இன்று புத்தகக் கண்காட்சியில் கேபிள் சங்கரைச் சந்தித்தேன். போனதன் முக்கிய காரணமே அதுதான். அவருடன் பேசிக்கொண்டிருந்த போது வலைப்பதிவிடுவதை விட்டு விட்டதாக சொன்னேன்.
அவருடைய கருத்துகளைக் கேட்ட பின் மீண்டும் பதிவிட வந்திருக்கிறேன்.
இன்றைய சந்திப்புகளில் கேபிள் சங்கரைத்தவிர ஹரன் பிரசன்னாவை கிழக்கு ஸ்டாலில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு 2 மணிநேரம் சங்கருடன் சுற்றி நிறைய புதிய நண்பர்களை சந்தித்த பிறகு சங்கரே போ என்று துரத்தும் முன் விடை பெற்றேன்.
சுற்றி வரும் போது பெரியார் தி க மலையாள மனோரமா அரங்கின் முன் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த மேலாளரை எப்போது அரங்கை காலி செய்வீர்கள் என்று படுத்திக் கொண்டிருந்தார்கள்.
எனக்கென்னவோ அந்த அரங்கைக் காலி செய்வதால் எந்த மாற்றமும் வரும் என்று தோன்றவில்லை. நாங்கள் போராட்டம் நடதிதினோம் என்று கணக்கு கட்டுவதற்கு உதவலாம்.
இந்தப் போராட்டம் கலைஞர் வீடு முன்னால் தினம் நடத்தி ஆட்சிக்கான ஆதரவை திரும்ப பெற வைக்க முடியுமானால் , மத்திய அரசு நிச்சயம் எதாவது செய்யும் என்றே தோன்றுகிறது.
மலையாள மனோரமா அரங்கை முற்றுகை இடுவதால் நாளை காலை உம்மன் சாண்டிக்கு ஞானம் பிறக்க போகிறதா என்ன .. எல்லாம் தேர்தல் அரசியல்.
Sunday, January 08, 2012
Subscribe to:
Posts (Atom)