அமெரிக்காவின் பிற நகரங்களில் "ஸ்டிரிப் கிளப்'கள் தெருவுக்கு தெரு உள்ளன. "ஆடை அவிழ்ப்பு' நடனம் என்ற பெயரில் அங்கெல்லாம் அனைத்து வித ஆபாசங்களும் அரங்கேறி வருகின்றன.
நான் நியூ ஜெர்சியில் இருக்கிறேன். எனக்கு இங்கே தெருக்களில் அப்படி எந்த கிளப்பும் கண்ணில் படவில்லையே..
வலையில் தேடி கண்டு பிடித்ததில் N.J மானிலத்தில் 150 ஸ்ட்ரிப் கிளப்கள் உள்ளன. இது ஊருக்கு ஒன்று கூட இல்லை.. (அட இப்படிப்பட்ட ஊர்லயா இருக்கிறேன்?)
தினமலர் நிருபர் "பார்" அல்லது டைனர் (நம்ம ஊர் ஓட்டல் ரத்னா கபே மாதிரி) என்றிருந்தால் அதுவும் ஸ்ட்ரிப் கிளப் என்று முடிவு கட்டிவிட்டார் போல இருக்கிறது
மற்ற அமெரிக்க வலைப்பதிவர்களுக்கு அவர்கள் ஊர்களில் "தெருவுக்குத் தெரு" "ஸ்டிரிப் கிளப்'கள் உள்ளனவா? என்று கண்டுபிடித்து சொல்லுங்களேன்.
இந்த பத்திரிகையைப் படிக்கும் தமிழ்னாட்டு மக்களுக்கு எல்லாம் எதோ அமெரிக்காவில் எல்லாரும் ஆடையே அணியாமல் தெருவில் நடப்பது போன்ற ஒரு கருத்தை இது ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது..
சமீபத்தில் அமெரிக்கா வந்திருந்த நண்பர் அமெரிக்காவில் பெண்கள் அப்படி இப்படி என்று சொன்னர்கள் ஒன்றுமே இல்லையெ என்று நியூ யார்க் சுற்றிப் பார்க்கும் போது கேட்டார். இப்பொது புரிகிறது அவருக்கு யார் ஐடியா கொடுத்தது என்று..
அன்புடன் விச்சு
பி கு
மேலே பொட்டிருக்கும் படத்துக்கும் ச்ட்ரிப் க்கும் என்ன சம்பந்டம் என்று கேட்கிறிர்களா.. "THE STRIP" என்பது நான்கு மைல் நீளமுள்ள கேசினொ என்றழைக்கப்படும் சூதாட்ட அரங்குகள்.. லாஸ் வேகாஸ் நகரில் இருக்கின்றன.. ஓஷன் லெவன் படத்தில் காட்டுவார்களே.. அது தான்.
10 comments:
விச்சு
தினமலர்ல இது எல்லாம் சகஜம் தானே
நம்ம Bellagio படங்கள் இங்க
thanks anand,
i enjoyed your photos..
anbudan vichu
விச்சு
உங்களுக்கு மடல் அனுபினா திரும்பி வந்துடுது.
நானும் கடந்த ஒரு மாசமா நியூ ஜெர்சில தாங்க இருக்கேன். எனக்கு தெரிஞ்சு அது போன்ற கிளப் எதுவும் இங்க இல்லிங்க.
naan irukum theruvilum ippadi edhuvum illai.
VA
thinamalarin yeralamana thamaas seithiyil idhuvum onnu.
The strip clubs should be in 'Industrial zones' and not in residential zones.
Dinamalar did the generalization by Induction ;-) Found the bar in one street, in two streets, found it in 100 cities... So, inducted it to be applicable in each road.
Both the Red & Blue states have now qualms with strip clubs. Blue states like it for its liberal smell. Red for the strip club's cheap fun & accessibility in a long labor filled day.
Dinamalar news might have sensationalised the news to make sense of the Seattle case!
இங்கே எங்க ஊர்லே 'த ஸ்ட்ரிப்'னு ஒரு பகுதி இருக்கு. அங்கே சாப்பாட்டுக்கடைங்கதான்.
//நான் நியூ ஜெர்சியில் இருக்கிறேன் .. வலையில் தேடி கண்டு பிடித்ததில் N.J மானிலத்தில் 150 ஸ்ட்ரிப் கிளப்கள் உள்ளன.//
ஹ்ம்ம்ம் .. N.J la இருந்துகிட்டு , இந்த கிளப் பற்றி வலையில் தேடினேனு நீங்க சொன்னா , அதை நாங்க நம்பனுமா விச்சு சாரே?? ஹி ஹி ஹி
//இந்த பத்திரிகையைப் படிக்கும் தமிழ்னாட்டு மக்களுக்கு எல்லாம் எதோ அமெரிக்காவில் எல்லாரும் ஆடையே அணியாமல் தெருவில் நடப்பது போன்ற ஒரு கருத்தை இது ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது..//
ஹா , ஹா , ஹா, நல்லா சொன்னீங்க விச்சு , இந்த மேட்டர்ல மட்டும் இல்ல.. பல விஷயங்களை just like that .. படிச்சிட்டு, யாரோ சொல்ல கேட்டு ..அட அமெரிக்கானா அப்படிதானா நெனைச்சுட்டு இருக்காங்க..
==
துளசியக்கா, இது நியாயமா?
//இங்கே எங்க ஊர்லே 'த ஸ்ட்ரிப்'னு ஒரு பகுதி இருக்கு. அங்கே சாப்பாட்டுக்கடைங்கதான்//
துளசிக்கா அது எப்படி உங்களுக்கு மட்டும் சாப்பாட்டு விசயமா தெரியுது. :-)
கல்வெட்டு,
நீங்க எல்லாம் எப்பவுமே 'விரதம்'இருக்கீங்களா?
என்னவோப்பா, எனக்கு எங்கேபோனாலும் மொதல்லே கண்ணுலே படறது 'சாப்பாடு'தான்.
அதான் வெளியே ஃப்ளாட்பாரத்துலேயே மேஜையெல்லாம் போட்டு ஆளுங்க குடிச்சுக்கிட்டும் தின்னுக்கிட்டும் இருக்கறதைப் பார்க்காம கண்ணைமூடிக்கிட்டுப் போகச் சொல்றீங்களா?
சரி சரி வீண்பேச்சு பேசிக்கிட்டு நிக்காம அடுப்புலே இருந்து என்னவோ தீஞ்ச வாசனை வருது. அதெப் போய்ப் பாருங்க.
Post a Comment