Wednesday, July 29, 2026

முடிவு

 டெல்லியில் புதுத் தம்பதியாய் கால்வைத்த போது, சொந்த வீடு வாங்குவது போகட்டும்... பட்ஜெட்டுக்குள்  ஒரு நல்ல வாடகை வீடு கிடைப்பதே பெரும் போராட்டமாக இருந்தது. அந்தச் சமயத்தில் தான் சுந்தர் என் வாழ்க்கையில் ஒரு நல்ல வழிகாட்டியாகக் குறுக்கிட்டார். என்னை விட ஒரு ஆறு ஏழு வயதுதான் மூத்தவர். அவருடைய மனைவி மாலதியோ அப்படியே என் வயதுதான்!

நான் வீடு தேடி அலைவதைப் பார்த்த மாலதி, என்னை அன்போடு வீட்டிற்கு அழைத்து ஒரு கோப்பை சூடான காபியைக் கொடுத்து உபசரித்தார். பிறகு கூடவே வந்து அலைந்து திரிந்து ஒரு அருமையான வீட்டையும் கண்டுபிடித்துக் கொடுத்தார்.

வீடு கிடைத்த சந்தோஷத்தில் நான் மாலதியிடம் சிரித்துக் கொண்டே  கேட்டேன், "முன்பின் தெரியாத ஒருத்தனை எப்படி இப்படி நம்பி வீட்டுக்குள்ள கூப்பிட்டீங்க மாலதி? ஒருவேளை நான் ஏதாவது அசம்பாவிதம் பண்ணியிருந்தா என்ன ஆகியிருக்கும்?"

அதற்கு மாலதி ஒரு மெல்லிய புன்னகையுடன், "முகத்தைப் பார்த்தாலே யார் நல்லவங்க, யார் கெட்டவங்கனு எங்களுக்குத் தெரியும்" என்றார்.

அவர் என் மீது வைத்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் அன்பும் எங்களை வெறும் நட்பிலிருந்து ஒரே குடும்பமாகவே மாற்றிவிட்டது. என் மனைவியின் அடுத்தடுத்த கருச்சிதைவுகள், பாஸ்போர்ட் வாங்கியது , நான் வேலை விஷயமாக வெளிநாடு போனது , சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னைக்கு வந்தது என எல்லாவற்றிலும் அவர்கள் என் நிழலாகவே இருந்தார்கள்.

சுந்தர்-மாலதி தம்பதியருக்கு இரண்டு மகன்கள்—நான்கு ஆண்டுகள் இடைவெளியில் பிறந்தவர்கள். மாலதி எப்போதும் தன் மகன்களிடம் என்னைச் சுட்டிக்காட்டி, "இவரைப் போல வாழப் பழகுங்கள்" என்று முன்மாதிரியாகச் சொல்வார். அவர்கள் என்னை அப்படிப் பார்த்தார்களா என்று தெரியாது, ஆனால் சென்னைக்கு வந்த பிறகும் தொடர்பில் இருந்தோம்.

பிறகு எனக்கு அமெரிக்கா வாய்ப்பு வந்தது. விடுமுறைக்கு இந்தியா வரும்போதெல்லாம் விசா அனுமதி பெற டெல்லியில் தான் முன்பதிவு தேதி கிடைக்கும். அப்போதெல்லாம் எங்கள் சொந்த வீடு போல அவர்கள் வீட்டில்தான் தங்குவோம். ஆனால், அமெரிக்காவில் இருந்து முற்றிலும் இந்தியா திரும்பிய பிறகு, ஏனோ தொடர்புகள் மெல்ல மெல்ல குறைந்து, ஒருகட்டத்தில் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.


சமீபத்தில் பெங்களூரில் எனக்கு ஒரு புதிய வேலை கிடைத்தபோது, நினைவு வந்து அவர்களுக்குத் தொலைபேசியில் அழைத்தேன். பெங்களூரில் ஏதோ ஒரு பகுதியில் இருக்கிறார்கள் என்று தெரியும். சுந்தர் பேசினார். என் குரலைக் கேட்டதும் அவருக்கு அவ்வளவு சந்தோஷம்! நலவிசாரணைகளுக்குப் பிறகு, குரலைத் தாழ்த்தி தன் மனவேதனையைக் கொட்டினார்.


ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த அவருடைய மூத்த மகன் கார்த்திக்கு இப்போது விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறதாம்! அவனுடைய மனைவி திவ்யா திடீரென்று "இனிமேல் இவனுடன் வாழ முடியாது" என்று பிடிவாதம் பிடித்து பிரிந்து சென்றுவிட்டாளாம். நீதிமன்றத்தில் நீதிபதி அறிவுரை சொல்லியும் இருவருமே இறங்கி வரவில்லையாம். "தம்பி, நீயாவது கார்த்திக்கிட்டயும் திவ்யாகிட்டயும் கொஞ்சம் பேசி என்ன பிரச்சனைனு கண்டுபிடியேன்... நீ சொன்னா கேட்பாங்க" என்று சுந்தரும் மாலதியும் என்னைக் கேட்டுக்கொண்டார்கள்.

"சரி, நான் பேசுறேன்" என்று பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.


பிரச்சனையைத் தோண்டிப் பார்த்தபோது காரணம் மிகவும் சாதாரணமானது... ஆனால் அகந்தை பெரிதாக இருந்தது. கல்யாணமாகி 7 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. திவ்யாவின் அம்மா தினமும் தொலைபேசியில் அழைத்து, "உனக்கு வயசு 34 ஆச்சுடி... இந்த வயசுக்கு மேல குழந்தை பெத்துகிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அந்த கையாலாகாதவனை வச்சுக்கிட்டு என்ன பண்ற?" என்று மாப்பிள்ளை மீது பழியைப் போட்டு மகளின் மண்டையைக் கழுவியிருக்கிறார்.

ஒரு நாள், அதே கடுப்பில் திவ்யா இதைக் கார்த்திக்கிடம் கேட்க... கார்த்திக் அன்றைக்கு அலுவலக மன அழுத்தத்தில் மோசமான மனநிலையில் இருந்திருக்கிறான். "என்கிட்ட என்ன பிரச்சனை? உன்கிட்டதான் ஏதோ குறை இருக்கு!" என்று பதிலுக்குப் பாய... வார்த்தைகள் வண்ணம் மாறின, வாதம் முற்றியது, நீதிமன்ற வாசல் வரை கொண்டு போய் நிறுத்திவிட்டது!


"நான் திவ்யாவைத் தனியாகச் சந்தித்துப் பேசட்டுமா?" என்று கார்த்திக்கிடம் கேட்டேன். மறுநாள் அதே உணவகத்திற்கு அவளை வரவழைப்பதாகச் சொன்னான்.

அடுத்த நாள் உணவகத்தில் நான் காத்துக் கொண்டிருந்தேன். திவ்யா உள்ளே நுழைந்தாள்.

அடடே! நல்ல அழகான பளிங்கு போன்ற முகம், நீண்ட கூந்தல்... கொஞ்சம் தொப்பை இருந்தாலும், எடுப்பான மார்பகங்களும், உருண்டையான பின்னழகும் கொண்ட ஒரு கம்பீரமான பெண்மணி! அவள் நடந்து வரும்போதே என் கண்கள் இயல்பாக அவளது மார்பகத்தின் பக்கம் நிலைத்துவிட்டன. அவளும் நான் கவனிப்பதை சட்டென்று பார்த்துவிட்டாள். ஆனால், அதை ஒரு பொருட்டாக எடுக்காமல், ஒரு மெல்லிய சிரிப்புடன் வந்து என் எதிரே அமர்ந்தாள். "சொல்லுங்க அங்கிள்..." என்று அவள் சிரித்துக் கொண்டே பேசிய விதம் , சூழ்நிலையின் அழுத்தத்தைக் கொஞ்சம் குறைத்தது.


கொஞ்ச நேரத்தில் நம் நாயகன் கார்த்திக்கும் வந்து சேர்ந்தான். ஒல்லியான உடலமைப்பு, மூக்குக்கு மேலே கோபம், முகத்தில் சோகம்.

நான் திவ்யாவிடம் பேசத் தொடங்கினேன். "நீங்க ரெண்டு பேருமே நல்லா படிச்சவங்க. எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லாம ஒருத்தரையொருத்தர் இப்படி பழி போட்டுக்கலாமா? ஒரு PM ஆக இருந்துட்டு, நிரூபணம் இல்லாம குற்றம் சாட்டுவது ஒரு முடிவுக்கு வரது நியாயமா திவ்யா?" என்றேன்.

அவள் சட்டென்று, "அங்கிள், நான் இன்னும் PM எல்லாம் ஆகல... வெறும் TL  தான். அவன் தான் PM" என்று திருத்தினாள். பிறகு கொஞ்சம் குரலைத் தளர்த்தி, "ஆனா நீங்க சொல்றது உண்மைதான்... அவர் அப்படிப் பேசினதும் என்னால தாங்கிக்க முடியாம ஆவேசப்பட்டுட்டேன்" என்று ஒப்புக்கொண்டாள்.


அப்போது நான் என் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அவர்களிடம் கொஞ்சம் சுவாரசியம் கூட்டி விவரிக்கத் தொடங்கினேன்:

"எனக்கு கல்யாணமாகி 12 வருஷம் கழிச்சுதான் என் பொண்ணு பிறந்தா! இந்த உலகம் எங்களை என்னவெல்லாம் பேசிச்சு தெரியுமா? சொந்தக்காரங்க அத்தனை பேரும் எங்களை ஏளனமா பார்த்தாங்க. ஆனா நாங்க சோர்ந்து போகல. பரிசோதனை செஞ்சு பார்த்தப்போ ரெண்டு பேருக்குமே எந்தக் குறையும் இல்லைனு வந்துச்சு. அப்புறம் அமெரிக்கா போனப்போதான் தெரிஞ்சது... என் மனைவிக்குக் கருப்பைக் குழாயில் ஒரு சின்ன அடைப்பு இருந்தது. அதைச் சரி பண்ணின பிறகுதான் கரு நின்னது.


ஆனா அது சாதாரண கர்ப்பம் இல்லை... ரொம்பக் கடுமையான காலகட்டம்!  கூட உதவிக்கு யாரும் கிடையாது ரெண்டாவது மாசக் கடைசியில குருதிப்போக்கு பிரச்சனை, பயங்கரமான வாந்தி, தாங்க முடியாத மனநிலை மாற்றங்கள்! நான் வேலை விஷயமாக வேற ஊர்ல இருக்க வேண்டியிருந்தது. வாரக் கடைசியில மட்டும்தான் வீட்டுக்கு வருவேன். வந்து அவளுக்காக ஆசையா சமைச்சு வைப்பேன். ஆனா நான் அடுத்த வாரம் வந்து பார்க்கும்போது, நான் செஞ்சு வச்ச சாப்பாடு அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போகாம இருக்கும்... அவளால சாப்பிடவே முடியாது! அவ்ளோ கஷ்டப்பட்டோம். ஆனா இன்னைக்கு என் பொண்ணு பெரிய மனுஷியாகி என் முன்னாடி நிக்குறா! அவளைப் பார்க்கும் போது வாழ்க்கையின் பொருளே அவள் தான் என்று தோன்றுகிறது"


அவர்கள் இருவருமே வாய் அடைத்துப் போய் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"நீங்க தயவுசெஞ்சு எந்தச் செயற்கைக் கருத்தரிப்பு மையத்திற்கும் போகாதீங்க... முதல்ல ஒரு நல்ல பாலினவியல் மருத்துவரைப் போய் பாருங்க.  அவர் சொல்வதை செய்யுங்கள்.. மற்றவர்கள் சொல்வதை இப்போது கேட்க வேண்டாம்." என்று அறிவுரை கூறினேன்.


அவர்களும் போய் பார்த்தார்கள். பரிசோதனையில் இருவருமே ஆரோக்கியமாக இருப்பது உறுதியானது. மருத்துவர் அவர்களை அவசரப்படாமல், 'கருவுறுதல் சுழற்சி' (fertility cycle) கணித்து 3 மாதங்கள் முயன்று பார்க்கச் சொன்னார்.

என்ன ஆச்சரியம்! இரண்டே மாதத்தில் திவ்யா எனக்கு தொலைபேசியில் அழைத்து, "அங்கிள்... நற்செய்தி!" என்று மகிழ்ச்சியில் கூச்சலிட்டாள்.


நான் கார்த்திக்கையும் திவ்யாவையும் ஒன்றாக உட்கார வைத்து, "அலுவலகத்தில் ஒரு பிரச்சனை வந்தா வாடிக்கையாளர், குழு உறுப்பினர்கள், நிர்வாகம்னு எல்லாரேகிட்டயும் பேசி தீர்த்துக்கிறீங்கதானே? வாழ்க்கையில ஒரு பிரச்சனை வந்தா ஏன் உட்கார்ந்து பேசி தீர்க்கக் கூடாது? இனிமே என்ன பிரச்சனை வந்தாலும் ரெண்டு பேரும் உட்கார்ந்து சண்டை போட்டு, பேசி முடிவெடுங்க" என்று தலையில் கொட்டி அறிவுரை சொன்னேன்.

அவனைத் தனியாக அழைத்து.. சினிமா நடிகை மாதிரி ஒரு மனைவி கிடைக்குமா.. அவ கைல காலுல விழுந்து சந்தோஷமா குடும்பம் நடத்து என்று கூறினேன் 

இப்போது அவர்கள் வீட்டில் குழந்தைச் சிரிப்புடன் ஒரு மகிழ்ச்சியான குடும்பம் வாழ்கிறது.


இதற்குள் என் பணி பெங்களூரிலிருந்து துபாய்க்கு மாறிவிட்டது. எனக்கு ஒரு நாள் வீட்டில் திவ்யா வே சமைத்து சாப்பாடு போடுகிறேன் என்று சொன்னாள். வாழ்க்கை போகிற போக்கைப் பார்த்தால்... அநேகமாக அவர்களின் மகளின் திருமணத்தின் போதுதான் நான் அவர்கள் வீட்டில் சாப்பிடுவேன் போலிருக்கிறது! :-)

சபலம்

திரு காலையிலிருந்தே கொஞ்சம் பரபரப்பாக இருந்தான். இன்று அவன் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். பார்த்துப் பார்த்து செய்த திருமணம் இன்று முடிந்து விடக் கூடும். காதலித்தது, கனவு கண்டது, குடும்பம் நடத்தியது எல்லாம் கண் முன் வந்து சென்றது. இவனுக்கு அனுராதாவை விட ஒரு நல்ல மனைவி கிடைத்து விட முடியாது. அவனும் அதை உணர்ந்திருந்தான். ஏதோ செய்யப் போய் ஏதோ ஆகி விட்டது.


திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆசை, காமம், வேலை, வெளிநாட்டுப் பயணம் என்று ஓடி விட்டது. ஒரு சலிப்பு தட்டும் அளவு இருவரும் சந்தோஷமாவே இருந்தார்கள். அப்போது தான் திடீரென்று சனியன் வாழ்க்கையில் எட்டிப் பார்த்தது ஒரு செயலி வடிவத்திலே.


அவனுடைய கல்லூரி நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு நண்பன் திருமணம் கடந்த அனுபவங்கள் பற்றி பேசப் போக, தீவிரமான தலைப்பாக மாறி, அவர் அவர்கள் யாரை எல்லாம் பார்த்து ஜொள்ளு விட்டார்கள் என்றும் வேறு என்ன முயற்சி செய்தார்கள் என்றும் இரண்டு மூன்று மணிநேரம் அதைப் பற்றி உரையாடினார்கள். தாய்லாந்து நாட்டில் மசாஜ், மாட்டாமல் தப்பிப்பது என்றெல்லாம் பேசும் போது, ஒரு செயலி  பற்றி ஒரு நண்பன் சொன்னான்... பக்கத்து வீட்டிலிருந்தாலும் மாட்டாமல் இருக்கலாம், உன் பெயர் கூட யாருக்கும் தெரியாது என்று சொன்னான். ஆசை யாரை விட்டது!


அது “கடித்த மாம்பழம்” என்று இந்தியில் பெயர் கொண்டிருந்தது. அணில் கடித்த மாம்பழமோ என்று நினைத்தேன். மாற்றான் வீட்டு மல்லிகை. சிரித்துக் கொண்டே திறந்து பார்த்தேன். காமம் ஒரு முறை ஒரே முறை என்று எழுதியிருந்தது. முயற்சி செய்து பாருங்கள், முழுவதும் அனுபவம். அனுபவமே கடவுள், அனுபவமே வாழ்க்கை. நண்பன் சொன்னான்... "எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது, தங்கமணி என்ஜாய்!"


மடிக்கணினியில் தரவிறக்கம் செய்து ஒளித்து வைத்தான். பிறகு மனைவி ஊருக்குப் போகப் போகிறாள் என்ற போது பயன்படுத்தினான். அவளும் அவன் போனது போலவே அவளது தோழிகளுடன் சேர்ந்து பெண்கள் மட்டுமான ஒரு சுற்றுலா திட்டமிட்டிருந்தாள். "ஒரு வாரம் உன் தொல்லை இல்லாமல் இருப்பேன்" என்று சொல்லி விட்டு, போகும் இடம் சொல்லாமல் காணாமல் போனாள்.


அந்த செயலியில் நான் கொடுத்த தேவைகளுக்கேற்ப ஒரு பெண் இருந்தாள். அவளுடன் பேசியதில் நிறைய பொருத்தங்கள் இருந்தன. முகத்தில் எமோஜி போட்ட புகைப்படம் நன்றாக இருந்தது. பெரிதாக மறைக்கவில்லை. வெள்ளி இரவு சந்திக்கலாம் என்று முடிவு... மகாபலிபுரம் தாண்டி ஒரு ரிசார்ட் பெயர் வந்தது. நான் இதுவரை போனதில்லை... கூகிளிடம் கேட்டதில் அது ஒரு கடற்கரை சார்ந்த தனியார் ரிசார்ட் என்று தெரிந்தது. ஆபத்து எதுவும் இருக்காது என்று முடிவு செய்து கிளம்பினேன்.


ஒரு இரண்டு மணிநேரம் வண்டியை ஓட்டிய பிறகு, ரிசார்ட் வாசலில் நின்றேன். காவலாளி அறை எண் கேட்டான். சொன்னேன். ஸ்பீக்கரில் போட்டிருந்த தகவலை பேசியில் "அனுராதா ஹியர்" என்று கேட்டது. அவன் தொலைபேசியை எடுத்து நான் வந்திருப்பதாக சொன்னான். (செயலியில் என் பெயர்: ராஜமகேந்திரன் 😊). காரை நிறுத்தி விட்டு நடந்து சென்று அறைக் கதவைத் தட்டினேன். ஒரு பெண் திறந்தாள். "அமருங்கள் மேடம் வந்து விடுவார்" என்று சொன்னாள். நான் தொலைக்காட்சியில் விஜய்-ரஷ்மிகாவை 'ரஞ்சிதமே' என்று கொஞ்சி கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று என்மேல் ஏதோ விழுந்தது... தலையில் பட்டதும் மயக்கமானேன்.


இரண்டு நாள் கழித்து மருத்துவமனையில் கண் விழித்த போது என் நண்பன் தான் அருகில் நின்றிருந்தான். "என்னடா?" என்று வினவினேன். “மச்சி, உனக்கு ஆக்சிடென்ட் ஆகிடிச்சிடா” என்றான். வரிசையாக எல்லாம் நினைவுக்கு வந்தது. அவனிடம் எதுவும் சொல்லி விடக் கூடாது என்று "அப்படியா?" என்று கேட்டு முடித்துக் கொண்டேன். இவனும் அந்த குழுவில் இருப்பவன்தான். தெரிந்தால் கிண்டல் செய்வான் என்று மறைத்து விட்டேன். அல்லது அப்படித் தான் நினைத்திருந்தேன்.


நினைவு வந்து விட்டது என்று தெரிந்த அடுத்த அரை மணியில் அகில உலகத்தில் இருந்த என்னுடைய அத்தனை பேரும் நேராகவோ, தொலைபேசி மூலமாகவோ என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்கள்... “மச்சி எப்படிடா?” அது விபத்து எப்படி என்பதல்ல, அந்த பெண்ணிடம் போனது எப்படி என்று. பிறகு நண்பன் சொன்னான்—அந்த ரிசார்ட் நிர்வாகி இவனுக்கு தொலைபேசி, நான் நினைவில்லாமல் கிடப்பதாகவும், அருகிலுள்ள சிறு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் சொன்னாராம். இவன் உடனே கிளம்பி இன்னும் இரண்டு பேரை துணைக்கழைத்துக் கொண்டு என்னை மீட்டு வந்த கதையை சொன்னான். அதில் துணைக் குறிப்பாக, எனக்கு பொறுப்பேற்று அந்த ரிசார்ட்டின் ஒரு பணிப்பெண் இருந்தாள் என்றும், அவள் எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டாள் என்றும் சொன்னான்.


இது இப்படி இருக்க, மருத்துவமனையிலிருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். வீடு துடைத்தாற்போல் சுத்தமாக இருந்தது. என் பொருள்கள் எல்லாம் இருந்தது. அப்போது தான் கேட்டேன்... "என் மனைவிக்கு சொல்லவில்லையா?" என்று. "அவள் உன் எண்ணை பிளாக் செய்திருக்கிறாள்" என்று சொன்னான். நானும் என்முறையாக ஒரு முறை முயற்சி செய்தேன்; தொடர்பு கொள்ள முடியவில்லை. அவளுடைய ஒரு வாரம் முடிவடையவில்லை என்பதால் கிடைக்கவில்லை என்று நினைத்தேன்.


என் குடும்பத்தினர் ஊரிலிருந்து வந்து என்னை கவனித்துக் கொண்டனர். அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் அவளிடமிருந்து எந்த தகவலும் இல்லை. திங்கள் கிழமை காலையில் கூரியரில் இடி வந்து இறங்கியது. திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டதால் என்னுடன் வாழ விருப்பம் இல்லை என்றும், விவாகரத்து கோரியும் அவளது வக்கீல் விலாவாரியாக விளக்கி அறிக்கை அனுப்பி இருந்தார். 'தலை சுற்றியது' என்பது ஒரு மிக குறைந்த விளக்கம்!


என்னுடைய அம்மா உடனே அந்த கடிதத்தைப் படித்து விட்டு... "பரதேசி நாயே, லட்சணமா கிளி போல பொண்டாட்டி இருந்தாலும் உனக்கு ஒரு குரங்கு கேட்குதோ?" என்று அந்த கோப்பாலேயே இரண்டு அடி போட்டார். நான் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி விட்டேன். அடுத்த பதினைந்து நிமிடத்தில் ஒரு பெரிய சம்பந்தி சண்டையின் எல்லா வகைகளும் எங்கள் வீட்டில் காணக் கிடைத்தது. என் அம்மா தொலைபேசியிலேயே முழு சண்டையையும் துவக்கி விட்டார்கள். “உன் பொண்ணு ரொம்ப ஒழுங்கா? என் பிள்ளையை குத்தம் சொல்ல வந்துட்டீங்க... உன் பொண்ணுக்கு ஒரு சேலை கட்டத் தெரியாது!”


"சண்டை போடாதே அம்மா... எல்லாம் சரியாகி விட்டால், அப்புறம் முகம் பார்த்துக் கொள்ள முடியாது" என்று கூறினேன். அதற்கு அம்மா, "நீ அமைதியாக இருந்தால் எல்லா தப்பையும் உன்னுடையது என்று ஒப்புக் கொண்டதாகி விடும். இறங்கி அடி, சரியாகப் போனதும் எல்லாம் மன்னிக்கப்படும்" என்றாள். அக்கா வந்தாள், "இவர்களை எல்லாம் கவனிக்காதே... உன் மனைவி நல்லவள் என்று நம்பினால் அவள் காலில் விழுந்து விடு. அவள் தப்பைச் சொல்லாதே... உன் பேரில்தான் தவறு என்று கூறிவிடு, அவள் திரும்ப வருவாள். உன் பேரிலும் மரியாதை அதிகமாகும்" என்றாள்.


இரண்டு மணிநேரம் கழித்து என் மாமியார், மாமனார் உட்பட ஒரு 10 பேர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். என்னை வாயில் வந்தபடி எல்லாம் திட்டினார்கள். அப்போதுதான் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது...


அன்றைக்கு என்னை அழைத்தது என் மனைவிதான்! நான் அந்த ரிசார்ட்டிற்கு அவளைப் பார்க்கத்தான் போயிருக்கிறேன். அவள் மறுபுற வாசல் வழியாக உள்ளே வந்து என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டு, அங்கிருந்த ஏதோ ஒரு கனமான பொருளை என் மீது கோபத்தில் வீசியிருக்கிறாள். அதன் பிறகு கதை உங்களுக்குத் தெரியும். அவர்கள் என் மனைவியைக் கையும் களவுமாக எவளுடனோ பிடித்து விட்டதாகத்தான் சொன்னார்கள். எனக்குத் தெரியுமே என்ன நடந்திருக்கும் என்று...


ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்த அனுபவம் அப்போது அங்கே உதவியது. "நான் ஒரு பெண்ணைத் தேடிப் போனேன்... அவள் எதற்கு அந்த இடத்திற்கு வந்தாள்?" என்று ஒரே ஒரு கேள்வி கேட்டேன். பதில இல்லாமல் அனைவரும் திரும்பிப் போனார்கள்.


---


சிறிது நேரம் கழித்து நீதிமன்ற வளாகத்தில் அவளைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். நான் மெதுவாக அவள் அருகில் சென்று, தோளைத் தொட்டு, "அனு... ஒரு நிமிஷம் கேளு" என்றேன்.


அவளுடைய உறவினர்கள் குறுக்கிட வந்தனர். ஆனால், அவள் கை உயர்த்தி அவர்களைத் தடுத்து நிறுத்தினாள்.


நான் அவள் கண்களை நேராகப் பார்த்து மிருதுவாகப் பேசத் தொடங்கினேன். "நான் பண்ணது தப்புதான் அனு... ஏதோ ஒரு சபலம், யாரோ சொன்ன பேச்சுன்னு வழிமாறிட்டேன். ஆனா... நாம ரெண்டு பேருமே வெவ்வேற காரணத்துக்காக வெளியில ஏதோ ஒரு தேடல்ல இருந்திருக்கோம், இல்லையா? நான் பண்ண தப்புல ஒரு சின்ன ஆறுதல் என்னன்னா... அந்த செயலில தேடி நான் கடைசியா வந்து நின்னது உன்கிட்டதான். ஆனா..."


சிறிது இடைவெளி விட்டு, குரலை இன்னும் தாழ்த்தி, நுட்பமாகக் கேட்டேன்:


"*நான் தான் தப்புப் பண்ணி அந்த ஆப் வழியா உன்னைத் தேடி வந்தேன்னு வச்சுப்போம்... ஆனா, நான் தேடுற அளவுக்கு நீ எப்படிடி அதே ஆப்ல வந்து நினன?*"


அவள் அப்படியே உறைந்து போனாள். பதில் பேச முடியாமல் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.


நான் மெல்லிய புன்னகையுடன் தொடர்ந்தேன்: "நாம ரெண்டு பேருக்குமே ஏதோ ஒரு சலிப்பு இருந்திருக்கு. ரெண்டு பேருமே எல்லை மீற நினைச்சோம்... ஆனா நல்லவேளையா, அங்கே நாம ரெண்டு பேரும் மட்டும்தான் இருந்தோம்! நாம பண்ண போற தப்பிலிருந்து நாமளே ஒருத்தரையொருத்தர் காப்பாத்திக்கிட்டோம். உனக்கும் என் மேல கோபம் வர உரிமையிருக்கு, எனக்கும் இருக்கு. ஆனா, இந்த கோர்ட்டு, விவாகரத்துன்னு எதுக்குடி? நான் என்ன தினமும் தப்புப் பண்ணியா உன்னை வதைச்சேன்? இல்ல நீதான் பண்ணியிருக்கியா?"


அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. தன் தவறும் அவளுக்குப் புரிந்தது. சுற்றிலும் இருந்த குடும்பத்தினரை விடுத்து, என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து, என் நெஞ்சில் தலை சாய்த்துக்கொண்டாள்.


"இனிமே இந்த மாதிரி சபலம் எதுவும் வராதுடி..." என்று அவள் தலையைக் கோதினேன்.


"நம்பிட்டேன்..." என்று என் சட்டையைப் பலமாகப் பற்றிக்கொண்டாள்.


தூரத்தில் இருந்து இதைப் பார்த்த என் அம்மா, நிம்மதியுடன் சிரித்துக் கொண்டிருந்தாள்.


சந்தேகம் மட்டுமல்ல... சபலமும் சந்தோஷமான வாழ்க்கைக்கு எதிரிதான்!

அக்னி-செல்: இரட்டை அறிவியல் முத்திரை

சென்னையின் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அரங்கத்தில் அன்றைய மாலைப் பொழுது வழக்கம் போல் இல்லை. மெரீனா கடற்கரைக் காற்று கதவுகளின் இடுக்கின் வழியே உள்ளே நுழைந்தாலும், அரங்கத்தினுள் நிலவிய அனல் காற்று சற்றும் குறையவில்லை. மூத்த விஞ்ஞானிகள், தொழிற்துறை வல்லுநர்கள், சர்வதேசப் பத்திரிகையாளர்கள் என அரங்கம் நிரம்பி வழிய, மேடையில் அமைதியே உருவாய் நின்று கொண்டிருந்தார் டாக்டர் சுந்தரம் கோதண்டராமன்.

38 வயதான இந்த ஐ.ஐ.டி மெட்ராஸ் உலோகவியல் ஆராய்ச்சியாளரின் முன்னால், பட்டுத் துணியின் மீது மின்னிக் கொண்டிருந்தது அந்தச் சிறிய உருளை—'அக்னி-செல்' (Agni-Cell).

ஒரு சிறிய கை விளக்கு பேட்டரி -அளவு ரேடியோ ஐசோடோப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த அக்னி-செல், தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் 50 கிலோவாட் மின்சாரத்தை எவ்வித ரீசார்ஜும் இன்றி வழங்கக்கூடிய ஒரு நவீன அற்புதம். வீடுகள், மின்சார வாகனங்கள், கிராமப்புற மருத்துவ மையங்கள் என அனைத்தின் ஆற்றல் தேவைகளையும் ஒரே அடியில் தீர்க்கும் வல்லமை படைத்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பிற்கு தேசிய விருது வழங்கப்படவிருந்த தருணம்தான் அது.

தலைமை விருந்தினர் விருதை வழங்க எழுந்தபொழுது, மூன்றாவது வரிசையிலிருந்து ஒரு குரல் உரக்க ஒலித்தது.

"இந்த விழாவை உடனடியாக நிறுத்துங்கள்!"

எழுந்தது 'உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு அமைப்பின்' சர்வதேசப் பிரதிநிதி. அவருடன் சில பன்னாட்டு எரிபொருள் நிறுவனங்களின் அதிகாரிகளும் நின்றிருந்தனர்.

"இதனுள் ஆபத்தான அணுக்கதிர்வீச்சுப் பொருள் உள்ளது. நாளை ஒரு வாகன விபத்திலோ அல்லது கட்டிட நெரிசலிலோ இதன் கவசம் உடைந்தால், நகரமே கதிர்வீச்சுப் பிழம்பாக மாறும். முறையான பாதுகாப்புச் சோதனை இல்லாத இந்த உபகரணத்திற்கு விருது வழக்கம் வழக்கம் போல அவசரக்கோலமானது!" என்று சாடினார்.

அரங்கத்தில் மெல்லிய சலசலப்பு ஏற்பட்டது. அமைப்பாளர்கள் திகைத்தனர்.

ஆனால், சுந்தரத்தின் முகத்தில் எவ்வித பதற்றமும் இல்லை. தனது கண்ணாடியைச் சற்று உயர்த்திப் பிடித்தபடி மைக்கை கையில் எடுத்தார்.

"பாதுகாப்பு பற்றிய உங்கள் ஐயம் நியாயமானதுதான்," என்றார் தணிந்த ஆனால் தெளிவான குரலில். "நான் உங்களை  நம்பச் சொல்லவில்லை; நீங்கள் சோதித்துப் பாருங்கள்.  வெளிப்புறக் கூடத்தில் 500 டன் அழுத்தத் திறன் கொண்ட 'ஹைட்ராலிக் பிரஸ்' (Hydraulic Press) மற்றும் பிளாஸ்மா டார்ச் தயாராக இருக்கிறது. உங்கள் வல்லுநர்களைக் கொண்டே இதை உடைத்துத் தாருங்கள், பார்ப்போம்!"

சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கூட்டம் அரங்கை விட்டு வெளியே வந்து சோதனைக் களத்தைச் சூழ்ந்தது.

கனரக இரும்புக்கரம் அந்த அக்னி-செல்லின் மீது இறங்கியது. டன் கணக்கில் அழுத்தம் ஏற ஏற, எந்திரத்தின் உழைப்பு சத்தமாக ஒலித்தது.

டங்க்!

ஒரு பெரும் உலோக முழக்கம். 500 டன் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் எந்திரத்தின் தடிமனான அடிப்பாகமே வளைந்து நொறுங்கியது. எந்திரம் செயலிழந்தது.

ஆனால், அக்னி-செல்? சிறு கீறல் கூட இன்றி, அதே பொலிவோடு மின்னிக்கொண்டிருந்தது!

அடுத்ததாக, 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உமிழும் பிளாஸ்மா டார்ச் மூலம் தொடர்ந்து 10 நிமிடங்கள் சுட்டெரித்தார்கள். சுடர் விலக்கப்பட்ட சில வினாடிகளிலேயே அது இயல்பு வெப்பநிலைக்குத் திரும்பியது. கைகர் கருவியில் கதிர்வீச்சின் அளவு 'பூஜ்ஜியம்' என்றே காட்டியது.

வந்திருந்த வல்லுநர்கள் வாயடைத்துப் போய் நின்றனர்.

சுந்தரம் அந்த அக்னி-செல்லைத் தன் கைகளில் ஏந்தியபடி கூட்டத்தைப் பார்த்தார்.

"நீங்கள் இதன் அணுக்கருப் பாதுகாப்பை மட்டுமே கேள்வி எழுப்பினீர்கள். ஆனால், அந்த அணுக்கரு மூலத்தைப் பாதுகாப்பாக அடைத்து வைக்கும் கவசம்தான் என் ஆராய்ச்சியின் முதல் பகுதி என்பதை நீங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்கள்," என்றார்.

அவர் தொடர்ந்தார்: "இந்தக் கதிர்வீச்சு சிறிதும் வெளியேறாமல் இருக்க, வைரத்தை விட அதிக அடர்த்தியும், அணு-துளைக்காத  வலிமையும் கொண்ட ஒரு புதிய 'கார்பன்-இரும்பு கலவையை' (Ultra-dense Carbon-Iron Alloy) உருவாக்க எனக்கு ஏழு ஆண்டுகள் பிடித்தன. இந்த அக்னி-செல்லின் வெளிப்புறக் கூடு, உள்ளிருக்கும் சிறிய எஞ்சின் அனைத்துமே இந்த புதிய உலோகத்தால் தான் செய்யப்பட்டவை."

"எனவே, நான் ஒரே நேரத்தில் இரண்டு மகத்தான கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறேன்—ஒன்று உடைந்தே போகாத ஒரு புதிய 'உலோகக் கலவை', மற்றொன்று 'முடிவில்லா அணு ஆற்றல் பேட்டரி'. எனக்கு ஒரே ஒரு கண்டுபிடிப்புக்கான விருது போதாது, இந்தியாவை உலக எரிபொருள் சந்தையில் முதலிடம் பிடித்து, உலகின் தலையாய     நாடாக்கும் இந்த கண்டு பிடிப்பிற்கு 'இரட்டைக் கண்டுபிடிப்புக்கான' (Double Invention) அங்கீகாரமே தரப்பட வேண்டும்!"

அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது. சுந்தரத்தின் பார்வை சர்வதேச பிரதிநிதிகளைச் சென்றடைந்தது.

"நமது சமூகத்தில் ஒரு பழக்கம் உண்டு," என்றார் ஆழமான தொனியில். "ஒரு வெளிநாட்டவர் எதைக் கண்டுபிடித்தாலும், அதில் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் நாம் அதை உடனே தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுகிறோம். ஆனால், இந்தியாவில்—நம்ம சென்னையில்—ஒரு பேனா முனை அளவு சாதனை நிகழ்த்தப்பட்டாலும், அதைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறோம். இந்த அடிமைத்தனமான மனநிலையை நாம் என்றைக்கு மாற்றப்போகிறோம்?"

எதிர்ப்பு தெரிவித்த வல்லுநர்கள் தங்கள் தவறையும், சுந்தரத்தின் அறிவாற்றலையும் உணர்ந்து தலைகுனிந்தனர். விழா மேடையில் ஏற்பாட்டாளர்கள் சுந்தரத்திற்கு உரிய மரியாதையை வழங்கினர்.

"இந்தக் கண்டுபிடிப்பு முழுமையாகவும், எவ்வித ஆபத்துமின்றியும் பாதுகாப்பானது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக டாக்டர் சுந்தரத்திற்கு இந்த ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Physics) கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்; அதற்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரையை நாங்கள் உடனடியாகச் செய்கிறோம்!"

ஒரு பெண்ணின் கோபம்

நம்ம பெங்களூரு மெட்ரோவில்  ஏறினாலே ஒரு தனி அனுபவம் தான். அன்னைக்கும் அப்படித்தான், கே.ஆர்.புரம் ஸ்டேஷன்ல வண்டிய பிடிச்சு ஹூடி நோக்கிப் போயிட்டு இருக்கேன்.


ரயிலில் ஒரே கூட்டம். ஆனா அதிர்ஷ்டவசமா யாரோ ஒருத்தர் எழுந்து போகவும், எனக்கு அந்த கண்ணாடித் தடுப்பு ஓரமாக ஒரு சீட் கிடைச்சது. நிம்மதியா உட்கார்ந்தேன். எனக்கு அடுத்து ஒரு பெண்மணி உட்கார்ந்திருந்தார். அவருக்கு பக்கத்துல அவரோட கணவன், அப்புறம் அவங்களோட குடும்பத்தைச் சேர்ந்தவங்க வரிசையா உட்கார்ந்திருந்தாங்க.


பொதுவா மெட்ரோவுல நமக்கு பக்கத்துல ஆள் உட்காரும்போது, ஆணோ பெண்ணோ ஒரு ரெண்டு இன்ச் இடைவெளி விட்டு உட்காருவது வழக்கம் தானே? அப்படித்தான் எனக்கும் அந்த பெண்ணுக்கும் நடுவுல ஒரு ரெண்டு இன்ச் இடைவெளி இருந்தது.


அந்தப் பெண்மணிக்கு ஒரு 45 வயசு இருக்கும். ஒல்லியா, மாநிறமா, பாக்குறதுக்கு ஒரு கிராமத்துப் பெண் போல இயல்பா இருந்தார்.


திடீர்னு அந்த ஆளு தன் பொண்டாட்டி கிட்ட ஏதோ தாழ்ந்த குரல்ல சொன்னான். என்ன சொன்னான்னு தெளிவா கேட்கல, ஆனா அவனோட வார்த்தைகள் அந்த அம்மாவோட மூஞ்சிய அப்படியே மாத்திடுச்சு. ஒரு கணத்துல அவங்க முகம் சுருங்கி, கோபமும் சுள்ளென எகிறின ஒரு வெளிப்பாடு.


அடுத்த கணமே, அந்த அம்மா மெல்ல என் பக்கமா நகர ஆரம்பிச்சாங்க. அந்த ரெண்டு இன்ச் இடைவெளியை கடந்து, இன்னும் ஒரு ரெண்டு இன்ச் என் பக்கம் நெருங்கிட்டாங்க. வெளியில இருந்து பாக்குறவங்களுக்கு இது பெருசா தெரியாது.


ஒவ்வொரு ரயில் நிறுத்தத்திலும் மெட்ரோ வேகம் குறையும் போது, உடம்பு லேசா முன்னாடியோ பக்கவாட்டிலோ தன்னிச்சையா நகர்வது இயல்புதானே? அப்படி பிரேக் போடும்போதெல்லாம் என்னை நோக்கி நகர்ந்து வந்தவள், அதுக்கப்புறம் பழையபடி தன் இடத்துக்குத் திரும்ப நகரவே இல்லை!


கண்ணாடித் தடுப்பு சுவர்ல என்னை அப்படியே அமுக்குற அளவுக்கு நெருங்கி வந்து உட்கார்ந்துட்டாங்க. அவங்களோட மென்மையான தொடைகளின் அழுத்தம் என் தொடையில பலமாகவே பட்டது. உடம்பு சூடு சட்டையைத் தாண்டி அப்படி உறைச்சது. 'ஐயோ, என்னடா இது!'னு எனக்கு ஒரு மாதிரி ஆகிப்போச்சு.


எனக்கு அது ஒரு சாதாரண தொடுதல் மட்டுமே. ஆனா அவங்களுக்கு? அது ஒரு சத்தமில்லாத புரட்சி! தன் புருஷனைப் பழிவாங்கும் ஒரு நுட்பமான வழி. அவ புருஷனுக்கும் அது நல்லாவே புரிஞ்சிருக்கும். ஏன்னா, அவன் அமைதியா தலைகுனிஞ்சு உட்கார்ந்திருக்க, அந்த அம்மாவோட முகத்துல 'உனக்கு நல்ல பாடம் புகட்டிட்டேன்'ங்கிற மாதிரி ஒரு மெல்லிய புன்னகை அரும்பியிருந்தது.


ரெண்டு ஸ்டேஷன் தான்... ஹூடி வந்துடுச்சு. மெல்ல எழுந்து, அந்த அழுத்தத்துல இருந்து விலகி வண்டிய விட்டு இறங்கினேன். இறங்கி பிளாட்பாரத்துல நின்னு பாக்கும்போது, ரயில் கதவு மூடிடுச்சு. அந்த அம்மா அதே புன்னகையோட, அடுத்த ஸ்டேஷனை நோக்கி அந்தப் பயணத்துல போயிட்டே இருந்தாங்க.


நான் வீட்டிற்கு நடந்து போயிட்டு இருக்கும்போது யோசிச்சேன்... பொம்பளைங்களோட கோபமும், அதை அவங்க வெளிப்படுத்துற இந்த மாதிரி விசித்திரமான வழிகளும் உண்மையிலேயே புதிரானதுதான்!