சொல்கிறர்கள் என்று உங்களுக்குத்தான் நன்றாக தெரிந்திருக்குமே?
இஸ்லாத்தில் முகம் கழுவுதலையோ,சவரம் செய்வதையோப்பார்த்து இரண்டும் வேறு வேறு என்று அறுதியிட்டுச்சொல்லிவிடமுடியாது என்றுதான் சொல்லவருகிறேன்.
இன்னும் நான், "நட்ட கல்லும் பேசுமோ" என்றவனைச் சுட்டி, அவன் இஸ்லாமியந்தான் என்று வாதாடினால், நீங்கள் ஒரு நடாத கல்லை கொணர்ந்து என் தலையிலே போட்டாலும் போடலா. ;-)
/ உனக்கு என்ன தெரியும் எனக்கு என்ன தெரியும் என்று குற்றம் சாட்டுவதிலும் (விதண்டா) வாதம் புரிவதிலும் இறங்காதீர்கள்./
கூடவே இதயும் சொல்லி என்னை அழ வைக்காதீர்கள் ;-)
அன்புடன்
கார்திக்ராமாஸ்
அன்புள்ள விச்சு,
உங்கள் பதிவை மீண்டும் படித்தேன்.
// இவர்கள் (இந்துக்கள்) மீசை இல்லாமலோ , அல்லது மீசை வைத்தால் தாடி வைத்துக்கொண்டோ இருக்கவேண்டும் என்று சொன்னால்.. இஸ்லாத்தில் மீசைஇல்லமல் தாடி மட்டும் வைக்க சொல்வார்கள்..//
என் பின்னூட்டம் கீழே..
//தாடி வைக்கும் இந்துக்களும் தாடி வைக்காத முஸ்லிம்களும் உள்ளனர்.//
நீங்கள் கார்த்திக்கிற்கு அளித்த பதிலில் கூறிய ஒரு கருத்து பின்வருமாறு்..
//இந்துக்கள் தாடி வைக்க கூடாது முஸ்லிம்கள் தாடி வைத்திருக்க வேண்டும் என்றா எழுதி இருக்கிறேன்?//
உங்களின் புரிதல் என்னவென்று விளங்கவில்லை.. என்னுடைய பின்னூட்டம் இஸ்லாத்தில் தாடி வைப்பது ஒரு கட்டாயக் கடமை என்று வலியுறுத்தப்படவில்லை என்பதை உணர்த்தவே..
நன்றி..
விச்சு,
இதைப் பற்றி விளக்கங்கள் தேட நினைப்பதே ஒரு நல்ல விஷயம்.
இஸ்லாம் இந்து மதம் - எதிர்துருவம்
1. இஸ்லாம் உருவவழிபாட்டை தடுக்கிறது. இந்து மதம் விரும்பிய உருவங்களை தெய்வங்களுக்கு அடையாளமாகக் காட்டுகிறது.
2. மூட நம்பிக்கைகளை அடியோடு இஸ்லாம் வெறுக்கிறது. மூட நம்பிக்கைகளை மத நம்பிக்கைகளாக இந்துமதம் அங்கீகரிக்கிறது. இந்தியாவில் இருப்பதனாலோ என்னவோ இந்திய முஸ்லிம்களும் மூடநம்பிக்கைகளை மத நம்பிக்கைகளாகக் கொண்டிருக்கிறார்கள்.
3. தாடி வைப்பது, தழையத்தழைய உடைகள் அணிவது, குல்லாய் அணிவது, மீசை இல்லாமல் தாடி வைப்பது, என்பதெல்லாம் இஸ்லாத்தின் ஒரே ஆதாரபூர்வமான நூலான குர்ஆனில் சொல்லப்படவில்லை. பிற மதத்தினரிடமிருந்து வேறுபடுத்தித் தன்னை அடையாளங்காட்டிக் கொள்ளவே இவை பயன்பட்டிருக்கின்றன. மற்றபடி இவற்றை மத அடையாளங்களாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இந்து மதத்தில் திருநீறு பூசுதல், பொட்டு வைத்துக்கொள்ளுதல், உத்திராட்சம் அணிதல் என்பதெல்லாம் சில பூர்வாங்கக் காரணங்கள் கொண்டு விளக்கப்படுகின்றன. அவற்றிற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இருக்கிறதா என்பதெல்லாம் தெரியவில்லை.
இன்னும் நிறையச் சொல்லலாம். அவற்றிற்கென்று சில branded இணைய எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களில் வெட்டிப்பேசவும் ஒட்டிப் பேசவும் பல தளங்களை வைத்துள்ளனர். அவற்றிற்கு ஒரு தெளிய மனத்துடன், யார் புறமும் சாராத நடுநிலையான மனத்துடன் சென்று படித்துப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.
இந்து மதம் - இஸ்லாமிய மதம் சில ஒற்றுமைகள்.
1. இருபாலருக்கும் வெள்ளிக்கிழமையே புனிதநாட்கள். 90 சதவீதம் பேருக்கு வெள்ளிக்கிழமை புனிதநாட்களாக இருக்கும் இந்தியத்திரு நாட்டில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விட வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?
2. இருபாலரும் மேற்குத்திசையை நோக்கியே வணங்குகின்றனர். சிலைகள் கிழக்குத்திசையை நோக்கியே பார்க்கும்படி அமைக்கப்டுவதினால், வணங்குவோர் மேற்குப்பக்கமாகவே வணங்குகின்றனர்.
3. இஸ்லாம் மதத்தின் அருவ வழிபாட்டு முறை, இந்துமதத்திலும் ஒரு வழிபாட்டு முறையாகவே கருதப்படுகிறது.
4. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணம் செய்து கொள்ளுதல், இஸ்லாமியருக்கு ஒரு அனுமதியாக வழங்கப்பட்டிருக்கிறது. ராமனைத் தவிர ஏனையக் கடவுள்கள் பலதார மணத்திற்கு உதாரணபுருஷர்களாகவே திகழுகின்றனர்.
இன்னேரத்திற்கு நீங்கள் ஒற்றுமையைக் காண மேல்முயற்சியை ஆரம்பித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
விச்சு அய்யா,
என்னைப் பொருத்தவரையில் இஸ்லாம் ஒரு கருணை மிக்க மதம் என்பதில் சந்தேகமில்லை.ஆனால் எனக்கு பிடிக்காத விஷயம்,ஆண்கள் அனைவரும் தாடி வைத்துக் கொள்ளவேண்டும் என்ற விதிப்பாடு.சில பேருக்கு தாடி வைக்காமல் இருந்தால் கேவலமாக இருக்கும்.சிலருக்கு தாடி இருப்பது பார்ப்பவர்களை சித்ரவதை செய்வதைப் போன்றது. ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர் பி ஜி வோட்ஹவுஸ் கூட
"Some people ought not to grow a fungus bush in the face and for some to display their naked chin is inflicting cruelty on others" என்று வேடிக்கையாக சொல்லியிருப்பார்.இந்த தாடி விஷயத்தையும்,பர்தா விஷயத்தையும் இஸ்லாமியர்கள் விட்டொழித்தால், இஸ்லாம் பற்றி மற்றவர்களிடம் நல்ல அபிப்ராயம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
பாலா
Post a Comment