Monday, June 13, 2005
பிரசினை இட ஒதுக்கீடு தான்." சுஜாதா என்ன சொன்னார்
அர்ச்சனா:கல்லூரியில் சேரும் போதே இடஒதுக்கீடு பிரச்னையால ஒதுக்கப்படுகிறோம். நாங்க பார்வர்ட் காஸ்ட்ல பிறந்துட்டோம்கிற ஒரே காரணத்துக்காக எவ்வளவு மார்க் எடுத்தும் நாங்க படிக்க விரும்புற சீட் எங்களுக்குக் கிடைக்கமாட்டேங்குது. ஒண்ணு, நாங்க பார்வர்டு காஸ்ட்டுல பிறந்திருக்கக் கூடாது. இல்லாட்டி, எங்க கிட்ட நிறைய பணமாவது இருந்திருக்கணும். இதையெல்லாம் நினைச்சுப் பாக்கறப்ப வேதனையா இருக்கு.
சுஜாதா : உங்க ஆதங்கம் உங்களுக்கு நியாயமா இருக்கலாம். ஆனா, இன்னும் கிராமத்துல எத்தனையோ ஜாதியைச் சேர்ந்த ஏழை மக்கள் பள்ளிக்கூடத்திற்குப் போய் படிக்க வசதியில்லாம இருக்காங்க. காலப்போக்குல ஒரு ஏற்றத்தாழ்வு நம்ம சமூகத்துல வந்திடுச்சி. அதைச் சரிப்படுத்தணும் என்று சொல்கிறது சட்டம். சட்டம் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.
நிவேதிதா : அதை எங்களால புரிஞ்சுக்க முடியுது. ஆனா எங்க நிலைமை...?
சுஜாதா : இது ஒரு சிக்கலான பிரச்னைதான். இதற்கு தீர்வு சொல்றது கஷ்டம். ஆனா, நீங்க நம்பிக்கையை மட்டும் இழந்துறாதீங்க. முட்டி மோதி முயற்சி செஞ்சுகிட்டே இருங்க. முயற்சி எல்லோரையும் ஜெயிக்க வைக்கும்.
குமுதத்தில் வந்த கலந்துரையாடல் இது.. நல்ல பதில் அளித்த சுஜாதா வாழ்க.
அன்புடன் விச்சு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment