Friday, October 07, 2005

122 என் கனவில் கோயிஞ்சாமி 8 1/2

என்கனவில் வந்த கோயிஞ்சாமி 8 1/2 கொஞ்சம் கேள்விகள் கேட்டார். எனக்கு வழக்கம் போல பதில் தெரியவில்லை. (கோனார் இதற்கு இன்னும் விடைப் புத்தகம் போட வில்லையாம்).. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?

2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?

3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?

4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?

5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?

6. இருட்டின் வேகம் என்ன..?

7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?

8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?

9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?

10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?

11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?

12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?

13. தண்ணிருக்குள் அழ முடியுமா?

14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?

15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?

16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?

17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?

18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?

இவ்வளவு தான் கேட்டார்.. அதற்குள் கனவு கலைந்து விட்டது ..

பதில் அனேகமாக வி எம் கனவில் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன்..

அன்புடன் விச்சு

13 comments:

சின்னவன் said...

கோயிந்தசாமிகள் விட மாட்டேங்கறாங்களே !
:-)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

1. :O(

2. நாலு கோடி வரை எண்ணத்தெரியணுமே.. பெய்ண்ட் பக்கத்திலே இருக்கு.. தொட்டுப்பார்க்கவும் தெரியும் என்பதால்!

3 & 18 சொல்லிட்டாங்க!

4. இயக்குநர் யோசிக்கவில்லை அதைப்பற்றி யோசிக்கவில்லை/கவனிக்கவில்லை

5. துப்பாக்கி தலையில பட்டா அடிபட்ட இடம் வீங்கிடுமே!

6. ஒளியின்மை தான் இருட்டு.. ஆக ஒளியின் வேகம்தான்/ ஒளி இல்லாமல் போகும் வேகம் தான் இருட்டின் வேகம்

7. ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களைத்தான் கேட்கணும்

8. எவ்வளவுன்னு சொன்னா பதில் சொல்லலாம்

9. மனிதர்களா மாறினது எல்லா இனக்குரங்குமில்லையே

10. அ)உதவியைப் பெற்றுக்கொள்ள?? ஆ) எமக்கு உதவி செய்ய

11. நீண்ட நாள் வாழ்கிறார்கள்.. ஏனென்றா அவர்களது நாட்கள் நீண்டவை!

12. LOL.. (வாய் விட்டுச் சிரிச்சுட்டேன்..) சத்தியமா தெரியாது! (பார்த்திபனைக் கேட்கலாமே!)

13. ஆம். கண்ணிரைத்தான் துடைச்சுக்கொள்ள முடியாது!

14. அரசியல்வாதி/அரசகுடும்பத்தவர்/இதர "பெரும்புள்ளிகள்"

15. வாடிக்கையாளர்களைக் கொண்டு "காய்க்குவிக்க"

16. அடுக்கச் சுலபம்.

17. ஆழ்ந்த தூக்கம்??

"எல்லாம் போயிட்டுது வால் மாட்டும் போகல்லயா?" ;O)

Ganesh Gopalasubramanian said...

ஆஹா கோயிஞ்சாமி இனிமே நம்ம கனவுல வர மாட்டாரு போலவே...

//பதில் அனேகமாக வி எம் கனவில் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன்..//
நம்ம கோயிஞ்சாமி சிவபெருமான் போல ஒருவர் கனவுல வந்து கொஸ்டீன் கேக்குறாரு இன்னொருத்தர் கனவுல வந்து ஆன்ஸர் சொல்றாரு....

பாலராஜன்கீதா said...

//8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்? //

நாளைக்கு வானிலை அறிக்கை பார்த்தால் தெரிந்துவிடும் :-))

பூஜ்யம் டிகிரி C-யா F-ஆ என்று சொல்லவில்லையே :-((

இருந்தாலும் ஜெயச்ரீக்காக,

பூஜ்யம் டிகிரி C என்றால் 32 டிகிரி F
மறுநாள் வெப்பம் 64 டிகிரி F அதாவது ( (64 - 32) * 100 ) / 180)
= 17.777777777...................... C

பூஜ்யம் டிகிரி F என்றால் கணக்குப்போடுவது சற்றுக் கடினம்தான்.

0 டிகிரி F
= ( - 32 * 100 / 180) C
= - 17.7777....C.
மறுநாள் வெப்பம் ( குளிர்???)
= - 35.55555...... C
= ( - 35.5555 * 180 / 100 ) + 32 F
= - 32 F

LOL:-))

பாலராஜன்கீதா

பாலராஜன்கீதா said...

// 5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்? //

அவருடைய மேலங்கி bullet-proofமட்டும்தான். gun-proof இல்லை :-))

பாலராஜன்கீதா

பாலராஜன்கீதா said...

1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?

கேள்வியிலேயே பதில் இருக்கிறது. "பணமில்லை" என்பதால்தான்.
இதுபோலச் சேர்த்தால்தான் அடுத்த முறை "பணமில்லை" என்று சொல்லாமலிருப்பதற்காக
:-))
பாலராஜன்கீதா

neyvelivichu.blogspot.com said...

பதில் சொன்னவங்களுக்கு நன்றி.. கோயிஞ்சாமிக்கு ரொம்பவே சந்தோஷம்..

திரும்ப ஒரு கேள்வி.. கோயிஞ்சாமிக்கு பெண்பால் என்ன.. கணேஷ் சின்னவன் தவிர (Jsri என்பதை ஜெயச்ரி என்று கொண்டால்) பதில் சொன்னவர்கள் அனைவரும் பெண்களே)


அன்புடன் விச்சு

Anonymous said...

கோயிஞ்சாமிக்கு பெண்பால் கோயிந்தம்மா

பாலராஜன்கீதா said...

திரும்ப ஒரு கேள்வி.. கோயிஞ்சாமிக்கு பெண்பால் என்ன..

goin-din't-see-me :-((

neyvelivichu.blogspot.com said...

avar ippadi kaNakku pottar..

aaNNukku opposite peNN

appo goinsamy kku opposite goin-din't-see-me.

appo athu peN peyar thaane..

ithu thaan loLLu.. athuvum goinsamy loLLu

wordverification parkkalai.. eduththu vittudareen..

anbudan vichchu

வாசகன் said...

கோயிஞ்சாமியே மறந்துவிட்ட ஒரு கேள்வி.

19). நம்ம விச்சு கணக்கில் புலி என்று பாராட்டப்படுகிறார்.
அப்படீன்னா புலிக்கு கணக்கு தெரியுமா?

neyvelivichu.blogspot.com said...

நல்ல வேளை புலிக்கு கணக்கு தெரியுமா என்று கேட்டீர்கள்..

விச்சு என்ன புலியா என்று கேட்டிருந்தால் இந்தியா சென்று இறங்கியதுமே கைக்கு காப்பு தான். என்ன வைகோ கணக்கில் ஒரு புத்தகம் போட்டிருக்கலாம். அடுத்த தேர்தலில் எதாவது கட்சி (நம்ம பா ம க அல்ல) ஒரு இடம் தந்தாலும் தரும்.

//கணக்கில் புலி// அப்படி பார்த்தால் புலி அறுபத்து நான்கு கலைகளுமே கற்றிருக்கவேண்டும்.. எல்லா கலைவல்லுனர்களும் புலி தானே..

அன்புடன் விச்சு

Anonymous said...

for peter goinchamis:

http://yaalisai.blogspot.com/2005_06_01_yaalisai_archive.html