இரண்டு செய்திகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதது
செய்தி 1
சென்னையில் வழிப்பறி: 3 மதுரை போலீசார் கைது!!!
ஜூன் 8, 2005 சென்னை:
சென்னையில் நகைக் கடை ஊழியர்களிடம் வழிப்பறி செய்து ரூ. 4 லட்சத்தை பறிக்க முயன்ற மதுரையைச் சேர்ந்த 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வேலியே பயிரை மேய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழக போலீசார் திருடர்களைப் பிடிப்பதை விட அவர்கள் திருடி பிடிபடுவது அதிகரித்து வருகிறது.
மதுரை தெற்கு ஆவணி வீதியில் தமிழ்நாடு ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. நகைக்கடை ஊழியர்கள் அசோக்குமார், பாலுச்சாமி ஆகியோர் நகை வாங்குவதற்காக ரூ. 4 லட்சம் பணத்துடன் சென்னை வந்தனர். நேற்றிரவு பூக்கடை பகுதியில் என்.எஸ்.சி போஸ் சாலையில் இவர்கள் நடந்து சென்றனர்.
அப்போது ஒரு ஆட்டோவில் வந்த 2 பேர் இருவரையும் வழி மறித்தனர். அதிலிருந்து இறங்கிய இருவரும், நாங்கள் போலீஸ்காரர்கள், உங்கள் பையை சோதனையிட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், பையைத் தர ஊழியர்கள் மறுக்கவே, பணப் பையை இருவரும் பறித்துள்ளனர்.
இதையடுத்து நகைக் கடை ஊழியர்கள் இருவரும் உதவி கேட்டு கத்தவே, அப் பகுதியில் மப்டியில் சென்ற சப்இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் சில போலீசார் அங்கு சென்று பையைப் பறித்த நபர்களைப் பிடித்து யானைக்கவுனி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரித்தபோது தான் பையைப் பறித்த இருவரும் மதுரையைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் என்று தெரியவந்தது.
இருவரும் மதுரை திருமங்கலம் காவல் நிலையம் மற்றும் திருநகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டையாக்கள் என்று தெரியவந்தது. இந்த கேடுகெட்ட காக்கிகளின் பெயர் பன்னீர் செல்வம் மற்றும் பாஸ்கரன்.
இந்த ஏட்டையாக்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வழிப்பறிக்கு உதவி புரிந்த மதுரை ஆயுதப்படை போலீஸ்காரரான மீனாட்சி சுந்தரம் என்பவரும் பிடிபட்டார்.
இவரைத் தவிர மேலும் 6 பேரும் பிடிபட்டுள்ளனர். நகைக்கடையில் இருந்து ஊழியர்கள் பணத்துடன் சென்னை செல்வதை அறிந்து இவர்கள் ஒரு டாடா சுமோவை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்துள்ளனர்.
இதில் மீனாட்சி சுந்தரம் அலுவலக வேலையாக என்று சொல்லி பேட்டா காசு வாங்கிக் கொண்டு மதுரையில் இருந்து கொள்ளையடிக்க சென்னை வந்துள்ளார். இந்த ரிசர்வ் போலீஸ் மீனாட்சி சுந்தரம் வட சென்னை துணை கமிஷ்னர் ஒருவரின் அண்ணன் மகன் என்று தெரியவந்துள்ளது.
செய்தி 2
போலி வாக்காளர்களை சேர்த்தவர்கள் மீது வழக்கு: தேர்தல் ஆணையம் உத்தரவு
புதுடில்லி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையம் குழு ஒன்றை தமிழகத்திற்கு அனுப்பியது. அவர்கள் சென்னையில் அனைத்துக் கட்சியினர் கூட்டத்தினை கூட்டி கருத்து கேட்டனர். விழுப்புரம், சேலம் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் டில்லியில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதை பரிசீலித்த தலைமை தேர்தல் ஆணையர் டாண்டன் தலைமையிலான குழு, போலி வாக்காளர்களை சேர்த்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும், புதிய வாக்காளர் சேர்க்கை மனுக்கள் தனித்தனியே பரிசீலிக்கப்படும், தமிழக்த்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் வாக்காளர் பட்டியல் ஜூன் 9ல் வழங்கப்படும் கட்சிகள் தங்கள் ஆட்சேபனையை ஜூன் 20க்குள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது
Wednesday, June 08, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment